Category Archives: தகவல்

Boy என்றால் பையன்?

உட்கட்சி தேர்தல்களுக்கிடையே ஒரு இடைவெளி வந்திருந்தாலும் அமெரிக்கத் தேர்தல் களத்தில் சூடு தணியவில்லை. இந்த இடைவெளியில் போட்டியாளர்கள் எந்தத் தேர்தல் இலக்குமின்றி பேசிக்கொண்டிருக்க நேர்ந்தது. அவரவரின் சுய ரூபங்கள் கொஞ்சம் வெளியாகிவிட்டிருப்பதும் உண்மை.

ஹில்லரி பொய் சொல்லி மாட்டிக்கொண்டார். ஒரு முறையல்ல இரு முறைகள். (காண்க: பொய் சொல்லக் கூடாது ஹில்லரி). ஜான் மெக்கெய்ன் இராக்கில் அல் கொய்தா, ஷியா, சன்னி, இரான் குறித்த தன் புரிதலற்ற புரிதலை வெளிக்காட்டினார். பராக் ஒபாமாவின் பாஸ்டர் பிரச்சனையை அடுத்து சான் ஃப்ரான்சிஸ்கோ கூட்டமொன்றில் சாதாரண அமெரிக்க குடிமக்கள் குறித்து பேசிய பேச்சொன்றை பிடித்துக் கொண்டு அரசியல் ஆட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது.

ஹில்லரிக்க்கு அவ்வப்போது வரும் ஒற்றைத் தலைவலியாக கணவர் பில் கிளிண்டன் இருந்து வருகிறார். இந்த வாரம் அம்மணி அவரை அழைத்து ‘வாயை மூடும்’ என்றே சொல்லவேண்டியதாயிற்று. போஸ்னியாவில் துப்பாக்கிச் சண்டைக்கு மத்தியில் ஓடி ஒளிந்து சென்று சேர்ந்ததாக ஹில்லரி சொன்னப் பொய் உண்மைதான் என்று பில் உளறிவிட ஹில்லரி ‘இனிமேல் போஸ்னியா குறித்து எதுவும் பேசாதே’ எனச் சொல்லிவிட்டார்.

ஒபாமா சான் ஃப்ரான்சிஸ்கோ கூட்டத்தில் பேசும்போது சாதாரண அமெரிக்கர்கள் அமெரிக்கப் பொருளாதாரம் குறித்து கசப்படைந்துள்ளதால்(bitter) அதை தவிர்த்து கடவுள் நம்பிக்கை, துப்பாக்கி வைத்துக்கொள்ளும் உரிமை ஆகிய (முக்கியமில்லாத) பிரச்சனைகளின் அடிப்படையில் வாக்களிக்கிறார்கள் என ஒரு உண்மையை போட்டுடைத்தார். அரசியல் தெரியாத மனிதர். இது பொதுமக்களிடையே பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றபோதும் ஹில்லரியும் மெக்கெய்னும் இந்தக் ‘கசப்பு’ பேச்சை சர்க்கரை சேர்த்து தங்களுக்கு இனிப்பாக பரிமாறிக்கொண்டிருக்கின்றனர். மெக்கெய்ன் ஒபாமாவின் இந்தப் பேச்சை முன்வைத்து மின்னஞ்சல்வழியே காசு திரட்ட பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.

ஆனால் மக்களிடம் ‘கசப்பு’ பேச்சு குறித்த கசப்பு இல்லை என்பதை ஹில்லரி இந்தப் பேச்சை எடுத்ததும் ‘பூ’ என ஊளையிட்டு எதிர்ப்பு தெரிவித்து மக்களே தெரிவித்துள்ளனர். இருப்பினும் ஒபாமாவின் எதிரணியினரும் சில ஊடகவியலாலர்களும் ஊதிப் பெருக்கிக்கொண்டிருக்கின்றனர்.

இந்த வாரம் அதிர்ச்சியூட்டும் விதமாக அமைந்தது ரிப்பப்ளிக்கன்(குடியரசுக் கட்சி) செனெட்டர் ஜியாஃப் டேவிஸ் ஒபாமாவை ‘boy’ என அழைத்தது. அமெரிக்காவில் முன்பு கறுப்பின அடிமைகளை ‘boy’ என அழைப்பது வழக்கம். வேற்று நிற பெரியவர்களை வெள்ளையர்கள் boy என அழைத்தால் கீழானவன் என அழைப்பதாக அர்த்தம். இதற்காக டேவிஸ் நேரடியாகச் சென்று மன்னிப்பும் கேட்டுள்ளார். எனினும் பொதுவில் இப்படி பேசப்பட்டது அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது.

