Tamil Nadu State Police Ad in Viduthalai

வெளியான இதழ்: விடுதலை


viduthalai_govt_announcement_ad_news_caution.jpg

2007 -Year in Review

இந்த வருடத்தின் நாயகர் யார்? எது பெரிதும் விவாதிக்கப்பட்டது? எது அதனினும் விரிவாக கவனத்தை ஈர்த்திருக்க வேண்டும்? கண்டுபிடிப்பு, விஞ்ஞானம், வித்தியாசமான முயற்சி ஏதாவது? முக்கிய சம்பவம், சோக நிகழ்வு, ஜல்ஸா விஷயம்??

பருந்து பார்வை:

ஜனவரி:

வலைப்பதிவுகளில்:

  1. பொங்கல் படங்கள்: போக்கிரி – பருத்தி வீரன் – தாமிரபரணி – சண்டக்கோழி – ஆழ்வார்
  2. ப்ளாக்ஸ்பாட் ப்ளாகரின் புதிய வடிவம்
  3. அப்துல்கலாம் தலைமுடி – அப்சல் – பால்தாக்கரே
  4. கலைஞரும் சாயி பாபாவும் சந்திப்பு
  5. அயோத்தியா மண்டபம் – சுஜாதா – குமுதம் – சாதியக்குரல்!
  6. சென்னை புத்தகக் கண்காட்சி
  7. ஷில்பா ஷெட்டி – பிக் பிரதர் – இனவெறி – நிறப்பிரிகை
  8. துக்ளக் 37-வது ஆண்டுவிழா மீட்டிங்
  9. ஆஸ்கார்
  10. குரு – மணி ரத்னம்
  11. வீராசாமி – அரட்டை அரங்கம் – டி ராஜேந்தர்
  12. பெரியார் படப்பாடல்கள்
  13. முத்தமிழ்க் குழுமக் கொண்டாட்டங்கள்
  14. கில்லி – 365
  15. தமிழ்மணம் விவாதக்களம் » விவாதம் ஆரம்பிக்கிறது

செய்திகளில்:

  1. வங்கதேச தேர்தல் ஆணைய உறுப்பினர்கள் ராஜினாமா
  2. இலங்கையில் கட்சித் தாவல்
  3. சோமாலியத் தலைநகர் மொகடிஷுவில் தொடரும் மோதல்கள்
  4. ஓய்வூதிய நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்ய இந்திய அரசு முடிவு
  5. கோரஸ் நிறுவனத்தை டாடா வாங்கியது
  6. சென்னை ஆட்டோ கட்டணம் இரு மடங்காக உயர்த்தப்பட்டது
  7. இந்தி திரைப்பட இசையமைப்பாளர் ஓ.பி. நய்யார் காலமானார்
  8. அபிஷேக் பச்சன்- ஐஸ்வர்யாராய் நிச்சயதார்த்தம்
  9. பாலாற்றின் குறுக்கே அணை கட்ட ஆந்திரா திட்டம்
  10. ம.பி. மாநில பள்ளிகளில் சூரிய நமஸ்காரம் அமல்
  11. ஆர்எஸ்எஸ் அமைப்பின் விராட் இந்து மாநாட்டையொட்டி பெங்களூர் வன்முறை – மரணங்கள்
  12. தஸ்லிமாவை நாட்டைவிட்டு வெளியேற்ற முஸ்லிம் சட்ட வாரியம் வலியுறுத்தல்
  13. உல்ஃபா தாக்குதல் எதிரொலி அச்சத்தில் அசாமிலிருந்து குடும்பம் குடும்பமாக வெளியேறுகின்றனர் பிகார் மாநில மக்கள்
  14. காளிமுத்து- தமிழ்குடிமகன் மகன்களுக்கு அ.தி.மு.க.வில் பதவி
  15. நொய்டா நிதாரி – சிறுமிகளை வன்புணர்ந்து கொலை

கொசுறு: சும்மா டைம் பாஸ் மச்சி…..: “ஹைல.. ஹைல… அடி ஆரியமாலா!”

