Monthly Archives: திசெம்பர் 2005

ரிச்சர்ட் ப்ரையர்

See No Evil, Hear No Evil - Taken from BBCபிபிசி: அஞ்சலி | செய்தி

ரிச்சர்ட் ப்ரையர் நடித்து எனக்குப் பிடித்தவைகளில் மனதில் மிகவும் தங்கிப் போய் நினைத்த மாத்திரத்தில் சிரிக்க வைப்பது: See No Evil, Hear No Evil

ப்ரையரின் திரைப்படங்கள் குறித்த விரிவான காலவரிசை: ஜோ மில்ஸ்


பதிவு நாள்காட்டி

Mandai Vedikkaathu
இந்த நாள், அந்த நாள், இந்த மாதம், அந்த மாதம் என்று ப்ளாக்-காட்டி ஆக தமிழில் வந்த பதிவுகளைத் தொகுக்கிறார்கள்: தமிழ் பதிவாளர்களின் நாட்பதிவுகள்

ஆங்கிலத்திலும் உண்டு: The daily journal of Indian Bloggers who blogged

உபயோகமான சேவை & நிரலி.
எளிமை + பயன் => சூப்பர்


படித்தவை

  • சான் ஃப்ரான்சிஸ்கோ காவலர்களின் கேலி கேளிக்கைகள்: உள்வட்டத்தில் பழகும்போது ஆழ்மனதில் இருப்பவை வெளிவந்ததா அல்லது விளையாட்டாக செய்த நக்கல்களா?

  • எகிப்தில் தேர்தலும் வன்முறையும்: சுதந்திரத்திற்கான தேர்தல் என்று ஹோஸ்னி முபாரக் அறிவித்தாலும் அடக்குமுறை வெளியாகிறது. Muslim Brotherhood-க்கு வாக்களிப்பவர்களை கொன்றாலும் தடுத்தாலும் 15 –> 88 ஆக தங்கள் பாராளுமன்ற பலத்தை அதிகரித்திருக்கிறார்கள்.

  • சீனாவில் துணை மேயர் மறைவு: சமீபத்திய எண்ணெய் நச்சுக்கசிவு ஆபத்தில்லாதது என்று வாக்களித்த துணை மேயர் மர்மமாக இறந்து போனார். நூறு டன்னுக்கு மேலாக பென்சீனும் இதர நச்சுக்கசிவுகளும் சோங்குவா நதியில் கலந்தததால் சீனா பெரும் பாதிப்புக்குள்ளானது.


    | |

  • சிரியானா

    முன்பு ட்ராஃபிக் எழுதிய ககன் எழுதி இயக்கியிருக்கிறார். ப்ரென்சில் இருந்து ஃபார்ஸி வரை எல்லா மொழியும் உருளுகிறது. பிபிஎஸ்-ஸின் செய்தி அலசல்கள் போல் வறட்சியாகவும் இல்லாமல், சிஎன்என் போல் மூலச் சலவையும் ஆகாமல் இருப்பதற்கு உகந்த படம்.

    வாரயிறுதியில் பார்க்க உத்தேசித்துள்ளேன்.

    இன்ஷா ஆயில்…
    வெள்ளித்திரை கிட்டுமா என்று தெரியவில்லை.

    1. நியு யார்க் டைம்ஸ் பக்கம்

    2. Syriana :: நல்லவர், கெட்டவர் என்று யாரையுமே சொல்ல முடியாது. படத்தின் முடிவில் மங்களம் கிடையாது. முடிவில்லாமல் படத்தை நிறுத்தி விடுவதன் மூலம், விடை தெரியாத கேள்விகள் உங்கள் மனதில் தங்கிப் போகிறது.

    3. அமேசான் :: ராபர்ட் பேயரின் தீயதை தரிசிக்காதே

    4. ராபர்ட் பேயர் :: பிபிஎஸ் நேர்காணல்இந்தியாவையும் பாகிஸ்தானையும் நம்பமுடியாது.

    5. ஈரான் குறித்த பிபிஎஸ் நிகழ்ச்சித் தொகுப்பு

    6. ஈரானிய தலைவரின் நேற்றைய பேச்சுஇஸ்ரேலை விட்டுவிட்டு யூதர்கள் ஐரோப்பாவுக்கே திரும்பவேண்டும்.

    போகிற போக்கை பார்த்தால் அடுத்த படையப்பாவை புஷ் தயார் செய்துவிட்டுத்தான் பதவி விலகுவார் என்று தெரிகிறது.


    | |

    Rivolta Briefs 

    Rivolta Briefs Posted by Picasa

    குட்டிமொழி

    Rivolta Briefsபழமையானதால் பழமொழி
    தலை சொன்னால் பன்ச் மொழி
    குட்டித்திரையில் சொன்னால் குட்டிமொழி

    ‘நாலு லார்ஜ் அடிச்சாலும் ஸ்டெடியா நிற்பேன் என்று சொல்வது தன்னம்பிக்கை;

    நாலு லார்ஜ் அடிச்சாலும் நான் மட்டும்தான் ஸ்டெடியா நிற்பேன் என்று சொல்வது தலைக்கனம்.’

