Category Archives: Movies

Good Old Crispy Movie Reviews – Kumudam

பி இராஜேந்திரன்
புதிய பார்வை – மார்ச் 16-31, 2007
எம்.ஜி.ஆர். நடித்த ‘மாடப்புறா‘ படத்தை ‘நொந்து பொயிருக்கிறோம்; ஒன்றும் கேட்காதீர்கள்!‘ என்று இரண்டே வரிகளில் விமர்சனம் செய்திருந்தது குமுதம்.

எஸ்.எஸ்.ஆர். நடித்த ‘அவன் பித்தனா‘ படத்திற்கு ‘ஆம்‘ என்று இரண்டேயெழுத்தில் விமர்சனம் வெளியிட்டிருந்தது.

Provoked – A caricature of good and evil

PROVOKED: Kiranjit Ahluwalia’s true story reduced to a crude cartoon.

Last week I complained that Stephanie Daley was a little obtuse about the issues involved in its subject, teen infanticide. This film demonstrates how the opposite can be worse. In 1989, a Punjab immigrant, Kiranjit Ahluwalia (a stunning Aishwarya Rai), set fire to her husband (Naveen Andrews) after years of abuse. The man died, Ahluwalia went to jail for murder, and the case became a cause célèbre that eventually led to an appeal, her early release, and the passing of an enlightened law regarding the prosecution of abuse victims. Very inspiring, but when reduced to a crude cartoon all it provokes is annoyance. Telling the story through clumsy flashbacks that culminate in a montage of “greatest hits” leading up to the torching, director Jag Mundhra reduces the tragedy to caricatures of good and evil. Rai offers a single expression of wide-eyed, non-comprehending terror, and nothing in her performance or the film shines any light into the heroine’s resistance or her redemption.

By PETER KEOUGH

May 17, 2007 5:42:23 PM

Boston Phoenix

Vethala Ulagam – 1 Minute Review

வேதாள உலகம்

  • 1948-இல் வந்த படம். ஏ.வி. மெய்யப்ப செட்டியாரின் இயக்கம். பத்மினி நாட்டியம் ஆடி அறிமுகமான முதல் தமிழ் படம்.
  • ‘உன்னாலே உன்னாலே’வில் நாயகன் பிற மாந்தருடன் சல்லாபிப்பதை, நாயகி ஒட்டுக் கேட்பது போல் காட்சியமைப்பு; இதில் அன்னையின் இறைவேண்டுதலை நாயகன் ஒட்டுக் கேட்டுவிடுகிறார்.
  • ‘இம்சை அரசன் புலிகேசி’ போல் அணுகுண்டு, அராஜக அரசு என்னும் சமகால நிகழ்வுகளைப் பொருத்தமாக நுழைத்திருக்கிறார்கள்.
  • நாயகி கனவு கண்டால் கூட தானே டூயட்டில் நுழையாமல் ‘குமாரி கமலா’ ஆடுகிறார்
  • ‘ராசாக்குட்டி’ என்று கிண்டலாக அழைப்பது இந்தப் படத்தில்தான் துவங்கியதா என்று தெரியவில்லை
  • அம்சமான திரைக்கதை. பில்லா எல்லாம் தூசி தட்டுவதற்கு பதில், இந்த மாதிரி ‘க்ளீன் எண்டெர்டெயினர்’ மறுபதிப்பாக்கலாம்.
  • எளிமையான் நகைச்சுவை. தற்கால ‘கனிமொழி’ அரசியல் கூட காமாலைக் கண்ணர்களுக்குத் தட்டுபடலாம் 🙂

Shrek – III

குழந்தையோடு போனாலும் களிக்கலாம்.
இல்லையென்றாலும் நல்லாத்தான் இருக்கிறது.

ஷ்ரெக்-25 வரை எடுக்கும் ஐடியா இருக்கிறதாம்…
இதே மாதிரி மூன்றாண்டுக்கொன்றாக வந்தால் ஒரு சகாப்தமே வாழ்ந்து கடந்திருக்கும்.

‘Sivaji – The Boss’ Punch Dialogues

சிவாஜி பன்ச் டயலாக் என்று கிசுகிசுப்பவை

1. நல்லவன்னு சொல்ற அளவுக்கு நான் ரொம்ப கெட்டவனும் இல்ல..
ரொம்பக் கெட்டவன்னு சொல்றதுக்கு நான் ரொம்ப நல்லவனும் இல்ல!

2. தோக்கோஜி… நான்தான் சிவாஜி

3. நான் பார்க்கதான் சாஃப்ட்வேர்
எறங்குனா மவனே ஹார்ட்வேர்

4. நான் நெனச்சா அது நடந்த மாதிரி
நான் நடந்தா அது ஜெயிச்ச மாதிரி!

5. நான் 1 செண்டிமீட்டர் தூரத்துக்கு நல்லவன்!
ஏன்னா… 20 கிலோமீட்டர் நீளத்துல கெட்டவன்!!

6. உனக்கு ஆண்டவன் வெக்கறாண்டா டேட்டு;
அன்னிக்கு சிவாஜி வெக்கறான் பார் வேட்டு!