————————————————————————————————————-

ஃபெப்ரவரி:

வலைப்பதிவுகளில்:

  1. கல்யாண் – சாகரன் – தேன்கூடு: அஞ்சலி
  2. கனிமொழியின் சென்னை சங்கமம்
  3. தேன்கூடு சுடர் – தொடர் பதிவுகள்
  4. தமிழ்மணம் பின்னூட்ட உயர் எல்லை – 30
  5. தக்காளி – வெங்காயம் – உருளை: சர்வேசனின் புகைப்பட போட்டி
  6. தமிழ் சினிமாவில் பெண்களின் இழிநிலை
  7. தமிழ் x மலையாளம் x சம்ஸ்கிருதம்
  8. விவேகானந்தா கல்லூரி பிரச்னை
  9. அர்ஜென்டீனா – க்வாட்டரோச்சி – போஃபர்ஸ் – சோனியா – காங்.
  10. மைக்ரோசாஃப்ட் விஸ்டா
  11. சூப்பர் பவ்ல் 41
  12. சிம்பு – நயந்தாரா
  13. மொழி – கார்ப்பரேட் (ஹிந்தி) – பொறி – பச்சைக்கிளி முத்துச்சரம் – விமர்சனம் – திரைப்படங்கள்
  14. ஈழத்து நவீன நாடக முன்னோடி ஏ.சி.தாசீசியஸுக்கு கனடா இயல் விருது
  15. அமெரிக்க தமிழ் சங்கங்கள்: தைப் பொங்கல் கொண்டாட்டம் & விழாக்கள்
  16. தினகரன் – நெ.1 தமிழ் நாளிதழ்
  17. தட்ஸ்தமிழ் யூனிகோடுக்கு மாறியது
  18. வலைப்பூ ➜ வலைச்சரம்
  19. கடல்கன்னி ஆரம்பம்
  20. மாற்று துவக்கம்

செய்திகளில்:

  1. ‘தமிழகத்துக்கு 192 டிஎம்சி காவிரி நீரை கர்நாடகம் தரவேண்டும்’- நடுவர் மன்றம் தீர்ப்பு
  2. மத்திய பொக்கீடு தாக்கல்
  3. ரயில்வே பட்ஜெட்
  4. மிகப்பெரிய பணக்கார இந்தியர் முகேஷ் அம்பானி
  5. விவசாயி தற்கொலைகள்
  6. நெல்லையில் தலித் பஞ்சாயத்து தலைவர் படுகொலை
  7. கோவை வேளாண் பல்கலை. மாணவிகள் எரிப்பு – மூன்று அதிமுக-வினருக்கு மரண தண்டனை
  8. பஞ்சாப், உத்தராஞ்சல் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது
  9. மணிப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவுடன் மீண்டும் காங்கிரஸ்
  10. மார்கதர்சி நிதி நிறுவன விவகாரம்: ஆந்திர அரசு x ஈநாடு பத்திரிகை – முதல்வர் ராஜசேகர ரெட்டி x ராமோஜி ராவ்
  11. முலாயம் சிங் யாதவ் ஆட்சி – உத்தர பிரதேசம்
  12. இந்தியாவில் காதலர் தினத்தில் களியாட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களுக்கு இந்து அமைப்புகள் மிரட்டல்
  13. பழங்குடியினர் பகுதியில் டாடா உருக்காலை: இந்திய கம்யூ. எதிர்ப்பு
  14. நேபாளத்தில் மோதல்கள் காரணமாக காணாமல் போனவர்களின் எண்ணிக்கை – 800
  15. இராக்கில் இருந்து டென்மார்க் படைகளை திரும்ப பெறுகிறது
  16. பாகிஸ்தானில் பெண் அமைச்சர் சுட்டுக்கொலை
  17. இத்தாலிய பிரதமர் ரொமானொ ப்ரோடி ராஜினாமா
  18. தமிழகம் – மீனவர் – படகு – விடுதலைப் புலிகள் – இலங்கை அரசு – காவல்துறை
  19. சென்னை மாநகராட்சி தேர்தல்: மா. சுப்பிரமணியன் மேயர் – வாக்குப்பதிவில் வன்முறை & கள்ள ஓட்டு
  20. சிவசேனை -பாஜக கூட்டணியிடம் மீண்டும் மும்பை மாநகராட்சி
  21. தேசிய விளையாட்டு போட்டி
  22. தாவூத் இப்ராகிம் கூட்டாளியிடம் சூதாட்டம்: சாமுவேல்ஸ் லஞ்சம் – இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி

————————————————————————————————————-

நேரம் + மூடு இருந்தால் தொடரும் 🙂 

மார்ச்:

வலைப்பதிவுகளில்:

  1. கிரிக்கெட் உலகக் கோப்பை
  2. இணைய குசும்பனின் கடைசி இடுகை
  3. சுப்புடு காலமானார்

செய்திகளில்:

————————————————————————————————————-

ஏப்ரல்:

வலைப்பதிவுகளில்:

செய்திகளில்:

————————————————————————————————————-

மே:

வலைப்பதிவுகளில்:

செய்திகளில்:

————————————————————————————————————-

ஜூன்:

வலைப்பதிவுகளில்:

செய்திகளில்:

————————————————————————————————————-

ஜூலை:

வலைப்பதிவுகளில்:

  1. ஹாரிப்பாட்டர்

செய்திகளில்:

————————————————————————————————————-

ஆகஸ்ட்:

வலைப்பதிவுகளில்:

செய்திகளில்:

————————————————————————————————————-

செப்:

வலைப்பதிவுகளில்:

செய்திகளில்:

————————————————————————————————————-

அக்.:

வலைப்பதிவுகளில்:

செய்திகளில்:

————————————————————————————————————-

நவ.:

வலைப்பதிவுகளில்:

செய்திகளில்:

————————————————————————————————————-

டிச.:

இனிமேல்தான்!?