இந்த வாரம் கவனிக்கத்தக்கதாக அமைந்தது டைம் பத்திரிகையும், MSNBC தொலைக்காட்சியும் ஒபாமாவின் தாய் குறித்து செய்திகளை வெளியிட்டிருந்தது. ஒபாமாவின் ‘வெள்ளை’ பின்னணியை முன்னிறுத்த நடந்த முயற்சியாகவே இதைப் பார்க்கத் தோன்றுகிறது. இது ஒரு பக்கப் பார்வையேயாயினும் நிராகரிக்கப்படவேண்டியதல்ல. டைம் கவர் ஸ்டோரியாக இதை வெளியிட்டிருந்தது கவனிக்கத் தக்கது.

ஏப்ரல் 22 பென்சல்வேனியாவில் உட்கட்சித் தேர்தல். ஹில்லரி ஒபாமாவின் தோளிலிருந்து இறங்குவாரா அல்லது இன்னும் கொஞ்சம் ஆதரவைத் திரட்டிக்கொண்டு ஒபாமாவிற்கு உப-அதிபர் பதவியை வாக்களித்து பகடி செய்வாரா தெரியவில்லை.

McCain Chimes in on Obama’s ‘Bitter’ Comment
GOP Congressman Apologizes for Calling Obama ‘Boy’
Bill Clinton defends Bosnia remarks

கடந்த வாரம் – அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் களம்

cover_newyorker_190.jpgடெமோக்ராட்ஸ் வேட்பாளர் இன்னும் முடிவானபடியில்லை. ‘பெரிய பிரதிநிதிகள்’ எனப்படும் சூப்பர்டெலகேட்ஸ் கையில்தான் ஒபாமாவா/ஹில்லரியா என்பது இருக்கிறது.

க்ளின்டனுக்கு (‘மக்களைப் பயமுறுத்துகிறார் ஹிலாரி’: ஒபாமா) சற்றும் சளைக்காத ஒபாமா அணியினர், ‘ஹில்லரி என்பவர் அரக்கி என்று பேட்டி கொடுக்க, பேட்டி கொடுத்தவருக்கு கல்தா கொடுத்தார் ஒபாமா.

மேலும் விவரங்களுக்கு: BBC NEWS | Americas | Obama aide quits in ‘monster’ row: “An adviser to Barack Obama has resigned after a Scottish newspaper quoted her calling rival US Democratic candidate Hillary Clinton ‘a monster’.”

ஒபாமாவின் இந்த மாதிரி தூஷணைகளுக்கு ‘முடிவல்ல.. ஆரம்பம்’ என்கிறது நியூஸ்வீக்: Obama’s Next Moves | Newsweek Politics: Campaign 2008 | Newsweek.com: “Obama’s aides are more than ready to turn their half-hearted criticism into a full-blown attack on the Clintons. Among the targets on the Obama campaign’s list: the Clintons’ tax returns, Bill Clinton’s international business relationships and the secret donors to the Clinton foundation.”

ஹிலரி க்ளின்டன் அணியினரும் ‘துரத்தி துரத்தி அடிப்பதில் மோனிகா லூயின்ஸ்கி விவகாரத்தைக் கையிலெடுத்த வழக்கறிஞர் கென்னத் ஸ்டார் போல் ஒபாமா வெறித்தனமாக’ செயல்படுகிறார் என்றனர்.

“ஒபாமாவா, ஜான் மெக்கெயினா என்று பார்த்தால் – பராக்கை விட எதிர்க்கட்சியின் மெகெயினே அடுத்த ஜனாதிபதியாக உகந்தவர்” என்று ஹில்லாரியே நேரடியாகப் பேட்டியளித்தார்.

மேலும் விவரங்களுக்கு: Confronting the Kitchen Sink – New York Times: “if a choice on national security had to be made today between Senators Obama and McCain, voters — according to Mrs. Clinton’s logic — should choose Senator McCain. That is a low thing for a Democratic presidential candidate to do to a rival in a party primary.”

