Tag Archives: கட்சி

Arasu Bathil – Kumudham: Growth of a Political Party

கேள்வி: திராவிட இயக்கம் வளர்ச்சி அடைந்திருக் கிறதா?

பதில்: வளர்ச்சி என்றால் சாதாரண வளர்ச் சியா? பிரம்மாண்டமான வளர்ச்சி! தி.மு.க., ஆரம்பிக்கப்பட்டபோது நம் இயக்கத்தில் கோடீஸ்வரர்களும், இலட்சாதிபதிகளும் ஒருவர், இருவர் இருக்கக் கூடும் என்று கனவில் கூடக் கருத முடியாது. சாதாரணமான நாம்தான் இயக்கத்தை நடத்துகிறோம் என்று முழங்கினார் அண்ணா – இன்று? எத்தனை பெரிய வளர்ச்சி!

ஜனநாயகக் கட்சி – ஹில்லாரி வேண்டும்

Hillary Clinton for Presidentஏன்? உடனடியாகத் தோன்றிய எண்ணங்கள்:

  1. உருப்படியாகப் பேசுகிறார். வெற்று சவடால், புறக் கவர்ச்சி, பிரச்சார பூச்சு இல்லாமல், ஜாலமாக வாய்ப்பந்தலிடாமல் புள்ளிவிவரங்களுடன் ‘என்ன செய்யப் போகிறேன்?’ என்பதை பிட்டு வைக்கிறார் என்பதற்காக…
  2. அனுபவம். சபையறிந்து சமயோசிதமாக விவாதம் நடத்துதல், செனேட்டராக, முன்னாள் ஆளுநர் & ஜனாதிபதி க்ளின்டனின் மனைவியாக, பெண்களின் உள்ளக்கிடக்கைகளை அனுபவித்தவராக இருக்கிறார் என்பதற்காக…
  3. ஒபாமா என்பது மயிற்பீலிகளால் எழுப்பப்படும் மாளிகை. அன்றைய மோனிகா லூயின்ஸ்கி முதல் இன்றைய அயோவா சறுக்கல் போன்ற பல சம்பவங்களில் நெஞ்சுரத்துடன் எதிர்க்கட்சி தாக்குதல்களையும் அவதூறுகளையும் திறனாகத் தாங்கி, மக்களை தன் பக்கம் வசமாக்கக் கூடியவர் ஹில்லரி க்ளின்டன் என்பதற்காக…
  4. ஆளுமை. அழ வேண்டிய நேரத்தில் சிறிதாக நீர்த்துளி இறைத்து, புருஷனை கொம்பு சீவ வேண்டிய நேரத்தில் ஏவி, சொந்தப் பணத்தை கொடுக்க வேண்டிய நேரத்தில் தாரை வார்த்து, தலைமைப் பண்புகள் அனைத்தும் இயல்பாக வாய்க்கப்பெற்றவர் என்பதற்காக…
  5. வயது. ஒபாமாவிற்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்கக்கூடும். மீண்டும் ப்ரைமரி பந்தயத்தில் தம் கட்டலாம். இன்னொரு பெண் வேட்பாளர் கிடைக்கும் அறிகுறி எதுவும் இல்லாத இந்த சூழலில் 61 வயது நிறைந்த ஹில்லரிக்கு தூஸ்ரா வராமல் போகலாம் என்பதற்காக…
  6. அரசியல்வாதி. பொதுஜனத்துடன் இணைந்து பழகி நெஞ்சில் நிறுத்தி நெருங்க வைப்பது இயல்பாக எழும் சமூக ஆர்வத்தின் பங்கு என்றால், வெல்லவேண்டிய நேரத்தில் வெற்றிக்கான உபாயங்களை ட்ரம்ப் சீட்டாய் இறக்கி தேர்ந்த அரசியல் செய்யத் தெரிந்தவர் என்பதற்காக…
  7. ஆண்கள்தான் அலைபாயக் கூடியவர்கள்; பெண்கள் வாக்கு சிந்தாமல், சிதறாமல் வந்து சேரும். ஒபாமாவை துணை ஜனாதிபதிக்கு சேர்த்துக் கொள்ளாவிட்டால் கூட எப்படியும் ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள், குடியரசு கட்சி பக்கம் சுண்டுவிரல் கூட சாய்க்க மாட்டார்கள் என்பதற்காக…
  8. பண்பட்டவர். செனேட்டர் தேர்தலில் நின்றபோது, ‘இறுக்கமாக இருக்கிறார்’ என்னும் குற்றச்சாட்டு எழுந்தவுடன் அச்சங்களை உதறி வாக்காளர்களோடு இயைபாக பழகியவர்; க்ளின்டன் ஆட்சியில் நிறைவேற்ற முடியாத, ஆனால் காலப்போக்கில் அதைவிட மேம்பட்ட உடல்நலக் காப்பீட்டுத் திட்டங்களை முன்வைப்பவர்; இல்லத்தரசியலில் இருந்து இரும்புக் கோட்டை டி.சி. வரை கண்டுணர்ந்து சாதாரணர்களின் அன்றாட வாழ்க்கையை அனுபவித்தவர் என்பதற்காக…
  9. முன்னணி வேட்பாளர். பில் ரிச்சர்ட்சன் போன்ற அடக்கம் இருந்தால் மட்டும் போதாது; சகா ஜோசெப் பிடன் போன்ற அயல் அனுபவம் இருந்தால் மட்டும் பத்தாது. க்ளின்டன் என்னும் The Distinguished Gentleman போன்ற புகழ்பெற்ற பெயர் பெற்று வாஷிங்டனில் மாற்றத்தைக் கொணரக் கூடியவர் என்பதற்காக…

