Category Archives: DMK

Quotable quotes – Observations on Tamil Nadu Politics (Author unknown)

ஒன்று கவனித்தீர்களா? தமிழ் நாட்டில் இவர்கள் எப்பொழுதும் ஏதாவது ஒரு விழா அல்லது ஏதாவது ஒரு பெருத்த கலவரத்தை எப்பொழுதும் நடத்திக் கொண்டே இருப்பார்கள். மக்கள் எதைப் பற்றி பேசுவார்கள்?

பொன் விழா, பிறந்த நாள் விழா, சங்கமம் விழா, தினகரன் எரிப்பு, தயாநிதி, கனிமொழி எம் பி ஆனது…

ஆக மொத்தத்தில் இவர்கள் செய்யும் ஆர்ப்பாட்டத்தில் உண்மையான பிரச்சினைகளும் ஆட்சியின் திறமையின்மையும் தந்திரமாகப் பின்னால் தள்ளப் பட்டு விடுகிறது. இது போன்ற விழாக்களையும் மக்களைத் திசை திருப்பும் நிகழ்ச்சிகளையும் இவர்கள் ஒரு ஸ்டிராடஜியாகவே செய்கிறார்கள். இப்பொழுது தி மு க முழு மூச்சாக டி வி நடத்தப் போகிறார்களாம், இவர்கள் என்றைக்கு அரசாங்கம் நடத்தப் போகிறார்கள் ?

அடுத்து மதுரை தேர்தல் அப்புறம் இன்னொரு விழா இப்படியாகவே தமிழ் நாட்டில் பொழுது கழிகிறது.

Kalainjar Karunanidhi’s DMK Govt achievements in one year – Official manifesto promises

kalainjar dmk govt achievements one year manifestokalainjar dmk govt achievements one year manifesto official release

Dinakaran survey – Feedbacks, Blog Posts: Maran vs Alagiri or Sun Network & DMK promotion?

dead_dinakaran_azhakiri_employees

dead_condolences+dianakaran_sun_tv_workers

maran_brothers_watching_dinakaran_victims_madurai

சற்றுமுன்…: ச: கருத்துக் கணிப்பு, தாக்குதல், கொலைகள் – விவாதம்

  • அதிமுக குறித்து கணிப்பு வெளியானவுடன் இப்படி எதுவும் நிகழவில்லை என்பதால் ‘கட்டுக்கோப்பான அதிமுக-வும் கருங்காலிக் கூடமான திமுக-வும்’ என்று ரைமிங்காக சொல்லலாமா 😛
  • ஜெயலலிதாவிற்குப் பிறகு அதிமுகவை தலைமை தாங்க கொடுத்துள்ள பட்டியலில் என் பெயரை விட்டுவிட்டார்கள்’ – மக்கள் டிவியில் விஜய்காந்த் வருத்தம்
  • ‘பாமக-வில் அடுத்த வாரிசு யார்’ என்று தினகரன் ஏன் சர்வே எடுக்கவில்லை? – ஜெயா டிவியில் முன்னாள் பா.ம.க. விஐபி பேராசிரியர் தீரன்
  • ‘சிவாஜி வெளியாகும் சமயத்தில் ‘அடுத்த வாரிசை’ நினைவூட்டுவது ரஜினியை தன் பக்கம் இழுக்கும் சூழ்ச்சியா!’ – விஜய் டிவியின் ‘நீயா நானா’ தலைப்பு

புகழ்பெற்ற நிறுவனத்தில் வேலை. சன் டிவியின் கம்ப்யூட்டர் பிரிவில் பணி. 30 வயது, 25 வயது. இந்த இருவரின் பெற்றோர் (மனைவி, குழந்தை உள்ளனரா என்று தெரியவில்லை) நிலை பரிதாபகரமானது. கடைநிலை சிப்பந்திகளான காவலாளி மற்றும் பார்சல் பிரிவில் ஊழியரின் நிலை அதனினும் துயரம் மிகுந்தது 😦

தீவிரவாதம், பயங்கரவாதம் என்கிறேன். அழகிரியா மாறனா ஸ்டாலினா என்பதுதான் விஞ்சி எல்லாவிடத்திலும் பரபரப்பு.

