Tag Archives: வணிகம்

வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி! மக்களின் மனதில் நிற்பவர் யார்?

ஜிம் சைமன்ஸ் மறைந்துவிட்டார்.

தமிழ் ஊடகங்களில் லங்காஸ்ரீ மட்டுமே கட்டுரை வெளியிட்டு இருக்கிறது. அவர்களின் அஞ்சலிக் குறிப்பில் இருந்து:

“கணிதம் மற்றும் தரவு சார்ந்த அணுகுமுறையால் நிதிச் சந்தைகளில் முதலீடு செய்வதில் புரட்சியை ஏற்படுத்தியவர் ஜிம் சைமன்ஸ் (Jim Simons).
31 பில்லியன் டொலர்கள் நிகர மதிப்புள்ள ஜிம் சைமன்ஸ் உலகின் பணக்காரர்களில் ஒருவர் ஆவார்.
வர்த்தகம் குறித்த முடிவுகளுக்கு கணினி சிக்னல்களை பயன்படுத்தி முன்னோடியாக திகழ்ந்ததால் ”Quant King” எனும் பெயரால் ஜிம் சைமன்ஸ் அழைக்கப்பட்டார்.”

https://news.lankasri.com/article/world-richman-jim-simons-dies-at-86-1715378169

நினைத்துப்பார்க்க முடியாத அளவு பணத்தை கணித ஆராய்ச்சிக்காக களத்தில் குவித்தவர். கணிதவியல் ஆராய்ச்சியாளர்கள், கணக்கில் ஆர்வம் கொண்டோர் என அனைவரையும் சொகுசாக ஒன்று சேர்த்து மாநாடுகளை நடத்தியவர். ஸ்டோனி ப்ரூக் பல்கலையில் SCGP (Simons Center for Geometry and Physics), நியு யார்க் நகரில் சைமன்ஸ் மையம், Mathematical Sciences Research Institute (MSRI) என்று அழைக்கப்பட்ட Simons Laufer Mathematical Sciences Institute (SLMath); தொழில்நுட்பத் துறையிலும் அறிவியல் ஆய்வு என உலகின் அனைத்து ஆராய்ச்சிகளையும் இலவசமாகக் கொடுக்கும் arXiv தளத்திற்கு பல பில்லியன்கள்; மாக்மா ஒப்பந்தம்; AMS-Simons மானியங்கள்; சைமன்ஸ் இணைவாக்க நிதிநல்கை; குவாண்டா சஞ்சிகை (Quanta); கணக்கை சுவாரசியமாகச் சொல்லிக் கொடுக்கவும் புதிய விஷயங்களை விளக்கவும் Numberphile யூடியுப் கன்னல்; Math for America; தேசிய கணித அருங்காட்சியகம்; சைமன்ஸ் வானாய்வகம்

உதவித் தொகைகளை பட்டியல் போட்டால் பில் கேட்ஸ் ஃபவுண்டேஷன் கூட ‘எச்சில் கையால் காகத்தை விரட்டுவது’ போல் தோன்றிவிடும்.

ஆய்வு மாணவர்களிடம் புழங்கும் நகைச்சுவையைக் கேட்டிருப்பீர்கள்: வேறெந்தத் துறையைக் காட்டிலும் வடிவகணிதம் சார்ந்த ஆராய்ச்சி முடித்தவருக்குத்தான் சராசரியாக அதிகபட்சமாக ஒரு மில்லியன் டாலர் சம்பளம் கிடைக்கும். சைமன்ஸ் மூன்று பில்லியன் சம்பாதிக்கிறார். மற்ற எல்லோரும் வருடத்திற்கு அறுபதாயிரம் டாலர் வாங்குவோம்.

“Be guided by beauty. I really mean that. Pretty much everything I’ve done has had an aesthetic component, at least to me. Now you might think ‘well, building a company that’s trading bonds, what’s so aesthetic about that?’ But, what’s aesthetic about it is doing it right. Getting the right kind of people, and approaching the problem, and doing it right […] it’s a beautiful thing to do something right.”

