Category Archives: மெக்கெய்ன்

ஒபாமாவிடம் மன்னிப்புக் கோரினார் ரைஸ்; ஜான் மெகெயின், ஹில்லரி கடவுச்சீட்டுகளும் அத்துமீறப்பட்டுள்ளன

அமெரிக்க அரசுத்துறைச் செயலர் கொண்டலிஸா ரைஸ் அம்மையார் அவர்கள், ஜனநாயக் கட்சி வேட்பாளராகத் தேர்வு பெற வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படும் பராக் ஒபாமாவிடம் மன்னிப்புக் கோரியிருக்கிறார்.

ஒபாமாவின் பாஸ்போர்ட் தகவல்களைப் பெறுவதற்காக, அரசுத்துறையின் ஊழியர்கள், கணினி பாதுகாப்பு விதிகளை மீறியதாக வெளியான தகவலை அடுத்து அவர் மன்னிப்புக் கோரியிருக்கிறார்.

ஒபாமாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும், யாராவது தனது பாஸ்போர்ட் தகவல் கோப்புக்களைப் பார்த்திருந்தால் தான் மிகவும் கவலையடைந்திருப்பேன் என்று கூறியதாகவும் கொண்டலிஸா ரைஸ் தெரிவித்தார்.

நன்றி: பிபிசி

மேலும் விவரங்களுக்கு:

1. FACTBOX: Obama, Clinton, McCain passport files breached | Reuters

2. FAQ: The passport breach: What exactly is in those records?

3. State Dept. investigating passport-data snooping – USATODAY.com

கடந்த வாரம் – அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் களம்

cover_newyorker_190.jpgடெமோக்ராட்ஸ் வேட்பாளர் இன்னும் முடிவானபடியில்லை. ‘பெரிய பிரதிநிதிகள்’ எனப்படும் சூப்பர்டெலகேட்ஸ் கையில்தான் ஒபாமாவா/ஹில்லரியா என்பது இருக்கிறது.

க்ளின்டனுக்கு (‘மக்களைப் பயமுறுத்துகிறார் ஹிலாரி’: ஒபாமா) சற்றும் சளைக்காத ஒபாமா அணியினர், ‘ஹில்லரி என்பவர் அரக்கி என்று பேட்டி கொடுக்க, பேட்டி கொடுத்தவருக்கு கல்தா கொடுத்தார் ஒபாமா.

மேலும் விவரங்களுக்கு: BBC NEWS | Americas | Obama aide quits in ‘monster’ row: “An adviser to Barack Obama has resigned after a Scottish newspaper quoted her calling rival US Democratic candidate Hillary Clinton ‘a monster’.”

ஒபாமாவின் இந்த மாதிரி தூஷணைகளுக்கு ‘முடிவல்ல.. ஆரம்பம்’ என்கிறது நியூஸ்வீக்: Obama’s Next Moves | Newsweek Politics: Campaign 2008 | Newsweek.com: “Obama’s aides are more than ready to turn their half-hearted criticism into a full-blown attack on the Clintons. Among the targets on the Obama campaign’s list: the Clintons’ tax returns, Bill Clinton’s international business relationships and the secret donors to the Clinton foundation.”

ஹிலரி க்ளின்டன் அணியினரும் ‘துரத்தி துரத்தி அடிப்பதில் மோனிகா லூயின்ஸ்கி விவகாரத்தைக் கையிலெடுத்த வழக்கறிஞர் கென்னத் ஸ்டார் போல் ஒபாமா வெறித்தனமாக’ செயல்படுகிறார் என்றனர்.

“ஒபாமாவா, ஜான் மெக்கெயினா என்று பார்த்தால் – பராக்கை விட எதிர்க்கட்சியின் மெகெயினே அடுத்த ஜனாதிபதியாக உகந்தவர்” என்று ஹில்லாரியே நேரடியாகப் பேட்டியளித்தார்.

மேலும் விவரங்களுக்கு: Confronting the Kitchen Sink – New York Times: “if a choice on national security had to be made today between Senators Obama and McCain, voters — according to Mrs. Clinton’s logic — should choose Senator McCain. That is a low thing for a Democratic presidential candidate to do to a rival in a party primary.”

