Category Archives: Uncategorized

Buddhaa in Garden Flowers 

Buddhaa in Garden Flowers Posted by Hello

AOL Cinema Homepage 

AOL Cinema Homepage Posted by Hello

நிலமெல்லாம் ரத்தம் 2,3,4

பா. ராகவன்

ரிப்பேர்ட்டர் தொடரில் இருந்து சில பகுதிகள்

இரண்டு

ஆபிரஹாம் பெரியவருக்கு தொண்ணூற்றொன்பது வயது. அவரது மகனுக்கு பன்னிரண்டு வயது. முதல் மனைவிக்கு எண்பத்தொன்பது வயது. இரண்டாவது மனைவியின் வயது அப்போது என்ன என்று சரியாகத் தெரியவில்லை. இத்தனை தள்ளாத காலத்தில் அவரது கனவிலோ, நினைவிலோ ஒருநாள் கடவுள் வந்து பேசினார்.

“இதோ பார். உனக்கு இன்னொரு குழந்தை பிறக்கப்போவது உறுதி. அதுவும் இத்தனை நாளாகக் குழந்தை இல்லாத வருத்தத்தை மட்டுமே கருவாகச் சுமந்துகொண்டிருந்த உன் முதல் மனைவி மூலம் அது நடக்கப்போகிறது” என்று ஒரு குரல் கேட்டது.

தம் முதல் மனைவி இறந்த பிறகு வேறொரு பெண்ணையும் திருமணம் செய்துகொண்டார். அவள் பெயர் கேதுரா அவளுக்கு ஆறு குழந்தைகள் பிறந்தன.

அவருடைய முதல் மனைவியின் பெயர் சாரா. சாராவிடம் வேலைக்காரியாக (அடிமையாக) இருந்த பெண் ஆகார். அவள் எகிப்து தேசத்தைச் சேர்ந்தவள். அவளுக்குப் பிறந்த குழந்தையின் பெயர் இஸ்மயீல். சாராளுக்குப் பிறந்த குழந்தையின் பெயர் ஈஸாக்.

ஆபிரஹாமால் வீட்டைவிட்டு அனுப்பப்பட்ட ஆகாரின் மகனான இஸ்மயீலின் வம்சத்தவர்கள்தான் அரேபியர்கள். சாராவுக்குப் பிறந்த ஈஸாக்கின் வழிவந்தவர்கள் யூதர்கள். (இந்த வகையில் யூதர்களைக் காட்டிலும் அரேபியர்கள் பன்னிரண்டு வயது மூத்தவர்கள் என்றாகிறது.)

ஈஸாக் பிறந்ததை முன்னிட்டுத்தான் இஸ்மயீல் வீட்டைவிட்டு விரட்டப்பட்டான். இது நான்காயிரம் வருடங்களுக்கு முன்னர் நடந்ததாக யூதர்களின் வேதமான ‘தோரா’ சொல்கிறது.

யூதகுலம் அழியாமல் தடுக்க, தமக்கென ஒரு தேசத்தை உருவாக்கிக்கொள்ள முழுமூச்சுடன் அவர்கள் பாடுபடத் தொடங்கியபோது, தமது அடையாளங்களை வரிசைப்படுத்த அவர்களுக்கு ஹீப்ரு மிக முக்கியத் தேவை என்று தோன்றியது. 1880_ஆம் ஆண்டு யூத இனத்துப் பண்டிதர்கள் கூடி, ஹீப்ருவில் எழுதப்பட்ட பழைய பிரதிகளைத் தேடிக் கண்டுபிடித்து எடுத்து ஆராய்ச்சிகள் செய்யத் தொடங்கினார்கள். எப்படியாவது பாலஸ்தீன மண்ணில் இஸ்ரேல் என்கிற தேசத்தை ஸ்தாபித்தே தீருவது என்று முடிவு செய்ததும், கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் பகுதியில் ஹீப்ரு மொழி பள்ளிக்கூடங்களைத் திறந்தார்கள். 1913_ஆம் வருடம் பாலஸ்தீனிலுள்ள பள்ளிகளில் ஹீப்ருவே போதனாமொழி என்கிற அளவுக்கு அதன் தாக்கம் மிகுந்திருந்தது. 1948_ல் இஸ்ரேல் சுதந்திரம் பெற்றதும், ஹீப்ரு அதன் தேசிய மொழியாகவே ஆகிப்போனது.



மூன்று

சிரியா அப்போது ரோமானிய ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. அடைக்கலம் கோரி வந்தவரை அரவணைத்து, சிரியாவின் ஒரு சிறு மாகாணத்துக்கு அவரை கவர்னராக நியமித்து கௌரவித்துவிட்டார்கள். அவருக்கு ஒரு கனவு இருந்தது. எப்படியாவது ஜுதேயாவின் (இஸ்ரேலின் அன்றைய பெயர்) மன்னனாக தான் ஆகிவிடவேண்டும். அதற்கு முதலில் ஹாஸ்மோனியர்களின் ஆட்சியை ஒழிக்கவேண்டும். அதற்கு ரோமானியர்களின் உதவி வேண்டும். தளபதி மனம் வைத்தால் காரியம் நடக்கும்.

ஒரு சரியான சர்வாதிகாரியின் மனோபாவம் அந்த கவர்னருக்கு இருந்தது. நினைத்ததைச் செயல்படுத்த என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைத்தார். பொறுமையாக, தருணத்துக்குக் காத்திருந்து மார்க் ஆண்டனியிடம் தன் விருப்பத்தைச் சொன்னார். நண்பர் என்று ஆகிவிட்டபடியால் அவரும் கவர்னரின் விருப்பத்துக்குத் தன் சம்மதத்தைத் தெரிவித்து ஒத்துழைப்பதாக வாக்களித்தார். கி.மு. 37_ம் ஆண்டிலிருந்து தொடங்கி அடுத்த முப்பத்து மூன்று வருடங்கள், தன் மரணம் வரை ஜுதேயா எனப்பட்ட இஸ்ரேலை ஆண்ட அவரது பெயர் ஹெரோத்.

