Tag Archives: மெகெயின்

ஜனநாயகக் கட்சி: 50%; குடியரசு – 37% ஆதரவு! ஆனால்…

இந்தியாவில் கட்சி/கூட்டணி சார்ந்த வோட்டுதான் பெரும்பாலும் விழும். ரஜினி வாய்ஸ் முதல் ராஜீவ் காந்தி வரை தனிப் பெரும் தலைவராக சிலர் முன்னிறுத்தப்பட்டாலும், ஆளுங்கட்சி vs எதிர்க்கட்சி இடையிலேயான போட்டி என்பதுதான் ஃபார்முலா.

அமெரிக்காவில் தனி நபர் சார்ந்த அரசியல் முன் வைக்கப்படுகிறது. ரான் பால் முதல் ரொனால்ட் ரீகன் வரை எல்லாருமே குடியரசுக் கட்சி சின்னத்தில் நின்றாலும் தனிப்பட்ட கொள்கை, ஆளுமை போன்றவற்றால் ஜனநாயகக் கட்சியிலும் அபிமானிகளைப் பெற்று வைத்திருக்கிறார்கள்.

இன்றைய தேதியில் ‘எந்தக் கட்சிக்கு உங்கள் வாக்கு?’ என்று கருத்துக்கணிப்பு நடத்தியதில் தெரியவந்ததுதான் தலைப்பாக இருக்கிறது. மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் டெமோக்ராட்ஸ் வாகை சூட வேண்டும். ஆனால், மெகெயினா/ஒபாமாவா (அல்லது) மெக்கெயினா/ஹில்லரியா என்றால், இழுபறி என்கிறார்கள். (முழுமையான முடிவுகள்: என்.பி.சி & வால் ஸ்ட்ரீட் ஜர்னல் கணிப்பு)

US President Elections Survey - Opinion Poll by NBC & WSJ - Obama, mcCain, Hillary Clinton, Barack

தற்போதைய ஜனாதிபது ஜார்ஜ் புஷ்ஷை பின்பற்றினாலோ அல்லது அவரின் வழியில் நடப்பேன் என்று பிரச்சாரத்தில் ஈடுபட்டாலோ, ஜான் மெகயின் அதோகதி என்பதையும் இந்த கருத்துக்கணிப்பு தெளிவாக்குகிறது.

WSJ Bush Approval Ratings Iraq Economy Direction

எந்தப் பகுதிகளில் எந்த வேட்பாளர் முன்னிலை?

Hillary Vs Obama Ratings Region Race Age Gender Ideology

முழு அலசல்:

1. More Americans Trust Democrats On U.S. Health Reform, Poll Finds – WSJ.com

2. McCain, GOP May Have Cause for Hope – WSJ.com

கடந்த வாரம் – அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் களம்

cover_newyorker_190.jpgடெமோக்ராட்ஸ் வேட்பாளர் இன்னும் முடிவானபடியில்லை. ‘பெரிய பிரதிநிதிகள்’ எனப்படும் சூப்பர்டெலகேட்ஸ் கையில்தான் ஒபாமாவா/ஹில்லரியா என்பது இருக்கிறது.

க்ளின்டனுக்கு (‘மக்களைப் பயமுறுத்துகிறார் ஹிலாரி’: ஒபாமா) சற்றும் சளைக்காத ஒபாமா அணியினர், ‘ஹில்லரி என்பவர் அரக்கி என்று பேட்டி கொடுக்க, பேட்டி கொடுத்தவருக்கு கல்தா கொடுத்தார் ஒபாமா.

மேலும் விவரங்களுக்கு: BBC NEWS | Americas | Obama aide quits in ‘monster’ row: “An adviser to Barack Obama has resigned after a Scottish newspaper quoted her calling rival US Democratic candidate Hillary Clinton ‘a monster’.”

ஒபாமாவின் இந்த மாதிரி தூஷணைகளுக்கு ‘முடிவல்ல.. ஆரம்பம்’ என்கிறது நியூஸ்வீக்: Obama’s Next Moves | Newsweek Politics: Campaign 2008 | Newsweek.com: “Obama’s aides are more than ready to turn their half-hearted criticism into a full-blown attack on the Clintons. Among the targets on the Obama campaign’s list: the Clintons’ tax returns, Bill Clinton’s international business relationships and the secret donors to the Clinton foundation.”

ஹிலரி க்ளின்டன் அணியினரும் ‘துரத்தி துரத்தி அடிப்பதில் மோனிகா லூயின்ஸ்கி விவகாரத்தைக் கையிலெடுத்த வழக்கறிஞர் கென்னத் ஸ்டார் போல் ஒபாமா வெறித்தனமாக’ செயல்படுகிறார் என்றனர்.

