ஏற்கனவே லோக்சபா (காங்கிரஸ் எனப்படும் ஹவுஸ் ஆஃப் ரெப்ரசேண்டேடிவ்ஸ்) அவரின் கட்சி கைவசம். செனேட் எனப்படும் மேல்சபையிலும் அவர்களே பெரும்பான்மை ஆகப் போகிறார்கள். ஜனாதிபதியும் ரிபப்ளிகன் ஆக இரண்டாண்டுகளாகவது இருக்கட்டும் என மாற்றம் வேண்டுவோரின் வாக்கு விழும்.
வந்தாரை வாழவைக்கும் அமெரிக்கா – இப்பொழுது வந்தேறிகள் மேல் ஆத்திரம் கலந்த கலக்கத்தில் இருக்கிறது. கமலா இந்தியர் – புலம்பெயர்ந்தோர் தானே!? என எண்ணுவோரின் வாக்கு ட்ரம்பிற்குக் கிடைக்கும்.
வங்காளத்தில் போர் வேண்டாமா? மேகாலயா தனி நாடாக வேண்டாமா? தய்வான், கொரியா, மியான்மர், மாலி என உலகெங்கும் சின்னச் சின்ன சின்னாபின்னங்கள் உதயமாக வேண்டாம் என நினைக்கும் அமைதிப் பிரியர்களின் ஓட்டு டிரம்பிற்கு விழும்.
பென்சில்வெனியா, நெவாடா, விஸ்கான்சின், மிச்சிகன், வட கரோலினா, ஜியார்ஜியா, அரிசோனா – எல்லாவற்றிலும் ஆண் வாக்காளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ‘என் இனமடா!’ வர்க்க வங்கி.
காசு… பணம்… .துட்டு… மணி… மணி – நான்காண்டுகளுக்கு முன்பு பணவீக்கம் இப்படி கேவலமாக இல்லை. வேலையில்லா நிரந்தர அன்றாடங்காய்ச்சி திரிசங்கு தொங்கல் இல்லை. அப்பொழுது நல்லா இருந்தோம் என நினைக்கும் வெள்ளையினத்தோரின் ஆதரவு.
குழந்தைகளை தகாத இடத்தில் தொடுபவர் பைடன்; எப்ஸ்டெயின் போன்ற மாமாக்களோடு லீலை நடத்தியவர்கள் டெமொகிரட்ஸ்; ஆட்சியில் இருந்தபோதே அராஜகம் செய்தவர் பில் க்ளிண்டன். ட்ரம்ப் அப்படியெல்லாம் அனுமதியில்லாமல் அத்து மீறாத அழகிய அமெரிக்கமகன் என நினைக்கும் பெண்டிர்.
ஐம்பதாண்டுகள் முன்பு கருப்பர்கள் இருந்த நிலை என்ன… பெண்கள் ஒழுங்காக வேலைக்கு போகாமல் வீட்டில் சமைத்து போட்ட காலம் திரும்ப வருமா! நனவோடையில் மூழ்கிய ‘பழைய நெனப்புதான் பேராண்டி’ வாக்காளர்கள்.
ட்ரம்ப் செய்யாத தவறு கிடையாது; மாட்டாத இடம் இல்லை; அவரின் அந்தரஙம் என்று தெரியாத எந்தப் புதிரும் இல்லை. அவர் பொல்லாதவன் + போக்கிரி + பில்லா II வேண்டும் என நினைப்போர்
துணை ஜனாதிபதியாக கடந்த நான்காண்டுகளாக என்னக் கிழித்து விட்டார் கமலா ஹாரிஸ் என கடுப்பானோர்.
கொசுறு: இப்பொழுது இந்தக் கருப்பர் ஜெயித்தால் மிஷேல் ஒபாமா ஜெயிக்க வாய்ப்பு கிட்டாது என நினைக்கும் உள்வட்ட உயர்மட்ட குழு. கிடைக்கிற வரைக்கும் கொடுக்கிற காசை வாங்கி வைத்தால் ஈரண்டு கழித்து அடுத்த தேர்தலுக்கு அன்னை மிஷேலுக்கு உதவுமே!