சகிக்கமுடியாத ஆட்சி என்று வருணிக்கப்பட்டாலும் ஹெரோத் ஒரு தீவிர யூதர் என்பதால், தாம் பதவிக்கு வந்ததுமுதல் யூதர்களுக்கான பாதுகாப்பு என்கிற பெயரில் நிறைய கட்டுப்பாடுகளையும் ஒழுங்குமுறைகளையும் கொண்டுவந்தார். அவர் செய்தவற்றுள் உருப்படியான பணி என்றால், பாலைவனமாக இருந்த அன்றைய இஸ்ரேலில், நிலமற்ற அத்தனைபேருக்கும் ஒரு துண்டு நிலமாவது கிடைக்கும்படிச் செய்து விவசாயத்தை ஊக்குவித்தது. அது ஓர் அற்புதம்தான்.

கிருஷ்ணன் பிறந்தபோது, அவனைக் கொல்லுவதற்கு கம்சன் மேற்கொண்ட முயற்சிகளை எப்படியெல்லாம் ஹிந்துமதக் கதைகள் விவரிக்கின்றனவோ, அதற்குச் சற்றும் சளைக்காத கதைகள் இயேசுவின் பிறப்பு தொடர்பாகவும் உண்டு.

அங்கே கம்சனின் பெயர் ஹெரோத். இரண்டாவது கோயிலைக் கட்டிய அதே யூதமன்னன் ஹெரோத்.



நான்கு

யூத குலத்தின் அடையாளமே ‘தேவதூதனுக்காகக் காத்திருக்கும் குலம்’ என்பதுதான்.

இயேசுவைத் தனித்துக்காட்டிய முதல் விஷயம், அவர் தம்மை ‘மனிதகுமாரன்’ (பைபிளில் மனுஷகுமாரன் என்று வரும்.) என்று குறிப்பிட்டது. இது மிக முக்கியமான குறிப்பு. ஏனெனில் யூதகுலம் அப்படியருவனைத்தான் காலம் காலமாக எதிர்பார்த்துக்கொண்டிருந்தது. யூதர்களின் வேதத்தில், மனிதகுமாரன் எப்படி இருப்பான் என்பது பற்றி ஒரு குறிப்பு உண்டு. இறுதித் தீர்ப்பு நாளில் நீதி வழங்கும் நீதிபதியைப்போல் அவன் இருப்பான் என்று தான் கனவில் கண்டதாக யூதர்களின் வேதத்தில் டேனியல் என்கிற தீர்க்கதரிசி எழுதிய பகுதிகளில் வருகிறது.

டேனியலின் கனவில் கிடைத்த குறிப்பு தன்னைப்பற்றியதுதான் என்பதாக இயேசு ஒருபோதும் சொன்னதில்லை. ‘கர்த்தரால் மனிதகுமாரனுக்குச் சொல்லப்பட்டது’ என்பதுபோல அவர் விளக்கிய விஷயங்கள் கூட படர்க்கையில்தான் வருகின்றனவே தவிர ஒருபோதும் ‘கர்த்தரால் எனக்குச் சொல்லப்பட்டது’ என்பதுபோல அவர் குறிப்பிட்டதில்லை.

அப்போது இஸ்ரேல், ரோமானியர்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. ரோம் மன்னரின் பிரதிநிதியாக கவர்னர் பான்ட்டியஸ் பிலாட் (பைபிளில் பொந்தியு பிலாத்து என்று குறிப்பிடப்படும் பிலாத்து மன்னன் இவனே.) ஆட்சிசெய்துகொண்டிருந்தார். வழக்கைக் கேட்ட அவருக்கு, இது ஓர் அநியாயமான வழக்கு என்றே தோன்றியது. ஆயினும் மதகுருக்கள் ஏற்பாடு செய்திருந்த மக்கள் கூட்டத்தினர், இடைவிடாமல் ‘இயேசுவுக்கு மரணதண்டனை தந்தே ஆகவேண்டும்’ என்று வலியுறுத்தியதால், வேறு வழியில்லாமல் தம் சம்மதத்தைத் தெரிவித்தார்.

இஸ்ரேலின் கவர்னராக பிலாட் இருந்தது, கி.பி. முதல் நூற்றாண்டின் 27லிருந்து 36_ம் வருடங்களுக்கு இடைப்பட்ட காலம் என்று சரித்திரம் சொல்கிறது. இதனடிப்படையில் இயேசுவின் மரணம் 30_35_ம் ஆண்டுகளுக்கு இடையில் நிகழ்ந்திருக்கவேண்டும் என்று கணிக்கப்படுகிறது.

சிலுவையில் அறையப்பட்டு, மீண்டும் உயிர்த்தெழுந்து அவர் விண்ணுக்குச் சென்றார் என்கிற கிறிஸ்தவர்களின் நம்பிக்கைதான் யூதர்களிடமிருந்து அவர்களை வேறுபடுத்திக்காட்டும் முதல் ஆதாரம். ஏனெனில், யூதர்களின் நம்பிக்கையின்படி, மரணத்துக்குப் பின் தேவதூதன் உயிர்த்தெழுவதென்பது கிடையாது. வேறுபாடு அங்கேதான் தொடங்குகிறது.

யாஹூ பொம்மைகள்

அரட்டை பெட்டியில் போட்டு விளையாட….

