Tag Archives: Seniors

HBO Serials – “Getting On”: Doctors vs Nurses vs Patients

சன் தொலைக்காட்சி எதற்காக அதிகம் பார்க்கப்படுகிறது? கலைஞர் முன் நிகழ்த்தப்படும் கலை மற்றும் குத்தாட்ட நிகழ்ச்சிகளுக்காகவா? அல்லது வணக்கம் தமிழகம் போன்ற உரையாடல்களும் செய்திகளும் அறியவா? நிச்சயமாக, ராதிகா நடித்து, பாரா போன்றோர் எழுதும் நெடுந்தொடர்களுக்கத்தான்.

நான் எச்.பி.ஓ. பக்கம் ஒதுங்குவதும் HBOவின் சீரியல்களுக்காகத்தான்.

இந்த வருடம் மூன்று சுவாரசியமானதாகத் தெரிகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட True Detective ஏமாற்றவில்லை. அதைத் தனியாக கவனிப்போம்.

பிபிசி-யில் இருந்து அறிவுக்கடன் வாங்கி Getting On உருவாகி இருக்கிறது. ஆஸ்பத்திரியில் நடப்பதை வைத்து காமெடி செய்கிறார்கள். ER, Grey’s Anatomy போன்றவை மருத்துவமனையை இறுகிய முகத்துடன் அணுகி தமிழ்த் தொலைக்காட்சி போல் அழ வைத்து, நேஷனல் ஜியாகிரபி போல் உடலின் கூறுகளை அணு அணுவாக ஆராய்ந்து, பி.பி.எஸ். போல் ஆவணப்படத்தின் ஆழத்துடன் நோய்களையும் சிகிச்சைகளையும் சொல்வதைப் பார்த்த கண்களுக்கு ஆறுதலாக இருந்தது.

முன்னாபாய் எம்பிபிஎஸ் பார்த்ததால் மட்டும் அல்ல… மருத்துவர்களை விட நர்ஸ்கள் மேல் நிறையவே மரியாதை உண்டு. மனைவியின் பிரசவத்தின் போது கண்கூடாக பார்த்ததினால் இருக்கலாம். உறவினர்களை பார்க்க செல்லும்போது இராப்பகல் பாராமல் உழைக்கும் சிரத்தையை தரிசித்ததால் இருக்கலாம். எச்.பி.ஓ.வில் வரும் “கெட்டிங் ஆன்” அவர்களின் சிரமங்களை கீழிரக்காமல், நகைச்சுவையாக சித்தரிக்கிறது.

”அரட்டை அரங்கம்” ஆரம்பிக்கும் முன்பு விசுவும், “சம்சாரம் அது மின்சாரம்” ஆல்பர்ட்டு ஆவதற்கு முந்தைய கிஷ்மூவும் தோன்றிய தூர்தர்ஷன் நிகழ்ச்சியில், மேல்நாட்டு கிஷ்மூ ஆங்கிலத்தில் பேசப் பேச, அதைத் தமிழில் விசு மொழிபெயர்ப்பார். அவர் “Peace” என்பார். விசுவோ, “பட்டாணி” என்பார்.

கொஞ்சம் போல் ஆத்திரமான கிஷ்மூ “Peace… Peace…”. விசு “பட்டாணி… பட்டாணி…”. இப்படியே நாலைந்து நிமிடம் எல்லா உணர்ச்சிகளிலும் வடிவங்களிலும் பட்டாணியும் அமைதியும் அல்லல்படும். அதைப் போன்ற எளிமையான துணுக்குகளும், வாழ்க்கையின் அபத்தங்களும், ஆராய்ச்சிகளின் வெற்றுணர்தல்களும், இன்ஷூரன்சின் அராஜகங்களும் போகிற போக்கில் கிண்டல் அடிக்க எச்பிஓ சரியான கன்னல்.

பணம் படைத்தவன்

விவரிப்பு:

  • அமெரிக்காவின் முக்கிய தொலைக்காட்சி எல்லாவற்றிலும் பராக் ஒபாமாவின் அரை மணி நேர விளம்பரம் ஒளிபரப்பாகியது.
  • பெரும்பாலான அமெரிக்கர்கள் டிவியின் முன் உட்காரும் இரவு எட்டு மணிக்கு ஒளிபரப்புவதற்காக சற்றேறக்குறைய ஐந்து மில்லியன் டாலரை ஒபாமா கரைத்துள்ளார்.

