வைரமுத்து பேச்சு
வரவேற்புரை & மணிகண்டன் நகைச்சுவை
தலைமை உரை
முதல்வர் உரை
ஸ்ரீகாந்த் சிரிப்புரை
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது Actors, Alumni, annual, BE, Btech, Buzz, Cinema, Colleges, Convocation, Days, Engg, Engineering, Films, Graduation, Hero, Honorary, Lecture, Lyricists, Manikandan, Movies, President, Sairam, Speech, Srikanth, Stage, Study, University, Vairamuthu
முதல் போணியாக வந்தவர் டைனோபாய். (பார்க்க: Dyno Buoyயிடம் சில கேள்விகள் | இந்தியர்களுக்கும் இந்தியாவுக்கும் யார் நல்லது?) திமுக செய்தி ஒன்று போட்டால், உடனடியாக அதிமுக தகவல் வரவேண்டும் என்பது விதி. அமெரிக்கர்கள் ஏன் குடியரசுக் கட்சி விசுவாசிகளாக இருக்கிறார்கள் என்பதை டைனோ சொன்னார்.
ரஜினிக்குப் பின் கமலாக ஸ்ரீகாந்த் மீனாக்ஷி. (வழக்கம் போல் கலர் கோடிங், தடிமன்படுத்துதல் எல்லாம் என்னால் ஆன உபகாரம்)
முழுக்க முழுக்க மெகயின் சார்பு முழக்கத்திற்குப் பிறகு தீவிர ஒபாமாப் பற்றாளரிடம் என்னுடைய சந்தேகங்கள்:
1. ஒபாமாவின் பிரச்சாரத்திற்கு உதவுமளவு உங்களுக்கு அவர் உந்துதல் அளித்திருக்கிறார். ஏன்?
பதில்: நான் ஒபாமாவை முதலில் பார்த்தது 2004ம் ஆண்டு தேர்தலில் செனட் வேட்பாளராக. அந்த வருடம் அவர் ஜான் கெர்ரியை அறிமுகப்படுத்தி ஜனநாயகக் கட்சியின் மாநாட்டில் அற்புதமாகப் பேசினார். பின்னர் MSNBC தொலைக்காட்சியில் பேட்டியும் கொடுத்தார். இரண்டு சந்தர்ப்பங்களிலும் புத்திசாலித்தனமாக, தெளிவாக, நிதானமாக, ஒரு இயல்பான புன்னகையோடு பேசிய ஒபாமாவின் மேல் எனக்கு சற்று நம்பிக்கை ஏற்பட்டு அவரது எழுத்துக்களை, செயல்களை கவனிக்கத் துவங்கினேன். அதன் பின்னர் அவரைப் பற்றி நான் அறிந்து கொண்ட ஒவ்வொரு விஷயமும் எனது ஆதரவை வலுப்படுத்தின:
உரையைப் படித்ததும் எனக்கேற்பட்ட ஆச்சரியத்திற்கு அளவேயில்லை.
சமயத்தில் பெரும்பான்மை இனத்தவர்களை ஒட்டு மொத்தமாக குற்றம் சாட்டாமலும் மிகச் சிறப்பாகப் பேசினார். இந்த உரையில் அரசியல் சாதுர்யத்தை விட அதிகமாக அவரது நேர்மையும், உள்ளத்து ஒளியும் தெரிந்தது என்று சொன்னால் மிகை வார்த்தையாகத் தோன்றும். ஆனால் அதுதான் உண்மை.ஒபாமா ஒரு அதிஉன்னத அரசியல்வாதி என்று சொல்ல வரவில்லை. சில கண்கூடான குறைகள் அவரிடமும் உள்ளன – சட்டென்று முடிவெடுக்க முடியாத தடுமாற்றக் கணங்கள், வாதங்களில் உழைப்பிற்கு பதில் திறமை/புத்திசாலித்தனத்தை நம்புவதால் வரும் குழப்பங்கள், சில கொள்கைகளில் தெரியும் நெகிழ்வுத்தன்மை ஆகியவற்றைக் குறிப்பிடலாம். ஆயினும், இவற்றை எல்லாம் மீறி, கடந்த பதினாறு வருடங்களில் நான் கண்ட அமெரிக்க அரசியல்வாதிகளிலிருந்து மிகுந்த மாறுபட்டவராகவும், மிகவும் நம்பிக்கையூட்டுபவராகவும் ஒபாமா இருக்கிறார்.
2. துணை ஜனாதிபதிக்கு எத்தனையோ பொருத்தமானவர்கள் இருந்தாலும், ‘மூத்தவர்’, ‘அடக்கி வாசிப்பவர்’ என்ற காரணங்களினால் ஜோ பைடன் தேர்ந்தெடுக்ககப்பட்டிருக்கிறார். உங்கள் பார்வையில் துணை ஜனாதிபதி தேர்வு எப்படி? ஒபாமா எடுக்கும் முதல் முடிவு சிறப்பாக இருந்ததா?
பதில்: இந்தத் தேர்வு எனக்கு இரண்டு காரணங்களுக்காகப் பிடித்திருந்தது:
பொதுவாகவே, யோசிக்காமல் சட்டென்று பேசி விட்டு பின்பு மாட்டிக் கொண்டு ‘திருதிரு’வென்று முழிக்கும் அரசியல்வாதிகளை எனக்குக் கொஞ்சம் பிடிக்கும். ஏனெனில் அவர்கள் பேசும் போது உண்மை பேசுகிறார்கள் என்று நம்பலாம். 🙂 பைடன் இந்த விஷயத்தில் டாக்டர் பட்டம் பெறத் தகுதியுள்ளவர். அடுத்த இரண்டு மாதங்களுக்குள் இதைப்போல வாயைக் கொடுத்து வம்பில் மாட்டிக் கொள்ளும் வைபவங்கள் ஒன்றேனும் நிகழும் என்று எதிர்பார்க்கலாம்.
3. ஹில்லரி க்ளின்டனையும் சாரா பேலினையும் தாக்கிய விதம் ‘பராக் பெண்களுக்கு எதிரானவர்’ என்னும் பிம்பத்தை உருவாக்க இலகுவாக்கியிருக்கிறது. இதை அவர் எப்படி தடுத்திருக்கலாம்? உதட்டுச்சாயம்/பன்றி போன்ற உவமானங்கள் குறித்த உங்கள் அபிப்ராயம் என்ன?
தொடர்ச்சி நாளை…