Monthly Archives: ஜூலை 2005

ஷக்திப்ரபா

மரத்தடி ::

  • “வயது என்னை ஆண்டுக்கொண்டிருந்த காலம் அது. எதிர்காலம் இரு சாத்தியங்களாயிருந்தது அப்போது. ஒன்று நானொரு தேர்ந்த பொறுக்கியாகிவிடலாம். அல்லது கவிஞனாக. கர்த்தருக்கு நன்றி. ‘டெய்ஸி வளர்மதி’ என் பாதையில் காதலியாக எதிர்ப்பட்டதும் நான் கவிஞனாகிப் போனேன்”
  • “சற்றே தாமதித்தேன். அது கவித்துவம் நிரம்பிய அபத்த கணம்”
  • “பதிலற்று இருக்கும் வரையில் தான் கேள்விகளுக்கு உயிர். கேள்விகளை உயிர்ப்புடன் வைத்திருப்பது தான் தத்துவங்களின் சூட்சுமம்”
  • “சட்டைப் பையில் ஒரு அணில் குஞ்சை விட்டுக்கொண்டாற் போல் மனத்தில் ஒரு கனவை உலவ விட்டு வாழ்க்கை நடத்துவது எத்தனை குறுகுறுப்பைத் தருகிறது!”
  • “என் ஞாபக அடுக்குகளில் இருபது வருடத்துக்கான பழைமைச் சுவடுகள் ஏதுமின்றி, இன்று காலை சந்தித்தவர் போல், பார்த்ததுமே அத்தனை நரம்புகளையும் தட்டியெழுப்பிவிட வல்லவராயிருந்தார்.”

    குதிரைகளின் கதை – பா ராகவன்

  • புதன்

    ஹிந்து பிஸினஸ் லைன்: தொழிலாளர் சங்கம் அனுமதிக்காகவா? சம்பள உயர்வுக்கான அடக்குமுறையா? அலைகளாக பிற தொழிற்கூடங்களிலும் போராட்டங்கள் வெடிக்கும் என்று எகானமிக் டைம்ஸ் தொடர்கிறது.

    பாஸ்டன் க்ளோப்: தெற்காசியராக இருந்தால் விமானத்தில் அடங்கிப் பதுமையாக இருக்க வேண்டும் என்பதற்கான இந்த வார சான்று.

    ஆஷ்டென் விருதுகள்: SELCO, Noble Energy Solar Technologies , நிஷாந்த் ஆகிய இந்தியாவின் மாற்று எரி சக்தி நிறுவனங்கள் பரிசுகளைப் பெறுகிறார்கள்.

    நிழல் – ஜூலை 05

    இசை, நடனம், ஓவியம், இலக்கியம் முதலான கலைகள் உயர் கலைகளுக்குரிய பெருமிதத்துடன் போற்றப்பட்ட போதும், இந்தக் கலை வடிவங்கள் அனைத்தையும் தனதாகக் கொண்டு பொங்குகிற கூட்டுக் கலையான திரைப்படம், அந்த் நிலையை எய்தாதிருப்ப்தற்கு நம் அற, ஒழுக்கவியல் சார்ந்த தனிமையைத் திரைப்படம் சீண்டியிருப்பதும் ஒரு காரணம்.

    செழியன் (இந்தியா டுடே)

    நிழல் ஐந்தாம் ஆண்டு சிறப்பிதழை பிகேயெஸ் குறிப்பெடுத்திருக்கிறார்.

    தமிழகத்தில் Central do Brasil திரைப்பட விழாக்களில் புகுந்து புறப்பட்டுக் கொண்டிருக்கிறது. அகாடெமி விருதுகளில் ஆரம்பித்து உலகத்தின் பல திரைவிழாக்களின் பாராட்டைப் பெற்ற படம். இன்னும் பார்க்கவில்லை.

    ரோகாந்த் எழுதிய ‘மணிசித்ரமுகி’ அரை வேக்காடு. அதை விட பல நல்ல பகிடிகளையும் பார்வைகளையும் அலுக்க அலுக்கப் படித்ததாலும் அயர்ச்சி கொடுத்திருக்கலாம்.

