ரஷிய பஸ் ஸ்டாப். பேப்பரை விரித்தபடி நிற்கும் ஒருவரிடம் பவ்வியமாக மற்றவர் கேட்கிறார்.
‘சார் நீங்க கேஜிபியா?’
‘இல்லை’ என்கிறார் திருவாளர் பேப்பர்.
“உங்க வீட்டம்மா கேஜிபியா” இது பவ்வியம்.
“இல்லை” என்கிறார் திருவாளர் பேப்பர் கொஞ்சம் சிடுசிடுவுடன்
“அப்ப உங்க பக்கத்து வீட்டுல யாராச்சும்…”
“இல்லைய்யா”
“உங்க உற்றார் உறவினர் …”
“இல்லைய்யா இல்லை”
இப்போது திருவாளர் பவ்யம் சீறுகிறார், “பிறகு ஏன்யா எருமை மாடாட்டம் என் காலை மிதிச்சுட்டு நிக்கிறே காலை எடுடா தடிமுண்டம்”










