Category Archives: கருத்து

'வெள்ளை' மனதும் வெள்ளை மனதும்.

ஒபாமாவின் தீராத் தலைவலியாக வந்திருப்பது அவர் சார்ந்திருந்த சிகாகோவின் ட்ரினிட்டி சர்ச்சின் போதகர் ஜெரமாயா ரைட்டின் அமெரிக்க எதிர்ப்புக் முழக்கங்கள். (படிக்க: பராக்கின் வாடர்லூ..?). பராக் ஒபாமாவின் சமன் செய்யும் முயற்சியான வரலாற்று சிறப்புமிக்க அவரது இனப்பிரச்சனை பேருரையும் அவர் மீது தனிப்பட்ட நன்மதிப்பை வளர்த்துள்ளதே தவிர ஜெரமையா ரைட்டின் பிரச்சனை மக்களின் மனதை விட்டு எளிதில் அகலப் போவதில்லை. ஒபாமாவின் செல்ல மாமாவாகத் திகழ்ந்துவந்த அமெரிக்க ஊடகங்களும் இந்தப் பிரச்சனைக்குப்பின் அவருக்கு மிட்டாய் வழங்குவதை குறைத்துக் கொண்டுள்ளதாகவே தோன்றுகிறது.

ஜெரமையா ரைட் கறுப்பின விடுதலை இறையியலை (Black liberation Theology) பின்பற்றுபவர். அமெரிக்காவின் பல கறுப்பின திருச்சபைகள் இந்த கறுப்பின விடுதலை இறையிலை பின்பற்றுபவைகளே. ஜெரமையா ரைட்டின் போதனைகளில் பல எதிர்-அமெரிக்க கூற்றுக்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அவை கருப்பினத்தவர்கள் மீது ‘வெள்ளை’ அமெரிக்க அரசின் “‘திட்டமிட்ட’ அடக்குமுறைகளை, அரசியல் சமூக இரட்டை நிலைகளைச்” சாடுவதும், அமெரிக்காவின் போர் முயற்சிகளைச் சாடுவதுமாய் அமைந்துள்ளன. கறுப்பினத் திருச்சபைகளில் போதகர்கள் எளிதில் கைகொள்ளும் விதயங்கள் இவை என்றபோதும் ஜெரமைய ரைட்டின் ‘God damn America’ போன்ற கடுஞ்சொற்களை ஜீரணிக்க இயலாமல் ஒபாமாவின் தீவிரத் தொண்டர்களும் தடுமாறுவதைக் காணமுடிகிறது.

கறுப்பினத்தவர் மீது திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட அடக்குமுறை தொடர்கிறது என்பதே அடித்தட்டு கறுப்பின மக்களிடம் நிலவும் பரவலான கருத்து. இதையே அவர்களின் திருச்சபை முதலிய அதிகார அமைப்புக்களும் பிரதிபலிக்கின்றன. இந்த நம்பிக்கையின் பின்னணியிலிருந்து எழுபவை வெறும் எதிர்ப்புக் குரல்களும் விமர்சனங்களும் மட்டுமல்ல சில கான்ஸ்பிரசி தியரிகளும்கூட.
HIV வைரஸ் கறுப்பினத்தவர்களை ஒழிக்க உருவாக்கப்பட்டது, ‘அமெரிக்க அரசு கறுப்பினத்தவர்களுக்குப் போதைப் பொருட்களைத் தருகிறது’, 9/11 அமெரிக்காவின் சொந்தச் செயல் என்பது முதலிய பல கான்ஸ்பிரசி தியரிகள் கறுப்பினத்தவர்களின் மத்தியில் நிலவுகின்றன. ஒரு மதபோதகர் இவற்றை போதிப்பது அதிகாரபூர்வ அங்கீகாரத்தை வழங்குவதாகக் கொள்ளப்படுகிறது.