வியப்பு:

  • சன், ஜெயா, மக்கள், கலைஞர் எல்லாவற்றிலும் ஒரு கட்சி ஒரே சமயத்தில் பிரச்சாரம் செய்யும் சூழல் இல்லாத தமிழ்நாடு.
  • எதிராளிக்கு சம இடம் தராமல், தனியாளாக பிரச்சார போதனை செய்யும் அமெரிக்க நிலை.
  • பொது நிதியை மட்டும் பயன்படுத்தி மெகயினோடு சமமாக மோதுவேன் என்னும் வாக்குறுதி காற்றில் பறந்த மாதிரி இதுவும் பார்வையாளர் காதில் பூச்சூட்டலோ?

விளம்பரம்:

விமர்சனம்:

  • ஒபாமாவின் பிரச்சாரம் போலவே விளம்பரமும் அமைந்திருந்தது. நிறைய வசனம்; கொஞ்சமாய் கொள்கை விளக்கம்.
  • தன்னுடைய அம்மாவின் கடைசி காலம், மருத்துவ செலவுகளோடு மன்றாடுவதை சொல்லி அனுதாபம் தேடியது.
  • குழந்தைகள், தாத்தா, பாட்டி, குடும்பம் என்று ஒபாமாவின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கும் விமர்சனங்களுக்கு பதில் தந்தது.
  • நிகழ்ச்சி முழுக்க சோகமயமாக, அமெரிக்காவின் எதிர்காலம் குறித்த பயமுறுத்தல்களைக் கொடுத்தது. ‘நான் ரொம்ப செலவழிக்கிறேனோ? வேலை போயிடுமோ??’ என்னும் அச்சமூட்டுவதாக அமைந்தது.
  • இறுதியாக நேரடி ஒளிபரப்பாக ஃப்ளோரிடா பேச்சைக் காட்டினார்கள். டிவியில் பார்க்கும் போதே உத்வேகம் எழும்பியது.

விளைவுகள்:

  • ஒவ்வொரு முறை டிவியில் தோன்றிய பிறகும் ஒபாமாவின் செல்வாக்கு உயர்ந்துள்ளது. இந்த முறையும் வாக்காளர்களிடையே மதிப்பு உயரலாம்.
  • ஜனநாயகக் கட்சி மாநாட்டில் வெள்ளை மாளிகை போல் மேடை அமைத்தார். இதில் ஜனாதிபதி அறை போன்ற தோற்றம், மக்களிடையே ‘இவர்தான் தலைவர்’ என்னும் பிம்பத்தை வளர்க்கலாம்.
  • அரை மணி முழுக்க ‘வரி விலக்கு’ என்பதே தாரக மந்திரமாக உச்சாடனம் செய்யப்பட்டது. சில சமயம் மெகயின்/குடியரசுக் கட்சி விளம்பரமோ என்று எண்ண வைக்குமளவு.
  • பென்சில்வேனியா உழைப்பாளிகள் முதல் ஃப்ளோரிடாவின் முதிர்ந்தோரைக் குறி வைத்த நிகழ்ச்சி. இந்த விளம்பரம் அவர்களை ஒபாமா பக்கம் சாயவைக்காது.
  • ஹில்லரியின் ப்ளூ காலர் வெள்ளைக்காரர்களையும் பேலின் வந்ததால் குடியரசுக் கட்சி வாக்காகி போன பெண்களையும் இந்த மாதிரி கவர்ச்சிகள் ஈர்க்குமா? அடுத்த வாரம் தெரிந்துவிடும்.

விளம்பரத்தின் உரை வடிவம்: Complete Text (and video) of Barack Obama campaign infomercial | Top of the Ticket | Los Angeles Times

அலசல்: All Obama, all the time – 2008 Presidential Campaign Blog – Political Intelligence – Boston.com

அடுத்த அதிபருக்கு Action Plan – பத்மா அர்விந்த்

பத்மா அர்விந்த் கருத்துகளின் தொடர்ச்சி…

5. அடுத்த அதிபருக்கு நீங்கதான் தொழில்நுட்ப ஆலோசகர். என்ன அட்வைஸ் கொடுப்பீங்க?

சில துறைகள் பற்றி மட்டும் இங்கே:

இமிக்ரேஷன்:

வேண்டும் என்கிறபோது இம்க்ரேஷன் துறை கண்டும் காணாமல் இருக்கிறது. சட்டவிரோதமாக வரும் நிறைய ஹிஸ்பானியர்கள், ஆசியர்கள் கட்டிட தொழில், சுற்றுப்புற சுத்தம் செய்யும் தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இதில் சட்டத்திற்கு விரோதமாக வரும் மக்களின் தேவை மட்டும் இல்லாமல் மிக குறைந்த ஊதியம் கொடுத்து எந்த வித பாதுகாப்பும் தர வேண்டாமல் இலாபம் ஈட்டும் அமெரிக்கர்களின் பேராசையும் அடங்கும்.

