Monthly Archives: மார்ச் 2006

திமுக – காங்கிரஸ் தொகுதி உடன்பாடு

காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட 48 தொகுதிகளும் இப்பொழுது முடிவு செய்யப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது.

என்னென்ன தொகுதிகள் என்று ஒரு பட்டியலை தினமலர் வெளியிட்டுள்ளது. ஆனால் திமுக, காங்கிரஸ், பாமக வட்டாரங்களின்படி யார் யாருக்கு என்னென்ன தொகுதிகள் என்னும் விவரம் அனைவருக்கும் தொகுதிகளை ஒதுக்கியபின்னரே வெளியிடப்படும் என்று தெரிகிறது. அதனால் தினமலர் வேண்டுமென்றே குட்டையைக் குழப்ப முடிவு செய்திருக்கலாம்.

தினமலர் தகவலின்படி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள்:

1. ஆர்.கே.நகர் 2. திருப்பெரும்புதூர் 3. பூந்தமல்லி 4. மதுராந்தகம் 5. பள்ளிப்பட்டு 6. சோளிங்கர் 7. செய்யாறு 8. பேரணாம்பட்டு 9. வேலூர் 10. செங்கம் 11. வானூர் 12. ரிஷிவந்தியம் 13. காட்டுமன்னார்கோவில் 14. தர்மபுரி 15. ஓசூர் 16. ஆத்தூர் 17. நாமக்கல் 18. சேலம்-1 19. தொண்டாமுத்தூர் 20. ஊட்டி 21. வால்பாறை 22. கோவை மேற்கு 23. வேடசந்தூர் 24. நிலக்க்கோட்டை 25. மேலூர் 26. தேனி 27. தொட்டியம் 28. திருவரங்கம் 29. அரியலூர் 30. மயிலாடுதுறை 31. பேராவூரணி 32. பாபநாசம் 33. பட்டுக்கோட்டை 34. திருமயம் 35. காரைக்குடி 36. திருவாடானை 37. பரமக்குடி 38. கடலாடி 39. சிவகாசி 40. விருதுநகர் 41. திருவைகுண்டம் 42. கடையநல்லூர் 43. நாங்குநேரி 44. ராதாபுரம் 45. சாத்தான்குளம் 46. கிள்ளியூர் 47. குளச்சல் 48. மதுரை மேற்கு

Update: (24 மார்ச் 2006) காங்கிரஸ் அதிகாரபூர்வ இடங்கள்

நேற்று தினமலரில் unofficial-ஆக வெளியான 48 இடங்களையும், பின்னர் official-ஆக வெளியான இடங்களையும் ஒப்பிட்டுப் பார்த்ததில் 6 இடங்கள் மாறியுள்ளன.

நேற்றைய பட்டியலில் இருந்து நீக்கவேண்டிய தொகுதிகள்:
1. கடலாடி 2. சிவகாசி 3. செங்கம் 4. தர்மபுரி 5. நாங்குநேரி 6. பேரணாம்பட்டு

அதற்கு பதிலாகச் சேர்க்க வேண்டிய தொகுதிகள்:
1. காங்கேயம் 2. சேரன்மாதேவி 3. மானாமதுரை 4. போளூர் 5. மொடக்குறிச்சி 6. ராமநாதபுரம்

தேர்தல் செய்திகள்

* தமிழகத்தில் உள்ள இரண்டு தலித் கட்சிகளில் ஒன்றான புதிய தமிழகம் (தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி), தனியாகத் தேர்தலில் நிற்பதாக முடிவு செய்துள்ளது. 150 தொகுதிகளில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளனர்.

* ஆல் இந்தியா ஃபார்வர்ட் பிளாக், தமிழ்நாடு கிளை (தலைவர்: நடிகர் கார்த்திக்) 111 இடங்களில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. ஃபார்வர்ட் பிளாக் (சந்தானம்) கட்சிக்கு ஓர் இடம் தருவதாக ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

* இன்னமும் பாஜக, விஜயகாந்தின் தேசிய முற்போக்குத் திராவிடர் கழகம் இரண்டும் எந்தெந்தத் தொகுதிகளில் போட்டியிடுவது என்று முடிவு செய்யவில்லை. முடிந்தால் 234 தொகுதிகளிலும் போட்டியிடலாம்.

