Category Archives: Politics

Amalraj vs Aravind – Closeup Ad

தமிழ்ப்பதிவு என்றாலே பொடி வைக்காமல் எழுதலாமா? பட்டிமன்ற கேள்வி அல்ல.

விடை: எழுதலாம். உதாரணம்: கீழே

‘தெருவிளக்கில் படித்து ஜட்ஜானார் இன்னார்’ என்று இடித்தே வளர்க்கப்பட்டவன் நான். அந்த மாதிரி படிக்க முடியாமல், வீட்டுக்குள்ளேயே நடுநிசி எண்ணெய்யை (மிட்நைட் ஆயில்) செல்வழித்து வந்தவன்.

இன்று, ‘விளம்பரங்கள் எவ்வளவு புத்திசாலித்தனமாக இருக்கும்… தெரியுமா?’ என்று வளர்க்கிறேன் நான். அவளோ, DVR-இல் எல்லாம் ஓடியேப் போவதால் மூன்று பாட்டு ஒலியும்-ஒளியுமுக்கு முப்பது நிமிட விளம்பரம் பார்க்காமல் வளர்கிறாள்.

அப்படி தவறவிட்டிருக்க வாய்ப்பு இருந்தும், என் மகளைக் கவர்ந்த விளம்பரம் என்று தடுத்தாட் கொண்டாள். நான் தூர்தர்சன் பார்த்த காலங்களில் எனக்கும் (வேறு காரணங்களுக்காக) ரசனையான க்ளோசப் விளம்பரம்.

முதலில் வருகிறார். அமல்ராஜ்.

பௌலிங் வெளிச்சம். ஆர்கானிக் விக்கோ வஜ்ரதந்தி பயன்படுத்துபவர் போல. வாயை மூடிக்கொண்டு கெக்கே பிக்கே சிரிக்கிறார். பெண்கள் முகஞ்சுளிக்கிறார்கள். புன்சிரிப்பு விநோத சப்தம் எழுப்புகிறது.

அடுத்தவர் அர்விந்த்.

ஸ்னூக்கர் அரையிருட்டு. க்ளோசப் மந்தகாசப் புன்னகை. மாருதம் பொழிய கடோத்கஜ இடிச் சிரிப்பு.  Drop Waist-களும் Halter-களும் Faux Wrap-களும் களை கட்ட தொற்றிக் கொள்ளும் பற்கள்.

பிரச்சினை என்ன?

அசமஞ்சம் பெயர் ஏன் கிறித்துவ மதத்தை சேர்ந்த அமல்ராஜ் என்று வைக்கப்பட்டிருக்கிறது?

ஆர்பாட்டத்தின் பெயர் ஏன் ஹிந்துவான அர்விந்த் என்று நாமகரணமிடப்பட்டது?

தேர்ந்தெடுக்க…

  1. ஊடக வன்முறை
  2. மதவெறி
  3. பில்லியர்ட்ஸ் என்னும் பணத்திமிரின் வெளிப்பாடு
  4. புடவை, சூரிதார் என்னும் பண்டைய கலாச்சாரத்தை வெறுக்கும் மனப்பான்மை

ஒரு ஜோக்:

Corporate America

The game of choice for unemployed people or maintenance level workers is basketball.

The game of choice for frontline workers is football.

The game of choice for middle management is tennis.

The game of choice for CEOs and executives is golf.

Conclusion: The higher up on the corporate ladder you are, the smaller your balls are.

News Stories of Interest

கருத்தைக் கவர்ந்த செய்திகள்:

  1. பதவிக்கு ஏற்ற நடத்தை இல்லை: கலாம் மீது தாக்கரே மீண்டும் தாக்கு

    குடியரசுத் தலைவர் ஆவதற்கு அவருக்கு நாங்களும்தான் வாக்களித்தோம். ஆனால் குடியரசுத் தலைவர் ஆன பிறகு அவரது நடத்தை அந்தப் பதவிக்கு ஏற்றபடி இருக்கிறதா? இல்லை என்பதுதான் பதில்.

  2. புகைப்படத்தில் விஷமம்: சோனியாவுக்கு களங்கம் ஏற்படுத்த அற்பமான சதி?

    சோனியாவின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக எடுத்தார்களே! அந்தப் படத் துணுக்காக இருக்கப் போகிறது?