Jim Simons

உன்னால் முடியும்: ஸ்டார் விஜய் டிவி நிகழ்ச்சி

நேர்காணல்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. தூர்தர்ஷனில் ‘மலரும் நினைவுகள்’ நிகழ்ச்சியை தவற விட்டதில்லை. அப்புறமாக சன் டிவி வந்த பிறகு அலுக்க அலுக்க திரை நட்சத்திரங்கள், டெக்னிஷியன்கள் பேட்டி கிடைத்தது. எப்படி இருந்தாலும் ‘திரும்பிப் பார்க்கிறேன்’ என்று கே விஷ்வநாத் வந்தாலும் சரி… இயக்குநர் கே பாலச்சந்தர் வந்தாலும் சரி… பார்த்து விடுவேன்.

அந்தப் பட்டியலில் சமீபத்திய வரவு – ஸ்டார் விஜய் வழங்கும் ‘உன்னால் முடியும்’.

உலக அளவின் தங்கள் நிறுவனத்தை புகழ் பெற வைத்த நிறுவனர்கள் வருகிறார்கள். நம்ம மொழியில் பேசுகிறார்கள். சந்தையாக்கத்தையும் விற்றுத் தள்ளி வென்ற ரகசியங்களையும் கதைகளையும் பகிர்கிறார்கள். தமிழில் இந்த மாதிரி முயற்சி வரவேற்கத்தக்கது. பலரை ஊக்கப்படுத்தும்.

இதுவரை இடம்பெற்ற ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியான தொகுப்பு:

யூனிவெர்சல் சதீஷ் பாபு: Sathish Babu from UniverCell

ஆச்சி மசாலா பதம்சிங் ஐஸக்: Padmasingh Isaac, the founder of Aachi

அருண் எக்ஸெல்லோ சுரேஷ்: Suresh, the President of Arun Excello

ஹட்சன் சந்திரமோகன்: Chandramohan, the President of Hatsun

இதயம் நல்லெண்ணெய முத்து: Muthu, the President of Idhayam

நேச்சர் பவர் சோப் தனபால்: Dhanapal, the President of Power Soap

Unnal Mudiyum – A interview with the successful personalities, the secrets behind their success.

ரேஷன் சிமெண்ட், இலவச வண்ணத் தொலைக்காட்சி: கள்ளச்சந்தை வணிகம்

Host unlimited photos at slide.com for FREE!

31st Chennai Book Fair 2008 – Small biz vs Big box Retailers

பதிப்பாளர் ஒருவர், அரங்குகள் நான்கா?

இந்த ஆண்டு ஒரு பதிப்பகத்தைச் சேர்ந்தவர்களே ஒன்றுக்கும் மேற்பட்ட அரங்குகளை எடுத்து தங்களுடைய புத்தகங்களை விற்பனைக்கு வைத்துள்ளனர். இதனால் சிறுபதிப்பாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். பதிப்பாளர் சங்கத் தலைமையிடம் செல்வாக்கு உள்ளவர்களுக்கு இவ்வாறு இடம் ஒதுக்கப்படுகிறதோ என்று சந்தேகம் ஏற்படுகிறது.

அடுத்த ஆண்டு சரி செய்யப்பட்டுவிடும்…’

ஒருவர் தனது பெயரில் ஒரு பதிப்பகமும், மனைவி பெயரில் இன்னொரு பதிப்பகமும், உறவினர் பெயரில் மற்றொரு பதிப்பகமும் வைத்திருந்தால் மூவரும் சங்கத்தில் உறுப்பினர் ஆக முடியும். இந்த மூவர் பெயரிலும் அரங்குகள் வேண்டும் என்று கேட்கிறபோது நாங்கள் சங்கத்தின் சட்டதிட்டங்களுக்கும் விதிகளுக்கும் உட்பட்டு அரங்குகள் ஒதுக்க வேண்டியதாக உள்ளது.

சில பதிப்பகங்கள் தங்களுடைய அரங்கில் மட்டும் தங்கள் பதிப்பகத்தின் புத்தகங்களை விற்காமல் பிற அரங்குகளிலும் விற்பனைக்கென கொடுத்து விடுகிறார்கள். இதனால் எங்கு பார்த்தாலும் ஒரு சில பதிப்பகங்களின் புத்தகங்களே இருக்கின்ற சூழ்நிலை உருவாகிவிட்டது…சிறுபதிப்பாளர்களின் புத்தக விற்பனை குறையும் வாய்ப்பும் உள்ளது.