ஒபாமா, பாஸ்டர் ரைட்டின் பேச்சுக்கு கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்தபோதும், பாஸ்டர் ரைட்டின் போதனைகளையும், அமெரிக்க எதிர்ப்புக் கொள்கைகளையும் தாண்டிய மனஎழுச்சியூட்டும் நற்செயல்களை செய்யக்கூடிய ஒரு ஆளுமையை அவருள் தான் கண்டுள்ளேன் எனக் கூறினாலும், மக்கள் மனதை விட்டு ‘God damn America’ என அலறும் ஜெரமையா ரைட்டின் முகம் மறைய மறுக்கிறது.
ஜெரமையா ரைட்டின் குரல் ஒடுக்கப்பட்ட கறுப்பினத்தவர்களிடம் காணப்படும் அமெரிக்கா குறித்த அதிருப்தியின் குரல் என்பதை ஒபாமா ஒப்புக் கொள்கிறார். கறுப்பினத்தவரை எப்படி நான் விட்டுத்தர (Disown) இயலாதோ அவ்வாறே ஜெரமையா ரைட்டையும் என அவர் கூறுவதன் பின்னணி இதுதான். ஆயினும் இந்த எதிர்ப்புக் குரல், பிரிவினைகளை முன்வைத்து எழக் கூடாது என்பதே அவரின் கொள்கை. 

அமெரிக்காவில் கறுப்பினத்தவரின் நிலமை இன்றளவும் அடிமட்டத்திலேயே இருப்பதன் பின்னணியில் திட்டமிட்ட சதிகள் இருக்கின்றன என சந்தேகங்களும் எதிர்குரல்களும் எழ முகாந்திரங்கள் இருப்பதை சிலராலேயே ஏற்றுக்கொள்ள இயல்கிறது. அப்படி ஏற்றுக் கொள்பவர்கள் கூட கோவில் போன்ற பொது இடங்களில் அக்குரல்கள் ஒலிப்பதை ஏற்றுக்கொள்ளவில்லை.

திருச்சபையும் அரசாட்சியும் தனித்தியங்க வேண்டும் என்பது அமெரிக்க அரசியலமைப்புக் கொள்கை. (Separation of Church and State). ஆனால் கறுப்பினத்தவரின் சமூகப் பிரதிநித்திகளாக அவர்களின் திருச்சபையே விளங்குகிறது. மார்ட்டின் லூத்தர் துவங்கி ஜெசி ஜாக்சன் வரை கறுப்பின சம உரிமைக்கானப் போராட்டங்களை முன்னின்று நடத்தியவர்கள் பலரும் மதபோதகர்களே என்பது குறிப்பிடத் தக்கது. கறுப்பினத்தவர்களுக்கு எதிரான முக்கிய அடக்குமுறையாக கறுப்பினத்தவரின் கோவில்கள் எரிக்கப்பட்டன. கறுப்பின திருச்சபை என்பது வெறும் வழிபாட்டுக் கூடமாய் மட்டுமின்றி அவர்களின் சமூகக் கூட்டுக் குரலாகவும் விளங்குவதன் அடிப்படையில் அவை ஒபாமா போன்ற ‘விடுதலைபெற்ற’ மேல்தட்டு மக்களின் குரலாக மட்டுமன்றி ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகவும் ஒலிக்கின்றன. இது குறித்த புரிதல்களை உருவாக்கும் வேண்டுதல்கள் ஒபாமாவின் இனப்பிரச்சனை உரையில் பரவிக் கிடக்கின்றன.

எதிர்-அமெரிக்கக் கருத்துக்கள் உலவும் ஒரு பின்னணியிலிருந்து வரும் எந்தத் தலைவரையும் அமெரிக்க மெஜாரிட்டி வெள்ளையினத்தவர் ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறார்கள். முன்பு ஒபாமாவின் நேர்மையை நம்பிய மக்கள் இன்று ஒபாமாவின் வார்த்தையை விட அவரது போதகரின் வார்த்தைகளை முன்வைத்து முடிவுகளை எடுக்க ‘இனம்’ தவிர்த்த போதுமான காரணங்கள் இல்லை. சுய முனைப்பின் மூலம் அமெரிக்கர் யார் வேண்டுமானாலும் தங்கள் கனவை எட்ட முடியும் எனும் கூற்றொன்று இங்கு பிரபலம். ஆயினும் கறுப்பினத்தவர்களால் சிகரங்களை எளிதில் எட்ட இயலுவதில்லை. இதை வெறும் சோம்பேறித் தனத்துடனேயே பொருத்திப்பார்க்கும் பல அமெரிக்கர்களும் ‘இனப் பிரச்சனை’ அமெரிக்காவில் இல்லை என்றே நம்புகிற நிலையும் உண்டு.
கறுப்பினத்தவர் ஒருவர் அமெரிக்க அதிபர் ஆவதில் இருக்கும் அதி முக்கிய பிரச்சனை அவரது கறுப்புப் பின்னணியை அவர் முற்றிலும் மறைத்து ‘வெள்ளை’ மனதுடையவராக ஆகிவிட வேண்டும் எனும் எதிர்பார்ப்பே. இந்த ஞானஸ்னானம் பெறாத கறுப்பினத் தலைவர் அமெரிக்க அதிபராவது இயலாது. ஒபாமாவிடம் தற்போது மக்கள் எதிர்பார்ப்பதுவும் இதுவே. இது அடிப்படையில் ஜனநாயகத்தின் மெஜாரிட்டிகே வெற்றி எனும் கொள்கையில் அமைந்திருந்தாலும் இது ‘இனம்’ சார்ந்த பிரிவினையாக இருப்பது வருந்தத்தக்கது. ஒபாமா இதனை எதிர்கொள்ளத் தன் தாய்வழி வெள்ளை இனப் பின்னணியை முன்வைக்க நேர்ந்ததுவும் குறிப்பிடத்தக்கது.