‘காயமடைந்தவர்கள்’ என்று அறிவிக்கப்படுபவர்கள், இறந்தவர்களைவிட பாவம். உடல் உபாதைகளினால் வேலை நிலைக்காது. தீப்புண்கள் ஆறுவதற்கு ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்ய இயலாத பொருளாதாரம். அதனால் நிகழும் தோற்ற மாற்றங்களுக்கு உளவியல் நிபுணரையும் அணுக முடியாத நிலை. செத்துப் போனவர்களுக்கு இடும் இரண்டு லட்சம் நஷ்ட ஈடு கூட கிடைக்காது.

காலம்: மனுநீதி சோழனாக மாறுகிறார் கருணாநிதி
சிபிஐ… நிலுவை… மேல் முறையீடு… எவனோ ஒருவன் போய் சரண்டர்…

  • அம்பை எய்து தூண்டி விட்ட தினகரன் & மாறன் சகோதரர்கள்; லாபம்: பத்திரிகை விற்பனை உயர்வு; நடுநிலை என்னும் பம்மாத்துப் பெயர்.
  • அம்பாக புறப்பட்டு பலரின் வாழ்க்கையை கொலை செய்து தன் பலத்தை நிரூபித்த மகன் அழகிரி; லாபம்: இருப்பை உணர்த்தல்; மேலிடத்துக்கு மிரட்டல்.
  • காவல்துறையை ஆளுங்கட்சி ஆதரவுடன் பயன்படுத்திய கழகம்; லாபம் – மத்திய அரசு மேல் பொறுப்பை ஒப்படைத்தல்; இமேஜ் பாதுகாத்தல்.

தட்ஸ்தமிழ் செய்தி படித்தேன்… உங்க கருத்து என்ன? முதலமைச்சர் + கட்சித் தலைவரால் சொந்த ஆட்சியிலே இவ்வளவு செய்தால் போதுமானது என்று நினைக்கிறீர்களா?

Continue reading

It happens only in a Democrazy

சென்னை மாநகராட்சி தேர்தல்: மா. சுப்பிரமணியன் போட்டியின்றி தேர்வு- சுயேச்சை வாபஸ் ஆகிறார்

எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் மதிமுக இத் தேர்தலைப் புறக்கணிப்பதால் அக்கட்சிகள் சார்பில் யாரும் இத்தேர்தலில் மனுத் தாக்கல் செய்யவில்லை. பதவி விலகிய மேயர் மா. சுப்பிரமணியன் 140-வது வார்டில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அவரை எதிர்த்து தேமுதிக சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. கடைசி நேரத்தில் சுப்பிரமணியன் என்பவர் தேமுதிக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவரது வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது.

அதிமுக & மதிமுகவை எதிர்க்கட்சி என்று இந்த செய்திக்குறிப்பு அடைமொழி தருவது தவறு. ஆளுங்கட்சிக்கு எதிராக போட்டியிடாவிட்டால், அவர்களும் மைனாரிட்டி கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவு தருகிறார்கள்.

‘ஜீ நியூஸ்’ தொலைக்காட்சி, நிருபருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

குஜராத்தில் கீழ்நீதிமன்றங்களில் நடைபெறுவதாகக் கூறப்படும் ஊழல்கள் குறித்து வெளிப்படுத்த, ஜோடிக்கப்பட்ட ஒரு வழக்கில், ஆமதாபாத் கீழ்நீதிமன்றத்தில் லஞ்சம் கொடுத்து குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வி.என்.கரே, நீதிபதி பி.பி.சிங் மற்றும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஆர்.கே.ஜெயின் ஆகியோருக்கு வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதுதொடர்பான செய்தியை ஜீ நியூஸ் தொலைக்காட்சி ஒளிபரப்பியது.

Counsel for Gujarat said a committee appointed by the Gujarat High Court exonerated the magistrate and he was reinstated in service.

லஞ்சம் பெற்றுக்கொண்ட விபச்சாரி நீதிபதி குற்றமற்றவர். குற்றத்தை வெளிக்கொணர்ந்தவர் மேல் வழக்கு.

இது சாத்தியமா?

இன்னமும் 40 நாட்களில் தெரிந்துவிடும் தமிழகத்தினை யார் ஆளப்போகிறார்கள் என்பது. அ.தி.மு.க கூட்டணியின் பக்கம் தற்போதைக்கு நிலை ஆதரவாக இருக்கிறது என்பது குமுதம் சர்வேயில் தெரிகிறது. ஆனாலும், சொல்லமுடியாது. நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தப் போது, தி.மு.க தலைமையின் மீது தனக்கிருக்கும் அதிருப்தியினை தெரிவித்தார், ஆனாலும், ரஜினி போல, இன்னொரு முறை பிரச்சனைகள் இல்லாமல் ஜெயலலிதா ஆட்சிக்கு வருவது தமிழகத்தின் எதிர்காலத்திற்கான ஒட்டுமொத்த ஆப்பு என்ற கருத்தினையும் முன்வைத்தார். எது எப்படியோ, ஏதோ ஒரு கூட்டணி வரப்போகிறது. ஆனால், முக்கியமாக அந்த கூட்டணி தமிழகத்தினை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லுமா என்பதை இப்போது சொல்லமுடியாது.