    ‘அன்னியன்’ மற்றும் ‘கனா கண்டேன்’ விமர்சனம் எல்லா பாய்ஸ் பசங்களும் வரைவின் மகளிரை வரவழைத்தது போல் அமெரிக்காவின் உப்பு சப்பற்ற இந்திய மசாலா சமையலை நினைவு கூற வைத்தது. விமர்சனம், அபிப்பிராயம், போன்றவை நிழல் போன்ற சஞ்சிகைகளிலாவது திரைப்படத்தின் உள்ளடக்கத்தையும் கதை சார்ந்த ஒன்றாகவுமே எழுதப்படுவது ‘Gimme a break’ (த்ரிஷா சாப்பிடும் ப்ரேக் அல்ல). ‘செவ்வகம்’, படப்பெட்டி போன்ற மாற்று சினிமா சிறு பத்திரிகைகள் கலாபூர்வமாகவும் தொழில் நுட்பத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ளுகிறதா என்று பார்க்க வேண்டும்.

    எல்லாமே இலக்கணமாக சொல்லும்போது திகைப்பையே உண்டாக்கும். ஆனால், கலைச்செழியன் எளிய மொழியில் ஒளிப்பதிவிற்கு அறிமுகம் கொடுக்கிறார். ‘அன்னியன்’ போன்ற சமகாலப் படங்களை விமர்சிப்பதிலும் இந்த மாதிரி நுட்பங்களை உள்நுழைத்தால் மேலும் பயன்பெறலாம்.

    ‘ஓ’ பக்கங்களில் ஞாநி விமர்சனத்தை முன்வைத்தது போல் குறும்படங்கள் கூறிய பதிவுகள் தெளிவாக பரந்துபட்ட வாசிப்பை வழங்குகிறது.

    கோவை IIFMA இணையத்தில் வெளியிட்டுள்ள ‘திசை’ இறக்கிக் கொண்டு பார்த்து விட்டு வழக்கம் போல் பதிவொன்றைப் போட வேண்டும். ஆவணப் பட இயக்குநர் அருண்மொழியின் படங்களை மையப்படுத்தி 58 நிமிட ஆவணப் படத்தை வெங்கடேஷ் இயக்கியிருக்கிறார். இப்படத்தில் அருண்மொழியின் திரைப்படங்கள் பற்றி இயக்குநர் ஹரிஹரன், நாஸர், பிரளயன், பிலிம் நியுஸ் ஆனந்த்ன், சாருஹாஸன் பேட்டி தந்துள்ளனர்.

    மற்றபடி சிவகுமார் எழுதியுள்ள நூர்ஜஹான் (கிட்டத்தட்ட நாலு ஃபாரம் புத்தகம்), சாருலதா, பார்வையின் சாட்சியம், ஜெயகாந்தன், டி. ஆர். ராமச்சந்திரன், கன்னட சினிமா போன்றவை மூச்சு முட்ட முட்ட நிறைவைக் கொடுக்கிறது. இது வரை வந்த சினிமாப் பதிவுகளை ‘நிழல் அடைவு’ என்று கொடுத்திருப்பது, ‘கற்றது கிலோபைட் அளவு; படித்து பயன்படுத்த வேண்டியது பெடாபைட் அளவு’ என்று அங்கலாய்க்க வைக்கும்.

    வம்பு

    tamil cinema :: திரைப்பட பாடலாசிரியர் பா.விஜய் எழுதிய 12 புத்தகங்களை தி.மு.க தலைவர் கருணாநிதி வெளியிட்டதுடன் விஜய்க்கு வித்தக கவிஞர் விஜய் என்று பட்டமும் கொடுத்தார். இந்த விழா நடந்து சில நாட்களுக்குள்ளாகவே மத்திய அரசு விஜய்க்கு சிறந்த பாடலாசிரியர் விருது வழங்க, எங்கிருந்தோ கிளம்பிய வதந்திகள் இந்த விருதுக்கு பின்னணியில் மத்திய அரசில் ஸ்ட்ராங்காக அங்கம் வகிக்கும் கலைஞரின் பங்கும் இருக்கிறது என்று கூவ ஆரம்பித்தன.

