Tag Archives: தத்துவம்

What did your original face look like before you were born?

நான் பார்த்தவரை உங்கள் கேள்விகள் பெரும்பாலும் பிரபஞ்சக் கருந்துளை மாதிரி – தான் ஏன் இருக்கிறோம் என்றே தெரியாமலோ/சட்டைசெய்யாமலோ இருப்பது போலத் தோன்றும் கேள்விக்கு ‘பதில் சொல்லி முடித்தோமென்று நினைத்த பின்னரும்’ அப்படியே குத்துக்காலிட்டு உட்கார்ந்திருப்பது போலத் தோன்றும். உங்களது கேள்விகளின் ஆழம் தான் இதற்குக் காரணமென்று நினைக்கிறேன் 😉
சன்னாசி

Before I sought enlightenment, the mountains were mountains and the rivers were rivers;

while I am studying Zen, mountains are no longer mountains and rivers are no longer rivers;

but once I reached satori mountains are once again mountains and rivers again rivers.
நன்றி: ZEN, From "The Tao of Physics" by Fritjof Capra

தோல்வியடைய முயன்று வெற்றி பெற்றால், தோல்வியா? வெற்றியா??

பொன்ஸ், பத்ரி, பாரா, சுப்புடு, ஜெமோ போன்ற வலைப்பதிவுகள், பல முன்னணி திரட்டிகளில் காணக் கிடைப்பதில்லை. திரட்டிகளில் இருக்கும் பதிவுகள் என்பது ஒரு அணித்தொகுப்பு என்று வைத்துக் கொண்டால், இந்த மாதிரி இணைக்காத பதிவுகள் மற்றொரு அணிக்கோர்ப்பா?

பெர்ட்ரண்ட் ரஸல் கேட்டிருக்கிறார்.

ஒரு ஊரில் ஒரு நாவிதன் இருக்கிறார். அனவருக்கும் இவர் மட்டும்தான் சவரம் செய்கிறார். சொந்தமாக மழிக்காத எல்லாருக்கும் சேர்த்து, இவர் ஒருவர்தான் இருக்கிறார். அப்படியானால் நாவிதன் தனக்குத்தானே சவரம் செய்வாரா?

ஆம், என்றால் நாவிதன்தானே இவருக்கு சவரம் பார்க்க வேண்டும்? இல்லை என்றால், சொந்தமாகத்தானே சவரம் செய்து கொள்கிறார்.

இது அம்பட்டமுரண்படு மெய்மை.

இதன் மேற்சென்று க்ரெலிங்கும் நெல்சனும் விரிவான முரணுரையை சொல்கிறார்கள்.

வார்த்தைகள் இருவகைப்படும். Autological & Heterological – முறையே, காரணப்பெயர் & இடுகுறிப்பெயர் போல் வைத்துக் கொள்ளலாம்.

முதலில் autological – வார்த்தையின் பொருளுக்கு ஏற்றபடு அமைந்திருக்கும். ஆங்கில உதாரணமாக”seventeen-lettered” (மொத்தம் பதினேழு எழுத்துகள் இருக்கிறது); சில பொருத்தமான தமிழ் எடுத்துக்காட்டுகள்:

  • குட்டி (சிக் + நச்)
  • இடக்கு மடக்கு (சொல்வதற்குள் பொருட்குற்றம் ஏற்படலாம்)

இந்த மாதிரி பொருளுக்கும் வார்த்தை ஒலிக்கும் சம்பந்தமில்லாதவை Heterological. ஆங்கிலத்தில் monosyllabic (எத்தனை உயிரெழுத்து சப்தங்கள் நிறைந்த வார்த்தை… அதைப் போய்…)
தமிழில்…

  • நீண்ட
  • தானியம் (ஆட்டோவுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்)
  • முழுமையற்றது

இப்பொழுது செந்தில், கவுண்டமணியிடம் கேள்வி கேட்கும் சமயம்:

இடுகுறி பெயர் என்பது காரணப்பெயரா அல்லது இடுகுறிப் பெயரா?

கண்ணை நம்பாதே… உன்னை ஏமாற்றும்!