பாண்டிச்சேரி தேர்தல் கூட்டணிகள்

பாண்டிச்சேரியில் 30 தொகுதிகளுக்கு நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அஇஅதிமுக, கண்ணனின் புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகியவை சேர்ந்து போட்டியிடுகின்றன.

அ.இ.அ.தி.மு.க – 16 இடங்கள்
பு.மு.கா – 10 இடங்கள்
வி.சி – 2 இடங்கள்
ம.தி.மு.க – 2 இடங்கள்

யாருக்கு என்னென்ன தொகுதிகள் என்று ஏற்கெனவே பிரித்துக்கொண்டுள்ளார்கள்.

கண்ணன் தலைமையில் புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் என்று ஒரு கட்சி உருவாக்கப்பட்டு பின்னர் அது காங்கிரஸுடன் இணைக்கப்பட்டது. சில மாதங்களுக்கு முன்னர் மீண்டும் பிளவு ஏற்பட்டது.

புதிதாக உருவான கட்சி என்பதால் பு.மு.கா அதிமுக சின்னத்தில் போட்டியிடலாம் என்று தினமணி தெரிவிக்கிறது. அத்துடன் அதிமுக கூட்டணி வெற்றிபெற்றால் கண்ணன் முதலமைச்சராகலாம் என்றும் அந்தச் செய்தி தெரிவிக்கிறது.

ஆனால் மறுபக்கம் திமுக கூட்டணியில் இதுவரையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. காங்கிரஸ், திமுக, பாமக ஆகிய மூன்றுமே பாண்டிச்சேரியில் ஆட்சி அமைக்கும் திட்டத்தில் உள்ளனர். இதில் யார் விட்டுக்கொடுப்பார்கள் என்று தெரியவில்லை. முக்கியமாக இப்பொழுதைய ஆளும் கட்சி காங்கிரஸ். சொந்தமாகவே தேர்தலில் நின்று ஜெயிக்கக்கூடிய திறன் தமக்கு இருப்பதாக நினைக்கிறார்கள். அதே சமயம் மத்தியில் கூட்டணி, தமிழகத்தில் கூட்டணி என்ற நிலையில் சோனியா காந்தி பாண்டிச்சேரியிலும் கூட்டணியை விரும்பலாம். சென்ற முறை பாமகவுக்கு பாண்டிச்சேரி நாடாளுமன்றத் தொகுதி சென்றதில் பாண்டிச்சேரி காங்கிரஸ் கடும் கோபம் கொண்டது.

மேற்படிக் காரணங்களால் பாண்டிச்சேரியைப் பொருத்தமட்டிலும் அதிமுக கூட்டணி ஆரம்பத்திலிருந்தே நல்ல வலுவான நிலையில் இருப்பதாகத் தோன்றுகிறது.

ADMK & Vijayaganth Alliance???

தினமணி செய்திப்படி: அதிமுகவுடன் கூட்டணி என்பது வெறும் வதந்தியே. தேர்தலில் எக் கட்சியுடனும் கூட்டணியில்லை. எங்களின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளும் கட்சிகளுடன் “ஆட்சியில் கூட்டணி” வைத்துக் கொள்வோம் என, தேசிய முற்போக்கு திராவிடர் கழகத் தலைவர் விஜயகாந்த் மதுரையில் தெரிவித்தார்.

மதுரை அவனியாபுரத்தில் வியாழக்கிழமை வேனில் இருந்தவாறு பிரசாரம் செய்தபோது அவர் பேசியதாவது:

அதிமுகவுடன் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் கூட்டணி வைத்துக்கொள்ள பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என அதிமுகவும், உளவுப் பிரிவு போலீஸாரும் வதந்தி பரப்பி வருகின்றனர். அரசியலுக்காக நான் சினிமா துறையைத் தூக்கியெறிந்துவிட்டு வந்திருக்கிறேன். நான் நினைத்திருந்தால் தொடர்ந்து சினிமாவில் நடித்து, கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்திருக்க முடியும்.

மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவே, எம்.ஜி.ஆரைப் போலவே என்னுடைய உழைப்பில் சம்பாதித்த பணத்தைச் செலவழித்து அரசியல் கட்சி ஆரம்பித்துள்ளேன். அதிமுகவும் திமுகவும் கூட்டணியில்லாமல் தேர்தலில் தனித்துப் போட்டியிட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன என்றால், அக் கட்சிகள் தங்களின் தனித்தன்மையை இழந்துள்ளன என்பதுதானே அர்த்தம்.

