Category Archives: Uncategorized

Novel Navel

இயக்குநர்களுக்கு ஐடியா பஞ்சம். நாபிக்கமலத்தில் முட்டை தோசை, பம்பரம், விட்டபிறகு புதிய காட்சியமைப்புகளுக்காக சில யோசனைகள்.

  1. ஆண்களின் பார்வை அதிகமாக செல்லும் இடமாக தொப்புள் அமைகிறது. கண்களையும் முகத்தையும் பயோமெட்ரிக் சோதனை செய்யும் கருவிகளை தொப்புளில் அமைத்திருக்குமாறு காட்சி அமைக்கலாம். ‘புதிய முகம்’ மாதிரி செட்டப்பையும் கெட்டப்பையும் மாற்றிக் கொண்ட வில்லன் அல்லது ஹீரோ என்றால் சத்யராஜ், தொப்புளை பார்த்துவிட, உண்மையான அடையாளம் வெளிப்பட்டு விடும்.

    சாதனங்களைப் பொருத்தும்போது மற்றும் நாயகன் நோக்கும்போது என்று எக்ஸ்ட்ரீம் க்ளோசப்கள் வைக்கும் வாய்ப்பு நிறைய இருக்கிறது.

  2. ஆப்பிளின் ஐ-பாட் கொடுக்கும் — முன்பு, பின்பு செல்லும் பொத்தான்களையும் சுழற்றல் விசைகளையும் நாயகியிடம் பொருத்தலாம். ரகசியமாய் பேச்சை பதிவு செய்வதற்கும், கவர்ச்சி நடனம் ஆடும்போது பின்னணி ஒலிக்கவும் பயன்படும்.
  3. ஒரு ‘நாவெல்’-இன் கதை. கதாநாயகியின் தொப்புள் அவலட்சணமாய் இருப்பதால், அதற்கு அறுவை சிகிச்சை செய்ய நாயகன் எண்ணுகிறான். ப்ளாஸ்டிக் சர்ஜெரிக்காக பணம் சேர்ப்பதற்கு கஷ்டப்படுவதை பார்த்து வருந்தும் ஹீரோயின், ஹீரோவின் தொப்புளையும் சிதைத்து அவளை மாதிரியே செய்து விடுகிறாள்.
  4. மனசாட்சி பேசுவது போல் தொப்புளுடன் தனிமையில் பேசும் பழக்கம் உடையவள் ஆகிறாள் நாயகி. ‘பிப்ரவர் 14’ படத்தில் பரத்துடன் உரையாடுவது போல் தன்னுடைய அந்தரங்கத் தோழியாக பாவித்து ஆலோசனைகள் பெறுபவளாக தொப்புளை படம் நெடுக பேசவைக்கலாம்.
  5. பதினைந்து நிமிடத்துக்கு ஒரு முறை தொப்புளை மூட மறந்து விடுவாள். இந்த வியாதிக்கு பெயர் ‘ஷார்ட் டேர்ம் சாரி லாஸ்’. இதை மூடுவதற்கென்று, மிடி, மினி ஸ்கர்ட், தாவணி, டேங்க்ஸ், டாப்ஸ் என்று விதவிதமாய் எடுத்த தொப்புள் புகைப்படங்களுடன் சுற்றுகிறாள். இந்த நிழற்படங்களை எடுத்தவனை கண்டுபிடிப்பதுதான் கதை.
  6. ரயிலில் ஒரு கொலை நிகழ்கிறது. அதைப் பார்த்த நேரடி சாட்சி ஒருத்தி, கொலையை செய்தவள் ஒரு பெண்மணி என்றும், அவளின் தொப்புளில் கடிகாரம் கட்டியிருப்பதாகவும், எங்கு பார்த்தாலும் தொப்புளை அடையாளம் காட்டக்கூடுமாக சொல்கிறாள். படம் நெடுக கொலைகளும், தொப்புள்களுமாக சஸ்பென்ஸ் த்ரில்லர் வகையறாவில் கொண்டு செல்லலாம்.

