கடந்த ஞாயிறன்று பராக் ஒபாமா ஒவ்வொரு தெருவாக சென்று வாக்கு சேகரித்தார். அப்பொழுது குழாய்களை சரி செய்யும் ஜோ (Joe Wurzelbacher) என்பவர் கேட்ட கேள்விக்கு விரிவாக பதிலளிக்கிறார்:
வருடத்திற்கு 250,000 டாலருக்கு மேல் சம்பாதிக்கும் என்னை மேலும் வரி போட்டு வாட்டுவது சரியாகுமா? என்பது அவருடைய கேள்வி.
இன்று தொலைக்காட்சியில் பார்த்த ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களின் விவாதத்தில் கவனத்தை ஈர்த்தவை:
‘இளைய தளபதி’ விஜய் பொது நிகழ்ச்சிகளில் அல்லது தான் நடித்த சினிமா படத்திற்கான சன் டிவி பேட்டியில் வரும்போது, பரபிரும்மம் போன்ற நிர்ச்சலனமான முகபாவத்துடன் கலந்து கொள்வார். பராக் ஒபாமாவும் அப்படியொரு அகத்தின் பிரதிபலிப்புகளை வெளிக்கொணராத தோரணையைக் கட்டிக் காத்தார்.
இதற்கு நேர் எதிராக இருந்தார் ஹில்லரி கிளிண்டன். ‘இராக் போருக்கு ஆதரவாக வாக்களித்தவர் எவ்வாறு மெகெயினுடன் தர்க்கிக்க முடியும்?‘ என்று ஒபாமா குற்றஞ்சாட்டியவுடன், இருக்கையில் நெளிந்து, ஓரத்திற்கு சென்று பதுங்கிக் கொள்வது போன்ற உடல் மொழி வெளியானது.
ஆனால், ஒபாமாவோ, ‘வெறும் வார்த்தைக் கோட்டை எழுப்புகிறார்; அது கூட சொந்த சரக்கல்ல; கட்சித் தலைவர்கள் சொன்னதை ஜெராக்ஸ் போடுகிறார்‘ என்ற ஹில்லரியை, மிகக் கடுமையான குரலில் நடுவில் புகுந்து உலப்பி, கடுமையான தொனியில் கண்டித்தார்.
தன்னுடைய நேரம் வந்தபோது, இதற்கு பதிலாக, ‘எனக்கு வாக்களித்த இருபது மில்லியன் மக்கள் மருண்டுதான் போய் இருக்கிறார்களா? அவர்களை அவ்வாறு நம்பிக்கையுடன் செலுத்தவைத்து, என்னைப் பரிந்துரைத்த நாளிதழ்களும் கற்பனையில்தான் மிதக்கின்றனவா? கனவு காண்பது தவறா’ என்று ஒரு போடு போட்டார்.
இருவருமே தங்கள் கொள்கைகயும் கோட்பாடும் திட்டங்களும் ஒத்துப் போகின்றன என்றனர்; பெருமளவு வித்தியாசங்களை முன்னிறுத்தவில்லை.
ஹில்லரி பேசும்போது, சின்சியராக ஒபாமா எதையோ எழுதிக் கொண்டிருந்தார். கையெழுத்து போட்டு பழகிக் கொண்டாரா அல்லது ஸ்ரீராமஜெயம் எழுதினாரா என்பதை ஹில்லரியிடம் யாரும் வினவவில்லை.
ஹில்லரியைப் போலவே, அவர் குறிப்பெடுக்க வைத்திருந்த பேப்பர்களும் படபடவென்று அடித்துக் கொண்டு கவனத்தை சிதற வைத்தன.
ஜான் எட்வர்ட்சுக்கு வாக்களித்தவர்களை — இருவர்களுமே குறிவைத்து பேசினாலும், எட்வர்ட்ஸின் பெயரைக் குறிப்பிட்டே வாக்குகளைக் கோரினார் ஹில்லரி. ஒபாமா ஜான் எட்வர்ட்ஸின் பெயரை முன்வைக்கவில்லை. (அவசியமும் இல்லை!)
மொத்தத்தில் நிறைய நேரம் ஒபாமா பேசிய மாதிரி காட்சியளித்தது. ஹில்லரியை விட தெளிவாக, கோர்வையாக, சுவையாக, அதிபருக்குரிய மிடுக்குடன் கலக்கினார்.
இறுதியாக ஹில்லாரி, ‘என்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட சிக்கல்களை உலகமே அறியும். எனினும், என்னைவிட அதிகமாக பாதிக்கப்பட்டவர்களான — போர்முனையில் அடிபட்டு, கை காலிழந்து வருபவர்கள், வீடுகளுக்கு மாதாந்திர தவணை செலுத்த முடியாமல் பற்றாக்குறையில் தவிப்போர் உட்பட பலரின் பிரச்சினைகளை பார்த்து வருகிறேன்’ என்று தொடங்கி, நடுவில் ஒபாமாவுடன் மேடையைப் பகிர்வதன் பெருமையை உணர்த்தி, பராக்கையும் மனமாரப் பாராட்டிவிட்டு, ஜனநாயகக் கட்சியின் ஒற்றுமையை வலியுறுத்தி, முத்தாய்ப்புடன் முடித்துக் கொண்டார். இதெல்லாம், ஹில்லரிக்கு வாக்குகளாக மாறி, டெக்சஸில் பெருவெற்றியாகி — பிரதிநிதிகளைக் குவிக்கும் வாய்ப்புகள் குறைவு.
மேடைக்கு வருவதற்கு முன்பே ஹில்லரி க்ளின்டன் – வெகு சகஜமாக, ஒபாமாவை நெருங்கி, பரஸ்பரம் கைகுலுக்கி, தங்கள் பாதுகாவலர்களின் உயரங்களை ஒப்பிட்டு, ஜாலியாக அரட்டையடித்துக் கொண்டிருந்ததாக, சி.என்.என் தொகுப்பாளர் ஜான் கிங் பகிர்ந்து கொன்டார்.
* Accept that some days you’re the pigeon, and some days you’re the statue.
* Solitude is independence
* Call no man happy until he is dead - Oedipus
* It is what you read when you don't have to that determines what you will be when you can't help it. - Oscar Wilde
* The difference between literature and journalism is that journalism is unreadable and literature is not read. - Oscar Wilde