(*) – ரஜினி காந்த்

(~~) – கிரண்

:-@ – பட்டக்கத்தி சிவாஜி

:(|) – சிம்பு

*-:) – ஜொலிக்குது… ஜொலி ஜொலிக்குது… ஸ்னேஹா

@};- : குஷ்பூ

:-” – விசில் மன்னன் எம்.பி.பி.எஸ்

>:D

$-) – பொன் மகள்

3:-O – அம்மா… ஜெ.ஜெ.

%%- – பச்சை ராசி

~o) – இராயர் க்ளப்

~:> – கூவுது

**== – பறக்குது

>-) – ஈராக்கில் அமெரிக்கப் படை

=:) – அமெரிக்காவில் H-1 மாந்தர்

:-$ – என்ன சத்தம் இந்த நேரம்

[-X – வெட்கப் படுகிறேன்… வேதனைப் படுகிறேன்

8-X – கனாக் காணும் காலங்கள்

b-( – கனா நிறைவேற்றிய காலங்கள்

:@) – கவுண்டமணிக்கு செந்தில்

[-o

:)>- – போடுங்கம்மா ஓட்டு

^:)^ ^:)^ ^:)^ – சங்கர மடம் பக்கம் சென்றால்

(புத்தமுபுது யாஹு தூதுவன் உபயோகிக்கவும்!)

Stem Cells 

Stem Cells Posted by Hello

மாரோ மாரோ

தேர்தல் சுறுசுறுப்பின்போதுதான் அந்த வார்த்தையை கேட்டேன். ‘ஸ்டெம் செல்‘ (Stem Cell). சென்ற வார நியு யார்க் கோவிலில் மீண்டும் அந்த வார்த்தையில் தடுக்கி விழுந்தேன்.

எதற்கு ஆராய்கிறார்கள், என்ன நன்மை என்று ஒரு இழவும் விளங்காமல், கெர்ரி ‘எனக்கு அந்த ஆராய்ச்சி பிடிக்கும்‘ என்றும், அந்தப் பக்கம் புஷ், ‘உம்மாச்சி கண்ணை குத்திடும்‘ என்றும் ஆழமாக விவாதித்தார்கள்.

ஸ்டெம் செல் என்றால் ‘விளையும் அணு’. வெற்று வீடு போல் வாடகைக்கு ரெடியாக இருக்கும் மனை. நரம்பணு, கிட்னி அணு, என்று ரகம் ரகமாக பச்சோந்தித்தனம் செய்யவல்லது. இதய அணுவாக மாற்றிவிட்டால் டிக் சேனிக்கும் இன்ன பிற இதய நோய் உள்ளவர்களுக்கும் அணுக்களை நட்டுப் பயிரிட்டு விடலாம். இதய அணுவாக மாற்றுவதற்கு ஆராய்ச்சி நடந்து வருகிறது.

சர்க்கரை வியாதி முதல் கேன்சர் வரை தீர்வு காண ஸ்டெம் செல்கள் பயன்படும். ரத்த தானம் கொடுப்பது போல் ஸ்டெம் செல் தானம் தர முடியாது. ஆராய்ச்சிக்காக பணம் கொடுப்பதா அல்லது உயிரை காப்பதற்காக மட்டுமே ஆராய்வதா என்பதில்தான் (முன்னாள்) ஜனாதிபதி வேட்பாளர்களிடையே கருத்து வேறுபாடு.

2001-இல் புஷ் ‘ஸ்டெம் செல்’ ஆராய்ச்சியை சட்டமாக்கும் வரை அமெரிக்க அரசு இதற்கு நிதி வழங்கவில்லை. அதன்பிறகு கொஞ்சமே கொஞ்சம்தான் என்றாலும் ஆராய்ச்சியாளர்களிடையே பணப்புழக்கம் அதிகரித்திருக்கிறது. ஆனாலும் ஸ்டெம் செல் கிடைக்கும் விதங்களில் மாற்றம் எதுவுமே இல்லை. செயற்கை முறையில் கருத்தரித்தல், கருவிலே தவறிப்போன சிசுக்களில் போன்ற அரிதான இடங்களின் மூலமே ஸ்டெம் செல்கள் கிடைக்கிறது.

TIME.com-இன் 2001-இல் வெளிவந்த கவர் ஸ்டோரியும் படிக்கலாம்.

நியு யார்க் ·ப்ளஷிங் கோவிலில்தான் அந்த அருமையான வாய்ப்பு கிடைத்தது. சங்கர மடம் செல்லும்போது கூப்பிட்டு சாப்பாடு போடுவார்கள். (இப்ப இருள்நீக்கியோ, நீக்காமலோ — ஜெ.எஸ்.எஸ். ஹாட் டாபிக் அல்லவா 😉 ·ப்ளஷிங் கோயிலில் அன்போடு ‘போன் மாரோ’ (Bone Marrow)-விற்கு ஆள் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.

நோயாளிக்கான போன் மாரோவும் நமதும் பொருந்தினால் ஸ்டெம் செல் வழியாகவும் தானம் கொடுக்கலாம் என்றவுடன் ‘அத்தரிபாச்சா கொழுக்கட்டை’ போல் கெர்ரி வந்து போனார்.

இருபதாயிரத்தில் இருவருக்குத்தான் ஒரே விதமான ‘மாரோ’ இருக்கும் சாத்தியங்கள் இருக்கிறது. நல்ல வேளை. ரத்த தானமாவது ஏழைந்து வகைக்குள் அடக்கி, எளிதில் கொடுக்கல்-வழங்கல் நடக்குமாறு கடவுள் அமைத்திருக்கிறார்!

இரண்டு விதமாக ‘மாரோ’ தானம் கொடுக்கலாம்.