| |

இந்து என். ராம்

தனது 22-வது வயதில் அமெரிக்கக் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இதழியல் படித்து பட்டமும் தங்கப்பதக்கமும் பெற்றவர். பத்மபூஷண் விருதும், பி.டி. கோயங்கா விருதும் இதழியல் துறைகளுக்காகப் பெற்றவர். கம்பம் பள்ளத்தாக்கில் ஆய்வு செய்ய வந்த சூசன் என்ற அமெரிக்கப் பெண்ணை மணந்து கொண்டு சென்னையில் வாழ்கிறார். இவர்களுக்கு வித்யா என்ற பெண் இருக்கிறார். கீழ்க்காணும் அனைத்து கருத்துக்களும் என்.ராமின் சுபமங்களா நேர்காணலில் பகிர்ந்தவை. அவை என்னுடைய புரிதல் அல்ல. தொடர்புடைய கேள்விகளின் முழு பதிலையும் தேர்ந்தெடுத்து தட்டச்சு(ப்பிழைகளுடன்) இட்டது மட்டும் என்னுடையது.

மக்கள் உணர்வில் ஒரு பாதிப்பு ஏற்படுத்துவது என்பது எளிமையான காரியம் இல்லை. ஒரு பத்திரிகை மக்களிடம் எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது பற்றி அதீதமாகவோ, குறைவாகவோ மதிப்பிடக் கூடாது. நாம் எழுதுவதை வைத்துக் கொண்டு ‘அது மக்களிடம் செல்வாக்குப் பெற்றிருக்கிறது’ என நாம் உரிமை கொண்டாட முடியாது. ஆனால் இந்த பத்திரிகை விஷயங்களிலிருந்து வேறு பல அமைப்புகள் இந்த விஷயங்களை எடுத்துக் கொண்டு மக்களிடம் செல்கின்றன. அது உடனடியாக இல்லாவிட்டாலும் நாள் சென்று பலனைக் கொடுகும். ஆனால், எழுதும் விஷயத்தில் நம்பகத்தன்மை என்பது நிச்சயம் இருக்க வேண்டும்.

தனி ஈழம் கோரிக்கையை நான் முற்றிலுமாக ஆதரிக்கவிலை. தமிழர்களுக்கு சிங்கள் ஆட்சியால் கொடுமைகள் எல்லாம் நடந்தன என்பது உண்மைதான். ஆனால், இவைகளெல்லாம் தனி ஈழம் கோரிக்கையை நியாயப்படுத்தாது. இப்போது நடந்த போராட்டங்களுக்குப் பிறகு ஸ்ரீலங்கா அரசும் பல உண்மைகளைப் புரிந்து கொண்டிருக்கிறது. ஆகவே ஸ்ரீலங்காவின் ஒரு பகுதியாகத்தான் ஈழத்தமிழர்கள் வாழவேண்டும்.

இஸ்ரேல் என்ற ஒரு நாடு வலுக்கட்டாயமாக ஸ்தாபிக்கப்பட்டு பாலஸ்தீனியர்கள் தங்கள் தாயகத்தை இழந்தனர். அவர்கள் சரித்திரத்தால் ஏமாற்றப்பட்டவர்கள். இஸ்ரேல் அவர்கள் பூமியை கவர்ந்து கொண்டதோடு பாலஸ்தீனர்களைக் கொடுமைப்படுத்தினார்கள். ஆனால் ஈழம் அப்படியல்ல. இங்கு ஜார்கண்டு, உல்ஃபா போன்றவர்கள் தனிநாடு கேட்பதை ஒத்தது அது. அதோடு மட்டுமல்ல எல்.டி.டி.இ. இயக்கம் ஒரு பயங்கர இயக்கமாக மாறிவிட்டது. அமிர்தலிங்கம், பத்மனாபா, யோகேஸ்வரன், சபாரத்தினம், ராஜீவ்காந்தி போன்றவர்களை கொன்று குவித்தார்கள். கம்போடிய பால்போட் இயக்கம் போலவும் பெருவிலுள்ள ஷைனிங்பாத் போலவும் அவர்கள் இருக்கிறார்கள். ஜனநாயக முறைகளுக்கு விரோதமான அரைப்பாசிச அணுகுமுறையைக் கைக்கொள்கிறார்கள்.

ஸ்ரீலங்கா அரசை பேச்சுவார்த்தைக்கு கொண்டுவர ஒரு நிர்பந்தம் ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்பைடையில் இவர்களுக்கு பண உதவி செய்வது, ஆயுதப் பயிற்சி அளிப்பது போன்ற தவற்களை நாமும் செய்தோம் என்பதை மறந்துவிடக் கூடாது.

