Daily Archives: ஏப்ரல் 1, 2006

ADMK vs DMK: District Wise Pairings

DMK Alliance Contestants vs ADMK Partner Candidates

நன்றி: தமிழ் முரசு

Tamil Murasu: DMK’s Women Contestants’ Profiles

Lady Contestants from DMK

நன்றி: தமிழ் முரசு

Dalit Panther vs Paraiyar Peravai : Dinakaran

Paraiyar Peravai Contest Against DPI

நன்றி: தினகரன் இ-தினசரி

அன்புத் தோழி – திருமா

சினிமா சுவரொட்டி (நன்றி: தினமணி)

Anbu Thozhi Poster

Salma Interview – Dinamani

கவிதையில் இருந்து அரசியலுக்கு வந்த சல்மா : “திமுக தலைவர் மு. கருணாநிதியின் மகள் கனிமொழியின் நண்பர் என்பதால் எனக்கு சீட் கிடைத்துவிடவில்லை. பெண்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என தலைவர் விரும்புவதால் எனக்குரிய தகுதிகளை ஆராய்ந்து பார்த்து சீட் தரப்பட்டிருக்கிறது” என்கிறார் மருங்காபுரி திமுக வேட்பாளர் ஏ. ரொக்கையா மாலிக் என்ற சல்மா.

கவிஞர் சல்மா என்பது நவீன இலக்கிய வட்டாரத்தில் அறிந்த பெயர்.

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி சொந்த ஊர். வயது 37. அப்பா சம்சுதீன் ஸ்டீல் வியாபாரம். அம்மா சர்புன்னிசா இல்லத்தரசி. சல்மா 9-ம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கிறார். அதற்கு மேல் பள்ளி செல்லவில்லை.

கணவர் அப்துல் மாலிக் வர்த்தகர். 2 மகன்கள்.

பள்ளிப் படிப்பை நிறுத்திய பிறகு வீட்டில் நிறைய புத்தகங்கள் படிக்கும் வழக்கம் இருந்தது. அப்போது இலக்கியத்தில் ஆர்வம் ஏற்பட்டது. கவிதைகள் எழுதத் தொடங்கினார். முதலில் சிறு பத்திரிகைகளில் வெளியாகத் தொடங்கியது. அப்போது வயது 15.

2 கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டிருக்கிறார். “ஒரு மாலையும் இன்னொரு மாலையும்” என்ற தொகுப்பு 3 பதிப்புகள் பிரசுரம் ஆகியுள்ளது. “பச்சை தேவதை” என்பது இன்னொரு தொகுப்பு. “இரண்டாம் ஜாமங்களின் கதை” என்ற நாவலும் எழுதியிருக்கிறார்.

இலக்கிய நிகழ்ச்சிகளில் கனிமொழியை சந்தித்தது உண்டு. மற்ற இலக்கிய நண்பர்களைப் போல கனிமொழியும் ஒரு நண்பர். மற்றபடி அவரால் தான் சீட் கிடைத்தது என்று கருதக் கூடாது என்கிறார் சல்மா.

பொன்னம்பட்டி சிறப்பு ஊராட்சித் தலைவராக இருக்கும் சல்மா, சிறந்த ஊராட்சி என்பதற்காக மாவட்ட ஆட்சியரிடம் பரிசு பெற்றிருக்கிறார். இலக்கிய ஆர்வத்துக்காக சில பரிசுகள் பெற்றிருக்கிறார்.

எந்தக் கட்சியுமே பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு தரவில்லையே. அதுபற்றி உங்கள் கருத்து என்ன? என்று கேட்டதற்கு, “யாருமே 33 சதவீதம் தரவில்லை என்பது உண்மைதான். அதற்கான முயற்சியை எங்கள் தலைவர் தொடங்கி வைத்திருக்கிறார். விரைவில் பெண்களுக்கு உரிய இடஒதுக்கீடு கிடைக்கும்” என்று சொன்னார் நம்பிக்கையுடன்.

