Category Archives: குடியரசு

பந்தயக் குதிரை – துணை ஜனாதிபதி

நீங்க பெட் கட்ட தயாரா? ஜனநாயகக் கட்சி சார்பாக ஒபாமா வேட்பாளரானால், உதவிக்கு ஹில்லாரியை சேர்த்துக் கொள்வாரா? மெகெயின் நிஜமாகவே ஜெயித்துவிட்டாரா?

தற்போதைய பந்தய நிலவரப்படி:

உப ஜனாதிபதிக்கு – கடைசியில் யார் வெல்வார்கள்?

ஹில்லரி க்ளிண்டன் – 12/1
ஜான் எட்வர்ட்ஸ் – 11/1
பராக் ஒபாமா – 9.5/1
பில் ரிச்சர்ட்சன் – 9.5/1
சார்லி க்ரிஸ்ட் – 10/1
மைக் ஹக்க்பி – 9/1
மிட் ராம்னி – 19/1
ஜோ லீபர்மன் – 15/1
ஃப்ரெட் தாம்ஸன் – 20/1
ரூடி ஜியூலியானி – 19/1
ரான் பால் – 79/1
மைக்கேல் ப்ளூம்பெர்க் – 11.5/1
காண்டலீசா ரைஸ் – 21/1
டெனிஸ் குசினிச் – 16/1
சக் ஹேகல் – 16.5/1
கே பெய்லி ஹட்சின்ஸன் – 41/1
ஜான் மெகெயின் – 190/1

ஆதாரம்: Betfair.com: 2008 Presidential Election – Next Vice President

தொடர்புள்ள பத்திகள்:

1. Who will McCain’s VP be? | Deadline USA | Guardian Unlimited: Idle speculation about the Republican vice-presidential candidates

2. McCain’s Veep Options – WSJ.com: The Arizona senator will want a running mate with Reaganite credentials. – By PAT TOOMEY

3. Washington Wire – WSJ.com : McCain: No Need for Regional Balance for VP

Vice President of USA - Bets, Odds

நன்றி: Political betting | Second favourites | Economist.com: Have a punt on America’s next vice-president

வர்ஜினியா வழிகாட்டுகிறதா?

நேற்றைய வாக்கெடுப்பில் வர்ஜினியா மாகாணத்தில் ஒபாமாவுக்குக் கிடைத்த வாக்குகள் 623,141. குடியரசுக் கட்சிகளின் ஒட்டுமொத்த வாக்குகளின் எண்ணிக்கை 481,970 தான். ஒபாமாவின் வாக்குகள் எதிர்க்கட்சியின் மொத்த வாக்குகளுக்கும் மேலாக இருக்கிறது.

இரு கட்சிகளின் வாக்குகளை ஒப்பிட்டுப் பார்த்தால், ஜனநாயகக் கட்சியின் மொத்த வாக்குகள், குடியரசுக் கட்சியின் மொத்த வாக்குகளின் இரண்டு மடங்கைவிட அதிகம். இது குடியரசுக் கட்சிக்காரர்களின் மனதில் ஒரு திகிலை ஏற்படுத்தியுள்ளது. வர்ஜினியா மாகாணம் இதுவரை ஜனநாயகக் கட்சிக்கு சார்பாக வாக்களித்ததில்லை.

சென்ற1964-ம் ஆண்டில் லிண்டன் ஜான்ஸன் வென்றபோதுதான் இந்த அதிசயம் நடந்திருப்பதாக அறியக்கிடைக்கிறது. இந்த நிலை இப்படியே நீடித்தால், swing states என்று சொல்லப்படுகிற மிஸ்ஸூரி, ஐயோவா, நியூ மெக்ஸிகோ மாகாணங்களில் என்ன நடக்கும்?

ரான் பால் – நியூஸ்வீக்

  1. முன்னாள் ஜனாதிபதி அமரர் ரொனால்ட் ரேகனின் பரிந்துரையைப் பெற்றவராமே ரான் பால்? அப்படியா!
  2. உலக சாம்ராஜ்யத்தை கோலோச்ச, வருடத்திற்கு ஒரு ட்ரில்லியன் (எத்தனை முட்டை!) அமெரிக்க வெள்ளிகளை செலவழிக்கிறார்களாமே?? அப்பப்பா!!
  3. அதிரகசியமாய் கனடா, மெக்சிகோவுடன் கைகோர்த்து நாஃப்தா திட்டம் தயாராகிறதாமே? (இதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை என்றாலும் !!!)