நாப்டா விவகாரத்தில் க்ளின்டனும் ஒபாமாவும் அடிக்கும் பல்டிகளுக்கு குடியரசு நாயகரான ஜார்ஜ் புஷ்ஷும், ஜான் மெகெயினுமே தேவலாம் போல என்று சர்வதேச ஊடகங்கள் அபிப்ராயிப்பதாக பரீத் ஜகாரியா தெரிவித்துள்ளார்: Zakaria: Dems vs. Free Trade | Newsweek Voices – Fareed Zakaria | Newsweek.com: “Listening to the Democrats on trade ‘is enough to send jitters down the spine of most in India,’ says the Times Now TV channel in New Delhi. The Canadian press has shared in the global swoon for Obama, but is now beginning to ask questions. ‘What he is actually saying—and how it might affect Canada—may come as a surprise to otherwise devout Barack boosters,’ writes Greg Weston in the Edmonton Sun.”

என்னவாக இருந்தாலும் ஹில்லரி கிளிண்டன் இடதுசாரி போல் பேசினாலும், ‘பழைய பாட்டில்; பழங்கஞ்சிதானே’ என்று ஒபாமா பேச்சுக்களின் சாத்தியக்கூறுகளை ராபர்ட் ரீச் முன்வைக்கிறார்: Opinions: ‘Idealism, not leftism’ by Robert Reich | Prospect Magazine March 2008 issue 144: “She wants universal healthcare, but won’t support a ‘single-payer’ plan like Britain’s NHS, which is the best way to control medical costs. She won’t commit to raising taxes on the rich to finance social programmes, except for rolling back the Bush tax cuts.”

இங்கிலாந்தில் இட ஒதுக்கீடு குழுவின் பொறுப்பில் இருக்கும் ஆப்பிரிக்க – அமெரிக்கரின் புத்தகம் சார்ந்த அலசல்: Opinions: ‘Healing postponed’ by Trevor Phillips | Prospect Magazine March 2008 issue 144: “For all his lofty talk of national unity, Obama may actually put back the arrival of a post-racial America”

சிறுபான்மையினர் கிட்டத்தட்ட முன்னேறியிருக்கும், ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் ஓரளவு சம உரிமை வகிக்கும் மாஸசூஸெட்ஸ், நியூ யார்க், கலிஃபோர்னியா போன்ற இடங்களில் ஒபாமா ஏன் தோற்கிறார் என்பதை ஷெல்பி ஸ்டீலின் (Amazon.com: A Bound Man: Why We Are Excited About Obama and Why He Can’t Win: Shelby Steele: Books) நூலின் விமர்சனமாக விளக்குகிறார்.

இந்த வாதத்தை தற்போதைய வோட்டு கணக்கெடுப்புகளை வைத்து, வாக்காளர்களின் பின்னணியைக் கொண்டு அலசி, மறுத்துப் பேசும் ஆராய்ச்சி: RealClearPolitics – HorseRaceBlog – Demography and the Democratic Race: “It is a matter of income. Whites who make more money tend to support Obama. Whites who make less money tend to support Clinton.”

ஆனால்… இனம் இன்னும் முக்கியம்?

na-ap652a_race_20080305201213.gif

நன்றி: Race May Be Playing Role For Working-Class Voters – WSJ.com: “White working-class voters tend to be more conservative in terms of social beliefs and that is going to spill over.”

ப்ளோரிடாவும் மிச்சிகனும் அவசரப்பட்டு தேர்தல் நடத்தியதால் தங்களின் பிரதிநிதிகளையும் வாக்குகளையும் மதிப்பிழந்து நிற்கிறது. இவ்விரு இடங்களிலும் பராக் ஒபாமா கலந்துகொள்ளவில்லை. எனவே, ஹிலாரி எளிதில் வென்றிருந்தார். பராக் போட்டியிடாமல் வென்ற பிரதிநிதிகளையும் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்வோம் என்கிறார் கிளிண்டன். மறுதேர்தல் நடத்துவது நியாயம் என்கிறார் ஒபாமா.

இப்போதைக்கு இழுபறி: Florida, Michigan revotes come down to money – CNN.com: “Florida revote could cost $20 million; Michigan’s could cost $10 million”

ஜனநாயகக் கட்சி எப்படியும் ஜெயிக்க முடியாத இடங்களை, பராக் ஒபாமா தொடர்ந்து வென்று வருகிறார். அதே போல் வையோமிங் மாகாணத்திலும் ஜெயித்துள்ளார். ஒஹாயோவிலும் டெக்சஸிலும் தோற்ற புண்பட்ட நெஞ்சுக்கு இது பர்னாலாக அமைந்திருக்கிறது.