நாப்டா விவகாரத்தில் க்ளின்டனும் ஒபாமாவும் அடிக்கும் பல்டிகளுக்கு குடியரசு நாயகரான ஜார்ஜ் புஷ்ஷும், ஜான் மெகெயினுமே தேவலாம் போல என்று சர்வதேச ஊடகங்கள் அபிப்ராயிப்பதாக பரீத் ஜகாரியா தெரிவித்துள்ளார்: Zakaria: Dems vs. Free Trade | Newsweek Voices – Fareed Zakaria | Newsweek.com: “Listening to the Democrats on trade ‘is enough to send jitters down the spine of most in India,’ says the Times Now TV channel in New Delhi. The Canadian press has shared in the global swoon for Obama, but is now beginning to ask questions. ‘What he is actually saying—and how it might affect Canada—may come as a surprise to otherwise devout Barack boosters,’ writes Greg Weston in the Edmonton Sun.”

என்னவாக இருந்தாலும் ஹில்லரி கிளிண்டன் இடதுசாரி போல் பேசினாலும், ‘பழைய பாட்டில்; பழங்கஞ்சிதானே’ என்று ஒபாமா பேச்சுக்களின் சாத்தியக்கூறுகளை ராபர்ட் ரீச் முன்வைக்கிறார்: Opinions: ‘Idealism, not leftism’ by Robert Reich | Prospect Magazine March 2008 issue 144: “She wants universal healthcare, but won’t support a ‘single-payer’ plan like Britain’s NHS, which is the best way to control medical costs. She won’t commit to raising taxes on the rich to finance social programmes, except for rolling back the Bush tax cuts.”

இங்கிலாந்தில் இட ஒதுக்கீடு குழுவின் பொறுப்பில் இருக்கும் ஆப்பிரிக்க – அமெரிக்கரின் புத்தகம் சார்ந்த அலசல்: Opinions: ‘Healing postponed’ by Trevor Phillips | Prospect Magazine March 2008 issue 144: “For all his lofty talk of national unity, Obama may actually put back the arrival of a post-racial America”

சிறுபான்மையினர் கிட்டத்தட்ட முன்னேறியிருக்கும், ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் ஓரளவு சம உரிமை வகிக்கும் மாஸசூஸெட்ஸ், நியூ யார்க், கலிஃபோர்னியா போன்ற இடங்களில் ஒபாமா ஏன் தோற்கிறார் என்பதை ஷெல்பி ஸ்டீலின் (Amazon.com: A Bound Man: Why We Are Excited About Obama and Why He Can’t Win: Shelby Steele: Books) நூலின் விமர்சனமாக விளக்குகிறார்.

இந்த வாதத்தை தற்போதைய வோட்டு கணக்கெடுப்புகளை வைத்து, வாக்காளர்களின் பின்னணியைக் கொண்டு அலசி, மறுத்துப் பேசும் ஆராய்ச்சி: RealClearPolitics – HorseRaceBlog – Demography and the Democratic Race: “It is a matter of income. Whites who make more money tend to support Obama. Whites who make less money tend to support Clinton.”

ஆனால்… இனம் இன்னும் முக்கியம்?

na-ap652a_race_20080305201213.gif

நன்றி: Race May Be Playing Role For Working-Class Voters – WSJ.com: “White working-class voters tend to be more conservative in terms of social beliefs and that is going to spill over.”

ப்ளோரிடாவும் மிச்சிகனும் அவசரப்பட்டு தேர்தல் நடத்தியதால் தங்களின் பிரதிநிதிகளையும் வாக்குகளையும் மதிப்பிழந்து நிற்கிறது. இவ்விரு இடங்களிலும் பராக் ஒபாமா கலந்துகொள்ளவில்லை. எனவே, ஹிலாரி எளிதில் வென்றிருந்தார். பராக் போட்டியிடாமல் வென்ற பிரதிநிதிகளையும் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்வோம் என்கிறார் கிளிண்டன். மறுதேர்தல் நடத்துவது நியாயம் என்கிறார் ஒபாமா.