  3. அன்புமணி-எய்ம்ஸ் மோதல் உச்சகட்டம்: அதிகாரிக்கு அலுவலகத்துக்குள் நுழைய அனுமதி மறுப்பு

    ‘மிஸ்… என்னை அடிச்சுட்டான் மிஸ்’ என்னும் சச்சரவுகளையே டீச்சர் விலக்கி விட்டுக் கொண்டிருந்தால், எப்பொழுது அனைத்து மக்களுக்கும் உடல்நலன் என்னும் ‘பாடம்’ எல்லாம் கவனிக்க முடியும்?

  4. 6,000 திரைப்படங்களை காணும் வசதியுடன் ஜீ.வி. பிலிம்ஸின் புதிய இணையதளம்

    படத்தைக் காண ஆகும் தொகை ரூ.45.

  5. உள்ளாட்சித் தேர்தலில் முதன்முறையாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம்: தேர்தல் ஆணையர்

    சோதனை அடிப்படையில் 25 சதவீத இடங்களில் மிண்ணணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

    மற்ற 75 விழுக்காடு இடங்களில் வழமை போல் ஆட்சியைப் பிடிக்கலாம் என்று நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார் தலைவர்.

  6. ஆகஸ்டு மாதம் ஜோதிகாவுக்கு குழந்தை பிறக்கும்

    செப்டம்பரில் கல்யாணம் நடந்தது. வேகமான தயாரிப்பு.

  7. பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை: தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்

    மாற்றி மாற்றி அறிக்கை, போராட்டம் அரங்கேறுகிறது. சொற் சிலம்பம் முடியும்போது, அணை கட்டி திறப்பு விழாவுக்கு மத்திய பா.ம.க., வைகோவும் உள்ளூர் ஆளுங்கட்சியும் செல்லலாம்.

  8. கேரளாவில் பரபரப்பு: புத்தரைப் போன்ற ஏசு கிறிஸ்து சிலை

    ஜெபக்கூடத்தில் ஏசு தனது 12 சீடர்களுக்கு அளிக்கும் கடைசி விருந்தானது நமது இந்திய கலாசராப்படி நடப்பது போல ஓவியம் வரையப்பட்டுள்ளது. அதில் 12 சீடர்களும் ஏசுவின் முன்பு தரையில் அமர்ந்து வாழை இலையில் சாப்பிடுவது போல வரைந்துள்ளனர்.

    “ஜெகத் ஜோதி மந்திர்” என்று பெயரிடப்பட்டுள்ள அந்த ஜெபக்கூட்டத்தில் “ஆம் ஏசு கிறிஸ்துவே நமஹா” என்று கொட்டை எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளது. ஏசு சிலை முன்பு 2 பெரிய குத்து விளக்கு வைக்கப்பட்டுள்ளது.

  9. வட இந்தியர்கள் பற்றிய ஹேமமாலினியின் கருத்துக்கு பலத்த கண்டனம்

    “மும்பையில் வட இந்தியர்கள் நடத்தப்படும் விதம், திருப்தியளிக்கும் வகையில் இல்லை என்பது குறித்த உங்கள் கருத்து என்ன” என்று கேள்வி கேட்கப்பட்டது.

    இதற்கு ஹேமமாலினி “அவர்களுக்குப் பிரச்சினை என்றால் தங்களுடைய சொந்த ஊருக்குத் திரும்பிப் போகட்டும்” என பதிலளித்திருந்தார்.

இது சாத்தியமா?

இன்னமும் 40 நாட்களில் தெரிந்துவிடும் தமிழகத்தினை யார் ஆளப்போகிறார்கள் என்பது. அ.தி.மு.க கூட்டணியின் பக்கம் தற்போதைக்கு நிலை ஆதரவாக இருக்கிறது என்பது குமுதம் சர்வேயில் தெரிகிறது. ஆனாலும், சொல்லமுடியாது. நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தப் போது, தி.மு.க தலைமையின் மீது தனக்கிருக்கும் அதிருப்தியினை தெரிவித்தார், ஆனாலும், ரஜினி போல, இன்னொரு முறை பிரச்சனைகள் இல்லாமல் ஜெயலலிதா ஆட்சிக்கு வருவது தமிழகத்தின் எதிர்காலத்திற்கான ஒட்டுமொத்த ஆப்பு என்ற கருத்தினையும் முன்வைத்தார். எது எப்படியோ, ஏதோ ஒரு கூட்டணி வரப்போகிறது. ஆனால், முக்கியமாக அந்த கூட்டணி தமிழகத்தினை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லுமா என்பதை இப்போது சொல்லமுடியாது.