அட்லாண்டாவில் ஒலிம்பிக்ஸ் போது கட்டிடடம் கட்ட வந்த பல மெக்சிகோகாரர்களின் குழந்தைகள் பள்ளியில் படிக்கும் போதே ஆளான கேலியும் கிண்டலும் துன்பங்களும் நிறைய குழுக்களை ஆரம்பிக்க காரணமாகின. இவற்றல் உயிரிழந்த குழந்தைகள் நிறைய பேர். இப்போது திடீரென சட்டவிரோதமாக வந்த மக்கள் வெளியேற வேண்டும் என்று சொல்வது எப்படி நியாயமாகும்?

அதற்கு மாறாக தேவைப்பட்டு மக்களை சட்டவிரோதமாக்க கடத்தப்படுவை கண்டும் காணாமல் இருக்காமல், சட்ட பூர்வமாக தற்காலிக விசா தந்து, அவர்களுக்கும் நியாய ஊதியம் கிடைக்க வழி செய்ய வேண்டும். இவர்கள் சட்ட விரோதமாக வந்தாலும் அவர்களுக்கு குழந்தை பிறந்தால் அதன் முழு பாதுகாப்பையும் ஏற்றுக்கொள்ளும் அரசு, அதற்காக ஆகும் செலவு பற்றி யோசிப்பதற்கு முன், இவர்கள் சட்டவிரோதமாக இங்கே கடத்தப்பட்டு வருவதே தங்கள் பேராசைதான் காரணம் என்பதை உணர வேண்டும். அவர்களை பணிக்கு அமர்த்தும் நிறுவனங்கள் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். இதனால் பல சட்ட விரோத நடவடிக்கைகள் குறையும். அது வருங்காலத்தில் சேமிப்பிற்கு வழி வகுக்கும்.

போக்குவரத்துத் துறை:

மத நிறுவனங்களின் தலையீடு அமெரிக்க தலைவர்களின் கொள்கை சார்பினை நியாயப்படுத்துவதால், 1990களின் ஆரம்பத்தில் இருந்தது போல் அல்லாமல் இப்போதெல்லாம் ஆராய்ச்சிகள் சார்புடையதாகிக்கொண்டு வருவதாக எனக்கு தோன்றுகிரது. அறிவியலாகட்டும், தொழில் நுட்பமாகட்டும் தனித்து சுதந்திரமாக இயங்க வேண்டியது கட்டாயமாகும்.

புதிய போர் தளவாடங்களை வடிவமைக்க ஆகும் செலவில், சில அடிப்படை பிரச்சினைகளை தீர்வாக நிதி ஒதுக்கலாம்.

இன்னும் கொஞ்ச நாளில் அமெரிக்கா முதியவர்கள் அதிகமாக இருக்கும் நாடாக போகிறது. இதில் பலருக்கு வருமானம் என்பது பென்ஷன், சோசிஷியல் செக்யூரிட்டி ஆகியவை மட்டுமே என்னும் போது காரும், பெட்ரோலும், அதற்கான காப்பீடும் ஒரு பாரமாகிப்போகும். உடல்நலம் தொய்வடையும் தருணம், கார் ஓட்டுவதுகூட முடியாததாகும். இதற்கெல்லாம் பொது போக்குவரத்தை வடிவமைக்க வேண்டியது மிக அவசியமாகும். மக்களின் டோல் வரியை உபயோகித்து இன்னும் அதிக சாலைகள் வடிவமைப்பதை போலவே, பேருந்துகள் போன்றவற்றில் கவனம் செலுத்த ஆ ரம்பிக்கலாம்.

Foster Care:

மருத்துவக் காரணங்கள், இல்லை பதின்ம வயது பெண்கள், போதைப் பழக்கம், அல்லது மதுவிற்கு அடிமையானவர்கள் நிரந்த குடும்பசூழலை கொடுக்க முடியாதவர்கள் கருவைக் கலைக்க விரும்பினால் அது சரியே. இதில் அரசு தலையிட்டு குழந்தை வளர்ப்பை தான் எடுத்துக் கொண்டு கோடிக்கணக்கில் செலவு செய்வது அனாவசியம்.

சின்ன குற்றங்களுக்காக dyfs தலையிட்டு குழந்தைகள் பொருப்பை எடுத்துக் கொண்டு பிறகு foster care இல் ஒப்படைக்கிறது. இதற்காக ஒரு குழந்தைக்கு மாதம் $800 தருவதால் சில பெற்றோர்கள் அந்த பொறுப்பை ஒரு வேலையாக எடுத்துச் செய்கிறார்கள்.