“ஒபாமாவா, ஜான் மெக்கெயினா என்று பார்த்தால் – பராக்கை விட எதிர்க்கட்சியின் மெகெயினே அடுத்த ஜனாதிபதியாக உகந்தவர்” என்று ஹில்லாரியே நேரடியாகப் பேட்டியளித்தார்.

மேலும் விவரங்களுக்கு: Confronting the Kitchen Sink – New York Times: “if a choice on national security had to be made today between Senators Obama and McCain, voters — according to Mrs. Clinton’s logic — should choose Senator McCain. That is a low thing for a Democratic presidential candidate to do to a rival in a party primary.”

நாப்டா விவகாரத்தில் க்ளின்டனும் ஒபாமாவும் அடிக்கும் பல்டிகளுக்கு குடியரசு நாயகரான ஜார்ஜ் புஷ்ஷும், ஜான் மெகெயினுமே தேவலாம் போல என்று சர்வதேச ஊடகங்கள் அபிப்ராயிப்பதாக பரீத் ஜகாரியா தெரிவித்துள்ளார்: Zakaria: Dems vs. Free Trade | Newsweek Voices – Fareed Zakaria | Newsweek.com: “Listening to the Democrats on trade ‘is enough to send jitters down the spine of most in India,’ says the Times Now TV channel in New Delhi. The Canadian press has shared in the global swoon for Obama, but is now beginning to ask questions. ‘What he is actually saying—and how it might affect Canada—may come as a surprise to otherwise devout Barack boosters,’ writes Greg Weston in the Edmonton Sun.”

என்னவாக இருந்தாலும் ஹில்லரி கிளிண்டன் இடதுசாரி போல் பேசினாலும், ‘பழைய பாட்டில்; பழங்கஞ்சிதானே’ என்று ஒபாமா பேச்சுக்களின் சாத்தியக்கூறுகளை ராபர்ட் ரீச் முன்வைக்கிறார்: Opinions: ‘Idealism, not leftism’ by Robert Reich | Prospect Magazine March 2008 issue 144: “She wants universal healthcare, but won’t support a ‘single-payer’ plan like Britain’s NHS, which is the best way to control medical costs. She won’t commit to raising taxes on the rich to finance social programmes, except for rolling back the Bush tax cuts.”

இங்கிலாந்தில் இட ஒதுக்கீடு குழுவின் பொறுப்பில் இருக்கும் ஆப்பிரிக்க – அமெரிக்கரின் புத்தகம் சார்ந்த அலசல்: Opinions: ‘Healing postponed’ by Trevor Phillips | Prospect Magazine March 2008 issue 144: “For all his lofty talk of national unity, Obama may actually put back the arrival of a post-racial America”

சிறுபான்மையினர் கிட்டத்தட்ட முன்னேறியிருக்கும், ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் ஓரளவு சம உரிமை வகிக்கும் மாஸசூஸெட்ஸ், நியூ யார்க், கலிஃபோர்னியா போன்ற இடங்களில் ஒபாமா ஏன் தோற்கிறார் என்பதை ஷெல்பி ஸ்டீலின் (Amazon.com: A Bound Man: Why We Are Excited About Obama and Why He Can’t Win: Shelby Steele: Books) நூலின் விமர்சனமாக விளக்குகிறார்.

இந்த வாதத்தை தற்போதைய வோட்டு கணக்கெடுப்புகளை வைத்து, வாக்காளர்களின் பின்னணியைக் கொண்டு அலசி, மறுத்துப் பேசும் ஆராய்ச்சி: RealClearPolitics – HorseRaceBlog – Demography and the Democratic Race: “It is a matter of income. Whites who make more money tend to support Obama. Whites who make less money tend to support Clinton.”

ஆனால்… இனம் இன்னும் முக்கியம்?

na-ap652a_race_20080305201213.gif

நன்றி: Race May Be Playing Role For Working-Class Voters – WSJ.com: “White working-class voters tend to be more conservative in terms of social beliefs and that is going to spill over.”

ப்ளோரிடாவும் மிச்சிகனும் அவசரப்பட்டு தேர்தல் நடத்தியதால் தங்களின் பிரதிநிதிகளையும் வாக்குகளையும் மதிப்பிழந்து நிற்கிறது. இவ்விரு இடங்களிலும் பராக் ஒபாமா கலந்துகொள்ளவில்லை. எனவே, ஹிலாரி எளிதில் வென்றிருந்தார். பராக் போட்டியிடாமல் வென்ற பிரதிநிதிகளையும் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்வோம் என்கிறார் கிளிண்டன். மறுதேர்தல் நடத்துவது நியாயம் என்கிறார் ஒபாமா.

இப்போதைக்கு இழுபறி: Florida, Michigan revotes come down to money – CNN.com: “Florida revote could cost $20 million; Michigan’s could cost $10 million”

ஜனநாயகக் கட்சி எப்படியும் ஜெயிக்க முடியாத இடங்களை, பராக் ஒபாமா தொடர்ந்து வென்று வருகிறார். அதே போல் வையோமிங் மாகாணத்திலும் ஜெயித்துள்ளார். ஒஹாயோவிலும் டெக்சஸிலும் தோற்ற புண்பட்ட நெஞ்சுக்கு இது பர்னாலாக அமைந்திருக்கிறது.

