Monthly Archives: ஜனவரி 2004

வாழ்த்துகள்: பொங்கலோ பொங்கல்

ஐடியா கொடுத்தவர்: இரா. முருகன்

நிறைவேற்றியவர்: பிபி

உரு மாற்றி: பொங்கு தமிழ்

சும்மா கெடந்த நெலத்தைக் கொத்தி

சோம்பலில்லாம ஏர் நடத்தி

கம்மா கரையை ஒசத்திக் கட்டி

கரும்புக் கொல்லையில் வாய்க்கால் வெட்டி

சம்பா பயிரை பறிச்சு நட்டு

தகுந்த முறையில் தண்ணீர் விட்டு

நெல்லு வெளைஞ்சிருக்கு

வரப்பும் உள்ளே மரைஞ்சிருக்கு

அட காடு வெளைஞ்சென்ன மச்சான்

நமக்கு கையும் காலும் தானே மிச்சம்

கையும் காலும் தானே மிச்சம்

இப்போ காடு வெளையட்டும் பொண்ணே

நமக்கு காலம் இருக்குது பின்னே

வைரமுத்துவின் வாய் – ரஜினி படம் (ப்ளாக் Syndication)

::Internet Bridge of World Tamils:Webtamilan.com::: “ரஜினிகாந்த் அநேகமாக ஜுன்2004மாதன் தன் அடுத்த படத்தை துவங்குவார்.படம்2005ஜனவரி மாதம் படம் திரைக்கு வரும் என்று சூப்பர் ஸ்டாரின் ரசிகர்களுக்கு இனிப்பான புத்தாண்டு செய்தியை அறிவித்தார் வைரமுத்து.”

சுவையான தளம். தமிழ் வலைப்பதிவுலகின் அரசர்களான சுபா, வெங்கட்டின் சில பதிவுகளும் மறு ஒலிபரப்பாகிறது!

கொரிய சுற்றுப்பயணம்(4) -சுபாஷிணி கனகசுந்தரம்(ஜெர்மனி)

மைக்ரோஸாப்ட் கறவை இயந்திரம்-வெங்கட்(கனடா)

தாசில்தார் அனுபவங்கள்

அமுதசுரபி – தமிழ் சிஃபி: “தாசில்தார் என்ற வார்த்தையைக் கேள்விப்படாதவர் மிகமிகக் குறைவாகத்தான் இருக்க முடியும். பிறந்தாலும் வாழந்தாலும் வீழ்ந்தாலும் இறந்தாலும் ஏதாவது ஒரு வகையில் தாசில்தாரிடம் சென்றாக வேண்டிய அவசியம் பெரும்பாலோருக்கு வந்தே தீரும். ஒன்றுமே இல்லாதவனிýருந்து இல்லாதது எதுவுமே இல்லை என்ற நிலையில் உள்ளவன் வரை எப்போதாவது ஒரு முறையாவது தாசில்தாரைச் சந்தித்தாக வேண்டிய கட்டாயம் நிர்பந்தம் வரும்.

தாசில்தார் என்றதுமே அவரது அதிகாரம் நினைவுக்கு வரும். கூடவே தங்கள் அலைச்சல் நினைவுக்கு வரும். எரிச்சலும் வரும். இருந்தாலும் சமூகத்தில் தாசில்தார் எண்பவர் ஒரு தவிர்க்க முடியாத சக்தி இன்று வரை.

தாசில்தார் என்பது அரபி வார்த்தை.தமிழில் வட்ட ஆட்சியர் அல்லது வட்டாட்சியர். “

போடுங்கம்மா ஓட்டு

BBC NEWS: புஷ், டீன், கெர்ரி, ஷார்ப்டன், லீபர்மான் என்று பல முகங்கள் நிற்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் குறித்தப் பருந்துப் பார்வை.

என்ன செய்திருக்கிறார்கள், என்னென்ன வாக்குறுதிகள், விளம்பர வாசகம் என்ன என்று பத்து நிமிடத்தில் நுனிப்புல் மேயலாம்.

கொஞ்சம் வம்பு

1. சூர்யாவுக்கு ஃபிலிம்·பேர் விருது!? (மிஸ்டர் மியாவ் – ஜூவி – யாரோ சொன்னாங்க)

2. ரஜினி அடுத்த படம் ஆரம்பிப்பதாய் பட்டி தொட்டி எங்கும் பேச்சு. நான் கேள்வி பட்ட இரு இடங்கள்: வைரமுத்து வாய், சினிசவுத்

தமிழோவியம் – Blatant Self Promotion

என்னுடைய போன வார மவுஸ் போன போக்கில் இந்த வாரமும் படியுங்கள். எழுதும் விதத்திலோ, கருத்திலோ குறை (நிறை) சொல்லுங்கள். போன வருடம் நிகழ்வுகள் குறித்த பட்டியலையும் அலசலாம்.