அதன் பிறகு அவர்கள் தனியே வாழவோ அல்லது தத்து எடுத்துக் கொள்லவோ தயார் செய்யப்படுகிறார்கள். குழந்தைகள் மீண்டும் பெற்ரோரிடம் செல்ல வேண்டுமானால், மன நல மருத்துவர்கள், 6 பேர் கொண்ட ஒரு குழு ஒருமனதாக முடிவெடுக்க வேண்டும். இதைப் பயன் படுத்தி மன நல ஆலோசனையை நேரம் இல்லாமை போன்ற காரணங்களுக்காக தட்டிக் கழிப்பது அது மீண்டும் நீதி மன்றத்தீற்கு வருவது போன்ற செயல்பாடுகள் அதிகம் செல்வாவதோடு, குழந்தைகள் நலத்தையும் பாதிக்கிறது. இதை தடுக்கவும் சீக்கிரமே அவர்கள் ரெச்பைட் (respite) பாதுகாக்கப்படவும் கிளிண்டன் அரசு தீர்மானங்கள் எடுத்தது.

அபார்ஷன் சட்டரீதியாக இல்லாத மாநிலங்களில் இந்த ஆதரவற்ற குழந்தைகள் காக்கும் பொறுப்பு ஒரு சோஷியல் பணியாளருக்கு 200 வரை போக, நிறைய கவனக்குறைவுகள் உண்டாகின்றன. அரசாங்கம் பொறுப்பேற்காமல், பெற்றோர் அதிக பொறுப்புடன் இருக்கவும், குறைந்த பட்சம் 6 மாத காலத்துள் அந்த குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பையும் அல்லது அதற்கான செலவை தண்டனையாக கட்டவும் செய்ய வேண்டும்.

உள்நாட்டு பாதுகாப்பு:

பறவைக்காய்ச்சல் மற்றும் உயிரியல் தீவிரவாதம், வேதியியல் ரேடிய கதிர் தீவிர வாதம் என்று எல்லாத்துறைகளிலும் அனாவசியமாக செலவழிக்கப்படும் நிதியை அங்கிருந்து பொது நலத்திட்டத்திற்கு மாற்ற செய்வேன். FEMA போன்ற நிறுவனங்கள் அவசரக்காலம் மட்டும் அல்லாமல் பொதுவாகவே மக்களின் விழிப்புணர்ச்சியை தூண்டு வண்ணம் செயல் படலாம்.இது குறித்து

உடல்நலத்துறை:

காப்பீடுகள், அதன் காரணமாக மிக அதிகமான மருத்துவ செலவுகள் என்ற சுழற்சி இங்கே மருத்துவ கவனிப்பை சாதாரண மக்களுக்கும், நடுத்தர மக்களுக்கும் மிகவும்கடினமாக மாற்றி இருக்கின்றன. ஒவ்வொருவரும் சிகிச்சை முடிந்து தேர்ச்சிபெறஆகும் காலத்தை காப்பீடுகள் தீர்மானிப்பதை நிறுத்த வேண்டும். இப்போது மன நலத்திற்கும், வன்புணர்ச்சிக்கான கவுன்சிலிங்கிற்கும் 10 sitting , 15 sitting என்பதையெல்லாம் காப்பீடுகளே தீர்மானிக்கின்றன. இதுவும் தீவிரம், நோயாளியின் தனித்துவம் பொறுத்து மாறும்.

மருத்துவ சிகிச்சைக்காக வரும் போது விசா பற்றிய கேள்விகள் கூடாது என்றாலும், அதிகரித்துவரும் மருத்துவ செலவுகள் மற்றவர்களின் காப்பீடு கட்டணத்தை உயர்த்துகின்றன. இதை தீர்க்க முறைக்கப்பட்ட charity care நிதியை உடனடியாக அதிகரிக்க செய்வேன். மேலும் நோய் வந்தபின் அதை சரிபார்ப்பதைவிட interventionஇல் அதிக கவனம் செலுத்த சொல்வேன்.

முதுமை இல்லங்களில் ஆள்பற்றாக்குறையை சரி செய்ய வேண்டியதும் அதற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பதும் முக்கியம். பரிந்துரை செய்யப்பட்ட மருந்துகள், உணவு துறையின் கட்டுப்பாட்டில் வரும் சில மருந்துகள் பற்றி இன்னமும் யோசனைகள் எழுத ஆரம்பித்தால் இப்போதைக்கு முடியாது என்பதால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.

போரில் இருந்து வரும் வீரர்கள், வியட்னாம் வீரார்கள் இவர்களின் மன அழுத்தம் அதிகரித்து மன நோய் பெருகிவரும் இந்நேரம், மன நலனில் அதிக கவனம் செலுத்த வேண்டியதும் முக்கியம்.

முக்கியமாக, மது அருந்தும் சட்ட வயது வரம்பை 18 ஆக குறைக்க வரும் மசோதாவை இப்போதைக்கு எதிர்க்கிறேன்.