காலையில் பனிபொழிவைப் பார்த்தவுடன் இந்தப் பாடல் முணுமுணுக்கத் தோன்றியது. சென்னையில் எப்பொழுது பனி பெய்ந்திருக்கிறது என்னும் முரண்நகை தோன்றினாலும், சென்ற வாரம் சென்னைக்கு ரிலையன்ஸிய போது ‘சென்னை இப்போ ரொம்ப குளிரா இருக்குத் தெரியுமோ… காலையில் ஸ்வெட்டர் இல்லாமல் கால் வைக்க முடியல!’ என்பது மேலும் சிரிப்பை வரவழைத்தது. கொஞ்ச நாளாச்சே உல்டா செய்து என்று பாடலை மாற்றிப் போட்டாச்சு!
பனி இல்லாத பாஸ்டனா
படை எடுக்காத அமெரிக்காவா
இனிப்பில்லாத ஸ்வீட்டனரா
இசை இல்லாத ஓசையா
அழகில்லாத மாடலா
ஆசை இல்லாத வலைப்பதிவரா
மழை இல்லாத ஷ்ரேயாவா
மலர் இல்லாத பொக்கேவா
தலைவன் இல்லாத ஆட்சியா
தலைவி இல்லாத கட்சியா
கலை இல்லாத கலைஞரா
காதல் இல்லாத திரைப்படமா
கொலை செய்யாது ஓடுவதும்
கனிவில்லாமல் போடுவதும்
பகைவர் போலே ஏடுவதும்
பதிவர் செய்யும் அரசியல் அல்லவா











/’சென்னை இப்போ ரொம்ப குளிரா இருக்குத் தெரியுமோ… காலையில் ஸ்வெட்டர் இல்லாமல் கால் வைக்க முடியல!’ என்பது மேலும் சிரிப்பை வரவழைத்தது. /
இந்த விஷயத்தில் பெங்களூர்வாசிகளின் அட்டகாசம் தாங்கமுடியாது 🙂
அவரவருக்கு அவரவர் குளிர் பெரிது போல… பெங்களூர், டெல்லி, பாஸ்டன், வாஷிங்டன் என்று எல்லாருமே சிலாகிக்கிறோம் 🙂
பாலா,
இப்பத்தான் ராஜபார்வைல ஒரு பதிவு போட்டேன். 🙂
கோடை ஊட்டியெல்லாம் விட்டுட்டீங்களே!
//வாஷிங்டன்//
ஐயா, உங்க ஊர் குளிர் ஒஸ்தி தான், ஓகேயா?
அஞ்சால் அலுப்பு மருந்து அரைக்கிலோ டின்ல கிடைக்குதாம், வாங்கி அனுப்ப சொல்லுங்க, ஷவல் பண்ணி முடிச்சதும் தேவைப்படும்..
பார்த்தேன்!!… பார்த்துங்க சுந்தர்! வாழ்க்கையில் நான் வழுக்கி விழுந்திருக்கிறேன் 🙂 விழும் அந்த நொடி வரை ஸ்டெடியாக நடப்பது போல்தான் தோணியிருக்கு… அடுத்த விநாடி பின்புறம் பனித்தரையில் நங்கென்று மோதும்போதுதான் சறுக்கியதே தெரிய வரும்.
—-
அஞ்சால் எதற்கு! Jim Beam அனுப்பறேனே 🙂
—-
முதல் பதிலில் சறுக்கியதற்கும், இரண்டாவது மறுமொழியில் ஜிம் துணை போட்டதற்கும் முடிச்சு போட வேண்டாம்… ஜிம்முக்கு முன்பு ஜாக் இருந்தபோதும் வழுக்கியிருக்கிறது ;-))