இப்போதைக்கு இழுபறி: Florida, Michigan revotes come down to money – CNN.com: “Florida revote could cost $20 million; Michigan’s could cost $10 million”

ஜனநாயகக் கட்சி எப்படியும் ஜெயிக்க முடியாத இடங்களை, பராக் ஒபாமா தொடர்ந்து வென்று வருகிறார். அதே போல் வையோமிங் மாகாணத்திலும் ஜெயித்துள்ளார். ஒஹாயோவிலும் டெக்சஸிலும் தோற்ற புண்பட்ட நெஞ்சுக்கு இது பர்னாலாக அமைந்திருக்கிறது.

மேலும் விவரங்களுக்கு: Obama trounces Clinton in Wyoming – Los Angeles Times: “His win after her victories in Ohio and Texas is another promise of a continued pitched battle for delegates.”

இவ்வளவு தூரம் ஜனநாயகக் கட்சியின் குடுமிப்பிடி குழாயடி சண்டைகளை சொல்லிவிட்டு, குடியரசு வேட்பாளர் மெக்கெயின் குறித்து எதுவும் சொல்லாமல் முடிக்கக் கூடாது என்பதற்காக…

ஜான் மெகெயினின் கோபம் பிரசித்தமானது. இந்த தடவை ஊடகங்களும் அவருடன் ‘மோகம் முப்பது நாளாக’ கொஞ்சிக் கொண்டிருக்க, அவரும் தன்னுடைய அறச்சீற்றங்கள கட்டுக்குள் வைத்தே வந்திருக்கிறார்.

ஆனால், அந்த புகழ்பெற்ற முன்கோபம் எட்டிப் பார்த்திருக்கிறது. ‘சென்ற 2004 தேர்தலில் தங்களை ஜான் கெர்ரி தூணை ஜனாதிபதியாக நிற்கக் கோரினாரா’ என்று முன்பு கேட்டிருந்தபோது ‘அப்படியெல்லாம் பேச்சே எழவில்லை’ என்று புறங்கையால் ஒதுக்கியிருந்தார். தற்போது முன்னுக்குப் பின் முரணாக அவ்வாறு பேசியதை ஒப்புக் கொண்டதை சுட்டிக் காட்டியதும் சினம் தலை தூக்கியிருக்கிறது.

மேலும் விவரங்களுக்கு: McCain Asked About Kerrys V.P. Offer – The Caucus – Politics – New York Times Blog: “when Mr. McCain was asked about the conversation – and why he said in an interview with The New York Times in May 2004 that he had not even had a casual conversation with Mr. Kerry on the topic – Mr. McCain displayed some of the temper that he has largely kept under control in this campaign.”

கட்டாங்கடைசியாக, செல்வராஜ் (R.Selvaraj)

ஹில்லரி வெற்றியோ தோல்வியோ சிறிய அளவில் இருக்கும்; ஒபாமா பெரிய இடைவெளியில் வெல்வார், அல்லது பெரிய இடைவெளியில் தோற்பார் என்று எனக்குத் தோன்றுகிறது.

ஹில்லரிக்கு எதிராக புதிய 527 குழு

story.gifஅமெரிக்க தேர்தல்களில் வேட்பாளரைத் தோற்கடிக்க வேண்டுமானால் 527 குழு துவக்கப்படும். சென்ற ஜனாதிபதி போட்டியில் ஜான் கெர்ரியின் வியட்நாம் போர்க்களப்பணியை செல்லாக்காசாக மாற்ற ‘ஸ்விஃப்ட் பொட்’ இராணுவ வீரர்கள் விளம்பரம் பயன்பட்டது. ஜனநாயகக் கட்சி சார்பாக ‘மூவ் ஆன்’ போன்றவை செயல்படுகின்றன. இந்தக் குழுவிற்கு கொடுக்கப்படும் தேர்தல் நிதியை கணக்கு வழக்கின்றி செலவழிக்கலாம். தேர்தல் ஆணையத்தின் விதிகளுக்கு உட்படாத விளம்பரங்களையும் வதந்தியான அவதூறுகளையும் பரப்பவும் வசதியாகிறது

ஹில்லரி க்ளின்டனுக்கு எதிராக அல்குலைக் குறிக்கும் புகைப்பட டி-சர்ட்களை விற்க 527 குழு துவங்கப்பட்டிருக்கிறது.