மேலும் விவரங்களுக்கு: Obama trounces Clinton in Wyoming – Los Angeles Times: “His win after her victories in Ohio and Texas is another promise of a continued pitched battle for delegates.”

இவ்வளவு தூரம் ஜனநாயகக் கட்சியின் குடுமிப்பிடி குழாயடி சண்டைகளை சொல்லிவிட்டு, குடியரசு வேட்பாளர் மெக்கெயின் குறித்து எதுவும் சொல்லாமல் முடிக்கக் கூடாது என்பதற்காக…

ஜான் மெகெயினின் கோபம் பிரசித்தமானது. இந்த தடவை ஊடகங்களும் அவருடன் ‘மோகம் முப்பது நாளாக’ கொஞ்சிக் கொண்டிருக்க, அவரும் தன்னுடைய அறச்சீற்றங்கள கட்டுக்குள் வைத்தே வந்திருக்கிறார்.

ஆனால், அந்த புகழ்பெற்ற முன்கோபம் எட்டிப் பார்த்திருக்கிறது. ‘சென்ற 2004 தேர்தலில் தங்களை ஜான் கெர்ரி தூணை ஜனாதிபதியாக நிற்கக் கோரினாரா’ என்று முன்பு கேட்டிருந்தபோது ‘அப்படியெல்லாம் பேச்சே எழவில்லை’ என்று புறங்கையால் ஒதுக்கியிருந்தார். தற்போது முன்னுக்குப் பின் முரணாக அவ்வாறு பேசியதை ஒப்புக் கொண்டதை சுட்டிக் காட்டியதும் சினம் தலை தூக்கியிருக்கிறது.

மேலும் விவரங்களுக்கு: McCain Asked About Kerrys V.P. Offer – The Caucus – Politics – New York Times Blog: “when Mr. McCain was asked about the conversation – and why he said in an interview with The New York Times in May 2004 that he had not even had a casual conversation with Mr. Kerry on the topic – Mr. McCain displayed some of the temper that he has largely kept under control in this campaign.”

கட்டாங்கடைசியாக, செல்வராஜ் (R.Selvaraj)

ஹில்லரி வெற்றியோ தோல்வியோ சிறிய அளவில் இருக்கும்; ஒபாமா பெரிய இடைவெளியில் வெல்வார், அல்லது பெரிய இடைவெளியில் தோற்பார் என்று எனக்குத் தோன்றுகிறது.

ஜெயிக்கப் போவது யாரு? – கருத்துக்கணிப்பு முடிவுகள்

நன்றி: லாஸ் ஏஞ்சலீஸ் டைம்ஸ்

results_president_usa_winners.gif

mccain_survey_polls_la_times.gif

அமெரிக்க தேர்தல் – ஜான் மெக்கெயின் சறுக்கிய தருணங்கள்

McCain Love Link - Romance by Republicans: GOP Valentines Day  Specialகட்டுரையில் இருந்து…

  • வலப்பக்கம் உள்ளவர் மெக்கெயினின் காதலியா!?! நாற்பது வயது பெண்ணுடன் தொடர்பா?
      நட்பின் பேச்சைக் கேட்டு லாபியிஸ்ட்களின் நிறைவேறிய கோரிக்கைகள்…

    1. பெருநகரத்தில் இயங்கும் இரண்டு முக்கிய தொலைக்காட்சி கன்னல்களையும் ஒரே நிறுவனமே வைத்துக் கொள்ள வகை செய்யும் திட்டம்
    2. சிறுமுதலீட்டுக்காரர்களின் விருப்பப்படி வரிவிலக்கு தரும் சட்டம்
    3. மாநிலத்தில் இயங்கும் பல ஊடகங்களை ஒரே ஒருவரே கையகப்படுத்த விதிவிலக்கு ஏற்படுத்துதல் (இந்த நிறுவனத்தின் விமானத்தையும் சொந்தப் பயணங்களுக்கு பயன்படுத்தி உள்ளார்)
  • (தங்களுக்கு சௌகரியமான சட்டங்களை இயற்றவும், பரிவு ஏற்படும் பார்வையை தோற்றுவிக்கவும் இந்தியா முதல் இன்டெல் நிறுவனம் வரை அனைவரும் ‘லாபியிஸ்ட்’களை நியமித்திருப்பார்கள்.) இவர்கள் கொடுக்கும் பணத்தை எதிர்த்து சட்டம் கொண்டுவருவதாக சொல்லிக்கொண்டே, லாபியிஸ்ட் பணத்தை வாங்கிக் கொண்ட கதை.
  • வங்கி அதிபரின் தனி விமானத்தில் பலமுறை வாஷிங்டன் டிசிக்கும் சொந்த ஊருக்கும் பறந்து சென்றது;
  • அமெரிக்காவில் (முன்பு) ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணகர்த்தாக்களில் ஒருவருடன் பஹாமாஸ் உல்லாசப் பயணம் சென்றது;
  • மெகெயினின் மனைவிக்கு ஷாப்பிங் மாலில் பங்கு கொடுத்து விட்டு, அதற்கு பிரதிபலனாக வங்கியின் கடன் கெடுபிடிகளை, நடுவண அரசு கண்டும் காணாமல் இருக்கச் செய்தது
  • தொலைத்தொடர்பு நிறுவன லாபியிஸ்ட்களை தன்னுடைய பிரச்சாரக் குழுவின் முக்கிய அங்கத்தினர்களாக நியமிப்பது; அது மட்டுமல்லாமல், அதே தொலைபேசி/தொழில்நுட்ப நிறுவனங்களிடமிருந்து எண்ணிலடங்கா நிதியை தன்னுடைய பிரச்சாரத்துக்காகப் பெற்றுக் கொள்வது