இனக்குழு என்று கூறுவது ‘ethnic’ என்ற வார்த்தையின் தமிழ் வடிவம் என்றே நினைக்கிறேன் இனக்குழு என்பது ஒரு தந்திரமான வார்த்தையாக இருக்கிறது. அது ஒரு ஆதிவாசிக் குழுவாக இருக்கலாம் – ஒரே மொழி பேசும் குழுவாக இருக்கலாம். காலிஸ்தான் கோரிக்கையாளர்களைப் போல அடிப்படை மதவாதக் குழுக்களாக இருக்கலாம். இனக்குழுத்தன்மை (ethnicity) என்பது ஒரு குழப்பமான கருத்து. கூர்க்காலாண்ட் ethnic அடிப்படையில் கோரப்படுகிறது. ஆனால் சிக்கிமில் 75 சதம் நேபாளியர்கள் இருக்கிறார்கள். இவர்கள் இந்த கோரிக்கையை ஆதரிக்கவில்லை. காஷ்மீர் ஒரு இனமா, லடாக் ஒரு இனமா, ஜம்மு ஒரு இனமா – இது ஒரு hold all மாதிரி. இதற்குள் எதையும் அடக்கலாம். ஒன்று மட்டும் உறுதி. நாம் மிகப்பெரிய பாரம்பரியமிக்க மக்கள். ஒரு புதிய தேசியத்தை உருவாக்க முயன்று கொண்டிருக்கிறோம் என்பது மட்டும் உறுதி.

நன்றி: சுபமங்களா நேர்காணல்கள் – கோமல் சாமிநாதன் & இளையபாரதி; நர்மதா பதிப்பகம்


அரசியல் ரத்னா

Image hosted by Photobucket.com‘தி ஹிந்து’வின் ஆசிரியர் என் ராமிற்கு ஸ்ரீலங்கா ரத்னா விருது கிடைத்திருக்கிறது. பாரத ரத்னாவைப் போல் இலங்கையின் உச்சவிருது.

இந்தியாவில் பிறக்காதவர்களாக 1980-இல் மதர் தெரஸாவிற்கும், 1990-இல் நெல்சன் மண்டேலாவிற்கும் பாரத ரத்னா கிடைத்திருக்கிறது. அரசியல்வாதிகள் மட்டுமில்லாமல், சிவி ராமனுக்கு 1954-இலேயே கௌரவித்திருக்கிறார்கள். அமர்த்யா சென், லதா மங்கேஷ்கர், எம்.எஸ் சுப்புலஷ்மி என்று பல துறைகள். எல்லை காந்தி பெற்றிருக்கிறார். சாகித்ய அகாதெமி பெற்ற பிவி கானேயும் உண்டு. மாநில முதல்வர் ம.கோ.ராவும் இருக்கிறார்.

ஆண்டுவாரியாக ‘இலங்கை ரத்னா’ பெற்றவர்கள் விவரம் கூகிளில் அகப்படவில்லை. லெக்ஸிஸ்-நெக்ஸிஸில் கிடைக்கலாம். சுவாரசியமான, அதே சமயம் சரளமான நடையில் உலகத்தை பதினாறு column, பதினாறு பக்கங்களில் அடக்கியவர். பத்மபூஷண் விருது பெற்றவர். இந்தியன் எக்ஸ்பிரசுக்கு மட்டுமே உரித்தான் ஊழல் வெளிச்சங்களை, போஃபர்ஸ் அமபலம் மூலம் ஹிந்துவுக்கும் கொண்டு வந்தவர்.

வலைப்பதிவுகளை படிக்காத அந்தக்காலமாக இருந்திருந்தால் மகிழ்ச்சியாகத்தான் இருந்திருக்கும். தன் கொள்கைகளுக்கு மாற்றான கருத்துக்களை வெளியிட்டவர்களின் குரல்வளை நசுக்கப்பட்டபோது குரல் கொடுத்தவர்.

