இது நடக்கப்போவதில்லை, இருந்தாலும் கற்பனைதானே?
தமிழகத்தில் முக்கியமான முதல் நான்கு கட்சிகள்: திமுக, அஇஅதிமுக, பாமக, காங்கிரஸ்.
அடுத்த இடங்களில் இருக்கும் கட்சிகள்: மதிமுக, கம்யூனிஸ்டுகள்
பெயர் தெரிந்து ஆனால் வாக்குகள் அதிகம் கிடைக்காதவர்கள்: பாஜக, விடுதலை சிறுத்தைகள், பார்வர்ட் பிளாக், முஸ்லிம் லீக், இன்ன பிற (மக்கள் தமிழ் தேசம் போன்றவை)
புது ஆசாமிகள்: விஜயகாந்த்தின் கட்சி
இதில் திமுக, அஇஅதிமுக இரண்டும் முதல் இரண்டு இடத்தில். மிகச்சிறிய சதவிகித வித்தியாசமே இவர்களுக்கு இடையில் இருக்கும். பாமக நிச்சயமாக மூன்றாவது இடத்துக்கு வந்துவிட்டது. காங்கிரஸ் மாநில அளவில் மூன்றாவது பெரிய வாக்கு வங்கியை வைத்திருந்தாலும் தனித்து நின்றுப் போட்டியிட்டால் பாமகவே காங்கிரஸைவிட அதிகமாக இடங்களைப் பெறும் என்பதால் பாமகவுக்கே மூன்றாவது இடம்.
எந்தக் கட்சியும் எந்த இடத்திலும் கூட்டு சேராமல் போட்டியிடுகிறது என்று வைத்துக்கொள்வோம். 90% இடங்கள் முதல் நான்கு கட்சிகளுக்கு மட்டுமே கிடைக்கும். மதிமுகவுக்கு ஓர் இடம் கூடக் கிடைக்காது என்று நினைக்கிறேன். வைகோ நின்றால் அவருக்கு மட்டும் வெற்றி கிட்டலாம். கம்யூனிஸ்டுகளுக்கு இரண்டு அல்லது மூன்று இடங்கள் கிடைக்கும். மீதி அனைவருக்கும் டெபாசிட் கூடக் கிடைக்காது.
அனைவரும் தனியாக நின்றால் என்ன ஆகும் என்று கணிக்கலாமா?
மொத்த இடங்கள்: 234
அஇஅதிமுக: 90
திமுக: 85
பாமக: 35
காங்கிரஸ்: 15
மதிமுக: 1
கம்யூனிஸ்டுகள்: 3
சுயேச்சைகள்: 5
அஇஅதிமுக அதிகமாக இடங்கள் பெறுவதால் அவர்களால் அமைச்சரவை அமைக்க முடியும் என்று சொல்ல முடியாது. தேர்தலுக்குப் பிறகான கூட்டணி முக்கியத்துவம் பெறும். அப்பொழுது பாமக ஜம்மு & காஷ்மீர், கர்நாடகா பாணியில் பாதி காலத்துக்குத் தனக்கு முதல்வர் பதவி வேண்டும் என்றுகூடக் கேட்கலாம்!
என் கற்பனை எப்படி என்று பின்னூட்டத்தில் சொன்னால் சந்தோஷப்படுவேன்!











பத்ரி,
அ.தி.மு.க ஆளுங்கட்சி என்ற அளவில் திமு.க வை விட நிறைய ஓட்டு வாங்க வாய்ப்பு உள்ளது.
தி.மு.க விற்கு என்று இருந்த பலம் குறைந்து வருகிறது என்று நினைக்கிறென்.
ஆனால் பா.ம.க தனித்து நின்று 35 தொகுதி வெல்லும் என்று நீங்கள் கணிப்பது சற்று அதிகப்படி..அதிகப்பட்சம் 10 அல்லது அதற்கு கீழாகத்தான் வெல்லமுடியும்.
காங்கிரஸ் கொஞ்சம் குறைச்சுகிடுங்க…
மற்றபடி கம்யூனிஸ்டு, மதிமுக, சுயேட்சை எல்லாம் உங்கள் கணிப்பு ஓ.கே..
