டிக் சேனிக்கு மட்டும் ‘ஹாலிபர்டனி’ன் எல்லா புகழும் சென்றடையக் கூடாது. இரண்டாம் உலகப்போரில் இருந்து வாடகைக்கு போர் வீரர்களை குத்தகை விடும் நிறுவனமாக ஹாலிபர்டன் திகழ்கிறது.
இராக் போரை ஹாலிபர்டனுக்கு ஏலம் கொடுத்தவர் டொனால்ட் ரம்ஸ்ஃபெல்ட் ஆவார். அதே ரம்ஸ்ஃபீல்ட் லின்டன் பி. ஜான்ஸன் காலத்தில் ஹாலிபர்டனை மிகக் கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.
டிக் சீனி தலைமைப் பொறுப்பை எடுத்தவுடன் வெறும் 100 மில்லியன் பண்ணிக் கொண்டிருந்த ஹாலிபர்டன் 2.3 பில்லியன்பணக்கார நிறுவனமாக மாறியது.
டிக் செனி துணை ஜனாதிபதி ஆகியவுடன் வாஷிங்டனில் ஹாலிபர்டன் லாபி செய்வதற்கான நிதியை சரி பாதியாக குறைத்துக்கொன்டது.
இராக் போர் முடிந்தாலும் ஹாலிபர்டனின் லாபத்திற்கு எந்தக் குறைவும் இருக்காது. போஸ்னியாவில் ஆகட்டும் அல்லது பிறிதொரு போர்க்களத்தில் ஆகட்டும்; அங்கே, அவுட்சோர்சிங் முறையில் ஹாலிபர்டனுக்குத்தான் கான்ட்ராக்ட் விடப்படும்; விடப்படுகிறது.
பராக் ஒபாமாவினால் ஹாலிபர்ட்டன் குத்தகையை ரத்து செய்ய இயலாது. ஆனால், கொடுக்கும் பணம் எவ்வாறு, எதற்காக, எப்படி செலவாகிறது என்பதற்கு கணக்கு கேட்க முடியும்.
தெற்காசியர்களும் இந்தியர்களும் கொத்தடிமையாக மலம் அள்ளுவதற்கும் ஆபத்தான வேலைக்கும் வைக்கப்பட்டு ஹாலிபர்ட்டனுக்கு கிடைக்கும் கொள்ளை லாபம் குறைந்து, இந்த தகிடுதத்தங்கள் அம்பலம் ஏறுமாறு வெளிப்படையான செயல்பாடுகள் அரங்கேறக் கூடும்.
Labor exploitation and an unofficial “caste system” perpetrated by Halliburton/KBR and its subcontractors, with sliding pay scales based on workers’ nationalities.
தொடர்புள்ள சில சுட்டி:
1. நேர்காணல்: Pratap Chatterjee: Texas Monthly February 2009: “An extended interview with the author of Halliburton’s Army: How a Well-Connected Texas Oil Company Revolutionized the Way America Makes War.”
* Accept that some days you’re the pigeon, and some days you’re the statue.
* Solitude is independence
* Call no man happy until he is dead - Oedipus
* It is what you read when you don't have to that determines what you will be when you can't help it. - Oscar Wilde
* The difference between literature and journalism is that journalism is unreadable and literature is not read. - Oscar Wilde