விரிவாகப் படிக்க, தெளிய…: Wrong Paul | Newsweek.com: “Fantasy, fallacy and factual fumbles from the Republican insurgent.”

அமெரிக்க தேர்தல் களம் – பிரச்சார முழக்கங்கள்

‘போடுங்கம்மா ஓட்டு, ரெட்டை இலையப் பார்த்து!’ என்பது அதிமுக முழக்கம்.

‘சொல்வதைச் செய்வோம்; செய்வதைச் சொல்வோம்’ – திமுக.

இனி அமெரிக்க விசிலடிச்சான் குஞ்சுகள்:

Change You Can Believe In; Stand for Change:

Barack Obama

Candidate Of Change:

CARI - Mitt Romney

Agent of Change:

Hillary Clinton

தொடர்புள்ள ஒலிப்பதிவு: NPR: 'Change': An Empty Word in the 2008 Campaigns?

மேரிலான்ட், வெர்ஜீனியா, டிசி: ஒபாமா & மெகெயின் வெற்றி

அமெரிக்காவில் இன்று நடந்த ஜனாதிபதி வேட்பாளர்களுக்கான தேர்தல்களில் குடியரசு கட்சி சார்பாக ஜான் மெக்கெயினும், ஜனநாயகக் கட்சி சார்பாக பராக் ஒபாமாவும் வென்றனர்.

ஒபாமா கடந்த எட்டு மாகாணங்களைத் தொடர்ச்சியாக வென்றதன் மூலம் பெரும்பான்மை பிரதிநிதிகளை ஹில்லரி க்ளின்டனிடமிருந்து கைப்பற்றியிருக்கிறார். எனினும் மார்ச் 4 நடக்கும் அடுத்த கட்ட ப்ரைமரிகளில் ஹில்லாரி தலைதூக்கினால் மீண்டும் முன்னிலை பெறமுடியும்.

அடுத்த செவ்வாய் அன்று, இரண்டு மாகாணங்கள் – விஸ்கான்சினும் ஹவாயும் வாக்களிக்க இருக்கிறது.

மார்ச் நான்கு வாக்குப்பதிவு நடக்க இருக்கும் டெக்சாஸில், இன்று நடந்த மேரிலாந்து மாகாணம் போலவே – பெருமளவில் ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள் இருப்பதும் அவர்களில் பெரும்பானமையோர் ஒபாமாவுக்கு வாக்களிப்பதும் குறிப்பிடத்தக்கது.

அனைத்துப் போட்டிகளிலும் வென்றதன் மூலம் மெகெயின் பலமடைந்திருந்தாலும், வெர்ஜீனியாவில் இழுபறியாக ஊசலாடி நூலிழையில் மைக் ஹக்கபீயை தோற்கடித்திருக்கிறார். எவாஞ்சலிகல் கிறித்துவர்களின் வாக்கையும், குடியரசு கட்சியின் பாரம்பரிய (பழமைவாத) வாக்காளர்களின் நம்பிக்கையைப் பெறவும் மேலும் முயற்சியெடுக்க வேண்டும் என்று நோக்கர்கள் அபிப்ராயம் தெரிவித்துள்ளார்கள்.

வாரயிறுதி ப்ரைமரி முடிவுகள்

ஜனநாயகக் கட்சி:

மெயின் – பராக் ஒபாமா: 59%; ஹில்லரி க்ளின்டன்: 40%

லூயிஸியானா – பராக் ஒபாமா: 57%; ஹில்லரி க்ளின்டன்: 36%

வாஷிங்டன் – பராக் ஒபாமா: 68%; ஹில்லரி க்ளின்டன்: 31%

நெப்ராஸ்கா – பராக் ஒபாமா: 68%; ஹில்லரி க்ளின்டன்: 32%

குடியரசுக் கட்சி:

கன்ஸாஸ் – மைக் ஹக்கபீ: 68%;ஜான் மெக்கெயின்: 24%; ரான் பால்: 11%

லூயிஸியானா – மைக் ஹக்கபீ: 43%;ஜான் மெக்கெயின்: 42%

வாஷிங்டன் – ஜான் மெக்கெயின்: 26%; மைக் ஹக்கபீ: 24%; ரான் பால்: 21%

பாலாஜி