எனக்கென்னமோ காங்கிரஸ் இன்னும் குறைவான தொகுதிகளையே கைப்பற்றும் என நம்பிகிறேன்.1989 சட்டமன்றத் தேர்தலின் போது எம்ஜியாரின் மறைவு,அதிமுக பிளவு,மூப்பனாரின் தலைமை போன்ற துருப்புச்சீட்டுகளைச் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ளாதவர்கள்,இந்த முறை 15 சீட்டுகளைத் தனியாக நின்று வெல்வது கடினமே.
கேப்ட்னைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே நீங்கள்?
மற்றபடி உங்கள் ஊகம் சரியானதே என எண்ணுகிறேன்.
தனியாகப் போட்டியிட்டால் டெபாசிட்கூடக் கிடைக்காத கோஷ்டிகள் என்று பார்த்தால் பாஜக, கேப்டனின் கட்சி, பல சில்லறைக் கட்சிகள் (மக்கள் தமிழ் தேசம் போன்றவை) என்பது என் எண்ணம்.
அனைவரும் தனியாகப் போட்டியிடுவார்கள் என்று பார்க்கும்போதுதான் பாமக, காங்கிரஸ் இரண்டுக்கும் சற்றே அதிக தொகுதிகளைக் கணித்துள்ளேன். மேலும் தேர்தல் முடிந்தவரை நியாயமாக நடக்கும், தில்லுமுல்லுகள் மிகக்குறைவாகவே இருக்கும் என்றும் கருதுகிறேன்.
ஆனால் இதெல்லாமே கற்பனைதான் – நம்மால் எதையுமே நிரூபிக்க முடியாது. ஏனெனில் ஏதவது ஒரு கூட்டணி ஏற்படும்… கூட்டணி ஈக்வேஷனே வேறாகிவிடும்.
மதிமுக கொஞ்சம் அதிகமாகவும், பாமக கொஞ்சம் குறைச்சலாகவும் பெறும் என்று நினைக்கிறேன். ஆனால் மற்ற கட்சிகள் முதுகெலும்பில்லாமல் இரு ப்ரும் கட்சிகளில் எதோ ஒன்றைச் சார்ந்தே இருக்கும்.
நம்ம கேப்டனுக்கு 1 கூடவா கிடைக்காது?
பா.ம. கா விற்கு 35 சீட்களை கொடுத்த உங்களுக்கு டாக்டர் அய்யா சிறப்பு பதவி தந்தாலும் தரலாம்.
நீங்கள் கற்பனை செய்ததைப் போல வலுவான கட்சி அல்ல பா.ம.கா.காங்கிரஸை காட்டிலும் அதிக சதவீத வாக்குகள் பெரும் கட்சியும் அல்ல.
1989ம் வருடம் காங்கிரஸ் தனித்து நின்று 30 தொகுதிகளில் ஜெயித்தது.இன்றும் அதே சதவிகித ஓட்டுவங்கி பத்திரமாக உள்ளது என்பதே எனது யூகம்.
அன்புடன்
ராஜ்குமார்
The need for such contest will arise only if election system is changed from the current “first past the post” to proportional representation. A good election system will be a mix of both at 50:50 (FPTP:PR) ratio. This will ensure reasonable balance between stability and more representative government.
Vaiko is suceeding in retaining his followers since he started on his own.After his approach on PODA prison issue (not even appealed though he had his well-wisher Vajbayee as the PM)also added respect to him.So we could expect some good response for MDMK in south this time
அஇஅதிமுக முதலிடம் சரி பத்ரி
ஆனால் இந்த முறை இன்னும் அதிக இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.
பாமக வை விட மதிமுக விற்கு ஓட்டு விழ வாய்ப்பிருக்கிறது.
ஓட்டு சிதறாமல் இருக்க கூட்டணி ஏற்பட்டு இத்தேர்தலில் அஇஅதிமுக வெற்றி பெறும் வாய்ப்பு தெரிகிறது பத்ரி
பின் குறிப்பு:
நான் எந்தக் கட்சியிலும் உறுப்பினர் இல்லை.
கட்சி விசுவாசி,கட்சி அபிமானி கூட இல்லை.