தமிழக அரசியலில் தி.மு.க, அ.தி.மு.க கூட்டணிகளுக்கு மாற்றாக ஒரு மூன்றாம் கூட்டணி ஏற்படுத்த எடுத்த முயற்சிகளும் வீணாய்போயின. ஆக இருப்பதில் ஏதோ ஒரு கூட்டணி தான் வரப்போகிறது. ஆனால், இந்த முறை எந்த கூட்டணி வந்தாலும் அவர்களை பொதுமக்களாகிய நாம் எப்படி தட்டிக் கேட்கப் போகிறோம்.

இன்றளவும் ஒரு குடிமகனாய், என்னுடைய தொகுதி கவுன்சிலருக்கான கடமைகள் என்ன, என்னென்ன கேள்விகளை நான் கவுன்சிலரை எதிர்த்து கேட்க முடியும், என்னுடைய தொகுதிக்கு என்ன திட்டங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன, அவற்றுக்கான ஆதாரபூர்வமான கணக்குகளை பரிசோதிக்க முடியுமா, என்னுடைய தொகுதிக்கான விஷயங்களை தமிழக அரசின் இணையதளத்தில் பார்க்க முடியுமா என்று நிறைய கேள்விகள் எழுகின்றன. Accountability இல்லாமல் இருப்பதால் தான் அரசியல்வாதிகளால் ஊழல்கள் செய்யமுடிகிறது. இனியொருமுறை இம்மாதிரி நிகழாமல் இருக்க என்ன செய்ய வேண்டும். மணிரத்னம் படங்கள் போல இண்டர்வேலுக்கு மேல் நான் மந்திரியாகவோ, எம்.எல்.ஏ.வாகவோ முடியாது. இந்திய சனநாயக தேர்தல் முறைகளில் நம்பிக்கைகள் இருக்கிறதா என்று கேட்காதீர்கள். எனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்புகளில் எது சிறந்ததோ அதை கையிலெடுத்துக் கொண்டு எனக்கான, மக்களுக்கான வசதிகளையும், கேள்விகளையும் கேட்டு பெற்றுத்தர என்ன செய்ய முடியும் என்று தான் யோசிக்கிறேன்.

தகவல் அறியும் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது என்று நினைக்கிறேன் [?!] எந்த விதமான தகவல்கள என்னுடைய தொகுதி பற்றிய, உறுப்பினர்கள் பற்றிய, எம்.எல்.ஏ, கவுன்சிலர், எம்.பி பற்றிய, திட்டங்கள், அரசு ஒதுக்கீடுகள் பற்றிய விவரங்கள் கிடைக்கும் ? இதில் இவை அடங்குமா? ஒரு வாக்காளனை ஒரு கட்சிக்கு ஒட்டுப் போடச் சொல்வது பிரச்சாரம். ஆனால், அவனுக்கும் போதிய அரசியல் அறிவினை கொடுத்தால் கையில் காசு வாங்கிக் கொண்டு, குடம்,சொம்பு, 500 ரூபாய் லட்டு மோதிரம் வாங்கினாலும், நாளைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரை கேள்விக் கேட்க ஏதுவாக இருக்கும். இனியும், இந்திய அரசியல் சட்டம் சரியில்லை என்று சொல்லிக் கொண்டிருப்பதை விட, சட்டத்தின் ஒட்டைகளை, மக்களின் அறியாமையினை முதலீடாகக் கொண்டு வாழ்ந்துக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளை அவர்களின் வழியிலேயே போய் சட்டத்தினை தெரிந்து கொண்டு கேள்வி கேட்டு சட்டத்தின் முன் நிறுத்துவது தான் ஒரே வழி.