————————————————————————————————————-

முந்தைய பதிவு: 2006 – E-Tamil Person of the Year « Snap Judgment

Dreams

என் ஏழு வயது மகள் கடிதமாக எனக்கு எழுதித் தந்தது. அவ்வப்போது அவள் பகிர்வதை, அவளின் எழுத்துக்களாகவே பதிந்து வைக்க திட்டம்.

When I was sleeping I was dreaming.

What I was dreaming is I was sleeping and I was flying. I was flying to the moon.

But it was fun in top of the moon.

I was dancing in top of the moon.

I was singing a lot of things. But after that I woke up.

But when I woke up I wasn’t in the moon anymore.

Dedicated to all Organic Nutheads

big_fat_whale_brian_mcfadden_organic_nutcases.gif

கார்ட்டூனுக்கு நன்றி: Big Fat Whale

நீங்களும் ஆர்கானிக் ஆர்வகோளாறர் ஆகிவிட்டீர்களா என்றறிய: Eco Quiz! How green are you? – The Phoenix

Sure, modern person, you can rattle off your bra size, your cell-phone minutes, and your credit rating in no seconds flat, but what do you really know about your carbon footprint? It’s hard to quantify it with a number, but we’ve assembled a handy quiz to help you get a sense of just how green you are. Here, then, are 25 questions that’ll separate the panda-killers from the eco-saints

மேட் ஃபிக்சிங்கில் (எல்லாத்துக்கும் ‘D’ என்று தேர்ந்தெடுத்ததில்) எனக்கு கிடைத்தது:

We admire your dedication, patchouli breath. We do. But sometimes, no matter how good your intentions, extreme commitment can be cloying, exasperating, and, well, smelly. Take a step back and evaluate whether all the aspects of your holier-than-thou green lifestyle are actually making a difference – or just making a stinky statement.

Sun TV – சிதறல்கள்

சன் டிவியில் பல மாற்றங்கள்.

  • சனி, ஞாயிறுகளில் இரவு செய்திகள் சீக்கிரமே வந்து விடுகிறது. அன்று மட்டும் அரை மணி நேரம் முன்பே வரும் மாயம் என்ன?
  • மதிய செய்திகள் ஐந்து நிமிடங்களாக சுருங்கி விட்டது. இந்த மாதிரி தலைப்புச் செய்திகளை மட்டும் தருவது நல்ல ஃபார்மாட். முக்கியமான விஷயங்களை மொத்தமாக விளம்பரம் இன்று அறிய முடிகிறது.
  • ‘வணிக செய்திகள்’ என்று இரவு போடுகிறார்கள். பல தகவல்கள் தெரியவருகிறது. ஆனால், எழுதி ஸ்லைடு போட்டுக் காட்டுகிறார்கள். ஏன் படிக்க மாட்டேன் என்கிறார்கள்? எழுதிப் போடுவதிலும் எக்கச்சக்க எழுத்துப் பிழைகள். (மொத்தம் நான்கு வார்த்தை உள்ள செய்தியில் இரண்டு பிழை வரும் சித்திரவதை).
  • செய்திகளில் முக்கிய தலைவர்கள் அல்லது சம்பவத்தை நேரடியாக பார்த்தவர்களின் ரிப்போர்ட் இடம்பெறுகிறது. திடீரென்று ஒரு வார்த்தை சைலன்ஸ் செய்யப்படுகிறது. இந்த மாதிரி கழுத்தைத் திருகி கருத்தை அமுக்குவதிற்கு எதிராக வழக்குத் தொடுக்க முடியுமா?
  • செய்திகள் என்றில்லை. பேட்டி, நேரடி ஒளிபரப்பு போன்றவற்றிலும் இந்த திடீர் மயான அமைதி தென்படுகிறது. சென்சார் செய்யப்பட்ட பத்திரிகையில் f**k, s#@t என்றெல்லாம் குறிப்பால் உணர்த்துவார்கள். அந்த மாதிரி இந்த taboo பெயர்ச்சொல்களை சொன்னால் கிசுகிசு படித்த ஸ்னானப்ராபிதியாவது கிடைக்கும்.
  • முன்னாள் பெப்சி, இன்னாள் ஆச்சி மசாலா ‘உங்கள் சாய்ஸ்’ உமா ஜாகை மாறிப் போன பிறகு அந்த ஸ்லாட் வெறிச்சோடி இருக்கிறது. போன வாரம் பிரகாஷ்ராஜ் வழிந்தார். அதற்கு முந்தின வாரம் அனைத்து தீபாவளித் திரைப்படங்களின் முக்கிய பிட்டுகளையும் போட்டுக் காட்டிவிட்டு சத்யராஜ் போன்ற நக்கலுடன் சுரேஷ்குமார் ‘இந்தப் படத்தையும் திரையரங்கில் சென்று பார்க்கவும்’ என்று பகிடித்திருந்தார்.
  • தொலைபேசியில் மக்களை சமாளிக்க தற்போதைய சன் டிவி தொகுப்பாளர்களில் யார் சிறந்தவர்?
    • சூப்பர் டூப்பரில் வரும் ஹேமா சின்ஹா – ‘கண்ணாமூச்சி ஏனடா’ நிகழ்ச்சியில் ராதிகா, ப்ரியா, சத்யராஜை வைத்துக் கொண்டு தொலைபேசியையும் சமாளித்தார்.
    • வணக்கம் தமிழகத்தில் வருபவர் – நிறைய பேட்டி கண்ட அனுபவம் கைவசம் இருப்பது ப்ளஸ்.
    • நினைவுகள் அம்மு – உமா மாதிரியே வாத்சல்யமான உரையாடல். புடைவையில் லட்சணம். அம்மு நம்ம சாய்ஸ்.
  • மஸ்தானா மஸ்தானா‘வில் ஆட முடியாமல் மாய்மாலம் செய்த கமலேஷ் அமெரிக்கா வந்து ஆடிவிட்டுப் போகிறார்.
  • ‘அசத்தப் போவது யாரில்’ பாடல்களை உல்டா செய்யும் பகுதி நன்றாக இருக்கிறது.