7. நான் நல்லவனுக்கு சாமி!
நயவஞ்சகனுக்கு சுனாமி!

8. விட்டுக்கொடுத்தவன் என்னைக்கும் கெட்டதில்ல…
கெட்டவன் என்னிக்கும் விட்டுக்கொடுத்ததில்லை

9. சொல்லி அடிக்கிறவன் வீரன்
சொல்லாம அடிக்கிறவன் கோழை
நான் சொல்லவும் மாட்டேன்; அடிக்கவும் மாட்டேன்!
ஆனா… கொன்னுடுவேன்.

10. நல்லவனுக்கு நான் தருமன்;
கெட்டவனுக்கு நான் எமதர்மண்டா!

Three people murdered; 15 Lakhs to shutup; A feast to celebrate

‘ஜெண்டில்மேன்’ படம். மருத்துவம் பயில விரும்பும் மாணவன் அர்ஜுனின் லஞ்சப்பணத்துக்காக சத்துணவுக் கூடத்தில் பணிபுரியும் அவனுடைய அம்மா மனோரமா ‘வேலை செய்யும் இடத்தில்’ தீவிபத்தில் இறக்கிறார். அந்தப் பணத்தை கல்வித்துறை அமைச்சர் (திரைப்படத்தில் பின்னாள் முதலமைச்சர்) தூக்கியெறிந்துவிட்டு பேசுவதாக வரும் வசனம்:

‘முண்டச்சி… அங்கே செத்துப் போனா ரெண்டு லட்சம்தான் கிடைக்கும். கட்சிக்காக தீக்குளிச்சா பத்தோ பதினஞ்சோ தருவோமே… நீ சாவறியா?’

செய்தி:

பலியான மூவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 15 லட்சம் நிதியுஉதவி: கலாநிதி மாறன்

Hug, Kiss, Love, Lust, Sex – Appropriateness in Public places

சிபா

—அப்ப திரையரங்கில் கானும் சினிமாவில் ஓகேவா?—

எனக்கும் இந்தக் கேள்வி உண்டு. பெரும்பாலும் அமெரிக்க சூழலை கருத்தில் கொண்டு சில சிதறல்கள்:

1. அரங்கில் பிஜி-13, ஆர் என்று முத்திரை இட்டு, அந்தரங்கமான பாலுறவுக் காட்சிகள், வன்சொல் உபயோகம், அதீத வன்முறை என்று அடைப்புக்குறிக்குள், எதனால் இப்படி சான்றிதழ் வழங்கினோம் என்பதையும் சொல்லிவிட்டு, காசு கொடுத்து வரவைக்கிறார்கள்.
பேருந்தில், அங்காடியில், விளையாட்டரங்கில் ‘இந்த இடத்தில் வசவுகள் சொல்லலாம்; இங்கு இச்சையை இஷ்டப்படி தணித்துக் கொள்ளலாம்!’ என்று அதிகாரபூர்வமாக அறிவிப்பதில்லை.

2. கட்டிப்பிடிப்பதிலேயே பல வகை இருக்கிறதே… மீண்டும் அமெரிக்க சினிமா தர வரிசைப்படி strong sex sequence, sexual references, brief sexual images, pervasive strong crude and sexual content, graphic nudity என்று பலவகை. இதில் எல்லா விஷயமும் பொதுவில் செய்வது சரியா? எங்கு லகான் போடலாம்? எப்படி லிமிட் வைக்கலாம்?

காட்டாக திரைப்படம் என்றால் குரு-வையும் தென்றல்: வேட்டையாடு விளையாடுவையும் எவ்வாறு ஒப்பிட முடியும்?

3. —அச்சம் கலந்த வெட்க உணர்வினால் கூட அநாகரிகம் என சொல்கிறார்கள் —

கடற்கரையில் நீச்சலுடையில் உலா வந்தால் அழகு. விளையாட்டுகளில் ஊக்குவிப்பு என்னும் பேரில் cheerleading அழகு?! மோதிரம் மாற்றிபின் முத்தமிடுதல் அழகு. ஆதுரத்துடன் ஆரத் தழுவுதலும் அழகு. விரசத்துடன் தொடர்ச்சியான புணர்ச்சிகளில் இறங்கினால் ஒவ்வொருவருக்கும் அளவுகோல் மாறும். பிறரின் ‘ரேட்டிங்’ என்னுடைய எல்லையை மீறும்போதுதான் பிரச்சினை.

தொடர்புடைய இரண்டு திரைக்காட்சிகள்…

அ) ‘விடுகதை‘ திரைப்படத்தின் இறுதிக்காட்சி. மெரீனாவில் வயதான ஆணும் இளமையான பெண்ணும் சிரித்துப் பேசி வருவதைப் பார்த்து பிரகாஷ்ராஜ் சினமுறுவார். உளவியல் அலசலாக ஆராயும் ருத்ரன் ‘அவர்கள் ஏன் அண்ணன், தங்கச்சியாக இருக்கக் கூடாது? ஏன் பேராசிரியர், மாணவியாகவோ பிற உறவுகளாகவோ இருந்திருக்கக் கூடாது’ என்று கேட்பார்.

