Kalainjar Karunanidhi on HR &CE: Quotable Quotes: Dinamalar

தமிழக முதல்வர் கருணாநிதி: (Hindu Religious and Charitable Endowments Dept)

தி.மு.க., ஆட்சிக்கு வந்த ஒன்றரை ஆண்டில்,

  • ஆயிரத்து 493 கோவில்களுக்கு திருப்பணி முடித்து குடமுழுக்கு விழா நடந்துள்ளது.
  • 106 கோடி ரூபாய் செலவில்,
  • 253 கோவில்களில் திருப் பணி நடந்து வருகிறது.
  • 20 கோவில்களில் தேர் செய்யும் பணி நடந்து வருகிறது.

நாம் பகுத்தறிவுக் கொள்கையை கொண்டிருந்தாலும், ஆட்சிப் பொறுப் பில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய பாரபட்சமற்ற பொது நிலையை என்றும் மறந்ததில்லை.

“Lions for Lambs”

If you don’t STAND for something, you might FALL for anything.

திரைப்படம் குறித்த ஐ.எம்.டி.பி. வலையகம்.

Russian Mayor Bans Phrase ‘I Don’t Know’

The mayor of a Siberian oil town has ordered his bureaucrats to stop using expressions such as “I don’t know” and “I can’t.” Or look for another job. Alexander Kuzmin, the 33-year-old mayor of Megion, has banned these and 25 other phrases as a way to make his administration more efficient.

Some of the other prohibited phrases are “What can we do?” “It’s not my job,” “It’s impossible,” “I’m having lunch,” “There is no money,” and “I was away/sick/on vacation.”

நவராத்திரி வாழ்த்துகள் – கொலு படிக்கட்டு

Beach Durga Kolkata Calcutta Statue Sand Sculptureanantha_sayana_perumal_navarathri_dolls_lord_narayana.JPGlord_krishna_golu_dolls_dinamani_navrathri_bommai.JPG

‘ஓ பக்கங்கள்’ ஞானிக்கு முக ஸ்டாலின் பதிலடி

திமுக தலைவர் மு. கருணாநிதிக்கு விருப்ப ஓய்வு தர வேண்டும் என்று ஆனந்த விகடனில் ஞானி எழுதினார்.

‘அதற்கு பதிலடியாக தி.மு.க. இளைஞரணி மாநாடு நெல்லையில் நடத்தப்படும். தமிழக இளைஞர்கள் திட்டமிட்ட தவறான பிரசாரத்தால்  வேறு சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள். அவர்களை நல்வழிப்படுத்த கருணாநிதி நெல்லையை தேர்வு செய்தார்.’ என்றார்.

செய்தி: தினமலர்.

Kalainjar Karunanidhi’s Uliyin Osai with Ilaiyaraja & Ilavenil

kalainjar_karunanidhi_ilaiyaraja_uliyin_osai_ilavenil.JPGதமிழகத்தின் இசைக்கலையை உலகம் அறியச் செய்ய இசை பல்கலைக்கழகம் அமைக்கப்படும்’ என முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.

முதல்வர் கருணாநிதியின் கதையில் உருவாகும் ‘உளியின் ஓசை’ என்ற திரைப்பட துவக்க விழா சென்னையில் நேற்று நடந்தது. விழாவில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது:

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இசையமைப்பாளர் இளையராஜா என்னை சந்தித்த போது, நான் எழுதிய ‘சாரப்பள்ளம் சாமுண்டி‘ என்ற சரித்திர கதையை படமாக எடுக்க வேண்டும் என தீராத ஆசை உள்ளதாக தெரிவித்தார். அந்த ஆசை இப்போது நிறைவேறியுள்ளது. சரித்திர பின்னணி கொண்ட படத்தை உருவாக்குவது சாதாரணமான விஷயம் அல்ல. சமூக படத்தை விட பலமடங்கு அதிகமான செலவு செய்யவேண்டும் என்ற அனுபவ ரீதியான உண்மையை நான் உணர்ந்துள்ளேன்.ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் ஆகியோரை பின்னணியாக வைத்து தஞ்சை கோவில் சிற்ப கூடத்தை கதைக்களமாக அமைத்து இந்த படத்தின் கதையை எழுதியுள்ளேன்.