இன்று ஒரு தகவல் – Numbers

கடந்த ஐந்து ஆண்டுகளில் நாடு முழுவதும் அகில இந்திய அளவில் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதியவர்களில் தமிழர்கள் சதவீதம் = 5 %

2001-ல் தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை: 5,244

தமிழகத்திலிருந்து தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை: 254 பேர்.

ஆண்டுதோறும் சராசரியாக ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிகளில் சேருபவர்கள்: சுமார் 250 பேர்

ஈழம், விடுதலைப்புலிகள், இலங்கை – தமிழ்நாடு தமிழனின் பார்வை

முதலில் விடை தெரியாத கேள்வி:

  • விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தையை மீண்டும் ஆர்வத்துடன் துவங்கியவர் ரணில் விக்கிரமசிங்கே.
  • ஏ9 சாலையை மீண்டும் திறந்து யாழ்ப்பாணத்தை மீண்டும் அடைய வைக்க ஒப்பந்தமானது.
  • அங்கே மீன் பிடிக்க செல்லக்கூடாது; இங்கே சென்றால் மீனவர்களுக்கு ஆபத்து‘ போன்ற கெடுபிடிகள் தளர்ந்தது.

அமைதியைக் குறிவைத்து இப்படி ஏகப்பட்ட ஆக்க பூர்வமான ரணிலுக்கு தமிழர்கள் ஆதரவு ஏன் கிடைக்கவில்லை? ‘நிச்சயம் ஒடுக்குவேன்‘ என்று அறிவித்த ராஜபக்சவுக்கு 51 சதவீதமும், பேச்சுவார்த்தையில் உறுதுணையாற்றிய விக்கிரமசிங்க்வுக்கு 49 சதவிகிதமும் வாக்கு கிடைக்கிறது.

முன்னாள் ஜனாதிபதியாகி ஓய்வெடுக்கும் சந்திரிகா குமாரதுங்கா. தமிழர்கள் வாக்களித்திருந்தால் மீண்டும் ரணில் வந்திருப்பார்.

இலங்கையில் சாதாரண பொதுபுத்தி எடுபடாது. ‘இப்படித்தான் யோசிப்பார்கள்’ என்று எதிர்பார்த்தால், நேர் எதிர் வியூகம் அமைத்து பாதாள குழியில் விழுவது போன்ற முடிவுகள் சகஜம். இதை பின்னணியாக வைத்துக் கொண்டுதான் ‘அடுத்து என்ன‘ என்று ஆருடம் போடமுடியும்.