    கேட்ட இடம்: இளமை புதுமை (சன் டிவி)


    |

    சு.ரா.

    பதிவுகள் :: நேசகுமார்

    வைதேகிக்கு சென்னை பிரமிப்பை ஏற்படுத்தியது. வீட்டில் பதக்கங்களாகவும், சர்ட்டிபிகேட்டுகளாகவும் வாங்கிக் குவித்து தான் மற்றவர்கள் அனைவரிலும் சிறந்த பெண் எனப் பெயரெடுத்தவர். திடீரென்று சென்னைக்கு வந்தது அவரை மிகுந்த குழப்பத்திற்கும் மன சஞ்சலத்திற்கும் உள்ளாக்கியிருக்க வேண்டும். பாலகுமாரனை வீழ்த்தியாக வேண்டிய நிர்ப்பந்தம் வைதேகிக்கு. சு.ரா கையில் அகப்பட்டார்.

    ஜெயமோகனிடம் எனக்கு அவ்வளவாய்ப் பரிச்சியம் இல்லாவிட்டாலும், மற்றவர்களிடமிருந்து கேட்ட தகவல்களை வைத்து நிறுவனமாய் நிமிர்ந்து நிற்கும் எந்தவொரு கருத்தும், குழுவும் பிறரை விழுங்கியே நிமிர முடிகிறது என்னும் முடிவுக்கு வந்திருந்தேன். அது தமிழிலக்கிய உலகிலும் அசாதாரண இயல்பு நிலையோடு நிலைகொண்டிருப்பதைக் குறித்து அடிக்கடி கவலையும் கொள்வதுண்டு.

    அரவிந்தனிடம் நான் கேட்டது வெங்கட் சாமிநாதனின் ரியாக்ஷன் குறித்து. அவர் சலனமேயில்லாமல் இருந்தார் என்றார். வெங்கட் சாமிநாதனின் நேர்மையை பாராட்டத் தோன்றியது. தமக்கு வக்கீல் நோட்டீஸ் கிட்டிய பின்னர் வெங்கட் சாமிநாதனுக்கு ஏற்பட்ட மனஉளைச்சல் ஏனோ திரும்பத் திரும்ப நினைவுக்கு வருகின்றது.

    அல்பாயுசில் இறந்து போகும் பாக்கியவான்களுக்கு மட்டும் தான் வீழ்ச்சி கிடையாது. அல்லது, ஒவ்வொரு தாழ்வான செயலுக்குப் பின்னாலும் மனித குலத்திற்கான கடவுளின் மகத்தான திட்டம் இருக்கிறது என்று பித்தலாட்டம் செய்யும் மதவாதியாக இருக்க வேண்டும். இந்த இருவகை மனிதர்களுக்குத்தான் சரிவே கிடையாது.

    பிராம்மண எழுத்தாளர்கள் குரூரமாக வன்முறையை ரசிப்பது கிடையாது. ஜெயமோகனுக்கும் சுராவுக்குமான மிகப் பெரிய வித்தியாசமாக இதையே நான் காண்கிறேன். பிராம்மணர்கள் வன்முறையை விவரிக்கும் விதம் கூட ஏசி சினிமா ஹாலிலிருந்து ஹாலிவுட் படச் சண்டையை டிடிஎஸ் சவுண்ட் எ·பெக்டில் ரசித்துப் பார்ப்பது போன்றிருப்பதாலேயே, அவர்கள் எழுதுவதை மிகப் பெரிய அளவில் வரவேற்பைப் பெறுகிறது. வன்முறை தமிழ்நாட்டில் விலைபோகாது.

    இழவு வீட்டுக்குச் செல்வது ஒரு கடன். சுராவின் மறைவைத் தொடர்ந்து வரும் கட்டுரைகள், அழகிய அட்டைப் படங்கள், விளம்பரங்கள், விற்பனைகள் இதையே இன்று என் நினைவுக்குக் கொண்டுவருகின்றன. நானும் இதற்கு விதிவிலக்கல்ல!


    | | | |

    ஜூவி

    JuniorVikatan.com: வெள்ளச் சேதங்களைப் பார்வையிடச் சென்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் நல்லகண்ணு.

    விருத்தாசலத்தில் உடைந்துபோன ஆற்றுப் பாலத்தை கடந்த 28-ம் தேதி பார்வையிட்டுவிட்டு, அப்படியே உழவர் சந்தை பக்கமாக நல்லகண்ணுவும் தோழர்களும் போயிருக்கிறார்கள். அப்போது, உழவர் சந்தை வாசலில் சில விவசாயிகள் காய்கறி விற்றுக் கொண்டிருக்க, அங்கு வந்த டி.எஸ்.பி-யான பழனி என்பவர் அவற்றை எல்லாம் உதைத்துத் தள்ளி, அங்கிருந்து விவசாயிகளை விரட்டிக் கொண்டிருந்தாராம். இதைப் பார்த்துப் பதறிப் போன நல்லகண்ணுவும் தோழர்களும் தட்டிக் கேட்ட போது, அவர்களை மரியாதை இல்லாமல் பேசினாராம் டி.எஸ்.பி. இதைக் கண்டித்து கம்யூனிஸ்ட்கள் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். போராட்டத்துக்கு டி.எஸ்.பி. அனுமதி மறுக்க, மாவட்ட எஸ்.பி-யான பன்னீர் செல்வம் தலையிட்டு, அனுமதி கொடுத்து இருக்கிறார். அப்படியும் ஆர்ப்பாட்டத்தின் போதும் தோழர்களை சகட்டுமேனிக்குத் திட்டினாராம்டி.எஸ்.பி. இதுசம்பந்தமாக போலீஸில் புகார் கொடுக்கப்பட்டு, அது பதிவு செய்யப்படாமலே இருக்கிறது.