மேலும் விவரங்களுக்கு: Obama trounces Clinton in Wyoming – Los Angeles Times: “His win after her victories in Ohio and Texas is another promise of a continued pitched battle for delegates.”

இவ்வளவு தூரம் ஜனநாயகக் கட்சியின் குடுமிப்பிடி குழாயடி சண்டைகளை சொல்லிவிட்டு, குடியரசு வேட்பாளர் மெக்கெயின் குறித்து எதுவும் சொல்லாமல் முடிக்கக் கூடாது என்பதற்காக…

ஜான் மெகெயினின் கோபம் பிரசித்தமானது. இந்த தடவை ஊடகங்களும் அவருடன் ‘மோகம் முப்பது நாளாக’ கொஞ்சிக் கொண்டிருக்க, அவரும் தன்னுடைய அறச்சீற்றங்கள கட்டுக்குள் வைத்தே வந்திருக்கிறார்.

ஆனால், அந்த புகழ்பெற்ற முன்கோபம் எட்டிப் பார்த்திருக்கிறது. ‘சென்ற 2004 தேர்தலில் தங்களை ஜான் கெர்ரி தூணை ஜனாதிபதியாக நிற்கக் கோரினாரா’ என்று முன்பு கேட்டிருந்தபோது ‘அப்படியெல்லாம் பேச்சே எழவில்லை’ என்று புறங்கையால் ஒதுக்கியிருந்தார். தற்போது முன்னுக்குப் பின் முரணாக அவ்வாறு பேசியதை ஒப்புக் கொண்டதை சுட்டிக் காட்டியதும் சினம் தலை தூக்கியிருக்கிறது.

மேலும் விவரங்களுக்கு: McCain Asked About Kerrys V.P. Offer – The Caucus – Politics – New York Times Blog: “when Mr. McCain was asked about the conversation – and why he said in an interview with The New York Times in May 2004 that he had not even had a casual conversation with Mr. Kerry on the topic – Mr. McCain displayed some of the temper that he has largely kept under control in this campaign.”

கட்டாங்கடைசியாக, செல்வராஜ் (R.Selvaraj)

ஹில்லரி வெற்றியோ தோல்வியோ சிறிய அளவில் இருக்கும்; ஒபாமா பெரிய இடைவெளியில் வெல்வார், அல்லது பெரிய இடைவெளியில் தோற்பார் என்று எனக்குத் தோன்றுகிறது.

முன்று மாநிலங்களில் ஹில்லரி வெற்றி

இன்றைய ஜனநாயக கட்சியின் முன்னோட்ட தேர்தலில் ஹில்லரி மூன்று மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளார். ஒபாமா ஒரு மாநிலத்தில் மட்டும் வெற்றி பெற்றிருக்கிறார். மிக முக்கிய மாநிலங்களான ஓகாயோ, டெக்சாஸ் ஆகிய இரு மாநிலங்களிலும் ஹில்லரி வெற்றி பெற்றுள்ளார். இந்த இரு மாநிலங்களிலும் வெற்றி பெற்றால் தான் இந்த போட்டியில் ஹில்லரி தொடர முடியும் என்ற நிலை இருந்தது.

ஹில்லரியின் வெற்றிக்கு முக்கிய காரணங்கள்

  • கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒபாமா நாப்டா – NAFTA குறித்த சில சர்ச்சைகளில் சிக்கினார். இது ஒபாமாவின் பொருளாதார நிலைப்பாடுகளை கேள்விக்குள்ளாக்கி இருந்தது.
  • ஓகாயோ போன்ற தொழிற்சாலைகள் அதிகம் இருக்கும் மாநிலங்களில் கிளிண்டனுக்கு செல்வாக்கு அதிகம். இம் மாநிலங்களில் இருக்கும் தொழிற்சாலைகள் சீனா போன்ற நாடுகளுக்கு செல்வது முக்கிய தேர்தல் பிரச்சனையாக இருந்தது. ஹில்லரியின் பொருளாதார அனுபவத்திற்கு கிடைத்த வெற்றியாகவும் இந்த வெற்றியை பார்க்க முடியும்.
  • லேட்டினோ பிரிவினரின் ஆதரவு
  • பெரிய மாநிலங்களில் பெரும்பாலும் ஹில்லரியே வெற்றி பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஹில்லரியின் வெற்றி ஜனநாயக கட்சியின் முன்னோட்ட தேர்தல் தொடர்ந்து நீடித்துக் கொண்டே இருக்கும் என்பதை தெளிவாக்குகிறது. போட்டியின் போக்கு ஒபாமா சார்பாக இருந்த நிலையில் இருந்து மாற்றம் அடையுமா என்ற கேள்வியும் எழுகிறது. மெக்கெயினின் போர் அனுபவத்திற்கு எதிராக ஹில்லரியின் பொருளாதார அனுபவம் ஒரு வலுவான வாதமாக இருக்கும் என ஜனநாயக கட்சியினர் நினைக்க கூடும்.