இலங்கை அரசுக்கு தமிழர்கள் மேல் பரிவு இருப்பது போல் காண்பித்துக் கொள்வது காலத்தின் கட்டாயம். சிலசமயம் இந்த நாடகத் தோற்றத்தில் வெற்றி காண்கிறார்கள். முல்லைத்தீவு சம்பவம் போல பெரிய தாக்குதல்கள் முதல் அன்றாடப் போரில் இறப்புகள் உட்பட, ஈழத்தமிழர்களுக்கு விடுதலைப் புலிகளுக்கு மாற்றான சக்தியாக இல்லாமல், ரேசிஸ்டாக பேரினவாதத்திற்கு ஆதரவான சித்தரிப்புக்குள் அடங்கிப் போகிறார்கள்.

விடுதலைப் புலிகளுக்கும் போரின் மகத்துவம் தெரிந்தே இருக்கிறது. சுனாமி வந்தால் பணம் கிடைக்கும். போர் என்றால் பணம் கொட்டும். இதை முன்னிட்டுதான் தமிழர்புனர்வாழ்வுக் கழகத்தின் உடமைகளை முடக்க அமெரிக்கா முடிவெடுத்திருப்பது முக்கியமானதாகிறது. இதனால் ஆட்கடத்தல், போதை மருந்து சரக்கு பரிமாற்றம் போன்ற அதிகாரபூர்வமற்ற வழிமுறைகளினால் நிதி திரட்டப்படும். பிரபாகரனுக்கு கையிருப்பு குறைவதை விட கரும்புலிகளின் சேர்க்கைதான் மிகப் பெரிய பிரச்சினை.

சிறார்களை முளைச்சலவை செய்கிறார்கள்; கஞ்சா கடத்தல் போன்ற சட்ட விரோத செய்கைகளில் ஈடுபடுகிறார்கள்; அப்பாவி சிங்களர்களைக் கொல்கிறார்கள் போன்ற மனித உரிமை நெறிகளை கைவிட்டுவிட்டதாக விடுதலைப்புலிகள் தோற்றம் காண்பிக்கும்வரை அவர்கள் மீது கரிசனப் பார்வை உலக அரங்கில் கிட்டப்போவதில்லை.

சூடான், ருவாண்டா மாதிரி பிரச்சினை இன்னும் கைவிட்டுப் போகவில்லை என்று ஐ.நா. எண்ணுகிறது. ஈராக், இரான் மாதிரி எண்ணெய் வளமும் கிடையாது. அப்புறம் எப்படி கரிசனம் கிடைக்கும்?

சைப்ரஸுக்கே இப்போதுதான் தனி நாடாக முடிகிறது. ஃபாக்லாந்துக்கு இன்னும் விடுதலை கிடைக்கவில்லை. இது போல் மேற்கத்திய நாடுகளின் பிரச்சினைகளே முடிவுறாத நிலையில், அமெரிக்காவும் இங்கிலாந்தும் இலங்கைக்கு அறிவுரை சொல்லி, ஈழத்தின் அவசியத்தை எடுத்துரைத்து, சுதந்திரம் கிடைக்கும் அதிகாரத்தை தரும் நிர்ப்பந்த நிதர்சனங்களை வலியுறுத்தும் நிலையில் இல்லை. சீனா, ரஷியா, இந்தியா போன்ற இன்ன பிறருக்கும் இப்போதைய குழப்ப சிக்கல்களே சாலச் சிறந்ததாக இருக்கும் வேளையில் தெற்காசிய கூட்டமைப்புகளும் இடித்துரைத்து ராஜபக்ஷவை கண்டிக்க முடியாத அவலம்.

விடுதலைப் புலிகளிடம் இன்னும் போதுமான அளவு நிலப்பரப்பு இல்லை. அதற்கு ஈடாக உயிரின் அருமை தெரியாத, தற்கொலையை விரும்புவதற்கு அடிமையாக்கப்பட்ட, கரும்புலிகள் நிறைய இருக்கிறார்கள்.

பேரம் பேச தேவையான அளவு இராச்சியம் கிடையாது. ஆனால், அதற்கு ஈடாக அமைதி காலத்தில் சேகரித்த படைகலன்கள் குவிந்திருக்கிறது.

செத்து மடிவதற்கு சிறார்களும் அவர்கள் சக தமிழர் மீதோ அல்லது எதிராளி மீதோ வீசுவதற்கு சவாப்தாரியாகாத குண்டுகளும் இருக்கும் வரை அமைதிப் பேச்சுவார்த்தை பாவ்லாக்கள் கிடைக்காது.

கடைசியாக இஸ்லாமியர்கள் இருதலைக் கொள்ளி எறும்புகளாக இருக்கிறார்கள். அவர்களுக்கு புலிகளும் ஆகவில்லை; இலங்கை அரசு மீதும் கரிசனம் பெரிதாக இல்லை. மொத்தத்தில் இப்போதைக்கு ஈழத்தில் வசிக்கும் தமிழர்களின் நிலை பரிதாபகரமானது!