ஹில்லரி க்ளின்டன் வேண்டும்.

தொடர்புடைய இடுகை: ஒபாமா வெல்லட்டும் – வெங்கட்

அமெரிக்க தேர்தல் களம் – பிரச்சார முழக்கங்கள்

‘போடுங்கம்மா ஓட்டு, ரெட்டை இலையப் பார்த்து!’ என்பது அதிமுக முழக்கம்.

‘சொல்வதைச் செய்வோம்; செய்வதைச் சொல்வோம்’ – திமுக.

இனி அமெரிக்க விசிலடிச்சான் குஞ்சுகள்:

Change You Can Believe In; Stand for Change:

Barack Obama

Candidate Of Change:

CARI - Mitt Romney

Agent of Change:

Hillary Clinton

தொடர்புள்ள ஒலிப்பதிவு: NPR: 'Change': An Empty Word in the 2008 Campaigns?

ஹில்லாரி க்ளின்டனின் பிரச்சா இயக்குநர் மாற்றம்

முன்னாள் பிரச்சார இயக்குநர்:
Hillary campaign Manager - NYT (AP)

இன்னாள் பிரச்சார இயக்குநர்:
LA Times - Maggie Williams

செய்தி: Maine to Obama; Clinton Replaces Campaign Leader – New York Times

பாலாஜி

தகுதி: வாரிசு; அனுபவம்,களப்பணி: அப்படின்னா?

  • டில்லியில் ராகுல்காந்தி மற்றும்
  • பிரியங்கா காந்தி,
  • சென்னையில் மு.க.ஸ்டாலின்,
  • மு.க.அழகிரி,
  • மு.க.கனிமொழி,
  • மு.க. தமிழரசு,
  • ஜி.கே.வாசன் என்பவை மிக வெளிப்படையான ஒன்று. அதேபோல்
  • பாமகவின் டாக்டர் அன்புமணி ராமதாஸ், இவர்கள் இல்லாமல், மாநிலத்தில் வாரிசுகள் வளர்ந்து வருவதையும் கவனிக்க முடியும்.
  • கார்த்திக் சிதம்பரம் தனது பிறந்த நாளுக்கு வைக்க ஏற்பாடு செய்த கட் அவுட்கள் ஏராளம்.
  • காங்கிரஸ் கட்சியின் இளைஞரணிக்கு செயலாளராக உள்ளவர்களில் ஒருவரான திருமகன் ஈ.வெ.ரா. இவர் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் புதல்வர் என்பதைத் தவிர வேறு எந்த தகுதியும் இல்லை.
  • பூந்தமல்லி எம்எல்ஏ அருள்,
  • செய்யாறு எம்எல்ஏ விஷ்ணு பிரசாத் ஆகியோருக்கு பதவி அவர்களின் தந்தை செல்வாக்கால்தான் வந்தது.
  • திமுகவில்..

1. சேலம்-வீரபாண்டி ஆறுமுகம்-வீரபாண்டி ராஜா
2. ஈரோடு-என்.கே.பி.பெரியசாமி-என்.கே.பி.பி.ராஜா
3. கோவை-பொங்கலூர் பழனிச்சாமி-பாரி
4. திண்டுக்கல்-ஐ.பெரியசாமி-ஐ.பி.செந்தில்குமார்
5. திருச்சி-அன்பில் குடும்பம்
6. ராமநாதபுரம்-சுப.தங்கவேலன்-சுப.த.சம்பத்
7. திருவாரூர்-கலைச்செல்வன்-கலைவாணன்
8. விழுப்புரம்-பொன்முடி-கௌதமசிகாமணி பொன்முடி
9. கடலூர்-எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்-எம்.ஆர்.கே.அன்பரசி, கே.ஆர்.செந்தில்குமார்

நன்றி: DYFI | Ilaingar Muzhakkam | Lenin | Kanna – ஜனவரி 2008 :: இளைஞர்களும் சவால்கள் நிறைந்த அரசியலும்: எஸ். கண்ணன் (இளைஞர் முழக்கம்)

DMK youth wing conference in Tirunelveli & Rajasthan BJP Govt Celebrations

Thinamani Vidudhalai BJP Thirunelveli DMK Meet Stalin Raj News