கூட்டணி கணக்குகள்


தி.மு.க கூட்டணி

தி.மு.க – 143
காங்கிரஸ் – 45
பா.ம.க – 30
கம்யுனிஸ்டுகள் – 14
முஸ்லீம் லீக்/இதர கட்சிகள் – 2

Update: ஜெயலலிதா இந்திய தேசிய லீக்கிற்கு இரண்டு தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கிற்கு ஒரு தொகுதியும் கொடுத்து கூட்டணியில் இழுத்துள்ளார்.

ஆர்.எம்.வீ
கண்ணப்பன்
பிற சாதி சங்கங்கள் – இதயத்தில் இடம்

அ.தி.மு.க கூட்டணி

அ.தி.மு.க – 172
ம.தி.மு.க – 35
விடுதலை சிறுத்தைகள் – 9
இந்திய தேசிய லீக் -2
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் – 1
பா.ஜ.க – 15 [கடைசி நிமிட பல்டி நடக்கலாம்]

வெளியில் இருப்பவை / எந்நேரமும் அ.தி.மு.கவில் சேரலாம் என்றிருப்பவை

புதிய தமிழகம்
பார்வார்டு ப்ளாக்
விஜயகாந்தின் தே.தி.மு.க
உதிரி கட்சிகள்

அப்படி வந்து பா.ஜ.க உள்ளே வரமால் போனால், பத்ரி சொல்வது போல நடப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால், பார்வார்ட் ப்ளாகில் கார்த்திக் 35 இடங்கள் கேட்கிறார் – காமெடி படங்களில் நடித்து, நன்றாக நகைச்சுவை உணர்வு பொங்க பேசுகிறார். விஜயகாந்த் சடாலென ரிவர்ஸ் கியரில் இப்போது எல்லா இடங்களில் இரண்டு திராவிட கட்சிகளுக்கும் போட்டு என்னத்த கண்டீர்கள் என்று அறைகூவல் விடுகிறார், கடைசி நிமிடம் சூட்கேஸ் மாறலாம்.
புதிய தமிழகமும், வி.சி.களும் ஒரே அணியில் இருந்தால் அது எந்தளவிற்கு உபயோகப்படும் என்று தெரியாது.

இப்போதைக்கு மேலுள்ள கணக்கில் மாறுதல் வரவேண்டுமானால், பா.ம.க.விற்கும், கம்யுனிஸ்டுகளுக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. வை.கோ இல்லாததால், 20 தொகுதிகள் மிச்சம் என்று எண்ணியவாறே கூட்டணி கட்சிகள் பங்கீட்டினை அதிகரிக்கச் சொல்லுவார்கள்.

ஆனால், கலைஞரின் சாமர்த்தியமே, எவையெல்லாம் அ.தி.மு.க வின் கோட்டை என்று நினைக்கிறாரோ, அவற்றினை காங்கிரஸ், கம்யுனிஸ்டுகளின் தலையில் கட்டிவிடுவார். டிட்டோ ஜெயலலிதாவும். 135 தொகுதிகளுக்கு குறைவாக தி.மு.க போட்டியிட்டால், கூட்டணி ஆட்சி கோஷம் தொடங்க ஏதுவாக இருக்கும்.

இப்போதைக்கு சுவாரசியமான நிகழ்வு இனி வரும் மாதங்களில், வை.கோ கருணாநிதியினை எதிர்த்து என்ன பேசுவார்? மருத்துவர் தான் “அன்பு சகோதரர்”, “அன்பு சகோதரி” என்று மாறுவாரா என்ன? “சமத்துவ நல்லாட்சி அமைய” வை.கோ “அன்பு சகோதரிக்கு” ஒட்டுப் போட சொல்லுவாரா? அல்லது கருணாநிதி அன்பு தம்பி துரோகியாகிவிட்டான் என்று புறநானூறு கதைகள் சொல்வாரா?

ஆக மொத்தம், அடுத்த இரண்டு மாதங்கள், சுவாரசியத்திற்கு பஞ்சமில்லை.

4 responses to “கூட்டணி கணக்குகள்

  1. பாஜகவுக்கு 15 சீட்கள் – சான்ஸே இல்லை! 5க்கு மேல் ஒன்றுகூடத் தேறாது.

    பார்வர்ட் ப்ளாக் – 2 சீட் கூடக் கிடைக்காது.

    விஜயகாந்த்: நிறைய கிராமப்புறச் செல்வாக்கு உள்ளது. 5-8 சீட்கள் வரை கொடுக்க ஜெயலலிதா முற்படலாம். டி.ஆர்.பாலு இன்னமும் கல்யாண மண்டபத்தை இடிப்பேன் என்று பயம் காட்டுகிறார். அதனால் சூட்கேஸ்தான் என்றில்லை.

    திருமாவளவனும் வைகோவும் ஜெயலலிதாவின் ஆட்சியைப் புகழ்ந்து பேசக் கூச்சப்பட்டுத்தான் ஆகவேண்டும். எப்படி மழுப்புகிறார்கள் என்று பார்க்கவேண்டும்.

    ஒருவிதத்தில் திமுகவினரும்கூட வைகோவின் நகர்வால் சந்தோஷப்படுவார்கள் என நினைக்கிறேன்.

  2. For DMK led alliance this is a positive development.Vaiko had
    committed the biggest blunder in
    his political career.For all you
    know if JJ comes to power she may
    again send hime to Vellore prison
    again, so that he can get enough rest after working hard for AIADMK’s victory in the elections.
    The loss of MDMK can be compensated by making PMK and the
    left happier in terms of seats.
    MDMK and Vaiko will be irrelevant
    after the polls.MDMK may split
    after the elections if it fails
    to win atleast 10 seats.

  3. விஜயகாந்த் கட்சி, திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ளும்.

  4. Unknown's avatar கார்த்திக்

    பாஜக 15 என்பது கொஞ்சம் அதிகம். வி.கா ஒற்றை இலக்க சீட்டுகளுக்கு ஒத்துக் கொள்வாரா என்பது கொஞ்சம் சந்தேகம். ஆனால், அதற்க்கும் வழியில்லை தி.மு.க வில்[already இதயத்தில் இடம் ஒதுக்க ஆரம்பித்துவிட்டார்]. அம்மாவிடம் காட்ட (????!!!!) வேண்டிய பயபக்தியை வி.கா வால் தற்போது தர முடியும் என்று நான் நினைக்கவில்லை.

icarus prakash -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.