ஒபாமா இந்த தேர்தலில் இது வரை பெரிய அளவிலான “கொள்கை குழப்பங்கள்” குறித்த தாக்குதல்களை எதிர்கொண்டதில்லை. எனவே நாப்டா தொடர்பான ஹில்லரியின் தாக்குதலுக்கு ஒபாமாவால் சரியான பதிலடியை கொடுக்க முடியவில்லை. ஒபாமா தன்னுடைய பிரச்சார உத்திகளை மாற்ற வேண்டிய தேவையும் எழுந்துள்ளது.

குடியரசுக் கட்சியின் மெக்கெயின் வெற்றி பெற்றுள்ளார். தன்னுடைய தேர்தல் உத்திகள் எப்படி இருக்கும் என்பதையும் இன்றைய பேச்சில் தெளிவுபடுத்தியுள்ளார்

– ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறாது
– பொருளாதாரம் உலகமயமாக்கல் பாதையில் தான் நகரும். எந்த மாற்றமும் இருக்காது

என்பன அவரது கொள்கையில் முக்கிய அம்சங்கள். இது புஷ் ஆட்சியின் தொடர்ச்சி என ஜனநாயக கட்சியினர் பிரச்சாரம் செய்ய முடியும். ஆனால் முதலில் ஜனநாயகக் கட்சியினர் தங்கள் வேட்பாளரை முடிவு செய்தாக வேண்டும். ஒபாமா-ஹில்லரி இடையேயான போட்டி தொடர்ந்து நீடித்தால் மெக்கெயினுக்கு சாதகமாக மாறக் கூடிய வாய்ப்பு உள்ளது

இன்றைய நியு யார்க் டைம்ஸ் – டெக்சாஸ், ஒஹாயோ களம்: ஜனநாயகக் கட்சி முதல் தேர்தல் கட்டம்

1. Obama Spends Heavily to Seek Knockout Blow – New York Times

0302_nat_primary_web.jpg

2. What I’d Be Talking About if I Were Still Running – New York Times: ஜனநாயகக் கட்சி சார்பாக போட்டியிட்டு விலகியவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வி: ‘உங்களுக்கு முக்கியமாகப்படுவதில், எதைக் குறித்து தற்போதைய வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் முன்வைப்பதில்லை?’

3. Coming Soon: Health Care Debate, Part 2 – New York Times: ‘இது சும்மா ட்ரெயிலர்தான் கண்ணா…’ என்பது போல தற்போதைய ஹில்லரி x ஒபாமாவின் சேமநல விவாதம் அமைந்திருக்கிறது. குடியரசு கட்சியுடன் நடக்கும் போட்டியில், இது எவ்வாறு மாறும்?

4. Mining the Gender Gap for Answers – New York Times: ஹில்லரி பெண்பாலாக இருப்பதும், பெண் ஜனாதிபதியாக விரும்புவதும் குறித்த அமெரிக்க மக்களின் உளவியல்.

5. McCain Channels His Inner Hillary – New York Times: ஜான் மெக்கெயினின் பிரச்சார உத்தி; ஹில்லரிக்கும் மெகெயினுக்கும் உள்ள ஒற்றுமை; குடியரசுக் கட்சியின் வாக்கு வங்கியை கவரும் விதத்தில் அதன் வேட்பாளர் நடந்து கொள்கிறாரா? நடந்து கொள்வாரா?