நான் ஆட்சிக்கு வந்தால், ஊழலை ஒழிக்கவும் பேப்பர், காஸ், பால் உள்ளிட்டவை வீடுகளுக்கு வருவதுபோல் ரேஷன் பொருள்களையும் மக்களின் வீடுகளுக்கே வழங்க நடவடிக்கை எடுப்பேன்.

மாவட்டங்கள் தோறும் தொழிற்சாலைகள் அமைக்கவும், படித்த வேலையில்லா பட்டதாரிகளுக்கு வங்கிக் கடன்பெற்று சுயதொழில் தொடங்கவும், கல்வித் துறையில் சீர்திருத்தத்தையும், நகரங்களுக்கு ஈடாகக் கிராமப் புறங்களில் சுகாதார வசதியும், மருத்துவ வசதிகளும் பெறுவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துவேன்.

இத் திட்டங்களைச் செயல்படுத்தவில்லையென்றால், அடுத்த முறை எனக்கு யாரும் வாக்களிக்க வேண்டாம். எங்கள் கட்சியின் இக் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளும் கட்சிகளுடன் ஆட்சியில் வேண்டுமானால் கூட்டணி வைத்துக்கொள்ளத் தயாராக உள்ளேன் என்றார்.

கடைசியாகக் கிடைத்த (அதிகாரப்பூர்வமற்ற) தகவல்களின் படி விஜய்காந்த் தரப்பு 40 தொகுதிகள் கோரியதாகவும், அதிமுக தரப்பில் 32க்கு பேசி வருவதாகவும் சொல்கிறார்கள். தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்த்தின் கொள்கைகளை அதிமுக ஏற்றுக் கொண்டதாக கூடிய சீக்கிரமே அஃபிஷியலாக விஜய்காந்த் அறிக்கை விடலாம்?

Google your car Keys NOW 

Google your car Keys NOW Posted by Picasa

http://www.micropersuasion.com/2006/03/read_the_fr…

http://www.micropersuasion.com/2006/03/read_the_freaki.html Posted by Picasa

http://www.micropersuasion.com/2006/03/institution…

http://www.micropersuasion.com/2006/03/institutional_p.html Posted by Picasa

Dinamalar Graphic on Women Political Power 

Dinamalar Graphic on Women Political Power Posted by Picasa

Pulambal Parents

Image hosting by Photobucket


|

Vaali & Perarasu

கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்ததடா‘ போன்ற பாடல்கள் எழுத கவிஞர்கள் தேவையில்லை என்று பேட்டி கொடுத்திருந்தார் ‘பார்வையாளர்களின் பாவலன்’ பேரரசு.

இந்த முறையும் திருப்பதியில் ஏமாற்றாமல் சூப்பர் ஹிட் பாடல்கள் தந்திருக்கிறார். அஜீத்துக்கு கூட ஹிட் கொடுத்துடுவாரோ என்னும் பயம் வருகிறது.

பாடல்களைக் கேட்க: ராகா | ம்யூஸிக் இந்தியா ஆன்லைன்

அட
நான்தாண்டி வளஞ்சு நிற்கும் வில்லு
நல்லா வளைஞ்சு நிற்கும் வில்லு

விளைஞ்சு நிற்கும் நெல்லுக்குள்ள முளைச்சிருக்கு புல்லு
வேணாண்டா வேணாண்டா
அங்கே இங்கே லொள்ளு

மேடு பள்ளம் போயிவரும் நண்டு
வாழைக்குள்ள ஒளிஞ்சிருக்கு தண்டு


கள்வனின் காதலி ஒலிப்பேழை வெளியீட்டு விழாவில் கவிஞர் வாலியின் ஒப்பந்த வாக்குமூலம்:

Poet (Kavinjar) Vaali's talk in Kalvanin Kathali audio release function - this is an audio post - click to play

அன்பே ஆருயிரே‘ (BF) ஒலித்தட்டு வெளியீட்டு விழாவில் எஸ்.ஜே சூர்யாவைக் குறித்து கவிஞர் வாலியின் உரை:

Anbey Aaruyirey - Vaali Speech : A...Aah... (BF) - Best Friend Audio Release Function speech by Vaali on AR Rehman & SJ Soorya - this is an audio post - click to play

| |