Category Archives: Kalachuvadu

Madurai West bypoll Calculations & an old op-ed by Kalachuvadu

2006

முந்தைய வேட்பாளருடனான வித்தியாசம்

வாக்களித்தோர் சதவிகிதம்


மொத்த வாக்காளர்கள்

1,85,269

பதிவான வாக்குகள்

1,31,030

வாக்கு சதவிகிதம்

70.72%

.தி.மு..

57,208

43.66 %

காங்கிரஸ்

53,741

3,467

41.01 %

தே.மு.தி..

14,527

39,214

11.09 %

பா...

1,851

2007

கடந்த தேர்தலில் இருந்து வாக்கு மாற்றம்

மொத்த வாக்காளர்கள்

1,56,180

-29,089

பதிவான வாக்குகள்

1,17 895

-13,135

வாக்கு சதவிகிதம்

75.49%

↑ 4.77 %


காங்கிரஸ்

60,933

51.68 %

7,192

(↑ 13.38 %)

.தி.மு..

29,818

31,115

25.29 %

-27,390

(↓ 47.88 %)

தே.மு.தி..

21,272

8,546

18.04 %

6,745

( 46.43 %)

பா...

1,308

 

 

 

 

 

 

முந்தைய தலையங்கம்: எது பெரிய ஆபத்து? (காலச்சுவடு)

காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி இடைத் தேர்தல் முடிவுகள் இயல்புக்கு மாறான முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளன. இடைத் தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றிபெறுவது புதியதல்ல. அதிலும் ஜெயலலிதாவுக்கு இது புதிதல்ல. 12 அமைச்சர்கள், 60 எம்.எல்.ஏ.க்கள், கோடிக்கணக்கில் பணம் ஆகிய ‘யதார்த்தங்க’ளைக் கவனத்தில் கொண்டால் இவ்வெற்றி வியப்பளிக்காது. தி.மு.க. அணியும் சளைக்காமல் (மத்திய) அமைச்சர்களை, எம்.எல்.ஏ.க்களைக் களமிறக்கியிருந்தது. பண விஷயத்திலும் ‘குறை’ இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக ஏழு கட்சிக் கூட்டணி அது. இருந்தும் பெரிய வாக்கு வித்தியாசம் எப்படி ஏற்பட்டது என்பதுதான் பலரும் சுட்டிக்காட்டும் ‘புதிர்’.

 

2001 சட்டமன்றத் தேர்தலில் பெற்றதைவிட அதிக வாக்குகளை இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. பெற்றுள்ளது. 2004 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. அணி பெற்ற வாக்குகள் கணிசமாகக் குறைந்துள்ளன. இவற்றைச் சுட்டிக்காட்டும் அரசியல் நோக்கர்கள் வாக்காளர்களின் மனநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் விளைவாக இதைக் குறிப்பிடுகின்றனர். ஆனால் அவர்கள் இரு அம்சங்களைக் கவனத்தில் கொள்ளவில்லை.

 

ஒன்று: இந்த இரு தொகுதிகளிலும் வாக்காளர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம். காஞ்சிபுரத்தில் 2001 சட்டமன்றத் தேர்தல் – 2004 நாடாளுமன்றத் தேர்தல்களின் வாக்காளர் எண்ணிக்கைகளுக்கிடையே வெறும் 32 வாக்குகள் மட்டுமே வித்தியாசம். கும்மிடிப்பூண்டியிலோ 2004 தேர்தலின்போது வாக்காளர் எண்ணிக்கையில் 4854 பேர் குறைந்திருந்தனர். ஆனால் இவ்விரு தொகுதிகளிலும் இடைப்பட்ட இந்த ஓராண்டில் சுமார் 16 ஆயிரம் வாக்காளர்கள் கூடியுள்ளனர். இப்படி அதிகரித்த வாக்குகள் யாவும் அ.தி.மு.க.வுக்கே சென்றுள்ளன.

 

இரண்டாவது: வாக்களித்தோர் எண்ணிக்கையில் காணப்பட்ட அபரிமிதமான வேறுபாடு, காஞ்சிபுரத்தில் மட்டும் சுமார் 10 சதவீதம் அதிகரித்துள்ளது. அந்தத் தொகுதியில் பல வாக்குச் சாவடிகளில் 90 சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குப் பதிவு நடந்துள்ளது.

 

இடைத் தேர்தல் முடிவு வரவிருக்கும் பொதுத் தேர்தலின் அறிகுறி என உண்மையாகவே நம்பினால் அ.தி.மு.க.வை எவராலும் காப்பாற்ற முடியாது. தி.மு.க.வோ இப்போதாவது சுயபரிசீலனை செய்துகொள்வது நல்லது. தகுதிக்கு அதிகமாக மாறன் குடும்பத்துக்குத் தரப்படும் முக்கியத்துவம் கட்சியின் பிற தலைவர்களைப் பாதிக்கும் என்பதை கவனத்தில் கொள்வது நல்லது.

 

பொதுத் தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெற முடியாது எனச் சொல்பவர்கள் இடைத் தேர்தலில் செய்ததைப்போல் பண பலத்தையும் அதிகார பலத்தையும் அது பயன்படுத்த முடியாது என்பதைக் காரணமாகக் காட்டுகிறார்கள். ஆனால் இந்த முடிவுகள் அதைக்கூட அவர்கள் செய்யக்கூடியவர்கள்தான் என்ற அச்சத்தையே ஏற்படுத்துகின்றன. பணம் கொடுத்து வாக்குகளை வாங்குகிற அரசியல் கட்சிகளைவிடவும் பணம் கொடுத்தால் வாக்களிக்கிற வாக்காளர்களே மிகவும் ஆபத்தானவர்கள். இதை எப்படி எதிர்கொள்வது?