    cine south :: இளம் பாடலாசிரியருக்கு விருது கிடைத்ததற்குப் பின்னால் பத்து லட்சம் ரூபாய் கைமாறியிருப்பதாகக் கூறுகிறார்கள். இந்தப் பாடலாசிரியரும் முக்கிய எதிர்கட்சியின் இரண்டாம் கட்ட தலைவரும் ஒரே சாதியை சேர்ந்தவர்கள். பாடலாசிரியரின் நூல் வெளியீட்டு விழாவுக்கு பணத்தைக் கொட்டிய தென்னக கல்லூரியின் நிறுவனரும் இதே சாதியை சேர்ந்தவர்தான். இந்த சாதி அபிமானத்தின் அடிப்படையில் பாடலாசிரியருக்கு மற்ற இருவரும் செய்த பலமான ரெகமண்டேஷன்தான் தேசிய விருது என்கிறார்கள்.

    Priority to pointer over ponder

    நாலு வார்த்தையில் திரைப்பட விமர்சனம் எழுதினால் எம்.டிவி யுகத்திற்கு எடுபடும். நாலு வரி ஆர்வமூட்டினால் தொடர்ந்து ஐ.எம்.டி.பி., ஸ்லேட், அல்வாசிட்டி என்று துழாவித் தெளியலாம். பாமரன், எளிமை, அறிமுகம் என்று ஏற்கனவே அப்லோட் செய்த கிலோபைட்டையே போஸ்ட் செய்யாமல் ‘ஒக்கமின் கத்தி‘யை துணுக்கிடுகிறேன். (ஒக்கமா, ஒச்சமா, ஒக்ஸாமா, ஓக்காமா என்பதை பிபிசி சொல்லியிருக்கலாம்; நான் மினுக்கிடவில்லை.)

    Ockham’s razor சொல்வது ‘Pluralitas non est ponenda sine neccesitate’. அதாவது ‘ஷார்ட்டா முடிச்சுக்க கண்ணு’. எளிமையான விளக்கமே சரியான விளக்கமாக அமையும் என்று சொல்வதை மில்லியன் டாலர் ப்ராஜெக்ட்டுக்கு, ‘கோரல் கோப்பு’ (Requirements Document) எழுதும்போது உணர்ந்திருக்கிறேன்.

    இரும்புத்தளம், இத்தாலியம் என்று தமிழ்கள தடுப்புச் சொற்கள் போடாமல் 250 மீட்டர்… மன்னிக்க… 250 வார்த்தைகளுக்குள் சுளுவான அறிமுகம்: சுஜாதா

    ஆர்வம் ஏற்பட்டால் மேலும் விரிவாக ரவி ஸ்ரிநிவாஸுடன் தொடரலாம்.

    திரைப்படங்கள்

    ‘படே படே தேஷோன் மே, ஏஸி சோட்டி சோட்டி பாத்தேன் ஹோதி ரஹ்தே ஹை’

    வயதுகள் நெருங்கியிருந்ததால் மனதுகளும் இணைந்திருப்பதாக நினைத்த கல்லூரி காலங்களில் பார்த்த ‘தில்வானியா துல்ஹானியா லே ஜாயேங்கே‘வில் கேட்டு, படிந்து போன வசனம்.

    அம்பியிடம் இதே அறிவுரையை அப்பா சேரியமாய் எடுத்து வைத்தாலும், சின்னத் தவறுகளைப் பொறுக்க முடியாமல் தண்டனை வழங்க ஆரம்பிக்கிறான் அந்நியன். யானா குப்தா எப்பொழுதும் மந்தகாசத்துடன் ஈஷுகிறாள். நந்தினிக்கு நந்தவனங்கள் அனுப்புவதை நிறுத்தி விட்டு யானாவை காதலி என்று ‘வள்ளி’ ரஜினி மாதிரி போதிக்க எவரும் இல்லாத ரெமோவும் இருக்கிறார்.

    அமெரிக்காவில் வண்டியை நிறுத்தாமல் போவதுதான் நல்லது. நடு ரோட்டில் நிறுத்தி காப்பாற்றினால் டெக்சாஸில் நீரில் மூழ்குபவனைக் காப்பாற்றிய கதை மாதிரி சிறையில் தள்ளிடுவார்கள். அவர்களை நோக்கியும் சுட்டுவிரல் நீட்டமுடியாது. 6’2″ மாதிரி சாட்சிக்காரனே சண்டைக்காரனாக இருக்கும் காலம் இது. இடைவேளை வரை வித்தியாசமான தமிழ்ப் படம். இடைவேளைக்குப் பின் விசிஆருக்கு வேலை கொடுக்கும் படம்.