ஒருவரின் வார்த்தைகள் உள்ளோடும் உணர்வுகளை வெளிக்கொணர்கிறதென்றால் ஒபாமாவின் வார்த்தைகளை நம்புவதே அவரைக் குறித்த மதிப்பிடலுக்கு சரியான அளவுகோலாகும். ஒபாமாவின் நிலை இதில் என்ன என்பதையும் அவர் கறுப்பினத்தவரின் கோபத்தின் அடிப்படையில் இதுவரை என்ன செய்திருக்கிறான் என்பதைத் தேடினால் ஒன்றுமில்லை என்றே கூற இயலும். அமெரிக்க கறுப்பினக் கோபத்தை அவர் முழுமையாக உணர்ந்திருக்கவும் முடியாது, ஏனெனில் அவரது கறுப்பு பின்னணி சந்தேகத்துக்குரியது. அவரை முழுமையான கறுப்பினத்தவர் என கறுப்பினத்தவர்களே ஏற்றுக்கொள்ளவில்லை.
ஒபாமா கறுப்பு, வெள்ளை எனும் இரு பின்னணிகளையும் கொண்டவர். இவர்களை இணைக்கும் புள்ளியாக திகழ்கிறார் என்று நம்புபவர்களும் உண்டு ஆனால் அவர்கள் மெஜாரிட்டி இல்லை. ஒபாமா இந்த சர்ச்சையிலிருந்து தற்போது மீண்டாலும் பொதுத் தேர்தலின்போது இந்த வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறும் என்பது உண்மை.

ஏற்ற இறக்கங்களும், இழுபறிகளும் – சுந்தரேஷ் (தென்றல்)

அமெரிக்க அதிபர் தேர்தல் 2008 இருந்து…

பந்தயத்தில் கடைசி நிலையில் தொடங்கி, பிரசாரத்துக்குக் கூடப் போதுமான அளவு பணம் சேர்க்க முடியாமல் கஷ்டப்பட்டு, ரிபப்ளிகன் கட்சிக்காரர்கள் பலராலேயே ‘கன்சர்வேட்டிவ் மதிப்புகளைக் காக்க இவர் சரியான ஆள் அல்ல’ என்று விமர்சிக்கப் பட்ட நிலையில் இருந்தவர் ஜான் மெக்கெய்ன். ஆனால், படிப்படியாகக் கடுமையாகப் போராடி சில சாதுர்யமான அரசியல் தந்திர நடவடிக்கைகளால் முன்னணி நிலைக்கு வந்திருக்கும் ஜான் மெக்கெய்னின் வெற்றி அவரது அயராத தன்னம்பிக்கைக்கும், விடாமுயற்சிக்கும் கிடைத்த பலன். வியட்நாம் போரின்போது சிறையில் பல ஆண்டுகள் அடைபட்டு வதைபட்ட காலத்தில் கைகொடுத்த அதே குணக்கூறுகள் பல ஆண்டுகளுக்குப்பின் வேறு போராட்டத்தில் அவருக்குக் கை கொடுத்திருக்கின்றன. இவர் அதிபரானால் அமெரிக்க வரலாற்றில் மிக முதிய அதிபர் (71 வயது) என்ற தகுதியைப் பெறுவார்.