எது நடந்தாலும் விடுதலைப் புலிகளும் இலங்கை அரசும் பொறுப்பேற்காமல் ‘அந்தப் பக்கம்தான் இந்த நிலை/அசம்பாவிதத்தீற்கு காரணம்‘ என்று சுட்டுவிரல் விளையாட்டு மட்டுமே முடிவாக சொல்ல முடிகிறது.

முந்தைய பதிவு: ஒரு கதை; ஒரு புத்தகம்; இரு தலைவர்கள் – விடுதலை தராத புலிகள்

Quotable Quote – Fear vs Greed

“This week it’s been all about fear overtaking greed.”

JAMES PAULSEN, chief investment strategist at Wells Capital Management, on the stock market downturn.

Separated at Birth – Tamil Movies

இது அசல்:

trisha_duplicate_hands_tamil_cinema_movies.jpg

இது ‘பழனி’ படத்தில் நடிக்கும் காஜல் அகர்வால்:

kajal_aggarwal_pazhani_bharath_trisha_duplicate.jpg

அலைவரிசை பயணங்கள்

கிட்டத்தட்ட ஓராண்டு முன்பு கில்லிக்காக எழுதியது.

நான் ஒரு பழைய கார் வைத்திருந்தேன்.

அமெரிக்கா வந்த புதிது. வங்கிக் கணக்கில் மாதத்துக்கு இரண்டு முறை சம்பளம் போடுவார்கள். பதினைந்தாம் தேதியும் ஒன்றாம் தேதியும் விடிந்தவுடன் கொண்டாட்டம். பத்தாம் தேதியிலிருந்தும் இருபத்தைந்தாம் தேதியிலிருந்தும் திண்டாட்டம். அந்த மாதிரி நிலையில்தான் நியு யார்க் மாநிலத்தின் அடர்ந்த காட்டுப் பகுதியில் மலையுச்சியில் கன்சல்டண்ட்டாக புகுந்த வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள்.

இயற்கை கொஞ்சும் இடமாக இருந்ததாலும், இருட்டில் வளைவுகள் எதுவும் விளங்காததாலும், பாடிகாட்டாக பாடல் அலறும். என்னிடம் இருந்த கைக்காசுக்கு, காஸெட் பாடும் கார் கிடைக்கவில்லை. ஏதோ ஒரு கலர் – ஆக்ஸிலேட்டர் அமுத்தினால் ஓட வேண்டும். ப்ரேக் போட்டால் பிடிக்க வேண்டும். எனக்கு பிடித்திருப்பது முக்கியமல்ல.

நண்பர்களைப் பார்க்க ஐநூறு மைல் ஹைவே ஓட்டினாலும் பண்பலையில் பாடல் ஒலிக்கும். பின்னிரவில் வேலை முடித்து பசி கிறக்கத்தில் கீழிறங்கினாலும் அமெரிக்க கீதம் கூவும்.

கோபமாக இருந்தால் ஹெவி மெட்டல். கோயிலுக்குப் போனால் மேஸ்ட்ரோ. காலையில் பாப். மாலையில் ஜாஸ் என்று வழக்கப் படுத்திக் கொண்டேன் எல்லா எஃப்.எம்.களையும்.

பாத்ரூமில் ப்ரிட்னி ஸ்பியர்ஸ் புருஷன் பாடினதில் ஆரம்பித்து ஆப்பிரிக்காவில் இருந்து நாடோடியாகப் பஞ்சம் பிழைக்க வந்த க்ரூப் வரை கிட்டத்தட்ட அனைத்து பாடல்களும் கேட்கக் கிடைத்தது. நிக்கோல் ரிச்சி ஜட்டி போடுவதில்லை என்று மட்டும் அறிந்திருந்த அறியாப் பிள்ளைக்கு, அவரின் அப்பன் அமோகமாக கலக்குவார் என்று அகர முதல் எழுத்தெல்லாம் அறியக் கிடைத்தது. ‘அகிலா அகிலா’ என்று தேவா போட்டது ‘பஃப்லோ சோல்ஜர்’ என்பார்கள். அந்த மாதிரி ஸ்ரீதேவி பாட்டு இங்கே இருக்கு என்று அளக்க, அளப்பரிய வாய்ப்புக் கிடைத்தது.