முதல் வழி ரொம்ப காலமாக செய்யப்பட்டு வருகிறது. இடுப்பில் மேல் பகுதியில் நம் உடம்பில் விளையாடும் மூன்று சதவீதம் மாரோக்களை இறக்கிக் கொள்கிறார்கள். இரண்டு நாளைக்குப் பிள்ளை பெற்றவள் போல இடுப்பு வலிக்கலாம். ஆனால், பத்து நாளைக்குள் விட்ட மாரோக்களைத் திரும்பவும் சுரந்து விடுவோம்.

இரண்டாம் வழியில் பல்பு போட்டு பார்த்து எடுக்கிறார்கள். மாரோ தானம் கொடுப்பதற்கு நானகைந்து நாட்களுக்கு முன் ஊசி போடுகிறார்கள். அந்த மருந்து ஸ்டெம் செல்களை மட்டும் ஒளிரச் செய்கிறது. ஒரு கையில் எடுக்கும் ரத்தத்தில் இருந்து மாரோக்களை மட்டும் கீழிறக்கிக் கொண்டு, இன்னொரு கை வழியாக ஸ்டெம் செல் இல்லாத நமது ரத்தத்தை நமக்கே ‘வைச்சுக்கோப்பா’ என்று கொடுத்து விடுகிறார்கள். துளி வலி கூட கிடையாது.

நாம் தானம் கொடுக்கும் ‘போன் மாரோ’ ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே குணப்படுத்துகிறது. முதல் காரியமாக ‘போன் மாரோ’ கொடுக்க சம்மதம் என்று ஒரு வரி சொல்லி, எழுதிப் போட்டு, மின்னஞ்சல் செய்து, தொலைபேசி, ரத்தப் பரிசோதனைக்கு ஆவன ஏற்பாடு செய்து விடுங்கள்.

How To Help: எப்படி உதவுவது என்று சிறு குறிப்பு.

How to Arrange Drives: தெற்காசியர்களிடையே விழிப்புணர்வையும் மாரோ வங்கியையும் அதிகரிப்பது எவ்வாறு என்று சொல்லும் பதிவு.

குட்டிக் கதைகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆனால், Blind faith is dangerous என்று சொல்லும் இந்தக் கதை – இன்று என்னுடைய உள்ளம் கவர்ந்த வலைப்பதிவு:-)

How it Works: Embryo to Stemcell 

How it Works: Embryo to Stemcell Posted by Hello

சில பதில்கள் – ஆனந்த் சங்கரன்

1. தங்களின் தமிழ் வலை அனுபவங்கள்.

வலை அனுபவம்னா அது 94ல இருந்து. அது ரொம்பப் பழைய கதை. தமிழ் வலை அனுபவம்னா அது 2001 ல இருந்து.

தினகரன்,விகடன், குமுதம் முதலில் பார்த்த வலைதளங்கள். அப்புறம் திண்ணை, கிளப். அப்புறம் மரத்தடி, தமிழோவியம், பதிவுகள்,திசைகள்.

இவ்வளவு இணையத்தளம் / குழுக்கள் படிச்சாலும் என்னமோ எல்லாம் ஒரே மாதிரிதான் இருக்கு. விகடன் / குமுதம் ஒரே மாதிரி.

பதிவுகள்,திசைகள்,தமிழோவியம் எல்லாம் ஒரே மாதிரி. திண்ணை கொஞ்சம் வித்தியாசம்; எப்படினா அதிகமா அடிதடி இருகறதால.

2. வலைப்பதிவுகளில் மிகவும் விரும்பிப் படிக்கும் ப்ளாகுகள்

விரும்பி படிக்கற ப்ளாக்கள் வந்து,

பாரா – கொஞ்சம் நக்கல், மற்றும் நிறைய விஷயங்களை பற்றி அலசுவதால்.

அருண் – எழுதுற விஷயத்தில் பின்வாங்காமல் இருந்தல். தெளிவான சிந்தனை. கார்ட்டூன்ல படத்தை விட மேட்டர் நல்லா இருக்கும்.

மூக்கு சுந்தர் – இதுதான்னு சொல்ல தெரியலை; இவரோட ஸ்டைல் நமக்கு தோதா இருக்கும்.

வெங்கடேஷ் – ஆழமா யோசிச்சு எழுதுவாரு.

ரூமி – இவரோடது மொதல்ல பின்னூட்டம் எவ்வளவு பார்ப்பேன். அது பத்துக்கு மேல போச்சுனா வில்லங்கமா எழுதியிருக்காருன்னு அர்த்தம். பாவம் ரூமி பேரு இருக்கறதாலேயே நிறைய பேரு கலாய்க்கறாங்க.

வெங்கட் – இவரு மைக்ரோசாப்ட் திட்டி எழுதுவாரு பாருங்க; அதுக்காகவே இவரோடதை படிப்பேன்.

மீனாக்ஸ் – இவரோட மார்கெட்டிங் மேட்டர் சூப்பர்.

சந்திரவதனா (மகளிர்) – நிறைய விஷயங்கள் சர்வ சாதாரணமா எழுதற ஸ்டைல்.

அப்புறம் தமிழ்மணம் சூடான பகுதியில வர்ற அயிட்டங்கள்.

3. விரும்பிப் படித்த பதிவுகள் ?

பரபரப்பா இருக்குற மேட்டர் எல்லாமே நேயர் விருப்பம்தானே.

4. படிக்காவிட்டால், ஏன் தற்போது படிப்பதில்லை ?

பாரா – கொஞ்ச நாளா எழுதறது இல்லே

பி பி – அப்போ அப்போ தான் எழுதுவாரு

பி.கே.எஸ் – இவரு மேட்டர் ரொம்ப நீளம் அதனால சமயத்துல அப்புறம்ன்னு விட்டுவேன். அது அவ்ளோதான்.