விடைகளையும் விவரங்களையும் அறிய (நியு யார்க் டைம்ஸ்): For McCain, Self-Confidence on Ethics Poses Its Own Risk

இதற்கெல்லாம் நேரில் விளக்கம் கொடுக்கும் பேட்டி கொடுத்து தன் பக்கத்து நியாயங்களை வைக்குமாறு வாய்ப்பு வழங்கிய நியு யார்க் டைம்ஸ் நாளிதழுக்கு நேர்காணல் வழங்காமல் புறக்கணித்தும் விட்டார்.

ஜனாதிபதி தேர்தல் – அமெரிக்கர்களுக்கு குழந்தை மனது

நன்றி: US Primary Elections – தமிழோவியம்

அமெரிக்க ஜனாதிக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர் தேர்வு குடியரசு கட்சி சார்பிலும் ஜனநாயக கட்சி சார்பிலும் நடந்து வருகிறது.

Matt Bors

அதன் தொடர்பாக வெளியிட்ட மறுமொழிகள், அனுபவங்கள், படித்ததில் பிடித்தது…

எனக்கு நேரடியாகத் தெரிந்த, பழக்கமான அமெரிக்கர்களிடம் ‘உங்க வோட்டு யாருக்கு’ என்று வினவியதில் எவரும் நேரடியாக பதில் சொல்லாமல் நழுவி விட்டார்கள். கட் அன்ட் ரைட்டாக மகளிடமிருந்து மட்டும் பதில் வந்தது.

பள்ளியில் ஒவ்வொரு வேட்பாளரைக் குறித்தும் சிறு அறிமுகம் கொடுத்த வாத்தியார், அதன் பிறகு புகைப்படத்தைக் காட்டி வாக்கு கோரி இருக்கிறார்.

முதலாம் வகுப்பின் வாக்கு எண்ணிக்கை நிலவரம்:
மொத்தம் – 21 + 20 (ஏ & பி – இரு பிரிவுகள்)
ஹில்லரி: 15
ஒபாமா: 6
ராம்னி: 9
மெக்கெயின்: 8
மற்றவை – செல்லாதவை & இன்ன பிற

இருபத்திரண்டு பெண்கள் இருந்தும், என்னுடைய மகள் வாக்கையும் சேர்த்து பதினைந்து மட்டுமே ஹில்லரிக்கு விழுந்துள்ளது.

க்ளின்டனுக்கு ஏன் வாக்களித்தாய் என்றும் கேட்டிருக்கிறார்கள். மகள் மூன்று காரணங்களை முன்வைத்தாள்:
1. அவர் மட்டும்தான் பெண் வேட்பாளர்
2. ஏற்கனவே கேட்ட பெயராய் இருந்தது (வீட்டில் ஹில்டன் பெயர் அடிபட்டிருக்கும்; பாரிஸ் ஹில்டனுக்கும் ஹில்லரி கிளின்டனுக்கும் இடையே குழப்பம் ஏற்பட்டிருக்கலாம்)
3. மறந்து போச்சு என்றாள் (இரண்டாம் காரணத்தை இங்கு மீண்டும் படித்துக் கொள்ளவும்)

அமெரிக்கர்களுக்கு குழந்தை மனது.

நாளையை குறித்த கவலை இருக்க கூடாது (பொருளாதாரம்). அவர்களின் பொம்மை அவர்களுக்கு மட்டுமே சொந்தமாக இருக்க வேண்டும் (குடிபுகல்). பனிப்பொழிந்தோ அல்லது இன்ன பிற உபாதைகளினாலோ வாரயிறுதி கொண்டாட்டாங்கள், பிறந்தநாள் விருந்துகள் தடைபடக் கூடாது (புவிவெப்பமடைதல்). தன்னை விட யாரும் பாப்புலர் ஆகிவிடக் கூடாது (இராக்/இரான்/போர்). ரொம்ப வீட்டுவேலை செய்ய வைக்க கூடாது (வரிச்சுமை).

