தோழியின் வீட்டுக்கு சென்ற மனைவி நேரம் போனது தெரியாமல் சன் டிவி பார்த்ததில் தாமதமாகிப் போகிறது. இரவு வீட்டுக்கு திரும்பாமல், நண்பியின் இடத்திலேயே டேரா அடித்துவிடுகிறாள். செல்பேசியிலும் போதிய அளவு சிக்னல் கிடைக்காமல் படுத்துகிறது.
காலையில் வீட்டுக்கு வந்தவுடன் தோழியின் இல்லத்தில் உறங்கியதை கணவனிடம் சொல்கிறாள்.
தனக்குத் தெரிந்த அவளின் தலை பத்து நண்பர்களை அழைத்து விசாரிக்கிறான் புருஷன்காரன். அவர்களில் எவரிடத்திலும் மனைவி தங்கவில்லை.
கொஞ்ச நாள் கழித்து…
கணவன் வீட்டுக்கு வராமல் வெளியில் தங்கிவிடுகிறான். வீடு திரும்பியவுடன், சில நாள் முன்பு மனைவி சொன்ன அதே சாக்கை சொல்கிறான். ‘நண்பனின் வீட்டில் போதை அதிகமாகி உறங்கிப் போனேன்’.
அவளும் அவனுடைய ஆத்மார்த்தமான அத்யந்த சினேகிதர்களைக் கூப்பிட ஆரம்பிக்கிறார்.
எட்டு பேர் அவன் தன்னுடைய இடத்தில் சீட்டாடி களைத்து நித்திரை பயின்றதாக சொல்கிறார்கள். பாக்கி இரண்டு பேர் இன்னும் அவன் அங்கேதான் இருப்பதாக தலையிலடித்து சத்தியம் செய்கிறார்கள்.










