செய்தி


இரா.முருகன்

(c) http://www.resource.nsw.gov.au/murfy/murfy.htmநேற்றைய செய்தித்தாள் சொன்னது
கம்ப்யூட்டர் விலை குறையுமென்று.
மழையில்லாமல் மின்சார வெட்டென்று.
மந்திரிசபை விரிவடைந்தது.
குடும்பக் கட்டுப்பாடு ஊர்வலம் நடந்தது.
காந்தி சமாதியில் மலர் வளையம் வைத்து
அமெரிக்க செனட்டர் புறப்பட்டுப் போனார்.
தேவாரத்தில் தேசிய ஒருமைப்பாடு –
இல்லந் தோறும் சாண எரிவாயு –
பிரமுகர்கள் சொற்பொழிந் திருந்தார்கள்.
ஹாக்கியில் இந்தியா வென்றதற்காக
ஆசிரியருக்குக் கடிதத்தில்
ஆராவமுதன் தொப்பியைக் கழற்றினார்.
அயோத்தியா மண்டப உபன்யாசத்தில் சாயந்திரம்
தந்தை சொல்காக்க ராமன் காடேகினான்.
ரேஷனில் இருபது கிலோ அரிசி.
செல்லுலர் தொலைபேசி வாங்கினால்
பேஜர் இலவசம்.
இட்லி சுற்றி எடுத்துப் போகும்போது பார்த்தேன்.
இயற்கை எய்தியவன் முகம்
மிளகாய்ப் பொடி கசிந்த எண்ணெய் மினுக்கில்
என்னைப் போல.

ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் ::

‘ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம்’ சென்னை ஸ்நேகா பதிப்பகம் வௌயீடாக வந்தது. நேர்த்தியான அச்சமைப்போடு கூடிய அதன் முகப்போவியத்தைச் சிறந்த நவீன ஓவியர்களில் ஒருவரான ஆதிமூலம் வரைந்திருந்தார். என் நண்பர் எழுத்தாளர் – கவிஞர் – ஓவியர் யூமா வாசுகி புத்தகத்துக்கு உள்ளே தான் இக்கவிதைகளை உள்வாங்கிக் கொண்டதன் அடிப்படையில் அற்புதமான கோட்டோவியங்களை வரைந்தளித்திருந்தார். மார்ச் 2000-ல் சுஜாதா வௌயிட்டது இப்புத்தகம்.

இரா.முருகன்
(ஆகஸ்ட் 2003)


| |

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.