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று

பிறந்து வந்த போது நெஞ்சம் திறந்திருந்தது
அந்த பிள்ளையோடு தெய்வம் வந்து குடியிருந்தது
வயது வந்த பிறகு நெஞ்சில் மயக்கம் வந்தது
அங்கு வாழ்ந்திருந்த தெய்வம் கொஞ்சம் விலகிச் சென்றது

குழந்தைகளுக்கு பெற்றோர்கள் மீது கொள்ளைப் பிரியம். அதே போல், வேட்பாளராகக் களத்தில் குதிக்கும்போது அமெரிக்க வாக்காளர்களுக்கு பிடித்த மாதிரி இருக்கிறார்.

‘இதைச் செய்யாதே; வீட்டுப்பாடம் செய்’ என்றெல்லாம் கட்டளை இடும்போதுதான் வாக்காளர்களுக்கு கோபம் கலந்த வெறுப்பு வருகிறது. தாத்தா, பாட்டி, அத்தை, நண்பர் என்று பாசம் திசை மாறுகிறது.

ஜனநாயகக் கட்சியின் ஒபாமா மேல் இன்னும் தூஷணப் பட்டியல் துவங்கவில்லை. ஹில்லாரியை வெறுத்து ஒதுக்குவதற்கென்றே ஆயிரத்தெட்டு வலையகங்கள் இருக்கின்றன. இதெல்லாம் கனகச்சிதமாக அரங்கேற்றும் குடியரசு கட்சி வேட்பாளரே இன்னும் முடிவாகத்தால் அவர்கள் அடக்கி வாசித்து வருகிறார்கள்.

மிட் ராம்னி இடைவிலகல்

குடியரசு கட்சியின் வேட்பாளராகும் போட்டியில் இருந்து தாற்காலிகமாக விலகிக் கொள்வதாக முன்னாள் மாஸசூஸட்ஸ் ஆளூநர் மிட் ராம்னி அறிவிக்கப் போவதாக அந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

போட்டியில் இருந்து முற்றிலுமாக விலகிக் கொள்ளாமல் இவ்வாறு இடைநிறுத்துவதன் மூலம், ஏற்கனவே பெற்றிருந்த வெற்றி மாகாணங்களை கைவிட்டு விடாமல் தக்கவைத்துக் கொள்ள இயலுகிறது. பணம் செல்வழிப்பதையும் கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம். வேட்பாளருக்கான இறுதி முடிவில் எப்பொழுது வேண்டுமானாலும் மீண்டும் சேர்ந்து கொள்ளலாம்.

மிட் ராம்னி இடைவிலகியதால் குடியரசு கட்சிக்கான போட்டியில் தற்போது ஜான் மெகெயின், மைக் ஹக்கபீ, ரான் பால் ஆகியோர் மட்டுமே களத்தில் உள்ளனர். கடந்த செவ்வாய் நடந்த தேர்தலில் ஜான் மெக்கெயின் பெரும்பான்மை பெற்றிருந்தாலும், யார் வேட்பாளர் என்று அறுதியிட்டு சொல்ல இயலாத நிலை தொடர்ந்து நீடிக்கிறது. இதே நிலை பின்வரும் மாகாணங்களிலும் தொடர்ந்தால், மிட் ராம்னியின் பிரதிநிதிகள் (delegates) முக்கியத்துவம் அடைவார்கள்.

இப்பொழுது சில மேற்கோள்கள்:
விவாதம், கருத்து, தற்போதைய நிலை: ஒபாமா வெல்லட்டும்

இலவச கொத்தனார்: ஹிலாரி அதிபரானால் பில் உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி பொறுப்பில் நியமிக்கப்படும் சாத்தியக்கூறு இருப்பதாகச் சொல்லப்படுவது

சுந்தரமூர்த்தி: இப்போது முதன்மை கட்டத் தேர்தலில் ஹிலரி (பெண்) – ஒபாமா (கறுப்பர்) போட்டியே இவ்வளவு ஆவலைத் தூண்டுகிறதென்றால், அரசியல் பண்டிதர்கள் கணித்தமாதிரி இறுதித் தேர்தல் ஹிலரி vs காண்டி என்றிருக்குமானால் கன்சர்வேடிவ் வெள்ளைக்கார ஆண்களுக்கு எவ்வளவு பெரிய சிக்கல்? வெள்ளைக்கார லிபரல் பெண்ணை ஆதரிப்பதா அல்லது கறுப்பு கன்சர்வேடிவ் பெண்ணை ஆதரிப்பதா?