தினமணி: இந்த ஆண்டு மொத்தம் வந்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 49 ஆயிரம்.

நடுவில் என்னுடைய மறுமொழி:

ஒருவரே பல பெயரில் பதிப்பகம் நடத்துவது ரொம்ப காலமாக நடந்து வருகிற விஷயம். கிழக்கு போன்றவர்கள் அதை வெளிப்படையாக செய்கிறார்கள். வானதி பதிப்பகத்தார் போன்ற பழம்பெரியவர்கள் இதையே கமுக்கமாக நீன்ட நெடுங்காலமாக நடத்துகிறார்கள். ‘நாலு ஸ்டால் போட்டு இருக்காங்களே’ என்பது வளர்ந்தவரைப் பார்த்து பொறாமை பாராட்டும் குணம்.

‘சிவாஜி’ படம் ஊரில் அகப்பட்ட அனைத்து திரையரங்குகளிலும் வெளியாவது போல், குறிப்பிட்ட பதிப்பகத்தின் புத்தகங்கள் அனைத்து விற்பனை அரங்குகளிலும் கிடைக்க செய்வது வியாபார சூட்சுமம். ‘கமிஷன் தண்டம் அழ வேண்டுமே’ என்றால் விற்பனையாகும் அளவு குறைந்து போனாலும், நிகர லாபம் கூட்டிக் கழித்துப் பார்த்தால் சரிசமமாகும்.

உள்ளே இருப்பவர்களுக்குத்தான் இது உண்மையா என்று தெரியும்.

பாதி கடந்த நிலையில் பத்ரியின் எண்ணங்கள்:

சிறு பதிப்பாளர்களுக்கு ஏதோ ஒரு வகையில் மான்யம்… அதாவது அவர்களுக்கு மட்டும் குறைந்த விலையில் ஸ்டால் கொடுக்க ஏற்பாடு செய்யலாம். அப்படியானால் யார் சிறு பதிப்பாளர்கள் என்ற வரைமுறையும் (ஆண்டுக்கு என்ன டர்ன் ஓவர் என்பதைக் கொண்டு இருக்கலாம்) அதற்கான ஆடிட் சான்றும் இருந்தால் இதனைச் செய்யலாம்.

பி.கே. சிவகுமார்:

புத்தகக் கண்காட்சி இல்லாதபோது விற்பனைக்குப் புத்தகக் கடைகளைச் சார்ந்து வாழ்கிற பதிப்பகங்கள், ஒன்று புத்தகக் கண்காட்சியிலும் புத்தக விற்பனை நிலையங்களுக்கு இப்போது போலவே Equal இடம் கொடுக்க வேண்டும் அல்லது அவர்களுக்குப் புத்தகக் கண்காட்சியில் இடமே இல்லை என்று சொல்ல வேண்டும். இடமே இல்லை என்று சொல்ல முடியாது. சொல்லிவிட்டால், வருடத்தில் பதினோரு மாதங்கள் இந்த விற்பனையாளர்களின் தயவு இல்லாமல் புத்தகங்கள் விற்காது.

ஆதலால், ஒரு புத்தகம் பல கடைகளில் கிடைப்பது ஜனநாயகம்.

இந்தக் கடையில் மட்டுமே இந்தப் புத்தகம் இருக்க வேண்டும் என்கிற குறுகியகால லாபங்களை மனதில் கொள்ளாது செயற்படுவதே நல்லது. பல கடைகளில் ஒரு புத்தகம் கிடைத்தாலும் பதிப்பாளருக்கு நஷ்டமில்லை. 30%-லிருந்து 40% கமிஷன் கொடுக்க வேண்டியிருந்தாலும் அது லாபமே. அந்த கமிஷன் லாபமும் தனக்கே வரவேண்டும் என்று நினைப்பது என்னைப் பொருத்தவரை நிச்சயம் சரியில்லை.