என் வசனத்தை மட்டும் நம்பியிராமல் கலை, நடனம், இசை ஆகிய அனைத்து அம்சங்களும் கொண்டதாக இந்த படம் அமையும். தமிழனின் வரலாறு குறித்து அவனே சொல்லாததால் வெளியில் தெரியாமல் போயிற்று. முகலாயர்களுக்கு வரலாறு இருப்பது போல் தமிழர்களின் வரலாற்றை சொல்ல முடியாத நிலை உள்ளது. மனுநீதி சோழன் திருவாரூரில் கட்டிய கோட்டை இப்போது இல்லை. தஞ்சாவூர் கோட்டை தூள் தூளாகி விட்டது. இதற்கு காரணம் நம்முடைய வரலாறுகளை நாம் பதிய வைக்கத் தவறி விட்டோம்.

இதனால் வரலாற்று உண்மைகள் அழிந்து விட்டன. உத்திரமேரூர் பராந்தக சோழன் கல்வெட்டில் உள்ளாட்சி தேர்தல் முறை குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை அடிப்படையாக கொண்டு தான் தற்போதைய உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. தேர்தலில் போட்டியிடுபவர்கள் ஒழுக்கம் உள்ளவர்களாக, வாங்கிய கடனை திரும்ப தருபவர்களாக இருக்க வேண்டும் என அந்த கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகுதி உடையவர்கள் குடவோலை முறையில் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

உத்திரமேரூரில் உள்ள ஒரே ஒரு கல்வெட்டு மூலம் இந்த உண்மைகளை தெரிந்து கொள்ள முடியும். வரலாறுகளை புரிந்து கொள்ள இதுபோன்ற கல்வெட்டுகளை அமைக்க வேண்டியது அவசியம்.தஞ்சை கோவிலில் பரத கர்ணம் 108க்கு உரிய சிலைகளில் 87 சிலைகள் தான் உள்ளன. மீதமுள்ள சிலைகள் ஏன் உருவாக்கப்படவில்லை என்ற எனது கேள்விக்கான பதில் தான் இந்த படத்திற்கான கதை.

பல்கலைகழகம்:

இளையராஜா பேசும் போது, நமது இசைக்கலை பாதுகாக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இது அரசு விழா இல்லை என்றாலும் அவரது கோரிக்கைக்கு இசைந்து தமிழகத்தின் இசை பல்கலைக் கழகம் துவங்கப்படும் என்று அறிவிப்பை வெளியிடுகிறேன். இந்தியாவின், தமிழகத்தின் இசைப் பெருமையை உலகிற்கு உணர்த்தும் வகையில் துவங்கப்படும் அந்த பல்கலை க்கழகத்திற்கு நானும் இளையராஜாவும் வலிவூட்டுவோம்.

keerthi_chawla_akshaya_mu_karunanidhi_tamil_cinema.jpgபடத்தில் புது நடிகைகள்: ‘உளியின் ஓசை’ படத்தயாரிப்பாளர் ஆறுமுகநேரி முருகேசன் கூறியதாவது:

இப்படத்தின் தொடக்க விழாவிற்கு முன்பு திரைக்கதை குறித்து இயக்குனர் குழுவினருடன் முதல்வர் கருணாநிதி தீவிர விவாதத்தில் ஈடுபட்டார். பேராசிரியரை போல் வகுப்புகளை நடத்தினார். காலை 8 மணிக்கு அமர்ந்த முதல்வர் மாலை 6.30 மணி வரை தொடர்ந்து விவாதத்தில் ஈடுபட்டார். இந்த திரைப்படம் நன்கு அமைய பல யோசனைகளை தெரிவித்தார். இந்த படம் சிறப்பாக வரும் என்ற நம்பிக்கை முதல்வருக்கு ஏற்பட்ட பிறகே துவக்க விழாவிற்கான தேதியை அறிவித்தார்.

முதல்வர் கருணாநிதி விரும்பும்படியும், இன்றைய ரசிகர்களின் ரசனைக்கு ஏற்பவும் வெற்றிப்படமாக இந்த படம் அமையும். இந்த படத்திற்காக ஏ.வி.எம்., முதல் தளத்தில் கலை இயக்குனர் மகி பல லட்ச ரூபாய் செலவில் பிரமாண்டமான சிற்பக் கூடத்தை அமைத்துள்ளார்.இளவேனில் திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். இளையராஜா இசையமைக்கிறார்.