தமிழக அரசியலில் தி.மு.க, அ.தி.மு.க கூட்டணிகளுக்கு மாற்றாக ஒரு மூன்றாம் கூட்டணி ஏற்படுத்த எடுத்த முயற்சிகளும் வீணாய்போயின. ஆக இருப்பதில் ஏதோ ஒரு கூட்டணி தான் வரப்போகிறது. ஆனால், இந்த முறை எந்த கூட்டணி வந்தாலும் அவர்களை பொதுமக்களாகிய நாம் எப்படி தட்டிக் கேட்கப் போகிறோம்.

இன்றளவும் ஒரு குடிமகனாய், என்னுடைய தொகுதி கவுன்சிலருக்கான கடமைகள் என்ன, என்னென்ன கேள்விகளை நான் கவுன்சிலரை எதிர்த்து கேட்க முடியும், என்னுடைய தொகுதிக்கு என்ன திட்டங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன, அவற்றுக்கான ஆதாரபூர்வமான கணக்குகளை பரிசோதிக்க முடியுமா, என்னுடைய தொகுதிக்கான விஷயங்களை தமிழக அரசின் இணையதளத்தில் பார்க்க முடியுமா என்று நிறைய கேள்விகள் எழுகின்றன. Accountability இல்லாமல் இருப்பதால் தான் அரசியல்வாதிகளால் ஊழல்கள் செய்யமுடிகிறது. இனியொருமுறை இம்மாதிரி நிகழாமல் இருக்க என்ன செய்ய வேண்டும். மணிரத்னம் படங்கள் போல இண்டர்வேலுக்கு மேல் நான் மந்திரியாகவோ, எம்.எல்.ஏ.வாகவோ முடியாது. இந்திய சனநாயக தேர்தல் முறைகளில் நம்பிக்கைகள் இருக்கிறதா என்று கேட்காதீர்கள். எனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்புகளில் எது சிறந்ததோ அதை கையிலெடுத்துக் கொண்டு எனக்கான, மக்களுக்கான வசதிகளையும், கேள்விகளையும் கேட்டு பெற்றுத்தர என்ன செய்ய முடியும் என்று தான் யோசிக்கிறேன்.

தகவல் அறியும் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது என்று நினைக்கிறேன் [?!] எந்த விதமான தகவல்கள என்னுடைய தொகுதி பற்றிய, உறுப்பினர்கள் பற்றிய, எம்.எல்.ஏ, கவுன்சிலர், எம்.பி பற்றிய, திட்டங்கள், அரசு ஒதுக்கீடுகள் பற்றிய விவரங்கள் கிடைக்கும் ? இதில் இவை அடங்குமா? ஒரு வாக்காளனை ஒரு கட்சிக்கு ஒட்டுப் போடச் சொல்வது பிரச்சாரம். ஆனால், அவனுக்கும் போதிய அரசியல் அறிவினை கொடுத்தால் கையில் காசு வாங்கிக் கொண்டு, குடம்,சொம்பு, 500 ரூபாய் லட்டு மோதிரம் வாங்கினாலும், நாளைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரை கேள்விக் கேட்க ஏதுவாக இருக்கும். இனியும், இந்திய அரசியல் சட்டம் சரியில்லை என்று சொல்லிக் கொண்டிருப்பதை விட, சட்டத்தின் ஒட்டைகளை, மக்களின் அறியாமையினை முதலீடாகக் கொண்டு வாழ்ந்துக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளை அவர்களின் வழியிலேயே போய் சட்டத்தினை தெரிந்து கொண்டு கேள்வி கேட்டு சட்டத்தின் முன் நிறுத்துவது தான் ஒரே வழி.