காமகோடி – ஜனவரி 2004 – அம்மாவின் எழுத்துகள்

ஆர். பொன்னம்மாளின் ஜனவரி மாத பரமாசார்யாள் பாதையிலே, விசேஷ தினங்கள், கிராம தேவதைகள் இணையத்தில் கிடைக்கிறது.

Top Ten Replies by Literati

தங்கள் கதை வெளிவரவில்லை என்பதற்கு எழுத்தாளர்களின் தலை பத்து பதில்:

10. அந்த பத்திரிகையின் ‘நடை’க்கு உட்பட்டு நான் எழுதவில்லை.

9. வெளிவந்தால்தான் ‘நல்ல’ எழுத்தா?

8. போன கதை மாதிரிதானே இதையும் எழுதினேன்!

7. வெகுஜன ஊடகங்களுக்காக நான் எழுதுவதில்லை.

6. நல்ல எழுத்துக்கு இப்போது மதிப்பேது?

5. என் கதைகள் சாதாரணர்களுக்குப் புரியாது.

4. புகழ் பெற்றவர்களையும், விதண்டாவாதம் செய்பவர்களையும்தான் மதிக்கிறார்கள்.

3. எனக்கு பதிப்பாளர்களுடன் அறிமுகம் கிடையாது.

2. சினிமா, அரசியல், டிவியில் எல்லாம் பங்கு பெறாததால்தான்….

கடைசியாக…

1. இறந்த பிறகுதான் பாரதி போன்றோருக்கே அங்கீகாரம் தரப்படுகிறது.

யார் மனமாவது புண்பட்டிருந்தால், அவரே உண்மையான படைப்பாளி! 🙂

சிரிச்சுடுங்க… ப்ளீஸ்



Hmmm... Indian in a rare comic appearance


நாட்குறிப்பு என்பது கடிகாரத்துடன் இணைக்கப்படாத டைம்பாம

டயரி எழுதுவோர் கவனிக்க! – மதுரபாரதி

நன்றி: தென்றல்

“புத்தாண்டு பிறந்தாச்சு. எல்லோருக்கும் புதிய நாட்குறிப்புப் புத்தகங்கள் வரும் நேரம் இது. அதைப் பற்றிய சில முன்னெச்சரிக்கைகளைச் சொல்லிவிடுவது எல்லோருக்கும் நல்லது என்று தோன்றியது.

நாட்குறிப்பு எழுதுவதால் நிறையப் பலன்கள் உண்டு. நீங்கள் என்னைப் போல் மறதி மகாதேவனாக இருந்தால், அன்றைய விஷயங்களையெல்லாம் அதில் எழுதிவைத்துவிட்டால் மறக்காமல் இருக்கும். “பதினாலு பைசா குடுத்தாப் போதும், திருநெல்வேலி ஜங்ஷனிலிருந்து டவுனுக்குப் போயிடலாம் தெரியுமா அந்தக் காலத்தில்” என்று பிற்காலத்தில் பீற்றிக்கொள்ள உதவும். ஆனால் அப்போது வாங்கிய மொத்தச் சம்பளமே முந்நூறு ரூபாய்தான் என்பதைச் சொல்லக்கூடாது.

‘காலையில் கெட்ட கனவு கண்டு எழுந்தேன். தோசைமாவு புளித்திருந்தது. கடைசிவீட்டுக் கமலாம்பாளுக்குப் பெண் குழந்தை பிறந்தது. ஆபீசுக்குப் போனேன். பஸ்சில் ஒரே கூட்டம். மதியம் கொண்டுபோன தயிர்சாதமும் புளிப்பு” என்று இவ்வாறு மிக முக்கியமான சமாசாரங்களை எதிர்காலத்தின் பொருட்டாக, சரித்திரக் கண்ணோட்டத்தோடு எழுதுபவர்களும் உண்டு. ஆனந்தரங்கம்பிள்ளையின் வாரிசுகள். என் பெரியப்பா ஒருவர் துருப்பிடித்த (ஒரிஜனலாகப் பச்சைப் பெயிண்ட் அடித்து மூடிமேல் கிளிப்படம் வரைந்த) டிரங்க் பெட்டிகள் நிறைய அவர் சிறுவயது முதல் எழுதிய பல நாட்குறிப்புகளை அடைத்து வைத்திருக்கிறார். ‘டைம் காப்ஸ்யூல்’ என்று சில அரசுகள் தமது ‘சாதனை’களையும் தனக்கேற்றவாறு சரித்திரம் எழுதுபவர்களின் படைப்புகளையும் ஆழப் புதைத்து வைப்பதுண்டு.

பிற்காலத்தில் தோண்டியெடுத்துப் பார்ப்பவர்களுக்கு இதன் மூலம் நமது நகைச்சுவை உணர்வு நன்றாகப் புரிய வாய்ப்பு இருக்கிறது. அதேபோலப் பெரியப்பாவின் டயரிகளையும் ஆழப்புதைத்து வைத்தால் நல்லது என்று நான் நினைப்பதுண்டு. மொத்தத்தில் இரண்டுமே ஆழப் புதைக்கப்படவேண்டியவை என்பதில் கருத்து வித்தியாசம் இருக்கமுடியாது.