    அன்னியர்கள் உலகை எடுத்துக் கொள்ளப் போவதை ‘I,Robot‘ எடுத்து வைக்கிறது. சம்பந்தமில்லாமல் ப்ரிட்ஜெட் மொய்னஹானின் குளியல், ஒற்றையாக லட்சக்கணக்கான ரோபோக்களை வீழ்த்துதல், ஆங்காங்கே புரியாத மொழியில் கேள்விகளைக் கலைத்து விளையாடுதல் என்று அன்னியனை பிரதியெடுத்திருப்பதாக ஆராய்ச்சிக் கட்டுரை எழுத வாய்ப்புகள் அமைத்துக் கொடுக்கும் படம்.

    ஹாலிவுட்டின் ஜூட் லா-வை (Jude Law) அடியொற்றி நடக்கும் ஹிந்தியுலக சூப்பர் ஸ்டார் அமிதாபை தமிழுலக ரஜினியும் விக்ரமும் பின்பற்றாதது மகிழ்ச்சியாகத்தானிருக்கிறது. அமிதாபுக்கு இது ஓவர்-ஆக்ட் காலம். இந்தி சினிமாவின் அனைத்துப் படங்களிலும் கண்டிப்பான அப்பாவாக அடிக்குரலில் பேசுகிறார். ராணி முகர்ஜி வாழ்ந்திருக்கும் ப்ளாக் (Black) போன்ற படங்களில் ‘இது திரைப்படம்தான்’ என்பதை சுட்டிக்காட்ட தன்னுடைய அதீத நடிப்பை கொட்டுகிறார். ஏபிசிஎல் நஷ்டங்களின் மூலம் பணத்தேவையேயானாலும், கொடுக்கின்ற காசுக்கு வஞ்சகம் வைக்கக் கூடாது என்னும் சீரிய எண்ணமென்றாலும், ‘ஓவர்’ ஆக்டிங்கை குறைத்தால் ஹிந்தி சினிமா பிழைக்கும்.

    குழந்தைக்குப் பின் சிம்ரன் மீண்டும் நடிக்க வந்தால் ‘13 going on 30‘-இன் தமிழ்ப் பதிப்பில் தோன்ற வேண்டும். கண்ணியமான திரைக்கதை, சிம்ரன் சிரிப்பைப் போலவே வெகுளியான ஜெனிஃபர் கார்னர் (Jennifer Garner) தோற்றம்.

    ‘இந்தப் படம் உனக்குப் பிடிக்கும்’ என்று நெட்ஃப்ளிக்ஸ் சொன்னதைக் கேட்டு What Have I Done to Deserve This பார்க்கக் கிடைத்தது. ஸ்பானிஷ் படங்களின் வழக்கமான கள்ளக் காதல் அடிநாதமாகக் கொண்டு அதிகம் பரிச்சயமில்லாத சம்பவங்களையும் மனிதர்களையும் கொடுக்கிறார். முதலில் Bad Education-இல் பிள்ளையார் சுழியிட்டுவிட்டு பெட்ரோ (Pedro Almodóvar)-இன் பழைய படங்களை கவனிக்கத் துவங்கவும்.

    ஸ்பானிஷ் பட நாயகி போல் கனாக் கண்டேனில் கோபிகா நடித்திருக்கிறார் என்றவுடன் ஆவலுடன் பார்த்ததில் நடிப்பை சொல்லியிருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டேன். ஸ்ரீகாந்த் கோபத்தை வெளிப்படும் காட்சிகளில் சின்ன வயது கமலை நினைவூட்டுகிறார். ‘அய்யோ பாவம்’ என்று சிரிப்பாக வருகிறது. ஆசிரியர் அத்தையாக வரும் அமிதாவின் கதாபாத்திரம் முதல் அனைவராலும் விரும்பப்பட்ட பிருதிவிராஜ் வரை எல்லோருமே கச்சிதம்.