1. உங்கள் தொகுதியில் நிற்கும் வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் என்னென்ன ?
2. உங்களுக்கு தெரிந்து அவர்களின் சொத்து மதிப்பு அவ்வளவுதானா. அப்படியில்லையென்றால், ஆதாரங்களுடன், தேர்தல் கமிஷனரிடத்தில் இதை கொண்டு செல்ல இயலுமா?
3. வட்டம், தொகுதி, மாவட்டம் என்ற வரையறையில் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு அரசால் ஒதுக்கப்பட்ட திட்டத்தின் நகலோ, திட்டத்தினை நிறைவேற்றுபவர்களின் [கவுன்சிலர், கமிஷ்னர், கலெக்டர், காண்ட்ராக்டர்கள் ] பற்றிய தகவல்கள் பொதுவாக தமிழக அரசு இணணயதளத்தில் இருக்குமா?
4. அவ்வாறு இருப்பின், திட்ட மதிப்பீடுகளையும், திட்டகாலம், தொடக்கம், முடிவு, பணி நேரங்கள் பற்றிய விவரங்களை பொதுவாக அறிவிக்க முடியுமா? தொகுதியின் வரவு,செலவு நிதியாதரங்களைக் கொண்டு பாலன்ஸ் ஷீட் தாக்கல் செய்ய நிர்பந்திக்க முடியுமா?
5. எந்த விஷயங்களை ஒரு எம்.எல்.ஏவிடம் நேரடியாக கேட்க முடியும்? எவற்றினை அரசு அலுவலகங்களில் கேட்டு பெற முடியும்? [ஆட்டோ வீட்டுக்கு வராமல்]
6. சட்ட மன்ற தொடர் இல்லாத காலகட்டங்களில் ஒரு எம்.எல்.ஏவின் பணியென்ன?
7. சட்ட மன்றத்தில் ஒரு தொகுதியின் எம்.எல்.ஏ என்ன கேள்விகள் கேட்டார், அதற்கு அவர் பெற்ற பதில்கள் பற்றிய விவரங்கள் இணையத்திலோ, பத்திரிக்கைகளிலோ கிடைக்குமா?
8. ஒரு பப்ளிக் லிமிடெட் கம்பெனியே ஆறுமாததிற்கோ, ஒரு வருடத்திற்கோ ஒரு முறை unaudited financial report செய்யும்போது மக்கள் நலனை முன்னிறுத்தும் அரசு ஏன் வெறுமனே பட்ஜெட் வரவு செலவுகளோடு நிறுத்திவிடுகிறார்கள் ? பொதுமக்களின் பார்வைக்கு ஏன் அரசின் வருடாந்திர/காலாண்டு திட்ட நிதி வரவு/செலவு விஷயங்களை வைக்கக்கூடாது?
9. இவற்றினை சட்டரீதியாக கொண்டு வரமுடியுமா? அப்படியில்லையெனில் இவற்றில் பெரும்பாலானவற்றினை பொதுமக்களுக்கு எடுத்து செல்ல என்ன செய்ய வேண்டும் ?

அழுகிற பிள்ளைக்கு தான் பால் கிடைக்கும். கேள்வி கேட்காமல் நியாயங்கள் கிடைக்காது. அச்சமின்றி கேள்வி கேட்கவும், அதற்கு ஒரு உறுப்பினரை பதில் சொல்ல வைக்கவும் சட்டம் தெரிய வேண்டும். ஒரு சாதாரண குடிமகனுக்கு அவனுடைய உரிமைகள், கடமைகள் பற்றிய விஷயங்கள் தெரியாமல், தமிழ்நாட்டிலோ, இந்தியாவிலோ “புரட்சி” வெடிக்காது. ஆக, வெறுமனே பதிவுகளில் ஜல்லியடிக்காமல், தமிழ்நாட்டின் ஒரு ஏழை வாக்காளனுக்கு நான் என்ன செய்யப் போகிறோம், நம் “அறிவுஜீவித்தனங்களையும், புத்திசாலி கணக்குகளையும்” வைத்துக் கொண்டு ?

இங்கே பதியும் நண்பர்களில் வழக்குரைஞர்கள், சட்டமறிந்தவர்கள் இருப்பின் நான் ஏன் தமிழகம் முழுவது கட்சி சார்பில்லாமல், ஒரு குடிமகனின் உரிமைகளை எடுத்துரைக்ககூடாது. நாளைய தமிழகத்தின் வாழ்வும்,தாழ்வும் நம்மிடத்திலும் இன்னமும் 41/2 கோடி மக்களிடத்திலும் இருக்கிறது. இதை மாற்ற என்ன செய்யப் போகிறோம்?