அமெரிக்க தேர்தல் களம் – இன்று (பெப். 25)

1. ‘எம்ஜியார் ஆட்சி தருவோம்’ என்று வாக்குறுதியளிப்பது போல், அமெரிக்காவின் ஒபாமாவைப் போல் புத்துணர்ச்சியுடன் நல்லாட்சி தருகிறோம் என்று உலகெங்கும் ப்ராண்ட் நேம் காப்பியடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

செய்தி: Obama’s European counterparts – Los Angeles Times

Obama_Kenya_Drudge_report_Traditional_Dress

2. படம் DRUDGE REPORT FLASH 2008® | செய்தி Obama Photo Becomes an Issue – The Caucus – Politics – New York Times Blog

தன் தந்தை நாடான கென்யாவிற்கு வருகை புரிந்தபோது, சொமாலியத் தலைவரின் உடையை அணிந்திருக்கிறார் பராக். அந்தந்த நாட்டின் பாரம்பரிய ஆடையை அணிவது அரசியல் தலைவர் முதல் விளையாட்டு வீரர் வரை எல்லோருக்கும் சகஜம்.

‘இதை இப்போது வெளியிட்டு, அதையும் அரசியலாக்கி பார்க்கிறார் ஹில்லரி‘ என்கிறார் ஒபாமா.

3. வலைப்பதிவுகளில் எந்த வார்த்தைகள் எவ்வளவு அதிகம் இடம்பிடித்தது என்பதன் வரைபடம்:

Boston_Globe_New_Words_Buzz_Obama_Rama_Momentum

புதிது புதிதாக சொல்லாக்கம் நிகழ்வது அமெரிக்க அரசியலுக்கே உரித்தானது. வாடர்கேட்டைத் தொடர்ந்து, கேட் என்பதை வைத்து கிடைத்த பட்டியலை இங்கு (List of scandals with “-gate” suffix) பார்க்கலாம். அதே போல், ஒபாமா -உந்தம் போன்ற மொமென்டம் சொற்றொடர்கள் புகழ்பெற ஆரம்பித்திருக்கின்றன.

நன்றி: Obama-rama-mentum – The Boston Globe

4. அடுத்த உப ஜனாதிபதிக்கான தள்ளுமுள்ளு மேளா நடைபெற்று வருகிறது. தற்போது களத்தில் இருக்கும் அனைவருமே செனேட்டர்கள். ஆளுநர்கள்தான் இரண்டு கட்சிகளுக்கும் வளைய வேண்டிய நேரத்தில் வளைந்து, நிமிர்ந்து நேர்கொண்டு தடுத்தாட் கொள்ள வேண்டிய நேரத்தில் கொள்கைப் பிடிப்பை பறைசாற்றும், உண்மையான தலைவர்கள் என்பது தொன்றுதொட்ட எண்ணம். கவர்னர்களின் மாநாடு நடைபெறுகிறது என்னும் செய்தி: At Governors’ Meeting, a Vice Presidential Buzz – New York Times

5. குடியரசுக் கட்சியின் வேட்பாளர் ஜான் மெக்கெயினுக்கு மேலும் இன்னொரு பின்னடைவு. ஜான் மெகெயினுடைய பிரச்சாரக் குழுவின் இணை இயக்குநர் மேல் – பண மோசடி, மிரட்டி பணம் பறித்தல், அயல்நாட்டில் கறுப்பு பணத்தை பதுக்குதல் உட்பட 35 குற்றஞ்சாட்டப்பட்டு வழக்குத் தொடுக்கப்பட்டிருக்கிறது. இரண்டாண்டுகளாக இவரின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டது.

எனினும், 2006- ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் இவரின் நன்னடத்தைக்கு சான்றிதழ் வழங்கி மெகெய்ன் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார். ரிக் ரென்சியை கண்டித்து, குடியரசுக் கட்சியின் தலைவர்கள் அறிக்கை விட்டுக்கொன்டிருக்கிறார்கள்.

செய்தி: Joseph A. Palermo: John McCain and the Rick Renzi 35-Count Indictment – Politics on The Huffington Post | New York Times: Grand Jury Indicts Arizona Congressman

'ஹிலாரியைவிட நம்பகமானவர் ஒபாமா'

ஹிலாரி கிளின்டனை காட்டிலும் அதிக நம்பகமானவர் பராக் ஒபாமா என அமெரிக்க நிறுவனம் ஒன்று வெளியிட்ட தரப் பட்டியலில் கூறப்பட்டுள்ளது.