1. உங்கள் தொகுதியில் நிற்கும் வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் என்னென்ன ?
2. உங்களுக்கு தெரிந்து அவர்களின் சொத்து மதிப்பு அவ்வளவுதானா. அப்படியில்லையென்றால், ஆதாரங்களுடன், தேர்தல் கமிஷனரிடத்தில் இதை கொண்டு செல்ல இயலுமா?
3. வட்டம், தொகுதி, மாவட்டம் என்ற வரையறையில் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு அரசால் ஒதுக்கப்பட்ட திட்டத்தின் நகலோ, திட்டத்தினை நிறைவேற்றுபவர்களின் [கவுன்சிலர், கமிஷ்னர், கலெக்டர், காண்ட்ராக்டர்கள் ] பற்றிய தகவல்கள் பொதுவாக தமிழக அரசு இணணயதளத்தில் இருக்குமா?
4. அவ்வாறு இருப்பின், திட்ட மதிப்பீடுகளையும், திட்டகாலம், தொடக்கம், முடிவு, பணி நேரங்கள் பற்றிய விவரங்களை பொதுவாக அறிவிக்க முடியுமா? தொகுதியின் வரவு,செலவு நிதியாதரங்களைக் கொண்டு பாலன்ஸ் ஷீட் தாக்கல் செய்ய நிர்பந்திக்க முடியுமா?
5. எந்த விஷயங்களை ஒரு எம்.எல்.ஏவிடம் நேரடியாக கேட்க முடியும்? எவற்றினை அரசு அலுவலகங்களில் கேட்டு பெற முடியும்? [ஆட்டோ வீட்டுக்கு வராமல்]
6. சட்ட மன்ற தொடர் இல்லாத காலகட்டங்களில் ஒரு எம்.எல்.ஏவின் பணியென்ன?
7. சட்ட மன்றத்தில் ஒரு தொகுதியின் எம்.எல்.ஏ என்ன கேள்விகள் கேட்டார், அதற்கு அவர் பெற்ற பதில்கள் பற்றிய விவரங்கள் இணையத்திலோ, பத்திரிக்கைகளிலோ கிடைக்குமா?
8. ஒரு பப்ளிக் லிமிடெட் கம்பெனியே ஆறுமாததிற்கோ, ஒரு வருடத்திற்கோ ஒரு முறை unaudited financial report செய்யும்போது மக்கள் நலனை முன்னிறுத்தும் அரசு ஏன் வெறுமனே பட்ஜெட் வரவு செலவுகளோடு நிறுத்திவிடுகிறார்கள் ? பொதுமக்களின் பார்வைக்கு ஏன் அரசின் வருடாந்திர/காலாண்டு திட்ட நிதி வரவு/செலவு விஷயங்களை வைக்கக்கூடாது?
9. இவற்றினை சட்டரீதியாக கொண்டு வரமுடியுமா? அப்படியில்லையெனில் இவற்றில் பெரும்பாலானவற்றினை பொதுமக்களுக்கு எடுத்து செல்ல என்ன செய்ய வேண்டும் ?

அழுகிற பிள்ளைக்கு தான் பால் கிடைக்கும். கேள்வி கேட்காமல் நியாயங்கள் கிடைக்காது. அச்சமின்றி கேள்வி கேட்கவும், அதற்கு ஒரு உறுப்பினரை பதில் சொல்ல வைக்கவும் சட்டம் தெரிய வேண்டும். ஒரு சாதாரண குடிமகனுக்கு அவனுடைய உரிமைகள், கடமைகள் பற்றிய விஷயங்கள் தெரியாமல், தமிழ்நாட்டிலோ, இந்தியாவிலோ “புரட்சி” வெடிக்காது. ஆக, வெறுமனே பதிவுகளில் ஜல்லியடிக்காமல், தமிழ்நாட்டின் ஒரு ஏழை வாக்காளனுக்கு நான் என்ன செய்யப் போகிறோம், நம் “அறிவுஜீவித்தனங்களையும், புத்திசாலி கணக்குகளையும்” வைத்துக் கொண்டு ?

இங்கே பதியும் நண்பர்களில் வழக்குரைஞர்கள், சட்டமறிந்தவர்கள் இருப்பின் நான் ஏன் தமிழகம் முழுவது கட்சி சார்பில்லாமல், ஒரு குடிமகனின் உரிமைகளை எடுத்துரைக்ககூடாது. நாளைய தமிழகத்தின் வாழ்வும்,தாழ்வும் நம்மிடத்திலும் இன்னமும் 41/2 கோடி மக்களிடத்திலும் இருக்கிறது. இதை மாற்ற என்ன செய்யப் போகிறோம்?