Category Archives: Characterizations

இன்றைய சந்தேகம் & அறச்சீற்றம்

anjathey-prasanna-daya-lengthy-hair-cinema-movies.jpgதமிழக சினிமா காவல்துறை மேல் எனக்கு பெருத்த அவமரியாதை கூடிய சந்தேகம் எழுந்துள்ளது.

என் மகளுக்கு இருக்கும் கொஞ்சூண்டு தலைமுடியை வாரி விடுவதற்குள் பிராணன் போகிறது. இங்கே ‘வேட்டையாடு விளையாடு’ டேனியல் பாலாஜி, ‘அஞ்சாதே’ பிரசன்னா என்று எல்லா வில்லர்களும் சடாமுடியுடன் அருள்பாலிக்கிறார்கள். நாராயண் ‘சத்யா’ போன்ற லஞ்சப் பேர்வழிகள் நிறைந்த திரைப்பட போலீசால் ஏற்பட்ட வினை!

Vettaiyadu Vilaiyaduஇதில் டேனியல் பாலாஜி இன்னும் அக்கிரமம். அமெரிக்கா வந்த பிறகு பின் வழுக்கையும் முன் வழுக்கையும் தலை குலுக்கிக் கொள்ளும் தண்ணீரில் நீராடியும் ‘வேட்டையாடு விளையாடு’ என்று கொலையுதிர்த்தும் சிலிர்த்துக் கொண்டே பான்டீன் விளம்பரமாயும் கொழிக்கிறார்.

இதெல்லாம் நல்லதுக்கில்லை.

மயிரை சீராட்டி பாராட்டி சாம்பிராணி போடும் நேரத்தில் நாலு பொண்ணை வியாபாரம் செய்தோமா… ராகவனுக்கு எலுமிச்சை அனுப்பினோமா என்றெல்லாம் பொறுப்பாக செயல்படாமல் கூந்தல் வளர்த்து வெறுப்பேற்றும் நெகடிவ் நாயகர்களை நம்ப முடியாத குணச்சித்திரமாக சித்தரிக்கும் மிஷ்கின் & கவுதம் மேனனுக்கு கண்டனங்கள்!!!