தயாரிப்புகளை நுகர்வோர் மத்தியில் பிரபலப்படுத்தும் திறன் பெற்றவர்களை பட்டியலிட்டு வெளியிட்டு வரும் நிறுவனம் டேவி பிரௌன். டேவி பிரௌன் பிரபலங்கள் குறியீட்டெண் என்ற இந்த மதிப்பீடு மூலமாக தங்களது தயாரிப்புகளை விளம்பரப்படுத்த யாரைத் தேர்ந்தெடுக்கலாம் என்பதை நிறுவனங்கள் முடிவு செய்கின்றன. நுகர்வோர்களிடம் நட த்தப்படும் கருத்துக் கணிப்புகளின் அடிப்படையிலேயே இந்த குறி யீட்டெண் தயாரிக்கப்படுகிறது.

அண்மையில் இந்த நிறுவனம் வெளியிட்ட பட்டியலில் ஜனநாயகக் கட்சியின் ஹிலாரி கிளின்டன், குடியரசுக் கட்சியின் ஜான் மெக்கைன் ஆகியோரைக் காட்டிலும் அதிகப் புள்ளிகளைப் பெற்று முன்னணியில் இருக்கிறார் பராக் ஒபாமா. நம்பகத்தன்மை, விழிப்புணர்வு, கவர்ச்சி, செல்வாக்கு, வேட்கை உள்ளிட்ட எட்டு முக்கியப் பண்புகள் இந்த பட்டியலில் கணக்கிடப்படுகின்றன.

இதில் விழிப்புணர்வு என்ற ஒரே பண்பில் மட்டுமே ஒபாமாவைவிட ஹிலாரிக்கு அதிகப் புள்ளிகள் கிடைத்துள்ளன. நம்பகத்தன்மை உள்ளிட்ட மற்ற அனைத்துப் பண்புகளிலும் ஒபாமா முன்னிலை பெற்றுள்ளார்.

திரைப்பட, தொலைக்காட்சி நடிகர்கள் உள்ளிட்டோர் அதிக அளவில் இடம்பெற்றுள்ள இந்தப் பட்டியலில் ஒபாமாவுக்கு 3-வது இடமும், ஹிலாரிக்கு 8-வது இடமும் கிடைத்துள்ளது.

குடியரசுக் கட்சியின் ஜான் மெக்கைன் மற்றும் மைக் ஹக்கபீ ஆகியோர் முறையே 20 மற்றும் 74-வது இடங்களைப் பிடித்துள்ளனர்.

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியை நடத்துபவரும், ஒபாமாவின் தீவிர ஆதரவாளருமான ஓபரா வின்ஃபிரே, இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

நன்றி: தினமணி

ஆங்கிலத்தில்: Celebrity Index: U.S. Consumers Find Obama More Appealing, Trustworthy Than Clinton, McCain: Financial News – Yahoo! Finance

புதிய தந்திரத்துடன் திருமதி.கிளின்டன்

ஒபாமாவின் தொடர்ந்த வெற்றிகளால் குளம்பிப்போயுள்ள திருமதி.கிளின்டன் புதிய திட்டங்களுடன் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. Wisconsin வெற்றியானது, ஒபாமாவின் அதிரடி வெற்றியாகக் கணிக்கப்படுகின்றது. வரும் வியாழக் கிழமை இருவரும் டெக்ஸாசில் ஒரு நேரடி விவாதத்தில் கலந்துகொள்ள உள்ளனர். இதில் தூள் பறக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Ohio, Texas ஆகிய இரு மானிலங்களிலும் வெற்றி பெற்றால், மொத்தத்தில் வெற்றி பெறும் வாய்ப்புள்ளதாக திரு.கிளின்டன் கூடச் சொல்லியுள்ளார்.

தாழ் மட்ட வேலை புரிவாரின் வாக்குகள் டெக்சாசில் செல்வாக்கு செலுத்தும் என்று எதிர்பார்ப்பதால் ஒபாமா, கிளின்டன் இருவரும் Blue color தொழில் புரிபவர்களை இலக்கு வைத்து தமது பிரச்சாரங்களை தொடங்கியுள்ளனர்.