:::

எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும்- இன்றைய நிலையில் புதிய அதிபர் முன்னுள்ள சோதனைகள் மிகக்கடுமையானவை. அமெரிக்கப்பொருளாதாரம், அராபிய எண்ணெய்ச் சார்பு, ஈராக் படைக்குறைப்பு, இஸ்லாமிய பயங்கரவாதம், உலக நாடு களிடையே அமெரிக்காவின் நம்பகத்தன்மை என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பல சிக்கல்களை நூல் பிரித்து நுணுக்க மாகத் தீர்க்க, கூர்மையான அரசியல் வித்தகம், அனைத்து தரப்பையும் அரவ ணைத்துபோகும் பாங்கு, தேவையென்றால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கத் தயங்காத உறுதி என்று பல குணாம்சங்கள் கூடிய ஒரு தெளிவான தலைமை அவசியம்.

முழுவதும் வாசிக்க: சுந்தரேஷ்

கனவு காணுங்கள் – ஒபாமா

என்ன அப்துல் கலாம் மாதிரி ஒபாமா இறங்கிவிட்டார் என்று நினைக்வேண்டாம். அவர் சொன்னது ஹில்லாரியை நம்மை அல்ல. இவர்களின் சண்டை குழையடியை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது. சீக்கிரம் ஒரு முடிவுக்கு வந்தால் அடுத்த கட்ட சண்டைக்கு தயாராகலாம். அடுத்த கட்டத்தில் மெக்கெயினை சந்திக்க வேண்டும் அதில் கட்டாயம் தாவு தீருவது நிச்சயம். அனுபவமிக்க மெக்கெயினை கொஞ்சமாவது ஹில்லாரி சமாளிப்பார்.ஒபாமா தேறமாட்டார். அனுபவமில்லை அனுபவமில்லைன்னே ஒரங்கட்டிவிடுவார் மெக்கெயின். ஹில்லாரி முன்னுக்கு பின் முரணாக பேசிவருகிறார் அவரும் தனியாக நின்றால் உதை வாங்குவது நிச்சயம். இவர்கள் இருவரும் கடைசியில் ஒன்றாக ஜனாதிபதி உப- ஜனாதிபதி என்று (dream ticket) போட்டி போடலாம் என்றும் பேசி வருகிறார்கள். இதற்கு போனவாரம் ஹில்லாரி கொஞ்சம் நூல் விட்டு பார்த்தார். அதாவது ஹில்லாரி தலையாம் ஒபாமா வாலாம் நல்லாயிருக்கும் அப்படின்னு.’நீ கொஞ்சம் அவல் எடுத்துட்டு வா நான் கொஞ்சம் உமி எடுத்துட்டு வரேன் ரெண்டு பேரும் ஊதி ஊதி சாப்பிடலாம்’ அப்படிங்கற மாதிரி இல்லை. உதை வாங்குவது இந்தம்மா ஒபாமா வாலா இருக்கணுமாம். அதுக்கு தான் ஒபாமா இப்படி சொல்லி இருக்கார். யாரு பாத்து என்ன கேள்வி கேட்டே அப்படின்னு வாங்கு வாங்குன்னு வாங்கி இருக்கார். இங்கன போய் படிங்க.

கடந்த வாரம் – அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் களம்

cover_newyorker_190.jpgடெமோக்ராட்ஸ் வேட்பாளர் இன்னும் முடிவானபடியில்லை. ‘பெரிய பிரதிநிதிகள்’ எனப்படும் சூப்பர்டெலகேட்ஸ் கையில்தான் ஒபாமாவா/ஹில்லரியா என்பது இருக்கிறது.

க்ளின்டனுக்கு (‘மக்களைப் பயமுறுத்துகிறார் ஹிலாரி’: ஒபாமா) சற்றும் சளைக்காத ஒபாமா அணியினர், ‘ஹில்லரி என்பவர் அரக்கி என்று பேட்டி கொடுக்க, பேட்டி கொடுத்தவருக்கு கல்தா கொடுத்தார் ஒபாமா.

மேலும் விவரங்களுக்கு: BBC NEWS | Americas | Obama aide quits in ‘monster’ row: “An adviser to Barack Obama has resigned after a Scottish newspaper quoted her calling rival US Democratic candidate Hillary Clinton ‘a monster’.”

ஒபாமாவின் இந்த மாதிரி தூஷணைகளுக்கு ‘முடிவல்ல.. ஆரம்பம்’ என்கிறது நியூஸ்வீக்: Obama’s Next Moves | Newsweek Politics: Campaign 2008 | Newsweek.com: “Obama’s aides are more than ready to turn their half-hearted criticism into a full-blown attack on the Clintons. Among the targets on the Obama campaign’s list: the Clintons’ tax returns, Bill Clinton’s international business relationships and the secret donors to the Clinton foundation.”