வந்தியதேவன், சுந்தரவடிவேல் – இவங்க ப்ளாக் முன்னாடி படிச்சேன், நடுவுல ரொம்ப அடிதடி நடந்து கன்னா பின்னா எழுதினதுல

ஆர்வம் போயிடுச்சு.

5. எப்பொழுது, எப்படி, எதற்காக உங்களுக்கான வலைப்பதிவு அமைக்க விருப்பம் ?

எனக்கு வலைப்பதிவா ? அப்புறம் எவனாவது நம்மளை இந்த மாதிரி போட்டு தாக்கவா. ஏதோ வேலைக்கு போனோமா, அரட்டை அடிச்சோமா, வலைப்பதிவுகள் படிச்சோமா இருக்கனும் 🙂

6. (பாரா சொன்னது போல்) புதிதாக ஒன்பதே ஒன்பது கட்டளைகள் எழுத நினைத்தால் என்ன சொல்வீர்கள் ?

பாரா சொல்லி என்ன ஆச்சு பார்த்தீங்களா. கேள்வினா அதுல எடக்கு மடக்கா ஒண்ணு கேட்கனமுன்னு என்ன சட்டம் ?

சுவடுகள் – விகடன்.காம்

ஒன்றுமறியா இருளாம் உள்ளம் படைத்தஎனக்கு

என்று கதிவருவது? எந்தாய் பராபரமே!

~ தாயுமானவர்

இது மட்டும் (நன்றி : தினமணி)



ஜூனியர் வி.: திரையுலகத்தினர் நடத்திய விழா மேடையில், ‘வீரப்பன் பற்றி எனக்கு நன்கு தெரியும்’ என்றும் சொல்லியிருக்கிறார். வீரப்பன் ஒரு பயங்கரமான குற்றவாளி, நூற்றுக்கணக்கான கொலைகளைச் செய்தவன். சந்தன மரம், யானைத் தந்தங்களைக் கடத்தியவன். அந்தக் குற்றவாளி பற்றி தனக்குத் தெரிந்தும் அரசுக்குத் தெரிவிக்காமல் மறைத்ததுகூட மிகப் பெரிய குற்றம்தான். அப்படி தெரிந்துவைத்திருந்தால், அவனைப் பிடித்துக் கொடுத்திருக்க வேண்டும். இந்த விஷயங்களை மறைத்ததற்காக அந்த நடிகரை தண்டிக்கலாம். முன்பு என் தலைவர் கலைஞர், அந்த நடிகரை பெருந்தன்மையாக மன்னித்துவிட்டார்” என்றார் சரத்.



நெடுங்குருதி‘ குறித்து எஸ். ராமகிருஷ்ணன்:

‘‘ஒவ்வொரு ஊருக்கும் ஒரு நாக்கு இருக்கிறது போலும். அது தன்னோடு வாழ்ந்தவர்களை ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின்பாக ஏதோ காரணம் காட்டி வெளியேற்றி விடுகிறது. அவர்களும் எங்கோ தொலைவில் ஊரை மறந்து வாழத் துவங்கியதும் சட்டென அவர்கள் மீது விருப்பம் கொண்டது போல ஊர் திரும்பவும் தன் நாவால் அவர்களைத் தன்னிடம் இழுத்துக்கொள்கிறது. ஒவ்வொரு மனிதனும் தன் உணவில், பேச்சில், செய்கைகளில், நினைவுகளில் தன் ஊரைக் கொண்டிருக்கிறான்.

ஒரு கொய்யாப்பழத்தைச் சாப்பிடும்போது அது விளைந்த மண்ணின், நீரின் ருசியையும் சேர்த்துதான் சாப்பிடுகிறோம். ஆனால், அதை தனித்து அறிவதில்லை. எனில் ஒரு ஊர் அங்கிருக்கும் காய்களில், கனிகளில், வீடுகளில், கனவுகளில் தன் ருசியை உருவாக்கிவிடுகிறது என்பது உண்மைதானே.

ஒரு மச்சத்தைப் போல பிறந்தது முதல் என்னோடு ஒட்டியிருக்கிறது எனது கிராமம். என் பால்யத்தைப் போலவே ஊரின் பால்யமும் வேதனையும், ரகசியமான சந்தோஷங்களும் நிரம்பியது. ‘ஆரோக்ய நிகேதனம்’, ‘நீலகண்டப் பறவையைத் தேடி’ போன்ற சிறந்த இந்திய நாவல்கள் எழுப்பிய கனவைப் போல இந்த நாவலும் ஒரு சிதறடிக்கப்பட்ட கனவைக் கொண்டிருக்கிறது.”



ஏன்? எதற்கு? எப்படி?

  • ‘மனக்கவலையினால் தலையில் நரை விழும்’ என்கிறார்களே… கவலைக்கும் தலைமுடிக்கும் ஏன் முடிச்சு போடுகிறார்கள்?

    ஆரோக்கியம், வம்சம், சூழ்நிலை மூன்றும்தான் நரைப்பதற்குக் காரணம். முடியின் கால்களில் மெலனின் என்னும் சமாசாரம் சப்ளை தீர்ந்துவிடுவதால் நரை வரு கிறது. தலைமுடி சாதாரணமாக இரண்டிலிருந்து நான்கு வருஷம் வளர்கிறது. அதன்பின் இரண்டு, மூன்று மாசம் சும்மாயிருந்துவிட்டு உதிர்கிறது. புது கேசம் வளர்கிறது. இப்படித் தினம் ஐம்பதிலிருந்து நூறு முடிகளை நாம் இழக்கிறோம். பொதுவாக நரைமுடியைக் கறுப்பு மறைத்திருக்கும். ஒரு அதிர்ச்சி தரும் சம்பவம் நிகழும்போது, சிலருக்கு ‘டெலோஜென் எஃப்லுவியம்’ (Telogen Effluvium) என்னும் விளைவினால் சட்டென்று ஒரு நாளைக்கு முந்நூறு முடி கொட்டிவிட, மறைந்திருந்த நரைமுடிகள் எல்லாம் பொசுக்கென்று தெரிய ஆரம்பித்துவிடும்.