பெண்ணின் யோனியை வெளிப்படையாக குறிப்பிட்டு அடங்கிப் போக சொல்லும் குறியீட்டை — பராக் ஒபாமாவை கறுப்பர் என்பதால் ‘நீக்ரோ’ என விளிப்பதற்கு ஈடாக ஒப்பிடுகிறார்கள். அதே சமயம், குடியரசுக் கட்சியின் இந்த சித்தரிப்பால் மணமான பெண்களின் வாக்கு ஜனநாயகக் கட்சி பக்கம் சாயவும் வாய்ப்பிழுப்பதால் ‘இதுவும் நன்மைக்கே’ என்றும் அலசுகிறார்கள்.

தொடர்புடைய தொடுப்புகள்:
1. Citizens United Not Timid

2. The C-word as a political tool – Broadsheet – Salon.com

3. 527s: Top Individual Contributors to 527 Committees

4. MoveOn.org: Democracy in Action

5. SwiftVets.com | The Real Story on John Kerry’s Military Service

6. C.U.N.T. வலையகம்: Citizens United Not Timid

7. The OFFICIAL MoveOn.org YouTube Channel

பெண்கள் வோட்டு எவருக்கு?

வலதுசாரி சித்தாந்த இதழில் இருந்து: O’Beirne, Kate | National Review: Voting and the single woman: the raw demographic truth in American politics

  • ஆண்; வெள்ளை கடந்த முப்பதாண்டு கால அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில், ஜனநாயகக் கட்சியை சார்ந்த எந்த வேட்பாளருமே வெள்ளை ஆண்களின் வாக்குகளை 43 % மேல் பெற்றதில்லை.
    • ஆல் கோர் (2000 தேர்தல்) – 36 %;
    • ஜான் கெர்ரி (2004 தேர்தல்) – 37 %
  • பெண்கள் : கெரி – 51.5%; புஷ் – 48.5%
  • பெண்; வெள்ளை : புஷ் – 55.5%; கெரி – 44.5%
  • மணமாகாத பெண்: கெரி – 62.5%; புஷ் – 37.5%
  • மணமாகாத பெண்: வாக்களித்தவர்கள் – 59%; வாக்குச்சாவடிக்கு செல்லாதவர்கள் – 41% (இருபது மில்லியன்)

பெரும்பாலும், திருமணமான பெண்டிர் குடியரசுக் கட்சியையும், மணமாகாத பெண்கள் ஜனநாயகக் கட்சியையும் ஆதரிக்கின்றனர்.

இன்றைய நியு யார்க் டைம்ஸ் – டெக்சாஸ், ஒஹாயோ களம்: ஜனநாயகக் கட்சி முதல் தேர்தல் கட்டம்

1. Obama Spends Heavily to Seek Knockout Blow – New York Times

0302_nat_primary_web.jpg

2. What I’d Be Talking About if I Were Still Running – New York Times: ஜனநாயகக் கட்சி சார்பாக போட்டியிட்டு விலகியவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வி: ‘உங்களுக்கு முக்கியமாகப்படுவதில், எதைக் குறித்து தற்போதைய வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் முன்வைப்பதில்லை?’

3. Coming Soon: Health Care Debate, Part 2 – New York Times: ‘இது சும்மா ட்ரெயிலர்தான் கண்ணா…’ என்பது போல தற்போதைய ஹில்லரி x ஒபாமாவின் சேமநல விவாதம் அமைந்திருக்கிறது. குடியரசு கட்சியுடன் நடக்கும் போட்டியில், இது எவ்வாறு மாறும்?

4. Mining the Gender Gap for Answers – New York Times: ஹில்லரி பெண்பாலாக இருப்பதும், பெண் ஜனாதிபதியாக விரும்புவதும் குறித்த அமெரிக்க மக்களின் உளவியல்.

5. McCain Channels His Inner Hillary – New York Times: ஜான் மெக்கெயினின் பிரச்சார உத்தி; ஹில்லரிக்கும் மெகெயினுக்கும் உள்ள ஒற்றுமை; குடியரசுக் கட்சியின் வாக்கு வங்கியை கவரும் விதத்தில் அதன் வேட்பாளர் நடந்து கொள்கிறாரா? நடந்து கொள்வாரா?