பேட்டி: கே.எம். சந்திரசேகரன்

Vaiko’s poser to Karunanidhi

தி ஹிந்துவின் செய்தி: The Hindu : Tamil Nadu News : Vaiko’s poser to Karunanidhi

எந்த ஆட்சி? வாக்காளர் சிந்திக்க வைகோ வேண்டுகோள்தினமணி

தமிழ்நாட்டில் ஒரு குடும்பம் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களை குவித்துக் கொண்டிருக்கிறது. அண்ணாவால் உருவாக்கப்பட்ட ஓர் இயக்கம், ஒரு குடும்பத்திற்காக நடத்தப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். (டபுள் மீனிங் பேச்சு பேசுறாரே!)

கருணாநிதிக்கு குடும்பம் இருப்பதை நாங்கள் குறை கூறவில்லை. ஆனால், அந்தக் குடும்பத்திற்காக கட்சியையும், ஆட்சியையும், அதிகாரத்தையும் பயன்படுத்துவதைத்தான் எதிர்க்கிறோம். (கருணாநிதியை மட்டும் க்வாலிஃபை செய்து பேசுறாரே; இராமதாஸையும் சேர்த்துக் கொண்டிருக்கலாம்?)

இதுவரை பதில் இல்லை: மதிமுக எம்.பி.க்களையும் சேர்த்து மத்தியில் திமுக அமைச்சர் பதவியைப் பெற்றது என, மார்ச் 19-ல் புகார் தெரிவித்தேன். இதுவரை பதில் இல்லை. (போன வருடம் அமைத்த அமைச்சரவைக்கு இப்பத்தானே கேள்வி கேட்கிறார்; அடுத்த வருடம் வாக்கில் கருணாநிதியும் பதில் சொல்லிடுவார்!)

Viruthachalam Vijayganth – Dinamalar

தினமலர்: வன்னியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியான விருத்தாசலத்தில் போட்டியிடப் போவதாக விஜயகாந்த் அறிவித்துள்ளார். இதன்மூலம் பா.ம.க.,வின் கோட்டையிலேயே அதன் வேட்பாளருக்கு கடும் சவாலாக விஜயகாந்த் களமிறங்க உள்ளார். விஜயகாந்தின் சொந்த ஊர் மதுரை. இம்மாவட்டத்தில் உள்ள ஏதாவது ஒரு தொகுதியில் தான் அவர் போட்டியிடுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. அல்லது தலைநகர் சென்னையில் போட்டியிடலாம் என்று அவரது கட்சியினர் கூறி வந்தனர்.

எனினும் மதுரை நகரில் உள்ள தொகுதிகளில் விஜயகாந்த் சார்ந்துள்ள நாயுடு இனத்தவர் அதிகளவில் இல்லாததால், அந்த ஜாதியினர் அதிகம் உள்ள பகுதிகளில் இவர் போட்டியிடுவார் என அரசியல் கட்சியினர் எதிர்பார்த்தனர். இதற்காக விருதுநகர் மாவட்டம் அல்லது வேலுõர் மாவட்டத்தில் குறிப்பிட்ட தொகுதிகளில் இவர் போட்டியிடுவார் என கூறப்பட்டது.

ஆனால், யாரும் எதிர்பார்க்காத விதமாக விருத்தாசலம் தொகுதியை விஜயகாந்த் தேர்ந்தெடுத்துள்ளார். பா.ம.க., மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுக்கு அதிக ஓட்டு வங்கி உள்ள தொகுதி கடலுõர் மாவட்டம் விருத்தாசலம் சட்டசபை தொகுதி. இங்கு வன்னியர்கள் அதிகளவில் உள்ளனர். இதனால், இம்முறை இந்த தொகுதியில் பா.ம.க., சார்பில் கோவிந்தசாமி என்பவரும் அ.தி.மு.க., சார்பில் காசிநாதன் என்பவரும் நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் இருவருமே வன்னியர்கள்.