  • நான் அரேபிய நாடுகளில் பல வருடங்களாக வேலை செய்திருக்கிறேன். அங்கு குதிரைகளைப் பார்த்ததில்லை. ஆனால், வாட்டசாட்டமான பெண்களை வர்ணிக்கும்போது ‘அரேபிய குதிரை மாதிரி’ என்கிறார்களே… அப்படி என்ன அங்கலட்சணம்?

    வாட்டசாட்டமான பெண்களை வர்ணிக்கின்ற ஒரு ஒப்பீடு இது. காவடிச் சிந்து பாட்டில் ‘மகரத்துவஜன் கோயில் கம்பம்’ என்கிறதும் இதேதான். இம்மாதிரி ஓவர்சைஸ் பெண்களை ‘அமேஸான்கள்’ என்றும் சொல்கிறார்கள்.



    பதில் தெரியுமா

  • அது இரண்டு கார்கள் மட்டுமே கலந்து கொள்ளும் பந்தயம். ஒன்று ரஷ்ய கார். இன்னொன்று அமெரிக்க கார். பந்தயத்தில் அமெரிக்க கார் வெற்றி பெற்றது. இந்த நிகழ்ச்சியைச் செய்தியாக வெளியிட்ட ரஷ்யப் பத்திரிகைகள் நாட்டுப்பற்றின் காரணமாக ரஷ்ய கார் தோற்றுப் போனதையும் அமெரிக்க கார் முதலில் வந்ததையும் குறிப்பிடவில்லை. அதே சமயம் அவர்கள் வெளியிட்டிருந்த செய்தியில் பொய்யான தகவலும் இடம் பெறவில்லை. எப்படி?
  • இரண்டே வார்த்தைகள்தான் என்றாலும் இதில் ஏராளமான ‘லெட்டர்ஸ்’ உண்டு..! அது எது?
  • ஒரு மனிதன் திடமான தரைப்பரப்பில் நின்று கொண்டு ஆறடி உயரத்தில் இருந்து ஒரு தக்காளியைக் கீழே போட்டான். ஆனால், அது உடையவோ, நசுங்கவோ இல்லை. அது சாதாரண தக்காளிதான். அந்த மனிதன் அதை வேகமாக ஆறடி உயரம் கீழே போடத்தான் செய்தான். பிறகெப்படி அது உடையவில்லை?



    விநாடி வினாவிலாவது கேட்பார்களா?

  • லோக் சபையின் இருக்கைகளும் தரை விரிப்புகளும் பச்சை நிறத்தில் இருக்கும்.
  • ஞாயிற்றுக்கிழமையில் தொடங்கி அதே கிழமையில் முடிந்த ஆண்டு 1978. நானூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை, அதாவது 2379-ம் ஆண்டுதான் மீண்டும் இப்படி வரும்!
  • 14-ம் நூற்றாண்டில் இங்கிலாந்தை ஆண்ட மூன்றாம் எட்வர்ட் ஆட்சியில் ஒருவர் ஒரு நாளில் இரு வேளைக்கு மேல் உணவு உண்டால் அதைத் தண்டிக்கும் வகையில் சட்டம் இருந்தது.



    யோசிங்க

    1. ‘வினையே ஆடவர்க்கு உயிரே’ – இது குறுந்தொகை. ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ என்பது எது?

    2. ‘பெண்மை வாழ்கென்று கூத்திடுவோமடா’ என்று பாடியவர் பாரதியார். ‘புதியதோர் உலகு செய்வோம்’ என்று பாடியவர் யார்?

    3. ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா’ என்று பாடியவர் யார். ‘இப்படை தோற்கின் எப்படை வெல்லும்’ – பாடியவர்?

    4. ‘கல்வி கரையில: கற்பவர் நாள் சில’ என்றுரைக்கும் நூல் எது. ‘ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டா’ என்றுரைக்கும் நூல் எது?

    5. ‘அன்பே சிவம்’ என்று சொன்னவர் திருமூலர். ‘ஆருயிர்க்கெல்லாம் அன்பு செயல் வேண்டும்’ என்று பாடியவர் யார்?

    6. ‘உள்ளம் பெருங்கோயில்: ஊனுடம்பு ஆலயம்’ என்று பாடியவர் யார்?

    7. ‘கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்.. நாமக்கல் கவிஞரின் பாடல். ‘செய்யும் தொழிலே தெய்வம் & அதில் திறமைதான் நமது செல்வம்’ என்று பாடியவர்?

    8. ‘பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்’ & பாடியவர் பாரதியார். ‘மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா’ — பாடியவர் யார்?

    9. ‘நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்’ என்று பாடியவர் திருநாவுக்கரசர். ‘மனித சாதியில் துன்பம் யாவுமே மனதினால் வரும் நோயடா’ என்றவர் யார்?


  • கலைஞரின் பழைய ஆலிவர்ரோடு இல்லத்தில் குடியேறிவிட்டார் ராஜுசுந்தரம்!

  • விஜயகாந்தின் மகன் பிரபாகரன் பள்ளி நாடகத்தில் மேடையேறியிருக்கிறார் — ராமர் வேஷம்!