ஜெயிக்கப் போவது யாரு? – கருத்துக்கணிப்பு முடிவுகள்

நன்றி: லாஸ் ஏஞ்சலீஸ் டைம்ஸ்

results_president_usa_winners.gif

mccain_survey_polls_la_times.gif

வந்து விட்டார்…அமெரிக்காவின் அங்கண்ண (செட்டியார்).ரால்ப் நாடர்

வந்து விட்டார்…அமெரிக்காவின் அங்கண்ண (செட்டியார்)….. ரால்ப் நாடர்!!!

தேர்தலில் நிற்கப்போவதாக அதிகாரபூர்வாமன செய்தியை இன்று வெளியிட்டார்.

இவரால் ஒரு நல்ல பயனும் கிடையாது. இவரது கொள்கைகள் பெரும்பாலும் டெமாக்ரட் கட்சியை ஒத்ததே. தனக்கு இரண்டு கண்ணும் போனலும் பராவில்லை;டெமாக்ரட் கட்சிக்கு ஒரு கண் போவது முக்கியம் என நினைக்கும் நல்லவர்!! குடியரசு கட்சிக்கு இது ஒரு ஆனந்தமான செய்தி!!

டெமாக்ரட் கட்சிக்கு நல்ல செய்தி அல்ல.

மேலதிக்க தகவல்களுக்கு கிளிக்குங்கள்

http://www.cnn.com/2008/POLITICS/02/24/nader.politics/index.html

எலெக்டோரல் காலேஜ் – செல்லாத வோட்டு (மீள்பதிவு)

இந்தியாவில் வாக்காளர்கள் எம்.எல்.ஏ.க்களையும், எம்பிக்களையும் தேர்ந்தெடுப்போம். அவர்கள் முதலமைச்சரையும், பிரதம மந்திரியையும் அரியணையில் அமர்த்துவார்கள்.

அமெரிக்காவில் எம்.பி.க்கள் (ஹவுஸ் ஆஃப் ரெப்ரசேண்டேடிவ்ஸ் & செனேட்), எம்.எல்.ஏ. (உள்ளூர் ஹவுஸ் ஆஃப் ரெப்ரசேண்டேடிவ்ஸ் & உள்ளூர் செனேட்), ஆளுநர் (முதலமைச்சர்), ஜனாதிபதி (பிரதம மந்திரி) என எல்லாப் பதவிகளும் வாக்காளர்கள் கையில் இருக்கிறது.

இவற்றில் எம்.எல்.ஏ, எம்.பி., கவர்னர் — ஆகியோரைத் தேர்ந்தெடுப்பதில் குழப்பம், பிரச்சினை எதுவும் இல்லை. அனைத்து வோட்டுகளையும் ஒழுங்காக எண்ணி முடிப்பதில் வேண்டுமானால் ஆங்காங்கே சலசலப்புகள் எழலாம்.

அமெரிக்க ஜனாதிபதியைத் தீர்மானிக்க ‘எலெக்டோரல் காலேஜ்’ என்னும் உத்தியை பின்பற்றுகிறார்கள். இந்தியாவில் மொத்தம் 545 எம்.பிக்கள் சேர்ந்து பிரதம மந்திரியை தேர்ந்தெடுப்பது போல், அமெரிக்காவில் 538 ‘மாகாண வோட்டுகள்’ ஜனாதிபதியை தேர்வு செய்கிறது.

எந்த மாநிலத்துக்கு ஜனத்தொகை அதிகமோ, அந்த மாநிலத்துக்கு அதிக வோட்டுகள் கிடைக்கும். இந்தியாவின் டெல்லி போன்ற — வாஷிங்டன் டி.சி.க்கு ஒரு வோட்டு. உத்தர பிரதேசம் போன்ற கலிஃபோர்னியாவுக்கு 55. முழுப் பட்டியல்.

ஆனால், தற்போதையத் தேர்தல்களில், இந்த முறை மிகுந்த விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. 2000 தேர்தலில், பெரும்பான்மையான வாக்குகளை ‘ஆல் கோர்’ வாங்கி இருந்தும், தேவையான ‘எலெக்டோரல் வோட்டுகளை’ப் பெறாததால் ஜார்ஜ் புஷ்ஷிடம் தோற்றுப் போனார்.