அப்பொழுது ஒரு நத்தார் தினம் வந்தது. அன்றைய விடுமுறையை கும்மாளமிட தேசி மக்கள் வந்து க்ரீன் கார்ட் பெறுவது, கம்பெனி மாறுவது, காண்ட்ராக்டை உடைப்பது, லைசென்ஸ் வாங்குவது, நைட்க்ளப் செல்வது, சனியிரவு பெண் பிடிப்பது என்று வாழ்க்கைத் தேடல்களை பேசிக் களைத்தவுடன், என்னுடைய பாடல் தொகுப்பை ஒலிக்க விட்டேன்.

நோ டவுட், சன்ஷைன், கார்டிகன்ஸ், செலீன் டியான், பார்பீ என்று கவர்ச்சியான மெட்டு இருக்கும். சில சமயம் பாடல் கூட புரியும்.

பாடல்கள் எப்படி என்னைக் கவர்ந்தது?

திரும்பத் திரும்பப் பல முறை கேட்டாலும், அலுக்காத ட்யூன். அதுதான் என்னை உள்ளே இழுக்கிறது. பன்னிரெண்டு டாலர் காசு கொடுத்து சிடி வாங்க வைப்பது. அதற்குப் பிறகு கொஞ்சம் கவர்ச்சியான வார்த்தைக் கோர்ப்பு. வரிகளில் வைரம் மின்னுவது எல்லாம் முக்கால்வாசி நேரம் விளங்குவதில்லை.

கிட்டத்தட்ட இதே மாதிரிதான் இணையப் பழக்கமும் ஏற்பட்டிருக்கிறது.

வேலையில் போரடித்தால் தமிழ்மணம். இரண்டு மணி நேர கம்பைல் ஆரம்பித்தால் ப்ளாக்லைன்ஸ். ஸ்ட்ரெஸ் டெஸ்டிங் என்றால் தேன்கூடு. இரவு நேர சப்போர்ட் மாரடித்தல் என்றால் கிஞ்சா.

பாஞ்சாலிக்குக் கண்ணன் சேலை கொடுத்த மாதிரி வண்ணவண்ணமாய் முடியவே முடியாத வலைப்பதிவுகள். துச்சாதனனாய் துகிலுரிக்கப் பார்த்தேன். வேர்த்து, விறுவிறுத்து, துரியோதனன் ஐகாரஸ் கட்டளைக்குட்பட்டு, அடிமுடி அறியவொண்ணா முழுமைக்கு முயற்சித்தேன்.

ஸ்பானிஷ் பாடல்கள் என்றொரு உலகம். கஜல் இன்னொரு கடல். வளைகுடா சங்கீதம் சொக்கியிழுத்துக் கட்டிப்போட்டு விடும் அண்டம். அமெரிக்கா சங்கீதத்தின் பல பாடல்களை கேட்டு, அவ்வளவுதான் என்று மருகி சொக்கித் திளைத்து, அதில் இவை சிறந்தது என்று அன்று நினைத்திருந்தேன். அதே போல், அனைத்துப் பதிவுகளையும் படித்து அவற்றில் இவை சிறந்தது என்று கில்லியில் இட்டுக் கொண்டிருக்கிறேன். இரண்டுமே எனக்கு நிறைவையும் மனமகிழ்வையும் தந்தாலும் முழுமையானது அல்ல.

எட்டிய மட்டும் நீந்தி, கிடைத்த காட்சிகளைப் படம்பிடித்து, தண்ணீர்க் கோலங்கள் இம்புட்டுதான் என்பது போலவே இருக்கிறது.

இந்த நிலையில் இந்த வருடத்தின் கவர்ந்த பதிவுகளுக்கொரு பதிவு.

சமீபத்தில் பெண்டாமீடியா எடுத்த பாண்டவாஸ் அனிமேசன் படம் பார்த்தேன். மிக மோசமான படம். துள்ளித் துள்ளி நீ ஓடம்மா என்று திரைக்கதை பாய்ந்தோடியது. குழந்தைகளைக் கவரும் ஸ்பெசல் எஃபக்ட்ஸ் பெரிதாக, காட்சிக்கு காட்சி வராமல், அவர்களின் கவனத்தை நோகடித்தது. துரி, தேவ் என்று செல்லமாக அழைத்தார்கள்.

ஆனால், குறிப்பிட்ட நேரத்துக்குள் இரண்டு வருடமாய் டிவியில் வந்த சோப்ரா பாரதத்தை, இரண்டு மணியில் மஹாபாரதமாக்கி இருந்தார்கள். அதற்காகவே பாராட்டலாம். அதற்கு மட்டுமே பாராட்டலாம்.

அந்தப் படம் மாதிரி கடந்த வருடத்தின் அலைவரிசைப் பயணங்கள்:

ஜனவரி மாதம் புத்தகக் கண்காட்சி மாதம். சுரேஷ் கண்ணன் இலக்கியவாதி (பிச்சைப்பாத்திரம்: பாலாவும் என்னுடைய சுயசரிதத்தின் ஒரு பகுதியும்). பத்ரியோ பதிப்பாளி (பத்ரியின் வலைப்பதிவுகள் – நான் வாங்கிய புத்தகங்கள்).

