அம்பலமான கூட்டு சதி


சமீப காலமாக புகைப்படங்கள் எடுப்பவர்களின் தொல்லை அதிகரித்து வருவதாக வாத்து வளர்ச்சி கழகக் கண்மணி குற்றஞ்சாட்டியுள்ளார். கேனன் கேணையன், சோனி சோனியா, ஃப்யூஜி பூஜ்ஜியம், கோடக் கோடங்கி, கோனிகா கோணங்கி, மினோல்டா டகால்ட்டா, ஒலிம்பஸ் ஒல்லி, பெண்டக்ஸ் ஸ்பாண்டக்ஸ் ஆகிய தலைவர்கள் சுற்றறிக்கை ஒன்றைக் கையெழுத்திட்டு தொடங்கி வைத்துள்ளார்கள்.

அவர்களின் கண்டன அறிக்கையில் இருந்து முக்கிய பகுதிகள்:

  • வாத்துக்களை ஃப்ளாஷ் கொண்டு புகைப்படம் எடுப்பதால் வாத்துக்கள் கண்பார்வை இழக்க நேரிடும் வாய்ப்புகள் அதிகம்
  • ஃபிலிம் சுருள்கள் நதியில் விழுந்து, அல்லது பழைய ரீல்கள் தண்ணீரை மாசுபடுத்தும்
  • சித்திரங்கள் வரைந்து எங்களின் அழகை முழுமையாக உள்வாங்குவதை புகைப்படங்கள் நசுக்குகிறது
  • வாத்துக்களின் மணவாழ்வு தாண்டிய பந்தங்களை இந்த நிழற்படங்கள் அம்பலமாக்குவதால், இல்லற வாழ்க்கைக்கு பாதகமாக விளங்குகிறது.
  • வாத்துகளைப் புகைப்படம் எடுப்பதற்கு நெடுநேரம் போஸ் கொடுத்து கால்வலியும் சுளுக்கும் ஏற்பட்டு, கைரோபாக்டருக்கு செலவும் அதிகரித்து, காப்புரிமை எகிறுகிறது.
  • வாத்துக்களைப் படம் எடுக்கும்போது குறுக்கே செல்கிறோமோ, அல்லது இயற்கைக்கு இடையூறாக வாத்துக்கள் குறுக்கிட்டதா என்னும் சஞ்சலத்தால் மனப்பிழற்வுண்டாகிறது.

    எனவே, வலைப்படக்காரர்கள் வாத்துக்களை கரிசனத்துடனும் தக்க பரிவுடனும் நடத்தி, சமூகத்தில் அவர்களுக்கு உரிய கூண்டை அடைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

  • 6 responses to “அம்பலமான கூட்டு சதி

    1. வாத்துவளர்ச்சீக்குக்கழகமா?
      பேசாமல் வாத்துமடையர்கள்சங்கமென்று எதிர்ப்புக்கலகம் தொடக்குவோம். எச்சரிக்கைகால்தலமுண்டம்

    2. ஆ…..

      இன்னொரு சுட்ட வாத்து பதிவு

      இதோ என்னுடுடைய சுடாத வாத்து

    3. —கைகால்தலமுண்டம் —

      ஆஹா… ‘இயற்கை’யில் ஷாம் திடீரென்று வாத்தாக மாறுவாரே! அந்த மாதிரி கறியாக்கிடுவாங்க போலத் தெரியுதே ;;-))

    4. சுயவிளக்கம்:

      வாத்து-புகைபடமெடுக்க நான் வைத்திருக்கும் கோட்பாடு பற்றிய விளக்கம்:

      நான் பிளாஷ் உபயோகிப்பதில்லை.
      வெகுதொலைவில் இருந்தே எடுக்கிறேன்
      பிலிம் பயன்படுத்தவில்லை.
      வேண்டுமென்றால் பெயிண்ட் பிரஸ் பயன்படுத்துகிறேன்.
      வாத்துகளின் சொந்த விசயங்களில் தலையிடுவது கிடையாது.

    5. மறுப்பறிக்கை விட ஆரம்பிச்சுட்டாங்களே :-))

    6. அட நீங்களுமா? 🙂

    பின்னூட்டமொன்றை இடுக

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.