‘எலெக்டோரல் வோட்டுக’ளினால் வாக்காளருக்கு வோட்டளிக்கும் ஆர்வமும் குறைகிறது என்பது அடுத்த குற்றச்சாட்டு. நியு யார்க் (31 வோட்டுகள்), டெக்ஸாஸ் (34 வோட்டுகள்), இரண்டும் முறையே சுதந்திரக் கட்சிக்கும், குடியரசுக் கட்சிக்கும் நிச்சயம் கிடைக்கும். இதனால், இங்கு வாழும் எதிர்கட்சி விசுவாசி வோட்டுப் போடுவதும் ஒன்றுதான், போடாமல் விட்டுவிடுவதும் ஒன்றுதான்!

ஆனால், இந்தியாவில் இந்த நிலை தற்போது இல்லை. ஒவ்வொரு வோட்டும் எம்.எல்.ஏ.வை தீர்மானிப்பதில் உதவுகிறது. அதற்கு பதில் ‘எலெக்டோரல் காலேஜ்’ முறையைக் கொண்டு வந்தால் நன்மையா, தீமையா?

இவ்வாறு ‘மாவட்ட வோட்டுகள்’, ‘144-வது வட்ட ஓட்டுகள்’ என்று மாற்றுவதன் மூலம், முஸ்லீம் வோட்டு அதிகரிக்கிறதா, வடக்கு மக்கள் அதிகமாகி விட்டார்களா என்று கவலை கொள்ள வேண்டாம்.

மேலும் இதன் மூலம் ‘பார்டர்லைனில்’ இருக்கும் மக்களுக்கு மதிப்பு கூடும். தற்போதைய ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சாரம் 15/16 மாகாணங்களில் மட்டுமே நடக்கிறது. அமெரிக்காவில் இருக்கும் ஐம்பது மாநிலங்களில் முக்கால்வாசி மாநிலங்கள் கண்டுகொள்ளப் படுவதேயில்லை. அதே போல் லாலுவின் பிஹாரும், மோடியின் குஜராத்தும் கைவிடப்பட்டு, முடிவு செய்யாத வடகிழக்கு, கேரளம், ஜம்மு-காஷ்மீர் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கிடைக்கும். அங்கு நடக்கும் சராசரி விஷயங்களும் அரசின் தீவிர கவனிப்பையும், விசாரிப்பையும் அடையும்.

இந்தமுறை வந்தபிறகும், அவ்வப்பொழுது நடைபெறும் மக்கள் தொகைக்கணக்கு அடிப்படையில், ‘எலெக்டோரல் வாக்குகள்’ மாறிக் கொண்டே வந்தால், இந்த முறையால் எந்தப் பயனுமில்லை.

படங்களுக்கு நன்றி : பிஸினஸ் வீக்

ரெண்டு வரி நோட்:
அமெரிக்காவில் இவ்வாறு செய்யப்படுவது வேறு சில விவகாரங்களுக்கு வழிகோலியுள்ளது. அட்லாண்டாவை மாற்றுகிறேன் என்று சுதந்திரக் கட்சியும், டெக்சாஸை மறுபடி பிரிக்கிறோம் என்று குடியரசுக் கட்சியும், தங்கள் வேட்பாளர்கள் ஜெயிக்குமாறு மாற்றியமைத்துக் கொண்டுள்ளார்கள்.

(திருத்தப்படாத) அசல் பதிவும் பின்னூட்டங்களும்: ஈ – தமிழ்: செல்லாத வோட்டு (செப். 14, 2004)

ரால்ப் நாடர்…. ஞாபகமிருக்கிறதா இவரை?

ரால்ப் நாடர்…. ஞாபகமிருக்கிறதா இவரை? இவர் சுயேட்சை வேட்பாளராக நின்று 2004 ‘லில் அல் கோர் தோல்வி அடைய முதல் காரணமாக இருந்தார். வரும் ஞாயிறு அன்று NBC show ல் கலந்து கொண்டு திரும்பவும் அறிவிக்கக்கூடும்! மேல் விபரங்களுக்கு கிளிக்குங்கள்

 

http://politicalticker.blogs.cnn.com/

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பற்றிய கேலிச்சித்திரங்களுக்கு…..

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பற்றிய கேலிச்சித்திரங்களுக்கு….
கிளிக்கித்து ரசியுங்கள்….

http://politicalhumor.about.com/od/election2008/ig/2008-Election-Cartoons/