இதேவேளை குடியரசுக்கட்சியின் வேட்பாளராக கிட்டத்தட்ட முடிவாகிவிட்ட மக் கெயின் கூட ஒபாமாவை இப்பவே தன் பேச்சுக்களில் குறி வைக்கத் தொடங்கிவிட்டார். அவர் ஒரு பேச்சில்

“I will fight every moment of every day in this campaign to make sure that Americans are not deceived by an eloquent but empty call for change,”

இளைஞர்களை அதிகமாக ஒபாமா கவர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதாவது 10 இளைஞர்களில் 6 பேர் ஒபாமாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க தேர்தல் – ஜான் மெக்கெயின் சறுக்கிய தருணங்கள்

McCain Love Link - Romance by Republicans: GOP Valentines Day  Specialகட்டுரையில் இருந்து…

  • வலப்பக்கம் உள்ளவர் மெக்கெயினின் காதலியா!?! நாற்பது வயது பெண்ணுடன் தொடர்பா?
      நட்பின் பேச்சைக் கேட்டு லாபியிஸ்ட்களின் நிறைவேறிய கோரிக்கைகள்…

    1. பெருநகரத்தில் இயங்கும் இரண்டு முக்கிய தொலைக்காட்சி கன்னல்களையும் ஒரே நிறுவனமே வைத்துக் கொள்ள வகை செய்யும் திட்டம்
    2. சிறுமுதலீட்டுக்காரர்களின் விருப்பப்படி வரிவிலக்கு தரும் சட்டம்
    3. மாநிலத்தில் இயங்கும் பல ஊடகங்களை ஒரே ஒருவரே கையகப்படுத்த விதிவிலக்கு ஏற்படுத்துதல் (இந்த நிறுவனத்தின் விமானத்தையும் சொந்தப் பயணங்களுக்கு பயன்படுத்தி உள்ளார்)
  • (தங்களுக்கு சௌகரியமான சட்டங்களை இயற்றவும், பரிவு ஏற்படும் பார்வையை தோற்றுவிக்கவும் இந்தியா முதல் இன்டெல் நிறுவனம் வரை அனைவரும் ‘லாபியிஸ்ட்’களை நியமித்திருப்பார்கள்.) இவர்கள் கொடுக்கும் பணத்தை எதிர்த்து சட்டம் கொண்டுவருவதாக சொல்லிக்கொண்டே, லாபியிஸ்ட் பணத்தை வாங்கிக் கொண்ட கதை.
  • வங்கி அதிபரின் தனி விமானத்தில் பலமுறை வாஷிங்டன் டிசிக்கும் சொந்த ஊருக்கும் பறந்து சென்றது;
  • அமெரிக்காவில் (முன்பு) ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணகர்த்தாக்களில் ஒருவருடன் பஹாமாஸ் உல்லாசப் பயணம் சென்றது;
  • மெகெயினின் மனைவிக்கு ஷாப்பிங் மாலில் பங்கு கொடுத்து விட்டு, அதற்கு பிரதிபலனாக வங்கியின் கடன் கெடுபிடிகளை, நடுவண அரசு கண்டும் காணாமல் இருக்கச் செய்தது
  • தொலைத்தொடர்பு நிறுவன லாபியிஸ்ட்களை தன்னுடைய பிரச்சாரக் குழுவின் முக்கிய அங்கத்தினர்களாக நியமிப்பது; அது மட்டுமல்லாமல், அதே தொலைபேசி/தொழில்நுட்ப நிறுவனங்களிடமிருந்து எண்ணிலடங்கா நிதியை தன்னுடைய பிரச்சாரத்துக்காகப் பெற்றுக் கொள்வது

விடைகளையும் விவரங்களையும் அறிய (நியு யார்க் டைம்ஸ்): For McCain, Self-Confidence on Ethics Poses Its Own Risk

இதற்கெல்லாம் நேரில் விளக்கம் கொடுக்கும் பேட்டி கொடுத்து தன் பக்கத்து நியாயங்களை வைக்குமாறு வாய்ப்பு வழங்கிய நியு யார்க் டைம்ஸ் நாளிதழுக்கு நேர்காணல் வழங்காமல் புறக்கணித்தும் விட்டார்.

மூன்றாவது முறையும் புஷ்ஷின் ஆட்சி….

திமுக இணைய தளத்தில் “புரட்சி தலைவி” படமோ இல்ல அதிமுக இணணயதளத்தில் கலைஞர் புகைப்படமோ பார்க்கமுடியுமா?

ஆனால் ஜனநாயக கட்சி இணையத்தில்   எதிர்கட்சியான மெக்கைய்ன்/புஷ் புகைப்படம்…….  (நக்கல்னா இதுதானோ…!!)

[படத்தை பெரிதாக்கி பார்க்கவும்]

20080212_mccain.jpg

ஓபாமா- கிளிண்டன் – மெக்கயின் – யார் வந்தால் இந்தியாவிற்கு அதிக நன்மை? நாம் இவ்ர்களில் யாரை விரும்புகிறோம்?