ஆ) ‘மௌனம் பேசியதே‘ படத்தில் சூர்யாவின் குணச்சித்திரத்தை உணர்த்தும் காட்சி. புதுமணத் தம்பதியர் தோளில் கை போட்டுக் கொண்டு சுகமாகப் பேசி நடை பழகுகிறார்கள். பைக்கில் வரும் நாயகன், அவர்களைத் தடுத்தாட்கொண்டு, ‘அவ என்ன ஓடிப் போயிடுவாளா? ஏண்டா இறுக்கிப் பிடிச்சுண்டு இருக்கே’ என்று கிண்டலடித்து பிரித்து விடுவார்.

அன்னியோன்யம் எவ்வாறு நாளடைவில் தேய்கிறது என்பதையும் இந்தக் காட்சி உணர்த்தலாம் 😉

வயதான காலத்தில் மனைவியை, அவளின் சின்னச் சின்ன செய்கைகளை, ஆடை அலங்காரத்தில் செய்யும் மாற்றங்களை, பகிர்தலுடன் வீட்டின் கடமைகளை எவ்வாறு ஆசை அறுபது நாளாக நின்று போகாமல் தொடர்ச்சியாக மோகம் காட்டுகிறான்?

‘பொது இடத்தில் கணவன் மனைவி கட்டிப் பிடிப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’

எப்படி கட்டுகிறார், எங்கே பிடிக்கிறார், எவ்வளவு வயது என்று பதில் கேள்வி எத்தனை பேர் கேட்டார்களோ!

Tamil Movies – Income & Expenses: Budget Calculations

நன்றி: இந்தியா டுடே

பருத்தி வீரன்
செலவு: ரூ. 6.5 கோடி
வசூல்: ரூ. 10 கோடி

மொழி
செலவு: ரூ. 3.5 கோடி
வசூல்: ரூ. 4 கோடி

பச்சைக்கிளி முத்துச்சரம்
செலவு: ரூ. 5-6 கோடி
வசூல்: ரூ. 6 கோடி

வெயில்
செலவு: ரூ. 2.5 கோடி
வசூல்: ரூ. 4 கோடி

குப்பி
செலவு: ரூ. 1.4 கோடி
வசூல்: ரூ. 1.1 கோடி

Periyar Movie – Rajni Quote: Banner Ad

Rajni_fans_discussions_Udhyam_Periyar Banner_Quote.JPG

பெரியார் வாழ்ந்த காலத்தில் நான் இல்லையே!: ரஜினி ஏக்கம்

“பெரியார் வாழ்ந்த காலத்தில் நான் இல்லாமல் போய்விட்டேனே’ என்று “பெரியார்’ திரைப்படத் தைப் பார்த்த நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

அண்மையில் ரஜினிகாந்துக்காக “பெரியார்’ படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்து வியந்த ரஜினிகாந்த், படத்தைப் பாராட்டி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு வியாழக்கிழமை கடிதம் எழுதியிருந்தார். அதன் விவரம்:

“பெரியார்’ படம் பார்த்து பிரமிப்பு அடைந்தேன். பெரியாருடைய கொள்கைகளை அறிந்திருக்கிறேன். ஆனால் அவருடைய வாழ்க்கை வரலாறு எனக்கு அவ்வளவாகத் தெரியாது. இந்தப் படத்தின் மூலம் அவருடைய வாழ்க்கை வரலாற்றை அறிந்த பிறகு பெரியார் மேல் எனக்கு இருந்த மதிப்பும், மரியாதையும் ஆயிரம் மடங்கு அதிகரித்துள்ளது. சமூக நலனுக்காகப் போராடிய காலங்களில் அவருடன் நாம் இல்லையே என்ற ஏக்கம் படம் பார்க்கும்போது ஏற்பட்டது. இருந்தாலும் அவருடன் நெருங்கிப் பழகிய முதல்வர் கருணாநிதி, கி.வீரமணி ஆகியோரோடு எனக்கு பழகுகின்ற வாய்ப்பு கிடைத்ததற்கு மகிழ்ச்சியடைகிறேன். இந்தத் திரைப்படம் உருவாவதற்கு உறுதுணையாக இருந்த தமிழக அரசுக்கும், பெரியாராகவே வாழ்ந்து காட்டிய நடிகர் சத்யராஜுக்கும், அருமையாக இயக்கிய ஞானராஜசேகரனுக்கும் என் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Pistha – Movie Titles

தமிழில் பிற படங்களில் பார்த்தது இல்லை. ஆங்கிலத்திலும் கண்டது கிடையாது.

‘பிஸ்தா’ படத்துவக்கத்தில் வரும் பெயர் பட்டியலில், அனைவரின் படங்களும் இடம்பெற்றது. வாகன ஓட்டியின் பெயர், கூடவே அவரின் படம்; பின்னணி பேசியவரின் பெயர்கள், புகைப்படங்கள்…

நல்ல விஷயம்.

நக்மா, மௌலி, கார்த்திக்கைத் தெரியும். ஜெயகீதாவையும் அறிய வைக்கும் நிகழ்வு.