Tag Archives: Subash

பீறற் கூறை உடுத்தோர் பத்திரங்கட்டி வெட்டினராய்

பூடான், பாகிஸ்தான், இலங்கை, ஆஃப்கானிஸ்தான், நேபாளம், பங்களாதேசம், மாலத்தீவுகள் என்பதெல்லாம் நம்மவங்க செஞ்ச மோசம்.
இதெல்லாம் வெறும் சார்க் என்னும் கனவாக, ராஜீவ் காந்தியின் இந்திய ஐக்கிய நாடுகள் என்னும் திட்டமாக சுருங்காமல், ஒழுங்காக, ஒன்றாக திரண்டு எழுந்து உருவாகியிருக்க வேண்டியவை.

அமெரிக்கா என்பது ஐம்பது நாடுகள்.
யூரோ என்பது சில பல சிற்றரசுகள்.
சீனா போல்… UAE போல்…

ஒரு அகண்ட பாரதமாகத் தோன்றியிருக்க வேண்டிய நாடு.

எவரிடம் கோபம் கொள்வது?
காந்தியா – அவர் பதவியில் இருந்தவர். இன்றைய ராகுல் காந்தி போல் நிறைய பேசியவர்; தூண்டியவர்.

எவரை நினைத்து வருத்தம் கொள்வது?
சுபாஷ் சந்திர போஸா – அவர் நாஜிக்களிடமும் ஃபாசிசத்துடனும் தன்னுடைய லட்சியத்திற்காக துணை போனவர். குறிக்கோள் உன்னதமாக இருந்தாலும் பாதை முக்கியம் அல்லவா?

எவரிடம் பரிதாபம் அடைகிறேன்?
சர்தார் வல்லபாய் படேல் – அவர் நிச்சயம் அந்த மகாராஜாக்களிடம் பேசியிருப்பார். கெஞ்சியிருப்பார். என்ன வேண்டுமென்றாலும் தந்திருப்பார். இருந்தாலும், கூட்டை உடைத்து விட்டார்.

எவரிடம் அச்சப்படவேண்டும்?
நேரு – பதவியாசை. பெண்ணாசை. பணத்தாசை. பரம்பரை ஆசை. பொம்மையாக இருந்தாலும் பிரதம மந்திரியாகும் வெறி. அதைத் தன் சந்ததியிடம் ஊட்டிய விஷம்.

பீறற் கூறை உடுத்தோர் பத்திரங்
கட்டி வெட்டினராய்ச்
சூறைப் பங்கிய ராகி நாள்தொறுங்
கூறை கொள்ளும்மிடம்
மோறை வேடுவர் கூடிவாழ் முருகன்
பூண்டி மாநகர்வாய்
ஏறு காலிற்ற தில்லை யாய்விடில்
எத்துக்கு இங்கிருந்தீர் எம்பிரா னீரே.

தெளிவுரை : எம்பெருமானே, குற்றமுடைய வேடுவரே கூடி, வழிப்பறி செய்த பொருளின் பங்காகிய பொருளை உடையவராய் வாழ்கின்ற இம்முருகன் பூண்டி மாநகர் அவர்கள் கிழிந்த உடையை உடுத்திக் கொண்டு அதற்குள் உடைவாளையும் கட்டிக் கொண்டு வருவோரை அவ்வுடைவாளால் வெட்டி, நாள்தோறும் அவர்களது உடைகளைப் பறித்துக் கொள்ளும் இடம்; உமது எருது கால் ஒடியாமல் நன்றாக இருந்தால் அதன் மேல் ஏறி அப்பாற் போகாமல் இதன்கண் இங்கு எதற்காக இருக்கின்றீர்?

செத்தான் பிரபாகரன்

Stars_&_Stripes_Germany-newspapers-skull-women_Hitler_Dead2'Hitler's Skull' Is A Woman's, Say DNA Tests – Yahoo! News UK: A skull long believed to be that of Adolf Hitler actually belonged to a woman, according to an American scientist who has taken DNA samples from it.

அந்தக் காலத்தில் மரபணு சோதனை கிடையாது. எனவே, இதுதான் ஹிட்லரின் பிணம்; இங்குதான் புதைக்கப்பட்டது என்றவுடன் எவரும் அதை எடுத்து வைத்து போஸ்ட் மார்ட்டம் செய்யவில்லை.

ஹிட்லர் என்று சொல்லப்படும் எலும்புக்கூடை எடுத்து 64 ஆண்டுகளுக்குப் பிறகு டி.என்.ஏ. நடத்தினால், அது பெண்ணின் மண்டையோடு என்று தெரியவந்திருக்கிறது.

சரி… அடால்ஃபின் நீண்ட நாள் காதலியின் பிணமாக இருக்கலாம் என்றால் அதுவும் இல்லை. ஹிட்லரின் கடைசி நிமிஷ மனைவியான் ஈவா பிரவுனுக்கு வெறும் முப்பத்திமூன்று வயதுதான். அகழ்வாராயப்பட்ட பிணத்திற்கு நாற்பது ஆகிவிட்டது.

ஜெர்மனியில் ஹிட்லர் இறந்ததற்கு அடையாளமாக அவரின் இந்த மண்டை ஓட்டுப் பகுதியையும், பற்களையும் மட்டுமே ஆதாரமாக நம்பி இருந்தார்கள். அவரின் மோவாய்க்கட்டு மட்டும்தான் ருஷியாவிற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

மண்டை ஓடு செல்லாது என்றாகி விட்ட தருணத்தில், பற்களை தரமாட்டோம் என்று ரஷியா மறுத்துவிட்டது.

சுபாஷ் சந்திரபோஸ் மாதிரி ஹிட்லரும் இறக்கவில்லையா? இன்னும் உயிரோருக்கிறாரா?

போரின் இறுதியில் நமக்குத் தேவை நிம்மதி. செத்தான் கொடுங்கோலன் என்னும் செய்தி. அதைக் கொடுக்கத்தான், தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாக சொல்கிறார்களோ?

இதனால்தான் விடுதலைப் புலி ‘பிரபாகரன்’ தன்னுடைய ஹேப்பி பர்த்டே ஆன மாவீரர் நாள் கொண்டாட மீண்டு வருவார் என்று சீமான் சொல்கிறாரோ!

BBC NEWS | Europe | 'Hitler skull' revealed as female