இந்தியாவில், குறிப்பாக தமிழக அரசால் ஒடுக்கப்படும் பத்திரிகையாளர்களுக்கு ஆதரவாக குரலெழுப்பி வந்திருக்கிறார். 1987-இல் பி.எச். பாண்டியன் சபாநாயகராக இருந்தபோது, ஆனந்த விகடனில் கருத்துப்படம் வெளிட்டதற்காக எஸ் பாலசுப்ரமணியன் கைதானபோது ஆதரவு திரட்டினார். 1992-இல் இல்லுஸ்டிரேடட் வீக்லியின் சுனில் உட்பட முரசொலி செல்வம், கோவை மாலை முரசு ஆகியோரை சேடப்பட்டி முத்தையாவின் சேஷ்டையான பிடிவாரண்ட் கொண்டு கைது செய்தபோது செயல்பட்டார். ‘நக்கீரன்’ கோபால், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதற்காக ‘வைகோ’ போன்ற முரண்பட்ட எண்ணங்களை கொண்டவர்களின் கருத்து சுதந்திரத்துக்காகவும் தொடர்ச்சியாக எழுதி, பேசி, செயல்பட்டு வந்திருக்கிறார்.

இலங்கை சம்பந்தமான செய்திகளிலும், விடுதலைப்புலிகளை வில்லனாக்குவதிலும் என் ராம் முன்னிலை வகிக்கிறார் என்பது பரவலான குற்றச்சாட்டு. இருந்தாலும், ஹிந்து ராம் இது போன்ற விருதுகளுக்குத் தகுதியானவர்.

லோவல் சன், பாஸ்டன் ஹெரால்ட் என்று பாரம்பரிய சார்புநிலை. குடியரசு கட்சிக்கு சார்பாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் போன்ற சில தினசரிகள். நியு யார்க் டைம்ஸ், சிகாகோ ட்ரிப்யூன் என்று ஊருக்கு ஒரு பத்திரிகை நடுநிலைமை, சுதந்திர கட்சி, ஆதரவாக எழுதுகிறார்கள். குருட்டாம்போக்கில் அமெரிக்காவில் நாளிதழ்களின் போக்கை, அணுகுமுறையை கணித்துவிடலாம்.

இந்தியாவில் இந்த முறை எவ்வாறு வேலை செய்கிறது என்று விளங்கவில்லை. அதிகாரத்துக்கும் பதவியில் இருப்போர்களையும் இந்தியன் எக்ஸ்பிரஸ் எப்போதுமே எதிர்க்கிறது. டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு பேஜ் 3 போதுமானதாக இருக்கிறது. மந்தமான வானிலை கொண்ட பெங்களூர் போலவே மப்போடு டெக்கான் ஹெரால்ட் அமைதியாக காட்சியளிக்கிறது. குஷ்வந்த் சிங்கின் ஹிந்துஸ்தான் டைம்ஸ், சென்னையையும் ஆட்கொண்ட டெக்கான் க்ரானிகிள், அறிவுஜீவிகள் நாடும் டெலிகிராஃப்.

எல்லாருமே பாகிஸ்தானை கண்டிப்பார்கள். அமெரிக்காவின் சட்டாம்பிள்ளையை சுட்டுவார்கள். புள்ளிவிவரங்கள் நிறைத்து தலையங்கங்கள் எழுதுவார்கள். இலச்சினையை நீக்கிவிட்டால் எந்த பத்திரிகையின் ஒபீனியன் என்பது கண்டுபிடிப்பது எனக்கு பிரம்மப்பிரயத்தனமாக இருக்கும்.

தி இந்து | மதி | தங்கமணி | அலைஞனின் அலைகள்: குவியம | பிகே சிவகுமார் | ரவி ஸ்ரீனிவாஸ் | படிப்பகம்


| | | |

உபலம்பம்

புதிய தமிழ் வலைப்பதிவுகள் திரட்டி முத்தமிழ் மன்றத்தில் கிடைத்தது. தமிழ்மணத்துடன் ஆறு வித்தியாசங்கள் போடலாம் என்று கீ-கலப்பையை முடுக்கினால், பெரியதாக ஆங்கில திரட்டி, கொட்டிகளுடன் ஒப்பிடுவதற்கு

வசதி முத்தமிழ் மன்றம் தமிழ்மணம்

என்று டேபிள் போட்டு குந்திக்கொண்டு விசைத்தறிக்கு கோட்டு சூட்டு மாட்டி ஃப்ரீயா கொடுத்த பசுமாட்டு பாலை தலை பத்து விமர்சிப்பாயா என்று பயமுறுத்தியது.

