அரசின் கவனத்திற்கு
எண்பதுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் சேர்ந்து நிர்வாக சீர்திருத்தக் கமிஷனுக்கும் ஆறாவது சம்பளக் கமிஷனுக்கும் சில யோசனைகளை முன்வைக்கிறார்கள்.
1. அதிகாரிகள் சிறப்பாக செயல்பட
- மூத்த பதவிகளுக்கு வெளியிலிருந்து ஆளெடுக்க வேண்டும்
- குறிப்பிட்ட வேலைக்குத் தகுதியானவர்களையே நியமிக்க வேண்டும்
- பதவிக்காலத்தின் மத்தியில் மீண்டும் அந்தப் பதவிக்கு ஆள்கேட்டு விளம்பரம் செய்யவேண்டும். அதே பதவியிலிருப்பவரும் விண்ணப்பிக்கலாம்.
2. சிறப்பான செயல்பாட்டிற்கு
- பொதுப்பணம் சரியாக செலவழிக்கப்பட்டதா என அறிய கள அறிக்கைகளைப் பெற வேண்டும்.
- உள்ளாட்சி மன்றத் தலைவர்கள் மாவட்ட ஆட்சியர்களை நியமிக்க வேண்டும்
- தேர்ந்தெடுக்கப்பட்ட நகராட்சிப் பிரமுகர்கள் மேயர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
நன்றி: இந்தியா டுடே