என்னுடன் படித்த பிரகாஷ் பரிட்சைக்குப் படிப்பதாகச் சொல்லிவிட்டு ராத்திரி பத்து மணிக்குமேல் உட்கார்ந்துகொண்டு அன்றைக்குத் தன்னைப் பார்த்து மையல் கொண்ட மடந்தையரின் பெயர் இத்தியாதிகளை எழுதி மகிழ்வான். பெரும்பாலும் இவனுடைய கற்பனைதான்.

ஆனால் எழுதி எழுதி தானே நம்பத் தொடங்கிவிட்டான். சின்ன வயதில். கல்யணமானபின் பெண்டாட்டி கையில் மாட்டினால் என்ன ஆவது. விவாகரத்து வரைக்கும் போய்விடுமே!

அதனால்தான் நிறையப்பேர் நாட்குறிப்பு எழுதுவதில்லை என்று நினைக்கிறேன்.

என்னுடைய தூரத்துச் சித்தப்பா (அவர் கனடாவில் இருந்தார் – ரொம்ப தூரம்தானே) டயரியின் எல்லாப் பக்கங்களிலும் மேலே பிள்ளையார் சுழி போட்டுவிட்டுக் கீழே விதவிதமாய்க் காக்காய்ப் படங்கள் போட்டிருப்பார். ஆர்.கே. லக்ஷ்மணுக்குப் போட்டிதான். ஆனால் வரைந்திருப்பது காக்காய் என்று அவர் சொல்லித்தான் தெரிந்துகொள்ளவேண்டும். சலவைக்கணக்கு, ஹைக்கூ, ஸ்ரீ ராம ஜயம், பழைய பேப்பர்க்காரனுக்கு விலைக்குப் போட்டவைகளின் கணக்கு, தான் செய்த, செய்யவேண்டிய, செய்ய மறந்த வேலைகளின் பட்டியல் என்று இவற்றில் ஏதாவது ஒன்றுமட்டும் எழுதப் பயன்படுத்துபவர்களும் உண்டு. ஜனவரி 7ஆம் தேதி புது டயரி கிடைத்ததும் ‘இன்றைக்கு இந்த டயரியை ராமசாமி கொடுத்தார். இனிமேல் தவறாமல் எழுதுவேன்’ என்று சூளுரைத்துவிட்டு, 9ஆம் தேதியோடு மறந்துவிட்டவர்கள் ஏராளம்.

என் நண்பன் சுப்பு மறக்கமாட்டான். காலையில் எழுந்து பல்தேய்த்ததும் டயரியை எடுத்துவைத்துக்கொண்டு மணிரத்னம் அடுத்த படத்துக்குக் கதை யோசிக்கிற தோரணையில் உட்காருவான். ஊஹ¥ம், ஒன்றும் தோன்றாது. கொஞ்சநேரம் உட்கார்ந்தபின் தன் மனச்சிக்கலை (காலையில் எவ்வளவு முக்கினாலும் சில சிக்கல்கள் ஏற்படத்தான் செய்யும்) ஒப்புக்கொண்டு, டயரியை மூடிவைத்துவிட்டு வேறு வேலையைப் பார்ப்பான். முதல் பக்கத்தில் பெயர், முகவரி, பிளட்குரூப் எழுதியது தவிர அந்த நாட்குறிப்பில் மற்றப்படி வேறெதுவும் இல்லை. ஆனாலும் அதற்கு நீங்கள் சுப்புவைப் பழிக்கமுடியாது.

ராம்கி கொஞ்சம் ஆங்கிலத் தேர்ச்சி பெற்றவன் – அதைக் காட்டிக்கொள்ளாமல் இருக்கமுடியாது. “டயரி என்று சொல்லுவதே தப்பு, அந்த வார்த்தைக்கும் பால்பண்ணைக்கும் தொடர்பு உண்டு” என்பான். டைரி என்பதுதான் சரியாம். எப்படியோ பத்துக்கு அஞ்சு வார்த்தை ஆங்கிலம் கலக்காமல் பேசவோ எழுதவோ கூடாது என்று தமிழர்கள் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறோம். இதில் சரி தப்பெல்லாம் பார்க்கவா முடியும்?

நான் பார்த்தவரையில் யாருடைய நாட்குறிப்பு செக்ரட்டரியால் எழுதப்படுகிறதோ, அதுதான் தவறாமல் ஒழுங்காகச் செய்யப்படுகிறது. நானும் ஒரு அழகான செக்ரட்டரிக்காகத்தான் காத்துக்கொண்டிருக்கிறேன் – தவறாமல் நாட்குறிப்பு எழுதத்தான். அட, யாரய்யா அது, டைம்பாமை நினவுபடுத்தறது!”

முழுவதும் படிக்க