நாராயண் மருதநாயகம் பற்றி கமலுக்கு ஒரு கடிதம் எழுதினார். கடிதங்களும் இலக்கியம்தானே என்கிறார் செல்வராஜ் (என் எண்ணக் கிறுக்கல்கள் – செல்வராஜ் » Blog Archive » பழைய கடிதம் ஒன்று). ‘அழகி’ படத்தின் மூலம் வாழ்க்கை இலக்கணத்தைப் பார்க்கிறார் தமிழ்தேனீ (வண்ணக்குழப்பம்: மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை).

சுந்தரமூர்த்தி Looking for Comedy in the Muslim World என்று அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு தூரப் பார்வை பார்த்தார். நிலவு நண்பன் நீங்கள் இன்னும் பார்க்காத ‘யதார்த்தம்’ திரைப்படத்திற்கு விமர்சனம் எழுதுகிறார். அதிகம் அறியாத படங்களைப் பகிரும் சன்னாசி Palindromesஐ திருப்பிப் போடுகிறார். இயக்குநர் அருண் வைத்யநாதன் திரைப்படமே எடுத்து வெளியிடுகிறார் (Agara thoorigai » Blog Archive » ‘தனியொரு மனிதனுக்கு’ குறும்படம்)

நபகோவின் லோலிடாவை செல்வன் வாசக அனுபவமாக்குகிறார். ஈழ நூல்களை இணையத்தில் காண நூலகம் துவங்குகிறது. (“ம்…” – விட்டு விடுதலையாகிநிற்போம்…!). அருந்ததி ராயின் கட்டுரைத் தொகுப்பை ஜெயந்தி சங்கர் விமர்சிக்கிறார். (வல்லமை தாராயோ: the algebra of infinite justice (நூல் அறிமுகம்))

டிவியில் தங்கவேட்டையை பின்னூட்ட வேட்டையாளர் இலவச கொத்தனார் கவனிக்கிறார் (இலவசம்: தகதகதகதக தங்கவேட்டை). ரங்கா அண்டங்காக்கைகளையும் பனிக்கரடிகளையும் பார்க்கிறார். (இதர எண்ணங்கள்: கறுப்பும் – வெளுப்பும்)

இண்டிப்ளாகீஸ் தேர்தல் குறித்து தருமி அலசினார் (தருமி » 123. Election Analysis…). லண்டன் பயணங்களில் நம்மையும் டிக்கெட் செலவு வைக்காமல் கூட்டிப் போகிறார் இரா முருகன் (vembanattu-k-kaayal: எடின்பரோ குறிப்புகள் – 5).

இன்னும் குட்டி ரேவதி எஸ்.ராமகிருஷ்ணன், வைகோ அணி மாறல், திருமா பாமக விடுதல், துபாயின் ஆட்சியாளர் ஷேக் மக்தூம் பின் ராஷித் பின் மக்தூம் மரணம், ரங் தே பஸந்தி, கோல்டன் க்ளோப் என்று செய்திக் குறிப்புகள் திரும்பிய சுட்டியெல்லாம் படிக்கக் கிடைத்தாலும் நேர்மையான சொந்தக் கதையை எளிமையாக எழுதியிருக்கும் அருள்குமார் பதிவு நெஞ்சில் நிற்கிறது (நான் பேச நினைப்பதெல்லாம்: “தீம்தரிகிட” – வாக்குப்பதிவு)

நான்தான் ஆரம்பத்திலேயே சொல்லியிருந்தேனே! நான் அகலக்கால் வர்க்கம். ‘ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி’ என்று சுருக்காமல், நூறாயிரம் விதமாக விவரிப்பதை ரசிப்பவன். ரசிப்பவர்களில் திளைப்பவன். எத்தனை சம்பளம் வந்தாலும் அதிகம் இரண்டணா செலவு வைக்கும் பாலையாவின் கோபத்திற்கு ஆளாகுபவன்.

மற்ற மாதங்களுக்கும் மிச்ச சுட்டிகளுக்கும் ப்ரேமலதாவின் (Kombai) பரிந்துரைக்கேற்ப ஓல்ட் இஸ் கோல்ட் (கில்லி – Gilli » OIG)-இல் சந்திக்கிறேன்.

இனிய சுட்டிகளும் அமைதியானப் பூக்களும் நிறைந்த வலைப்பூ ஆண்டாக 2007 அமைந்திருக்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

Blogger repeats itself.