  • ‘குற்றப்பரம்பரை’ படம் ஆரம்பமாகிறது. பாரதிராஜா ஹீரோவாகிறார்!



    நாணயத்தின் மறுபக்கம்!

    ”நீதி, நேர்மை, நாணயம்னா என்னப்பா?” ”நேத்து நான் வேலை செய்யும் கடைக்கு ஒருவர் வந்து நூறு ரூபாய் கொடுத்து இருபது ரூபாய்க்கான பொருட்களை வாங்கிக் கொண்டு, மறதியாக மீதித் தொகையை வாங்காமலே போய்விட்டார். அந்த எண்பது ரூபாயை மறுநாள் அவர் கடைக்கு வந்தபோது நான் திருப்பித் தந்திருந்தால், அதுதான் நீதி! அப்படி இல்லாமல், அந்தத் தொகையைக் கடைக்கணக்கில் சேர்த்து, என் முதலாளிக்கு லாபம் சேர்த்திருந்தால் அதுதான் நேர்மை!”

    ”அப்போ… நாணயம்னா?”

    ”அந்தத் தொகையை அவருக்கும் திருப்பித் தராமல், கடைக் கணக்கிலும் சேர்க்காமல், பக்கத்தில் நின்று என்னோடு வேலை செய்துகொண்டிருந்த சக ஊழியருடன் சமமாகப் பகிர்ந்துகொண்டேன். அதற்குப் பெயர்தான் நாணயம்!”



    தேசியக் கட்சி ஒன்றின் தமிழகத் தலைவருக்கு ‘அமைதிப்படை சத்யராஜ்’ என்று அடைமொழி கொடுத்திருக்கிறார்கள் அக்கட்சியின் தொண்டர்கள். ”மூத்த தலைவர்களை நேரில் பார்க்கும்போது அப்படியரு பணிவு பவ்யம் காட்டுவார். அவங்க நகர்ந்ததும் அப்படியே கிண்டல் பண்ணுவார். பயங்கரமான ஆளுங்க” என்கிறார்கள்.



    அப்பா என்றால்.. : அப்பா என்ற வார்த்தைக்கான அர்த்தம்: தான் எந்த அளவுக்குப் புத்திசாலியாக இருக்க நினைத்தானோ அந்த அளவுக்குத் தனது பிள்ளைகள் புத்திசாலியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவன்.

  • சில பதில்கள் – என். சொக்கன்

    1. தங்களின் வலை அனுபவங்கள்

    வலையில் அப்பவும், இப்பவும் நான் ரொம்ப ரசிப்பது விவாத மன்றங்களைதான் – ஏனோ, மிகவும் வசதியான மின்னஞ்சல் ,அரட்டையைவிட, இவைதான் என்னை ரொம்பக் கவர்கின்றன. காரணம் சொல்லத் தெரியவில்லை.

    அப்படி நான் மிகவும் விரும்பும் / விரும்பிய தளங்கள் – தமிழ்த் திரையிசை விவாதங்களுக்கான டி.எஃப்.எம்.பேஜ் மற்றும் மன்றமையம் – இவற்றில் மன்றமையத்தில் நடைபெறும் விவாதங்களின் தரம் சமீபத்தில் குறைந்துவிட்டது எனக்கு ரொம்பவே வருத்தம். ஆனால் நல்லவேளையாக டிஎஃப்எம் பேஜ் அப்படி இல்லை – தமிழில் எந்தப் புதிய ஆல்பம் வெளிவந்தாலும், அதுபற்றிய விவாதங்களை அடுத்த சில மணி நேரங்களுக்குள் இங்கே படிக்கலாம் – தேர்ந்தெடுத்து வாங்கலாம் – இசை ஞானமுள்ள ரசிகர்களும், என்னைப்போல டண்டனக்கா பார்ட்டிகளும் ஒன்றாகக் கலந்து பழகும் தளம் என்பதால்தானோ என்னவோ, இங்கே எப்போதும் சுவாரஸ்யம் பொங்குகிறது !

    மற்றபடி, மெயிலுக்கு ரீடிஃப், இலக்கியத்துக்கு ராயர் க்ளப், அகத்தியர், சந்த வசந்தம், மரத்தடி, அப்புறம் வழக்கமான இலக்கியப் பத்திரிகைகள், கல்கி, விகடன், குமுதம், அப்பாலே, அவ்வப்போது தொட்டுக்கொள்ள தமிழ் சினிமாச் செய்திகள் – இவ்வளவுதான் என்னுடைய தினசரி வலை உலவல் ஃபார்முலா.

    2. வலைப்பதிவுகளில் மிகவும் விரும்பிப் படிக்கும் ப்ளாகுகள்

    நான் தொடர்ந்து படிக்கும் வலைப்பதிவுகள் என்று பார்த்தால், பாராவின் ‘மனத்துக்கண்’ (ஒரு சுவாரஸ்யமான மிடில் மேகஸின்போன்ற வலைப்பதிவு இது – ஆனா, இப்போ காணாமபோச்சே ஏன் ?), பத்ரியின் எண்ணங்கள் (பல சமயங்களில் 4 தடவை படித்துப் புரிந்துகொள்ளுமளவு கனமான விஷயங்களை, அக்கறையோடும், கவனத்தோடும் விளக்கிச் சொல்கிறார்), உங்களோட ஈதமிழ் (யாரோ இந்த வலைப்பதிவைக் ‘குமுதம்’ன்னு சொன்னாங்கதானே ? அது பாதி தப்பு ;), மீனாக்ஸின் மார்க்கெட்டிங் மற்றும் மேல்கைண்ட் வலைப்பதிவுகள் (இந்த ரெண்டு வலைப்பதிவுகளிலுமே, நல்ல விஷயங்களும், நகைச்சுவையும் கலந்து தருவது அருமையான கலவை !), அருணின் அகரதூரிகை (அழகான நடையில், சுவாரஸ்யமான விஷயங்களைத் தேர்ந்தெடுத்து எழுதுவதால் பிடிக்கும்.)