சன்னாசி:ஒபாமா விஷயத்தில் பராக் ஹூசைன் ஒபாமாவின் பெயரிலிருக்கும் ‘மத்திப் பெயர்’ இன்னும் முழு அளவில் வலதுசாரி மீடியாக்களால் வம்பிழுக்கப்படவில்லை. ஜனநாயகக் கட்சியின் நாமினேஷன் கிடைத்தால் முழு வீச்சில் இது இறங்குமென்று நினைக்கிறேன்.

இந்த வருடமும் swift boat veterans ‘for truth’ கள் மறுபடி வரலாம், அல்லது ஒசாமாவிடமிருந்து தேர்தல் நேரத்தில் ஒரு வீடியோ வரலாம்.

சில கேள்விகள்:

இ.கொ.://ரான் பால் அவர்களின் நிலைப்பாடுகள் பல எனக்குப் பிடித்திருக்கிறது.//
சு.மூ.: எந்தெந்த நிலைப்பாடுகள்?

1. அமெரிக்காவின் பணம் அமெரிக்காவுக்கே செலவழியட்டும் என்பது பலருக்கு ஒப்புதலாக இருக்கிறது. ஆப்கானிஸ்தான், இராக், இரான் என்று சண்டைக்குப் போகாதே என்கிறார். ‘அவர்கள் அணு ஆயுதம் வைத்துக் கொண்டால் உங்களுக்கென்ன குடிமுழுகிப் போகிறது’ என்று பட்டும் படாமலும் இருக்க வைப்பேன் என்கிறார்.

2. வருமான வரியே இல்லாத அமெரிக்காவைக் கொண்டு வருவேன் என்பது பலருக்கு பிடித்திருக்கிறது. AMT எனப்படும் குறைந்தபட்ச மாற்று வரி அல்லது எளிமையாக்கப்பட்ட வருமான வரி போன்றவற்றுக்கு நெடுங்காலமாக அபிமானிகள் இருந்து வருகிறார்கள். தற்போதுள்ள மூன்று குழந்தை, இரண்டு மனைவி, ஒன்றரை நிறுவனம், அரை வீடு என்றால் இத்தனை தள்ளுபடி என்னும் குழப்ப விதிகளை எல்லாம் நீக்குவேன் என்பதும் சிலரை கவர்ந்திழுக்கிறது.

நியூ யார்க் மேயர் ப்லூம்பர்க்

இவர் ஜனாதிபதி வேட்பாளராக உள்ளே நுழைந்தால் அல்லது ஒபாமவிற்கு/மெகெயினுடன் துணை ஜனாதிபதியாக நுழைந்தால்… என்று பல அனுமானங்கள் ஓடிக் கொண்டிருக்கிறது.

இவரும் நியு யார்க் சார்பாக போட்டியிட்டு வென்றவர் என்பதால், ஹில்லரி க்ளின்டனுடன் ஜோடி கட்ட முடியாது. ஒபாமாவுடன் மட்டுமே துணை ஜனாதிபதியாக சேர முடியும்.

ப்ளூம்பெர்க் போட்டியிட்டால் யாருடைய வாக்குகள் அதிகமாக சிதறும்?

1) நியு யார்க் செனேட்டர் ஹில்லரி – சென்ற முறை ஜனநாயகக் கட்சி எளிதில் வென்ற நியு ஜெர்சி, நியு யார்க், கலிஃபோர்னியா போன்ற இடங்களில் தோல்வியைத் தழுவலாம்.

2) முன்னாள் சக குடியரசு கட்சி வேட்பாளர் மெக்கெயின் – மதில் மேல் பூனைகள் நிறைந்த ஒஹாயோ, மிச்சிகன் போன்ற இடங்களில் குடியரசு கட்சி வாக்காளர்கள் சிதறலாம்.

3) புது இரத்தங்களை வாக்குசாவடிக்கு வரவழைக்கும் ஒபாமா?

கூடவே ரால்ஃப் நாடர் கூட களத்தில் குதிக்கப் போவதாக பேசிக் கொள்கிறார்கள். அவரும் வந்துவிட்டால் குடியரசு கட்சிக்கு டபுள் போனசாக அமையலாம்.

துணை ஜனாதிபதி

மெக்கெய்னுக்கு இருக்கும் காக்கேசிய, கத்தோலிக்க ஆதரவை மழுங்கடிக்க எட்வர்ட்ஸ் துணை ஜனாதிபதியாக நின்றால் ஓரளவுக்குச் சாத்தியமாகும். ஒபாமா என்றால் அவர் சேரக்கூடும்

எட்வர்ட்ஸ் துணையாக இருப்பதை இருவருமே விரும்ப மாட்டார்கள். உதவி ஜனாதிபதிக்கு போட்டியிடுபவர்களுக்கு இரண்டு லட்சணங்களைப் பார்க்கிறார்கள்:

1. அவரால் எத்தனை மாகாணங்களில் வெற்றி வாய்ப்பு பலமடையும்?
2. எவ்வளவு தூரம் கீழிறங்கி ஒண்டிக்கு ஒண்டி சண்டையில் குதித்து, எதிர்க்கட்சி வேட்பாளரை அலற வைப்பார்??