ஏப்ரல் 1 வாழ்த்துகள் 

voices-philosophy-head-dog-belief-eye-rationale-cartoon-new-yorker.gif

கருத்துப்படம்: தி நியூ யார்க்கர் Cartoons from the Issue of April 7th, 2008: Issue Cartoons: The New Yorker

நகைச்சுவைத்துவம்:

ஜனார்தனுக்கு வேலை சீக்கிரமே முடிந்துவிட, மூன்று இருபது 12சி -யைப் பிடித்து வீடு திரும்பி விடுகிறார். கிராண்ட் ஸ்வீட்ஸ் அல்வாவும் கையுமாக இல்லத்தரசிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க நுழைந்தால், போர்வைக்குள் பப்பி ஷேமாக மாடி வீட்டு மாதவனுடன் மனைவி இருக்கிறாள்.

ஜனார்தன் வாயைத் திறப்பதற்கு முன், படுக்கையில் இருந்து துள்ளி குதித்து மாதவன் கேட்கிறார்:

“இருபதாண்டு கால உன் நண்பன் நான் சொல்வதை நம்பப் போகிறாயா அல்லது உன் கண்ணால் கண்டதையா?”

கருத்துப் படமும் கமல் பாட்டும்

தொடர்புள்ள தினமணி தலையங்கம்: Sri Lankan Navy plants mines along marine border with India: Defence system in Palk straits « என்ன கொடுமை இது!

Host unlimited photos at slide.com for FREE!

அலைகளில் மிதக்குது நிலவொன்று குளிக்குது கை கொடு
குளிக்கின்ற நிலவுக்கு முதுகினில் அரிக்குது கை தொடு
தேகம் உருகியதே
ஆடை உருகியதே
நீரும் சூடு ஏற

வழி ஒண்ணும் தெரியல
வயசுக்கு வரவில்ல நானடி
குளிப்பது நீயடி குளிர்வது எனக்கடி ஏனடி…

தேகம் மறந்துடிச்சே நீச்சல் மறந்திடுச்சே கூச்சம் ஆகி போச்சே
வழி ஒண்ணும் தெரியல
வயசுக்கு வரவில்ல நானடி
குளிப்பது நீயடி
குளிர்வது எனக்கடி ஏனடி…

முத்தங்கள் முன்னூறு நீ தந்து முன்னேறு
அய்யோ முன்னூறும் தாங்காது தந்தாலும் தகராறு
இவள் வசம் புது ரசம்… இவள் வசம் புது ரசம்
இதழ் ரசம் இலவசம் நீ குடி

ஓ… புதுரசம் அழைக்குது பழரசம் கொதிக்குது பாரடி
நானிங்கு நானில்லை நீ இன்றோ ஆளில்லை…
ஆடை காண வில்லை

ஆணுக்கு ஆவேசம்… வந்தாலே சந்தோசம்
உன்பாடு உல்லாசம் எம்பாடு படு மோசம்
வெயிலுக்கு நிழல்கொடு… வெயிலுக்கு நிழல் கொடு
மயிலுக்கு உடை கொடு மாமனே

அய்யய்யோ…
இருக்குற வேட்டிய கொடுத்துட்டு தவிப்பது பாவமே
பஞ்சாங்கம் பாக்காதே என் அங்கம் தாங்காதே…
நீரில் ஈரம் இல்லை!

Thuglaq Thai Puthaandu - Tamil New Years Day: DMK, Kalainjar Karunanidhi

Nandha – Engengo Kaalkal Sellum Paathayil

எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில் போகின்றாய்..
ஏதேதோ நாளை என்ற ஆசையில் வாழ்கின்றாய்..
உன் சொந்தம் இங்கு யார் யாரோ?
நீ சொல்லிக்கொள்ள யார் யாரோ?
நீ வாழும் வாழ்வில் அர்த்தம் என்ன என்றே நீ சொல்லு?

காதில்லா ஊசியுமே கடைசி வரைக்கும் வராதே..
பட்டினத்தார் சொன்னானே பாட்டு ஒன்றில் அப்போதே..
எதனைக்கொண்டு நாம் வந்தோம்..?
எதனைக் கொண்டு போகின்றோம்..?
ஓடும் பொன்னும் ஒன்றாய் எண்ணும் இதயம் வேண்டுமே..

காற்றுக்கு யார் இங்கே பாட்டுச் சொல்லித் தந்தாரோ?
ஆற்றுக்கு யார் இங்கே பாதை போட்டுத் தந்தாரோ?
வாழ்க்கை எங்கு போய்ச் சேரும்?
காலம் செய்யும் தீர்மானம்…
என்னை உன்னை கேட்டா வாழ்க்கை பயணம் போகுது?