வினித், கீர்த்தி சாவ்லா, அக்ஷயா, மனோராமா, சரத்பாபு, தலைவாசல் விஜய் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். வரும் 11ம் தேதியில் இருந்து படப்பிடிப்பு சென்னையில் தொடர்ந்து நடக்கும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Vikadan Bits: Selvaraghavan Interview & SMS Lollu

சோனியாவுடன் காதல் திருமண வாழ்க்கை எப்படி இருக்கு?’

‘குட்! நாங்க சேர்ந்து வாழ்ந்-துட்டு இருந்தோம். வீட்ல, பேசி கல்யாணம்னு ஒண்ணு பண்ணிவெச்சாங்க. என்ன… முன்னாடி நண்பர்களா இருந்தோம். கல்யாணத்துக்-கப்புறம் அதுக்குப் புதுசா ஒரு பொறுப்பு வந்து சேருது. முன்னாடி சந்திச்சா, சாப்பிட்டாச்சான்னு கேட்டுப்போம். இப்போ, ‘சாப்பிடுங்க’ன்னு ஒரு அழுத்தம் கிடைக்குது. நாங்க நல்ல லவ்வர்ஸ்… அதையும் தாண்டி எப்பவுமே நல்ல ஃப்ரெண்ட்ஸ்!’

செல்வராகவன்

எப்பவுமே ஒரு கலை-ஞனை அவனோட வயசு, அனுபவம், பக்கு வம்னு ஏதாவது ஒண்ணு அடுத்தடுத்து எடுத்–துட்டுப் போயிட்டே இருக்கும். காதலோட சந்தோஷ-மும் வலி-யும் வாழ்க்கையா இருந்தப்போ, ‘காதல் கொண்டேன்’, ‘7ஜி’யும் பண்ண முடிஞ்சுது. சென்னை மாதிரி ஒரு நகரத்தின் இன்னொரு முகத்தைத் தேடினப்போ, ‘புதுப்பேட்டை’ கிடைச்சுது.

ஒரு குடும்பத்தின் சுக துக்கங்களில் விழுந்தபோது ‘ஆட வரிலு…’ன்னு தெலுங்குப் படம் பண்ணினேன். இப்போ எமோஷ னலான மேக்கிங்கா வேற ஏரியா வுக்குப் போற சினிமா என் கனவா இருக்கு. அதுதான் ‘ஆயிரத்தில் ஒருவன்’.


அபுதுல் கலாமிடம்
2020-ல இந்தியா வல்லரசு ஆகும்னு சொன்னீங்களே… அது இந்த 20-20தானா சார்?

New York Times (Oct. 4)

1. இணையம் – முதல் சுற்று; .நெட் 2.0 – அடுத்த ரவுண்ட். இப்போது இன்னொரு கோல்ட் ரஷ்.

Swarm of Software Developers Creating Features for Facebook – New York Times: By BRAD STONE
Thousands of software developers are creating features for Facebook, the fast-growing social network, many hoping to strike it rich alongside Facebook’s own employees.

2. அமெரிக்க தேர்தல் களம். அடுத்த வருஷம் ஜனாதிபதி தேர்தல் வரப்போவுதாம். ‘அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா‘ என்னும் செய்கைகளும் அக்டோபர் 26 பிறந்த நாளை ‘வருங்கால ஜனாதிபதி‘ என்று உறுதி செய்யும் ஹில்லாரியின் முத்திரையும்:

Ah Newtie, We Hardly Knew Ye – New York Times By GAIL COLLINS
The problem for Republican voters is that as time goes on, the main presidential candidates begin to resemble the hopeless ones more and more.

John McCain has gone so ga-ga that he told a Web site devoted to spirituality that he would not be comfortable with a president who didn’t share his religious beliefs.

3. ப்ராண்ட் நேமிங், பட்டம் சூட்டுவது, வார்ப்புருவுக்குள் அடக்கி வாயைக் கட்டுவது; வார்த்தைகளைப் பிடித்துக் கொண்டு தொங்குவது குறித்து… (விவாதம் தொடர்கிறது)

The New L-Word: Neocon – New York Times By ROGER COHEN
Neocon has morphed into an all-purpose insult for anyone who still believes that American power is inextricable from global stability.