சென்ற தேர்தலில் ‘அடுத்த முறை நமக்கு வாய்ப்பு வரலாம்’ என்று ஜான் எட்வர்ட்ஸ் அடக்கி வாசித்து நேர்மறையாக பட்டும் படாமலும் பிரச்சாரம் செய்ததை ஜான் கெர்ரி மறந்தாலும் க்ளின்டன் மறந்திருக்க மாட்டார்.

மேலும் ஜான் எட்வர்ட்சால் தனது பிறந்த மாநிலத்தையே வெற்றி கொள்ள இயலவில்லை. இவரால் எப்படி ஜனாதிபதியாகும் வாய்ப்பு பிரகாசமப் போகிறது என்றும் தள்ளுபடியாவார்.

மெக்கெய்ன் ஒரு அசைக்க முடியாத நபர்

ஊடகங்கள் அப்படித்தான் கட்டமைக்கிறது. மேலும் சமயத்துக்கு தக்கவாறு மாறிக் கொள்வதில் மெக்கெயின் வல்லவர்.

இன்றைய தேதியில் ஒரு பழமைவாதிக்கும் ஒரு மிதவாதிக்கும் இடையேதான் குடியரசு கட்சியில் போட்டி நிலவும் வாய்ப்பு. ரீகனுக்கும் அப்பா புஷ்ஷுக்கும் நடந்த போட்டி போன்றவற்றை இதற்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

ஆரம்பத்தில் இருந்தே மெக்கெயின் மிதவாதியாக தோற்றம் காண்பித்து போட்டியிட, எதிரணியில் பழமைவாதியாக சித்தரிக்கப்பட மிட் ராம்னி மட்டும் போட்டாபோட்டி போட்டுக் கொண்டிருந்தார். மாஸசூஸ்ட்சுக்கு ஒரு நிலை, ஜனாதிபதியாக இன்னொரு நிலை என்று ராம்னி அவதாரம் எடுத்ததை விரும்பாத குடியரசு கட்சி வாக்காளர்கள், மைக் ஹக்கபீ பக்கம் சாய்ந்துள்ளனர்.

மிதவாதிகள் பக்கம் இருந்த ரூடி ஜியுலீயானியும் விலகிக்கொள்ள தனிக்காட்டு ராஜாவாக மெக்கெயின் உள்ளார்.

நாளைய தேதியில் குடியரசு கட்சி வேட்பாளராகி விட்டால், தன் ‘கொள்கை’களை (?!) கட்சி விருப்பதிற்கேற்ப தளர்த்திக் கொள்ள தயங்கக் கூடாது என்பதுதான் ஆன் கூல்டர், ரஷ் லிம்பா போன்றவர்களின் விருப்பம்.

மெகெயின் x ஒபாமா:

இருவருமே தங்களது கட்சிகளின் விசுவாசிகளத் தவிர்த்து புதிய ரத்தத்தைக் கவர்ந்திழுக்கிறார்கள். இளைஞர்களை வாக்குப்பெட்டிக்கு வரவைப்பதில் ஒபாமா முன்னணியில் இருக்கிறார் என்றால் நடுநிலையாளர்களை மெகெயின் சொக்குப்பொடி போடுகிறார்.

சென்ற முறை புஷ் வென்ற அனைத்து மாகாணங்களையும் இம்முறையும் குடியரசு கட்சி தக்கவைத்துக் கொள்ளுமாறு மெக்கெயின் பேசுகிறார்; நடந்து கொள்கிறார். ஒஹாயோ, ஃப்ளோரிடா போன்ற இடங்களை ஒபாமா (அல்லது) ஹில்லாரி தட்டி பறிப்பது மிகவும் துர்லபம்.

இறுதியாக சில பலஸ்ருதிகள்:

1. ஜனநாயகக் கட்சி சார்பில் யார் வேட்பாளர்: இன்றைய தேதியில் ஹில்லரி க்ளின்டனுக்குதான் சாத்தியம் அதிகம் இருக்கிறது. கட்சியில் உள்ள செல்வாக்கு, பெருந்தோல்வி காணாத நிலை மற்றும் சிறிய அளவுதான் என்றாலும் பெரும்பான்மை பிரதிநிதிகள்.

2. குடியரசு கட்சி: மிட் ராம்னி விலகிவிட்டார். ரான் பால் எதற்காக இன்னும் இருக்கிறார் என்பது அவருக்கே தெரியாது. ஹக்கபீ துணை ஜனாதிபதியாவது ஆகிவிடும் முடிவோடு இருக்கிறார். மெக்கெயின் எல்லோரையும் சமாதானப்படுத்தி தனிப்பெரும் தலைவராகி விடுவார்.