இதுதவிர கடந்த லோக்சபா தேர்தலின் போது இத்தொகுதியில் திருமாவளவன் 34 ஆயிரத்து 387 ஓட்டுக்களை பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார். அ.தி.மு.க., ஆதரவுடன் போட்டியிட்ட பாரதிய ஜனதா வேட்பாளர் 24 ஆயிரம் ஓட்டுக்களை பெற்று மூன்றாவது இடத்தையே பிடிக்க முடிந்தது. தற்போது அ.தி.மு.க.,வும் விடுதலைச் சிறுத்தைகளும் ஒரே அணியில் உள்ளதால், விடுதலைச் சிறுத்தைகளின் தாழ்த்தப்பட்டோர் ஓட்டு வங்கியும், அ.தி.மு.க., வேட்பாளரின் வன்னியர் ஓட்டு வங்கியும் சேர்ந்து அக்கட்சிக்கு வலு சேர்க்கும் என கருதப்பட்டது.

இதுதவிர இந்த தொகுதியில் பா.ம.க., இதுவரை வலுவாகவே இருந்து வந்துள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில் இத்தொகுதியில் தான் அதிக அளவாக 75 ஆயிரத்து 620 ஓட்டுக்களை பா.ம.க., வேட்பாளர் பெற்றார். இப்படி இரு பெரிய அணிகளுமே வலுவாக உள்ள இந்த தொகுதியை விஜயகாந்த் தேர்வு செய்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், வன்னியர் ஓட்டுக்களை இரு அணிகளின் வன்னியர் வேட்பாளர்கள் பிரிக்கும் பட்சத்தில் இதர ஓட்டுக்களை பெற்று வெற்றி பெறலாம் என்ற கணக்கில் விஜயகாந்த் இந்த தொகுதியை தேர்வு செய்திருக்கலாம் என பா.ம.க.,வினர் கருதுகின்றனர். உண்மையில் வன்னியர்களின் ஓட்டுக்களை பெரிதும் நம்பியே விஜயகாந்த் இத்தொகுதியில் போட்டியிடுவதாக கூறப்படுகிறது.

பா.ம.க.,வுக்கு சவால் விடும் வகையில் அவர்களது கோட்டையிலேயே போட்டியிட்டு வெற்றி பெற்று காண்பிக்க வேண்டும் என்பதே விஜயகாந்தின் திட்டம் என்று அவரது ரசிகர்கள் கூறுகின்றனர். விஜயகாந்துக்கு இப்பகுதிகளில் அதிகளவு ரசிகர்கள் உருவாகி வந்ததால் தான் அவருடன் மோதல் போக்கை ஆரம்பத்திலேயே பா.ம.க., துவக்கியதாக கூறப்படுகிறது. மேலும், கட்சியை துவக்கி தமிழகம் முழுவதும் பிரசாரத்தை விஜயகாந்த் ஆரம்பித்த போது விருத்தாசலத்தில் தான் அதிக அளவிற்கு கூட்டம் கூடியுள்ளது. இதன் காரணமாகவே இந்த தொகுதியை அவர் தேர்வு செய்ததாக அவரது ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், இந்த தொகுதியில் இவருக்கு அதிகளவு ரசிகர் மன்றங்களும் உள்ளன. இதில், அதிக அளவிற்கு வன்னியர்கள் தான் உறுப்பினர்களாக உள்ளனர். இங்கு விஜயகாந்த் போட்டியிட வேண்டுமென 15 பேர் மனு கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இரண்டு நாட்கள் இந்த தொகுதியை விஜயகாந்த் சுற்றி வந்தாலே அவர் வெற்றி பெறுவது நிச்சயம் என ரசிகர் மன்றத்தினர் கூறுகின்றனர்.