    இந்த வலைப்பதிவுகளோடு ஒப்பிட்டால், வெங்கடேஷ், எஸ். ராமகிருஷ்ணன், நாகூர் ரூமி ஆகியோர் அடிக்கடி எழுதுவதில்லை, என்றாலும், எழுதும்போது மிஸ் செய்துவிடாமல் படிப்பேன் !

    இவைதவிர, தமிழ் மணம் தளத்தில் உலவும்போது, அவ்வப்போது கண்ணில்படுகிற நல்ல கட்டுரைகளையெல்லாம் தவறாமல் வாசித்துவிடுவேன்.

    3. விரும்பிப் படித்த பதிவுகள்

    அப்படித் தவறவிட்டது சத்யராஜ்குமார், சித்ரன் ஆகியோரின் வலைப்பதிவுகளைதான். அப்புறம், மாலனின் சில வலைப்பூக்கள்.

    4. படிக்காவிட்டால், ஏன் தற்போது படிப்பதில்லை?

    இப்போது அவர்கள் அப்டேட் செய்வதே இல்லை (அப்படிதான் நினைக்கிறேன் !)

    5. எப்பொழுது, எப்படி, எதற்காக உங்களுக்கான வலைப்பதிவு அமைக்க விருப்பம்?

    எனக்கான வலைப்பதிவு இன்னும் இல்லையே என்று பல நண்பர்கள் கேட்டிருக்கிறார்கள் – கூடாது என்றில்லை, வலைப்பதிவுகளின் அதீத சுதந்திரம் எனக்கு ரொம்ப பயமாயிருக்கிறது.

    சாதாரணமாகவே, நான் பெரிய சோம்பேறி. என் கழுத்தில் ரெண்டு, மூன்று கத்திகளை வைத்து, லேசாக அழுத்தினால்தான் எழுத ஆரம்பிப்பேன். இல்லையென்றால், சோபாவில் சாய்ந்துகொண்டு டாம் அண்ட் ஜெர்ரி பார்ப்பதோ, அமர் சித்ரகதா புரட்டுவதோதான் என் விருப்பங்கள்.

    ஆகவே, வலைப் பதிவு என்று ஆரம்பித்துவிட்டு, அதில் எப்போதுவேண்டுமானாலும் எழுதலாம், மாதக்கணக்கில் எழுதாமலும் இருக்கலாம் என்கிற சுதந்திரமெல்லாம் எனக்கு ரொம்ப அதிகம். வாரம் ஒன்று அல்லது, வாரத்துக்கு நாலு அல்லது மாதத்துக்கு ஒன்று எழுதினால்தான் ஆச்சு என்று உறுதியான கெடு வைத்து மிரட்டினால்தான் எனக்குக் கை வளையும் (அல்லது தட்டும் !).

    நீங்கள் இந்த பதிலை ஏற்கமாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும், ‘வாரம் நாலு என்று வைத்துக்கொண்டு எழுதேன், யார் உன்னைத் தடுக்கிறார்கள் ?’, என்றுதான் பதில் கேள்வி கேட்பீர்கள்.

    ஆனால், நான் முன்பே சொன்னதுபோல், எனக்கு அப்படிப்பட்ட self-management குணமெல்லாம் சுத்தமாகக் கிடையாது. யாரேனும் விடாமல் நச்சரித்துக்கொண்டே இருந்தால்தான் எழுதுவேன்.

    இதெல்லாம் சும்மா சாக்கு, உண்மையான உண்மையைச் சொல்வதானால், எனக்கு வேகமாக எழுதிப் பழக்கமே இல்லை. சிறிய கட்டுரைக்குக்கூட ஒரு வாரத்துக்குமேல் எடுத்துக்கொள்வேன். அப்படி நேரமெடுத்து எழுதுவதற்குள், நான் எழுத நினைத்த விஷயம் பழசு கண்ணா பழசு என்றாகிவிடும் !

    இப்போதைக்கு, எனக்கு வேகமாக எழுதத் தெரிந்த ஒரே விஷயம் – சிறுகதைகளும், வாழ்க்கை வரலாறுகளும்தான். அதையெல்லாம் வலைப்பதிவில் யாரும் படிப்பார்கள் என்று எனக்கு நம்பிக்கை இல்லை !

    இவ்வளவும் சொன்னபின், ஒரு கடைசி விஷயம் – நானும் ஒரு வலைப்பதிவு தொடங்கியிருக்கிறேன் – சொ. மணியன் என்ற பெயரில், வெண்பாவில் உலக நடப்பைச் சொல்வதற்காக ஒரு வலைப்பதிவு அது. ஆனால், நான் களமிறங்கிய ஒன்றிரண்டு நாள்களுக்குள், கிருஷ்ண சைதன்யா என்பவர் என்னைவிட அபாரமாக, இதேவிதமான வெண்பாக்களை எழுதிக் குவித்துவிட்டார். அவருடைய வேகத்துக்குமுன் நம்மால் ஆகாது என்று ஜகா வாங்கிவிட்டேன் 🙂

    6. (பாரா சொன்னது போல்) புதிதாக ஒன்பதே ஒன்பது கட்டளைகள் எழுத நினைத்தால் என்ன சொல்வீர்கள்?

    ஏன் ஸ்வாமி ? நான் ஏதோ நன்றாக இருப்பது பிடிக்கவில்லையா ? 🙂