    ஆர்யா ஆறு வித்தியாசங்களுக்கு மேல் காட்டிய ‘உள்ளம் கேட்குமே’ மற்றும் ‘அறிந்தும் அறியாமலும்‘ டைட்டிலை பார்க்காதவருக்கு இருவேறு நடிகர்களை சுட்டும். முன்னது ஆர்ப்பாட்ட ரெமோ இல்லாத காதல் சித்தரிப்பு. பின்னது சங்கிலி முருகன், கோயி லட்கி ஹை(Dil To Pagal Hai), மௌன ராகம் ‘கார்த்திக்’ என்று பிரம்மச்சாரியின் வீடு போல் ரசனையோடு கலைத்துக் கோர்க்கப்பட்ட படம்.

    தோழியுடன் மேற்கத்திய நடனம் கற்றுக் கொண்டதையும், கண்ணை மூடிக் கொண்டு ரயில் ஓட்டி ஏமாந்ததையும், வருடத்துக்கொருமுறை வந்து போகும் கல்ச்சுரல்ஸ் கூத்துக்களையும், மறுஒளிபரப்பாக ‘உள்ளம் கேட்குமேகலக்கல்.

    இன்னும் நிறைய படங்கள் குறித்து வைத்துக் கொள்ளலாம்.

    Unfaithful-ஆக ‘சந்திரமுகி’ நூறாவது நாள், சொல்லாவிட்டால், மாயவரத்தான் ‘Man on Fire’-ஆகி, என்னை ‘Run Lola Run’ போல் ஓட செய்து ‘The Stepford Wives’ பக்கம் ஒதுங்க செய்து Bad santa ஆக்கிவிடுவார்கள்.

    Pay it Forward செய்யாமல் Office Space-இல் எழுதுகிறேன்.

    ஜெய் Swades.

    திங்கள்

    நியு யார்க் டைம்ஸ்: வருத்தப்படுகிறோம்; ஆனால் மன்னிப்பு கோர மாட்டோம்

    பிபிசி: நாஜிகளின் புகழ் பாடும் பாடப்புத்தகம்

    பிபிசி: விடுதலைப் புலிகள் ‘சிறுவர்’களை பணியில் சேர்க்கிறார்கள்

    பொறுத்தார் பூமியாள்வார்

    பொறுமையென்னும் நகையணிந்து பாடுகிறார்:

    தனியே
    தன்னந்தனியே
    நான் காத்து காத்து நின்றேன்
    நிலமே
    பொறு நிலமே
    உன் பொறுமை வென்று விடுவேன்

    ஈராக்-ஈரான் சந்திப்பு

    ஈராக்கின் பிரதம மந்திரி இப்ராஹீம் அல்-ஜஃபாரி (Ibrahim al-Jaafari) ஈரானுக்கு சென்று அயொத்தொல்லா (ayatollah Ali Kamenei) போன்ற முக்கிய பிதாமகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். கடந்த இருபத்தைந்து வருடங்களில் ஈரானுக்குள் ஈராக்கின் பெருந்தலைகள் வருகை தருவது இதுதான் முதல் தடவை.

    ஈரான் மலர்களையும் மிலிடரியையும் ஈராக்குக்குக் கொடுக்க ஒப்பந்தம் அறிவித்திருக்கிறது. முன்னூறு மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு பூக்களை ஏற்றுமதி செய்யப் போகிறார்கள். எல்லைப் பாதுகாப்புக்கு ராணுவப் பயிற்சி கொடுக்கப் போகிறார்கள்.

    இரு நாடுகளுக்கிடையே எண்பதுகளில் நடந்த போரில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் இறந்திருக்கிறார்கள். ஈராக்குடன் ஈரான் ஆயிரம் கிலோமீட்டர் எல்லையைக் கொண்டிருக்கிறது.

    தகவல்: Meeting of two Gulf enemies :: Corriere.it

    சென்ற பத்து (4)

    1. ஓடினான் ஓடினான்…
    2. வேலியில்லாத புத்தக நெய்
    3. லெக்
    4. 1925
    5. பி ஏ கிருஷ்ணன்
    6. தூதரின் அகம்
    7. லண்டன் குண்டு வெடிப்புகள்
    8. கத கேளு
    9. காவிரி
    10. விடுதலைப் புலிகள்