3. வெள்ளை மாளிகை யாருக்கு: ஒபாமா நின்றால் ஜனநாயகக் கட்சி வெற்றியடையும் வாய்ப்பு பிரகாசம். ஹில்லரி என்றால் சிரமபிரயத்தனம்தான். நடுவில் கரடியாய் ராஸ் பெரோ அல்லது ரால்ஃப் நாடெராக மூன்றாம் வேட்பாளர் எந்தக் கட்சியைக் கவிழ்க்கப் போகிறார், அடுத்த பில் கிளின்டனாகவோ அல்லது ஜார்ஜ் புஷ்ஷாக எவரை அதிர்ச்சி வெற்றிய்டையவைக்கப் போகிறார் என்பதில்தான் சஸ்பென்ஸ் இருக்கிறது.

இன்னும் கொஞ்சம் பின்னணி: Los Angeles Ram: அமெரிக்க அரசியல் 2008 (1) | (2)

நடை, உடை, வலையில் கடை – நுட்ப பாவனைகள்: Is Obama a Mac and Clinton a PC? – New York Times

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் களம் – இதுவரை: செய்தித் தொகுப்பு

பருந்து, சிங்கம், பாம்பு – யாரோடு யாரோ? – The Rock, Paper, Scissors strategy – The Boston Globe

ஏன் இப்படி…!: ஓர் கருப்பினத்தவருக்கோ, பெண் ஜனாதிபதிக்கோ அமெரிக்கா ரெடியா?

முந்தைய பதிவுகள்:

US Elections – Recap (2004 & 2006) « Snap Judgment

USA Primary & Presidential Series – 2: Criteria and Evaluation « Snap Judgment

USA Primary & Presidential Series – 3: Bloomberg as Independent « Snap Judgment

USA Primary & Presidential Series – 4: ThinkProgress & Vote-Smart « Snap Judgment

USA Primary & Presidential Series – 5: Boston Phoenix « Snap Judgment

Finance reports of Presidential Primary candidates (Presidential Primary Series – 6) « Snap Judgment

—————————————————————————————————-

Obama, Insurance – New York Times: “The principal policy division between Hillary Clinton and Barack Obama involves health care.”

Obama plan, would cover 23 million of those currently uninsured, at a taxpayer cost of $102 billion per year. An otherwise identical plan with mandates would cover 45 million of the uninsured — essentially everyone — at a taxpayer cost of $124 billion. Over all, the Obama-type plan would cost $4,400 per newly insured person, the Clinton-type plan only $2,700.

பசுத்தோல் போர்த்திய பழமைவாதி: Think Progress » Buchanan: John McCain ‘Will Make Cheney Look Like Gandhi’

உடல்மொழி உள்ளிட்ட அவசியம் படிக்க வேண்டிய அவதானிப்புகள்: First thoughts: Deadlocked – First Read – msnbc.com

முடிவுகள்: Super Tuesday Results — Political Wire

ஹில்லாரி தோல்விமுகமா – அறிகுறிகள்: Five reasons Hillary should be worried – Jim VandeHei and Mike Allen –

கன்சர்வேடிவ்களை வலையில் வீழ்த்த ஜான் மெக்கெயின் செய்யவேண்டிய சூட்சுமங்கள்: McCain crowned — now what? – Roger Simon – Politico.com

ஒபாமா எங்கே சறுக்குகிறார்: TPM Cafe | Talking Points Memo | Obama’s Biggest Weakness

‘ஜோ லீபர்மென்னை விட்டுத்தள்ளுங்க’ – யூதர்களின் வாக்கு ஜனநாயகக் கட்சிக்குத்தான் – The Jewish vote: Obama carried Massachusetts, Connecticut<br><br> – Haaretz – Israel News: “Majority of Jewish Democrats will go along with the nominee, be it Clinton or Obama.”

எண் கணிதம் – Heilemann on the Democrats: What’s Hidden in the Latest Numbers – New York Magazine’s Daily Intelligencer

ஜெயிக்கப் போவது யாரு? – RealClearPolitics – Articles – The Formidable McCain

ஆணியவாதிகளும் இனவெறியர்களுக்குமிடையே நடக்கும் தேர்தலா? – Who Is More Electable? – New York Times: there were more sexists than racists in America

எவர் எவரை ஆதரிக்கிறார்? – Endorsements of All Shapes and Sizes

க்ளின்டனுக்கும் ஒபாமாவுக்கும் மெக்கெயினுக்குமிடையே இருக்கும் கொள்கை வித்தியாசங்கள்: Campaign Conflicts Are Not Over Core Goals, but How to Get There – New York Times

ஹில்லாரி மேல் ஏன் அப்படி ஒரு வெறுப்பு? – The Hillary Haters: GQ Features on men.style.com