அசல்: Kumudam :: மணிவண்ணன்
(சந்தா இன்னும் செலுத்தாதவர்களுக்கான) நகல்: Science & Technology Advancements: Latest & Greatest from 2008 « Top Ten: “21ம் நூற்றாண்டின் உபயோகமுள்ள உருப்படியான கண்டுபிடிப்புகள் ஒன்று முதல் பத்து வரை.”
#2 ஆக எழுதி இருப்பது:
பர்த் கன்ட்ரோல் பேட்ச்
கு.க. சிகிச்சை, ஆணுறை, கருத்தடை மாத்திரைகளை வெறுப்பவர்களுக்கான கண்டுபிடிப்பு. `செக்ஸ்’ஸின்போது பேட்ச் மட்டும் போதும். நோ பேபி. நோ டென்ஷன்.
இப்பொழுது பத்து ஆபத்து:
- ஆணுறைக்கு மாற்றாக இதை உபயோகிக்க வேண்டாம்.
- பிரசவத்தின் போது இறக்கும் வாய்ப்பை விட 15 மடங்கு அதிக விபரீத வாய்ப்பு இந்த பட்டியை ஒட்டிக் கொள்வதால் அதிகரிக்கிறது.
- இந்த patchஐ உபயோகித்தவர்களில் இன்றைக்கு மட்டும் இதுவரை 17 பேர் மரணம். 62 பேருக்கு முடக்கம்.
- மூட்டு வலி, கால் வீக்கம், மூச்சிறைப்பு போன்றவை உங்களுக்கும் வேண்டுமா? இந்த அதிநவீன தொழில் நுட்பத்தை இன்றே நாடுவீர்.
- ஆணுறை தவிர இந்த மாதிரி பேட்ச் போடும் முறை பாதுகாப்பானதல்ல. எஸ்.டி.டி போன்ற பால்வினை நோய் தொற்றிக் கொள்ளக் கூடும்.
- உடல் பருமன் அதிகரிக்கும்
- இரத்தம் உறைந்து, கட்டிக் கொள்ளும். குறிப்பாக நடுத்தர வயதினருக்கு உறைகட்டிக் கொள்ளுதல் அதிகமாகும்.
- அமைச்சர் அன்புமணிக்கு பிடிக்காததை செய்ய இயலாது. சிகரெட்டில் ஒரு தம் கூட இழுக்க முடியாது
- பக்கத்தில் இருக்கும் படத்தைப் பார்க்கவும்.
- பாதுகாப்பான பாலுறவிற்கு பர்த் கன்ட்ரோல் பாட்ச் உபயோகம் ஆனதல்ல. எயிட்ஸ் கூட வந்து சேரலாம்.
– ABC News: Do You Know Birth Control Patch’s Risks?: “Do Users of the Birth Control Patch Know Enough About Its Potential Dangers?”
– Birth control patch linked to higher fatality rate – Women’s health- msnbc.com: “Report: Device has three times greater risk of stroke, blood clot than pill”