எனவே…. பால் வாங்கும் பயம் தெளியும் வரை ஆலோசனைகள் கொடுக்காமல், சில சுட்டிகள் மட்டும்:

  1. sunsuna.com – Indian Blogs Unveiled …: இந்தியப்பதிவுகளுக்கு இன்னொரு எளிமையான திரட்டி.
  2. Indibloggies 2005: பட்டியலுக்கான தமிழ் வலைப்பதிவுகளை தேர்ந்தெடுத்து தர வருவீர்களா?
  3. Kamat Weblogs: The Blog Portal: ஆங்கில வலைபதிவுகளுக்கான வாசல்
  4. IndiBloggers – Index of Indian Bloggers: இந்தியர்களால் ஆங்கிலத்தில் எழுதப்படும் அனைத்து வலைப்பதிவுகளும் வசிப்பிடம் வாரியாக இங்கே கிடைக்கிறது.

குறிப்பு: உபலம்பம் – perception, recognition.


| |

The President is conferring the `Sri Lanka Ratna’ …

The President is conferring the `Sri Lanka Ratna’ on N. Ram, Editor-in-Chief of The Hindu , in Colombo on Monday.
 Posted by Picasa

பி.ஏ.கே வுடன் சந்திப்பு

Interview with PAK:

PA Krishnan Meet

  • நான் பார்த்த வேலையின் அனுபவங்களைக் கொண்டே புத்தகங்கள் எழுதலாம். உங்களுக்கு அவை படிக்க சுவாரசியமாக இருந்தால் நான் என் வாழ்நாளில் எஞ்சியுள்ள நாட்களில் பெரும்பாலவற்றை சிறையில் கழிக்க வாய்ப்பு நிறைய உள்ளது.
  • படிக்கப் படிக்க, படிக்க வேண்டியவை இன்னும் பல என்ற உணர்வைத் தரக் கூடியது அந்த மொழி. ஆங்கிலத்தில் சொற்களும் மிக மிக அதிகம்.
  • தில்லிக்கும் இலக்கியத்திற்கும் இடையே உள்ள தூரம் ஜார்ஜ் புஷ்ஷுக்கும் ஷேக்ஸ்பியருக்கும் உள்ள தூரத்தை விட சிறிது அதிகம்.
  • என்னுடைய மனைவி அதன் ஆங்கிலப் பிரதியைப் படித்து விட்டு என்னிடம் சிறிது காலம் பேசாமலே இருந்தார்.
  • புரட்சி என்பது இன்று ஒரு நகைப்புக்குரிய சொல்லாக மாறி விட்டதற்கு நாமும், புரட்சியாளர்களும் காரணம்.
  • Outlook பத்திரிகை தன் பத்தாண்டு நிறைவையொட்டி ஒரு இதழ் வெளியிட்டிருக்கிறது. அதில் P. Sainath என்பவர் எழுதியிருப்பதைப் படித்துப் பாருங்கள்.
  • பாஸ்டனில் ஒரு பழைய புத்தகக் கடையின் அருகே – அதை நுகர்ந்த போது தாய்நாட்டிற்கே திரும்பி விட்டது போல இருந்தது.
  • தமிழில் வந்த சிறந்த ஒரு நாவலின் மொழிபெயர்ப்பிற்கு நான் மதிப்புரை எழுதிய போது அது Raphaelன் Cartoonகளை ஒத்திருக்கின்றது என்று குறிப்பிட்டேன். லண்டன் விக்டோரியா ஆல்பர்ட் அருங்காட்சியகத்தில் இருக்கும் இந்தப் படைப்புகள் மகத்தான படைப்புகள். ஆனால் முழுமை பெறாத படைப்புகள்.

    முழு எண்ணங்களையும் தமிழோவியம் தீபாவளி மலரில் படிக்கலாம்.


    | |

  • Actress Saloni from Oka Oorilo  

    Actress Saloni from Oka Oorilo
     Posted by Picasa

    கூகிள்ராஜாவுக்கு புள்ளிவிவரம் வருதா

    ஸ்டாட்கவுண்டர் போன்ற எண்ணற்ற சிறு நிறுவனங்கள் புள்ளிவிவரங்களைக் கொடுத்து வந்தது.

    யார் வந்தார்கள், எதற்காக இந்த வலையகம் தேடலில் கிடைத்தது, எப்படி வரவழைக்கப்பட்டார்கள், எந்த ஊர், என்ன ஐ.பி. முகவரி, எப்பொழுது என்றெல்லாவற்றையும் கொடுத்தார்கள்.