    வலைமொழி: தெரியாத தேவதையைவிட தெரிஞ்ச பிசாசு எவ்வளவோ மேல்


    | | | |

    குமுதம்

    லேசான மனது வேண்டுமானால் மிஸ்டர் மியாவ் பக்கம் ஒதுங்குவேன். கொஞ்சம் மாறுதலுக்காக, மனது லேசாக குமுதம் பக்கம் சென்றால் நிறையவே சிந்திக்க வைத்துவிட்டார்கள்.

    1. வைரமுத்துவுக்கு கமல் போட்டியா?

    அமெரிக்காவில் இருந்து வெளிவரும் தென்றல் இதழின் டிசம்பர் இதழில் கமல் கவிதை:

    ‘என் ஜன்னல்வழிப் பார்வை கலிலியோவின் உலகைச் சதுரமாக்கியது.’

    பல தளங்களில் விரிவடையும் கவிதை.

  • கலிலியோவின் உலகு என்பதன் மூலம் கடவுளின் உலகு அல்ல என்னும் அக்நாஸ்டிக் வாதம் முன்னிற்கிறது.
  • கன்ஸாஸ் முதல் பென்சிலிவேனியா வரை அமெரிக்காவில் நிகழ்ந்த இறையியலில் மட்டும் போதித்த ‘கடவுளின் குழந்தைகள்’ சித்தாந்தத்தை அறிவியலில் போதிக்க வைக்கும் சர்ச்சையை நினைவிலாழ்த்துகிறது.
  • என் பார்வை, உன் பார்வை, நம் பார்வை, அகலப் பார்வை என்று ஜன்னல்களை வெளிச்சமாக்குகிறது.
  • கலிலீயோவை சாளரம் வழியாகத்தான் பார்க்கிறோம் என்றும் பட்டறிவு வேறு, பகுத்தறிவு வேறு என்று உறுமுகிறது.
  • தான் என்னும் கர்வம் ‘என் ஜன்னல்’ என்னும் பிரயோகத்தில் மிளிர்கிறது.
  • பார்த்திபனின் கிறுக்கல்களுக்கு சரியான போட்டியாக இருப்பதை உணர்த்துகிறது.
  • ஜன்னல் என்னும் வட இந்தியச் சொல் தொடுப்பதன் மூலம் முபை எக்ஸ்பிரஸ் விமர்சகர்களுக்கு ஆஸ்கரடி கொடுக்கிறது.

    குமுதம் :: இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்…..


    வடு மாங்கா ஊறுதுங்கோ; தயிர் சாதம் ரெடி பண்ணுங்கோ

    அன்று அருண் கேட்ட கேள்விக்கு அரசு பதிலளித்திருந்தார். கமல் மாதிரி அனுபவத்துக்கு ஏற்ற அளவுக்கு இந்த வரிகளும் விரிவடைகிறது என்கிறார்.


    வடிகட்டியவைகளுக்கு வாழ்த்துப்பா முன்னுரையுடன் கருத்து கனிமொழிக்கு போற்றித் துதி இயற்றியிருக்கிறார் வாலி.


    | | | | |

  • காப்பி குறள்

    அறத்துப்பால் – வழிபாடு

    1. அகர முதல வலைப் பதிவெல்லாம்
      பத்ரி குறிப்பே குரு.
    2. பதிவினால் ஆய போஸ்டென்கொல் வாலெறிவன்
      நற்பதிவில் மறுமொழியார் எனின்.
    3. சுட்டிமிசை காட்டினான் பின்பற்றி போனார்
      வலைமிசை நீடுசுற்று வார்.
    4. சுட்டுதல் சுட்டாமை இலான் பதிவோருக்கு
      யாண்டும் அனானிமஸ் இல.
    5. ப்ராக்ஸி ஐபி இருவினையும் பாரா முகமூடி
      பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
    6. சினிமா அரசியல் சமயம் கருத்து குத்து
      பதிவார் பார்வைபெறு வார்.
    7. மனத்துவப்பானவர் மாண்பு போற்றும் பதிவரின்
      ப்ராண்டுதலை மாற்றல் அரிது
    8. செய்திவாழி buzz தாள்பதிவார்க் கல்லால்
      பிறவாழி விசிட்டர் அரிது.

    தொடர்புடைய சுட்டி: Prabhu n Ferrari :: Blog kural | :: Thirukural :: DR.KALAIGNAR URAI ::


    | |