அமெரிக்காவின் முக்கிய தொலைக்காட்சி எல்லாவற்றிலும் பராக் ஒபாமாவின் அரை மணி நேர விளம்பரம் ஒளிபரப்பாகியது.
பெரும்பாலான அமெரிக்கர்கள் டிவியின் முன் உட்காரும் இரவு எட்டு மணிக்கு ஒளிபரப்புவதற்காக சற்றேறக்குறைய ஐந்து மில்லியன் டாலரை ஒபாமா கரைத்துள்ளார்.
வியப்பு:
சன், ஜெயா, மக்கள், கலைஞர் எல்லாவற்றிலும் ஒரு கட்சி ஒரே சமயத்தில் பிரச்சாரம் செய்யும் சூழல் இல்லாத தமிழ்நாடு.
எதிராளிக்கு சம இடம் தராமல், தனியாளாக பிரச்சார போதனை செய்யும் அமெரிக்க நிலை.
பொது நிதியை மட்டும் பயன்படுத்தி மெகயினோடு சமமாக மோதுவேன் என்னும் வாக்குறுதி காற்றில் பறந்த மாதிரி இதுவும் பார்வையாளர் காதில் பூச்சூட்டலோ?
விளம்பரம்:
விமர்சனம்:
ஒபாமாவின் பிரச்சாரம் போலவே விளம்பரமும் அமைந்திருந்தது. நிறைய வசனம்; கொஞ்சமாய் கொள்கை விளக்கம்.
தன்னுடைய அம்மாவின் கடைசி காலம், மருத்துவ செலவுகளோடு மன்றாடுவதை சொல்லி அனுதாபம் தேடியது.
குழந்தைகள், தாத்தா, பாட்டி, குடும்பம் என்று ஒபாமாவின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கும் விமர்சனங்களுக்கு பதில் தந்தது.
நிகழ்ச்சி முழுக்க சோகமயமாக, அமெரிக்காவின் எதிர்காலம் குறித்த பயமுறுத்தல்களைக் கொடுத்தது. ‘நான் ரொம்ப செலவழிக்கிறேனோ? வேலை போயிடுமோ??’ என்னும் அச்சமூட்டுவதாக அமைந்தது.
இறுதியாக நேரடி ஒளிபரப்பாக ஃப்ளோரிடா பேச்சைக் காட்டினார்கள். டிவியில் பார்க்கும் போதே உத்வேகம் எழும்பியது.
விளைவுகள்:
ஒவ்வொரு முறை டிவியில் தோன்றிய பிறகும் ஒபாமாவின் செல்வாக்கு உயர்ந்துள்ளது. இந்த முறையும் வாக்காளர்களிடையே மதிப்பு உயரலாம்.
ஜனநாயகக் கட்சி மாநாட்டில் வெள்ளை மாளிகை போல் மேடை அமைத்தார். இதில் ஜனாதிபதி அறை போன்ற தோற்றம், மக்களிடையே ‘இவர்தான் தலைவர்’ என்னும் பிம்பத்தை வளர்க்கலாம்.
அரை மணி முழுக்க ‘வரி விலக்கு’ என்பதே தாரக மந்திரமாக உச்சாடனம் செய்யப்பட்டது. சில சமயம் மெகயின்/குடியரசுக் கட்சி விளம்பரமோ என்று எண்ண வைக்குமளவு.
பென்சில்வேனியா உழைப்பாளிகள் முதல் ஃப்ளோரிடாவின் முதிர்ந்தோரைக் குறி வைத்த நிகழ்ச்சி. இந்த விளம்பரம் அவர்களை ஒபாமா பக்கம் சாயவைக்காது.
ஹில்லரியின் ப்ளூ காலர் வெள்ளைக்காரர்களையும் பேலின் வந்ததால் குடியரசுக் கட்சி வாக்காகி போன பெண்களையும் இந்த மாதிரி கவர்ச்சிகள் ஈர்க்குமா? அடுத்த வாரம் தெரிந்துவிடும்.
* Accept that some days you’re the pigeon, and some days you’re the statue.
* Solitude is independence
* Call no man happy until he is dead - Oedipus
* It is what you read when you don't have to that determines what you will be when you can't help it. - Oscar Wilde
* The difference between literature and journalism is that journalism is unreadable and literature is not read. - Oscar Wilde