    அவர்களின் நிலை::

    ஐய்யா கூகிள் அனலிடிக்ஸ் வந்தாச்சு::

    12 மணி நேரம் காத்திரு என்கிறார்கள். ஹ்ம்ம்ம்ம்…. பார்ப்போம்::

  • Google Analytics கூகிளின் ஆட்சென்ஸ் விளம்பரசேவையுடன் இணைந்து பயன்படும்.
  • எல்லா வலையகங்களிலும் பயன்படுத்தலாம். ஆட்சென்ஸ் வைத்திருக்கவேண்டிய கட்டாயம் இல்லை.
  • நம்மிடம் கூகிள் விளம்பரசேவை இல்லாவிட்டாலும், ‘அனாலிடிக்ஸை‘ நிறுவுவதன் மூலம், நம்முடைய வலையகத்தின் பழக்கவழக்கங்களை, கூகிளுக்கு வழங்கி விடுவோம்.
  • மாதந்தோறும் உங்கள் வலையகத்துக்கு வருகை புரிபவர்களின் எண்ணிக்கை ஐந்து மில்லியனைத் தாண்டினால் ‘அனாலிடிக்ஸ்’ உபயோகிக்கக் கூடாது.
  • ஒரு மில்லியனுக்கு மேல் வருமானம் ஈட்டும் இரண்டரை லட்சத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களில் 17 சதவீதம் மட்டுமே ஏதாவதொரு ‘புள்ளிவிவர’ நிரலியை பயன்படுத்துகிறார்கள். மீதமுள்ள இரண்டு லட்சத்து சொச்ச ஸ்தாபனங்களை குறிவைத்து அனாலிடிக்ஸ் களமிறங்கியுள்ளது.
  • $460 மில்லியன் வருமானம் புரளும் தொழிலில் WebSideStory, WebTrends, Omniture போன்றவர்கள் முன்னோடிகளாக இருக்கிறார்கள்.
  • இலவசமாக தருவதற்காக ‘அர்ச்சின்’ (Urchin) நிறுவனத்தை முப்பது மில்லியனுக்கு கூகிள் வாங்கியது.

    தகவல்: Google Blogoscoped | Google to offer its clients free trail of clicked-on ads – Technology – International Herald Tribune


    | |

  • புத்


    Tamiloviam :: புத்தம் சரணம் கச்சாமி – தமிழோவியத்தில் நான் அவ்வப்போது எழுதிவரும் புத்தரைக் குறித்த தொடரின் அடுத்த பகுதி வெளிவந்துள்ளது.

    இன்ஷா புத்தா…

    இனிமேலாவது சிரத்தையாக எழுதி முடிக்க இறைவர்களும், குறிப்புகளும், புத்தகங்களும், இணைய வசதியும், கணினியும் அருளவேண்டும்.


    |

    கடவுளெனும் முதலாளி

    கடவுளெனும் முதலாளி
    கண்டெடுத்த விவசாயி
    அமிதாப்
    அமிதாபு

    பாடல் இங்கே

    என்ன திராட்சை இல்லை இந்த ஹைதராபாத்தில்
    ஏன் தொழிலை மாற்ற வேண்டும் பத்திரத்தில்

    ஒழுங்காய் பாடுபடு பாலிவுட்டில்
    உயரும் உன் மதிப்பு ஸ்விஸ் பாங்கில்

    Padam Ingey

    செய்தி இங்கே: பாவனா அணைக்கட்டு அருகே இருபது ஏக்கர் நிலத்தை அமிதாப் பச்சன் (பச்சான்?) வாங்கியிருந்தார். ஐந்தாண்டுகளுக்கு முன்பு மவல் நிலப்பத்திரங்களைப் பதியும்போது, தன்னை நடிகன்/தயாரிப்பாளன்/ஏபிசிஎல் நிறுவனர் என்று குறிப்பிடாமல் டில்லியருகே உள்ள ஜான்பூரில் வசிக்கும் விவசாயி என்று அறிவித்துள்ளார்.

    1963 விளைநில சட்டப்படி, குடியானவர்கள் மட்டுமே விளைநிலங்களை வாங்கிப் போடமுடியும்.

    நன்றி: படம் உதவி


    | |