When John Kerry was vilified as a flip-flopping liberal by those armchair warriors, Bush and Cheney, I knew where I stood. When Michnik and Kouchner are neocons and MoveOn.org is the Petraeus-insulting face of never-set-foot-in-a-war-zone liberalism, I’m with the Polish-French brigade against the right-thinking American left.

4. சமீபத்தில் இகாரஸ் பிரகாஷ் எழுதியது போல் எங்கே எதை உருவி எப்படி சீரழிக்கப் போகிறார்கள் என்று தெரியாத போக்கை குறித்து…

Use My Photo? Not Without Permission – New York Times

5. குறட்டையை நிறுத்தும் ஆராய்ச்சி

Scientist Invents Computer Pillow to Stop Snoring – New York Times

6. நிறைய பேர் ‘நாங்க லீனக்சுக்கு மாறிட்டோம்’ என்கிறார்களாம்

The Next Leap for Linux – New York Times

ஜனதா – என்ன அர்த்தம்

சமீபத்தில் மியான்மர் (என்றழைக்கப்படும் முன்னாள் பர்மா) புத்தபிக்குகளின் புரட்சியின் போது junta அடக்குமுறை குறித்து தலைப்பு செய்திகள் வெளியாகின. பார்க்க: Myanmar junta tightens screw on dissenters | World: Reuters | AFP: Dozens arrested as Myanmar junta tightens grip

ஜனதா என்றால் மதச்சார்பற்ற ஜனதா தளம், நஜ்மா ஹெப்துல்லா சார்ந்துள்ள பாரதிய ஜனதா கட்சி, சுப்பிரமணி சாமியின் ஒன் மேன் ஆர்மி, பிலானியில் படித்த காலத்தில் இரண்டுக்கு மேற்பட்டவர்கள் சேர்ந்து வந்தால் விளிப்பது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆன்ஸெர்ஸ்.காம் இவ்வாறு சொல்கிறது:

junta: n. a military or political group that rules a country after taking power by force:

அப்படியே தொட்டுக்க கட்டுரை: (Playing the name game – The Boston Globe)

I respect a country’s decision to rename things, but my curmudgeonly view is that it needn’t be imposed on the English language. We never had to write CCCP instead of USSR when the Soviet Union still existed. Germany calls itself Deutschland, but doesn’t insist that English speakers follow suit. The Italians aren’t irritated because we say Florence instead of Firenze. The Belgians don’t bridle when we write Brussels instead of Bruxelles.

iRama Gopalan on Karunanidhi & Gandhi; CPI Pandiyan on Supreme Court & Bandh

1. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பாண்டியன் அறிக்கை: (தினமலர்)

தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டத் துக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்திருப்பது ஆச்சர்யமானது அல்ல. கேரளா மற்றும் மும்பை கோர்ட்டுகள் முழு அடைப்பிற்கு எதிராக ஏற்கனவே தீர்ப்புகள் வழங்கியுள்ளன. ஊர்வலங்கள் நடத்துவதற்கு கூட தடை விதிக்கப்பட் டுள்ளது. 200 ஆண்டுகாலம் போராடிப் பெற்ற உரிமைகளை ஒரு நீதிமன்ற தீர்ப்பின் மூலம் பறிகொடுக்க இயலாது. மக்களின் பிரதிநிதிகளாக செயல்படும் அரசியல் இயக்கங்கள், மக்கள் நலன் காக்க நடத்தும் போராட்டங்களை மக் களால் தேர்ந்தெடுக்கப் பட்ட, பார்லிமென்ட் டால் நியமிக்கப்பட்டுள்ள நீதிபதிகள் தடுப்பது முறையல்ல…

2. இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன்: (தினமலர்)

காந்திய வழியில் கருணாநிதி போராடுவதாக காங்கிரஸ் தலைவர் சான்றிதழ் கொடுத்துள்ளார். சாராயக் கடை திறந்தது, லாட்டரிச் சீட்டுக்களால் ஏழைகள் குடி கெடுத்தது, தேர்தல் நேரத்தில் வன்முறையைத் தூண்டிவிட்டது, ராமரை அவமதித்தது எல்லாம் காந்திய வழி என அந்தத் தலைவர் கூறுகிறார் போலும்.