இங்கே இந்தியர்கள் கிட்ட தட்ட 3 மில்லியன் பேர் இருக்கிறார்கள். இங்குள்ள எத்னிக் (ethnic ) க்ருப்பில் மூன்றாவது. ஒரளவு பணக்காரர்கள். இவர்கள் யாரை ஆதரிக்கிறார்கள்? எல்லோரும் அமெரிக்காவை மட்டும் நினைக்க நாமோ, இரண்டு நாடுகளையும் நினைக்கிறோம்!
இங்கே பெரும்பாலன இந்தியர்கள் டெமாக்ரட் கட்சியியே அதரவு செய்கிறார்கள். போன தேர்தலில் கிட்டதட்ட 80% சதவிகிதம் இந்தியர்கள் ஓட்டு டெமாக்ரட் கட்சிக்கு கிடைத்தது. நான் அறிந்தவரை ரிபப்ளிகன் கட்சிக்கு மிக மிக பணக்காரர்கள் ஆதரவு இருக்கிறது.

பெரும்பாலோர் immigration கொள்கை காரணம்மாக Democrat party support ஆதரவு என நினைக்கிறேன். இப்போது நிலைமை மாறி ஒரளவு ரிபப்ளிகன் கட்சிக்கும் ஆதரவு உள்ளது.

Louisiana கவர்னராக ஒரு Republican இந்தியர் தேர்ந்து எடுக்கப்பட்டது தெரிந்து இருக்கும். .

அது தவிர White houseல் Deepavali கொண்டாடுகிறார்கள்! கிட்ட தட்ட நாமும் ஒரு Factor என பெருமை பட்டு கொள்ளலாம்! New york, California, New Jersey state ல் கணிசமான வாக்குகள் உள்ளன.

Super Tuesday- இல் நம்முடைய பங்கு பற்றி oru sample article:
************************************************************

Washington, February 6: The three million-strong Indian- American community is believed to have swung the electoral fortunes of major US Presidential hopefuls, including Senators Hillary Clinton and Barack Obama, in the primaries of ‘super Tuesday’.

For Democratic Senators Hillary Rodham Clinton and Barack Obama, the community has not only played a crucial role in the run-up to the primaries both by way of physical and financial support but also with their huge concentrations in big and diverse states may have played even a “swing” role.

Indian-Americans are well dotted across the states of New York and New Jersey, the two major states going to Clinton last night; and Illinois, the home state of Obama, also has a large population of the community that has for the most part thrown its weight behind the son of the soil.

In California, especially where the Indian American community is present in large numbers, their voting impact has certainly helped Clinton get this huge state that offered as many as 441 delegates to the national convention.

There is no saying what would have happened to Clinton if she had lost California.

Exit polls in California showed that Clinton did very poorly among the White and African American population but did spectacularly well with the Asian American community by a three-to-one margin and with the Hispanic community by a two-to-one margin.

****************************************************************************
ஆக பெரும்பான்மை ஜனங்கள் கிளிண்டனையே ஆதரித்து இருக்கிறார்கள்!

ஓபாமா- கிளிண்டன் – மெக்கயின் – யார் வந்தால் இந்தியாவிற்கு அதிக நன்மை?

அணு ஒப்பந்தம்:

முதலில் மெக்கயின்: பெரும்பாலும் புஷ்ஷின் கொள்கைகளே இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

ஓபாமா- கிளிண்டன் : இந்தியாவுடனான அணு ஒப்பந்தம் குப்பை கூடையில் போட chance அதிகம். ஆனால் அதற்கு முன்பு நாமே குப்பை கூடையில் போட்டு விடுவோம் எனத் தோன்றுகிறது.

மற்ற எந்த விஷயதிலும் பெரும் வித்தியாசம் இருக்கும் எனத் தெரியவில்லை. ஆனால் இந்தியாவுடன் ஆன நல்லுறுவு republican time ல் ஆரம்பித்தது என எண்ணுகிறேன். இதற்கு அப்பொதைய காலகட்ட compulsion ம் கூட! [I remember George Bush senior after taking oath, took time to call Rajiv Gandhi and opened a new era in the bilateral relations].

நம்மை அவ்வளவு சுலபாமாயி ஒதுக்கி தள்ள் முடியாது. யார் வந்தாலும் நமக்கான உரிய மரியாதை கிடைக்கும் !!

please opinion your voice…