ஹிலரி க்ளின்டன் அணியினரும் ‘துரத்தி துரத்தி அடிப்பதில் மோனிகா லூயின்ஸ்கி விவகாரத்தைக் கையிலெடுத்த வழக்கறிஞர் கென்னத் ஸ்டார் போல் ஒபாமா வெறித்தனமாக’ செயல்படுகிறார் என்றனர்.

“ஒபாமாவா, ஜான் மெக்கெயினா என்று பார்த்தால் – பராக்கை விட எதிர்க்கட்சியின் மெகெயினே அடுத்த ஜனாதிபதியாக உகந்தவர்” என்று ஹில்லாரியே நேரடியாகப் பேட்டியளித்தார்.

மேலும் விவரங்களுக்கு: Confronting the Kitchen Sink – New York Times: “if a choice on national security had to be made today between Senators Obama and McCain, voters — according to Mrs. Clinton’s logic — should choose Senator McCain. That is a low thing for a Democratic presidential candidate to do to a rival in a party primary.”

நாப்டா விவகாரத்தில் க்ளின்டனும் ஒபாமாவும் அடிக்கும் பல்டிகளுக்கு குடியரசு நாயகரான ஜார்ஜ் புஷ்ஷும், ஜான் மெகெயினுமே தேவலாம் போல என்று சர்வதேச ஊடகங்கள் அபிப்ராயிப்பதாக பரீத் ஜகாரியா தெரிவித்துள்ளார்: Zakaria: Dems vs. Free Trade | Newsweek Voices – Fareed Zakaria | Newsweek.com: “Listening to the Democrats on trade ‘is enough to send jitters down the spine of most in India,’ says the Times Now TV channel in New Delhi. The Canadian press has shared in the global swoon for Obama, but is now beginning to ask questions. ‘What he is actually saying—and how it might affect Canada—may come as a surprise to otherwise devout Barack boosters,’ writes Greg Weston in the Edmonton Sun.”

என்னவாக இருந்தாலும் ஹில்லரி கிளிண்டன் இடதுசாரி போல் பேசினாலும், ‘பழைய பாட்டில்; பழங்கஞ்சிதானே’ என்று ஒபாமா பேச்சுக்களின் சாத்தியக்கூறுகளை ராபர்ட் ரீச் முன்வைக்கிறார்: Opinions: ‘Idealism, not leftism’ by Robert Reich | Prospect Magazine March 2008 issue 144: “She wants universal healthcare, but won’t support a ‘single-payer’ plan like Britain’s NHS, which is the best way to control medical costs. She won’t commit to raising taxes on the rich to finance social programmes, except for rolling back the Bush tax cuts.”

இங்கிலாந்தில் இட ஒதுக்கீடு குழுவின் பொறுப்பில் இருக்கும் ஆப்பிரிக்க – அமெரிக்கரின் புத்தகம் சார்ந்த அலசல்: Opinions: ‘Healing postponed’ by Trevor Phillips | Prospect Magazine March 2008 issue 144: “For all his lofty talk of national unity, Obama may actually put back the arrival of a post-racial America”

சிறுபான்மையினர் கிட்டத்தட்ட முன்னேறியிருக்கும், ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் ஓரளவு சம உரிமை வகிக்கும் மாஸசூஸெட்ஸ், நியூ யார்க், கலிஃபோர்னியா போன்ற இடங்களில் ஒபாமா ஏன் தோற்கிறார் என்பதை ஷெல்பி ஸ்டீலின் (Amazon.com: A Bound Man: Why We Are Excited About Obama and Why He Can’t Win: Shelby Steele: Books) நூலின் விமர்சனமாக விளக்குகிறார்.

இந்த வாதத்தை தற்போதைய வோட்டு கணக்கெடுப்புகளை வைத்து, வாக்காளர்களின் பின்னணியைக் கொண்டு அலசி, மறுத்துப் பேசும் ஆராய்ச்சி: RealClearPolitics – HorseRaceBlog – Demography and the Democratic Race: “It is a matter of income. Whites who make more money tend to support Obama. Whites who make less money tend to support Clinton.”

ஆனால்… இனம் இன்னும் முக்கியம்?

na-ap652a_race_20080305201213.gif

நன்றி: Race May Be Playing Role For Working-Class Voters – WSJ.com: “White working-class voters tend to be more conservative in terms of social beliefs and that is going to spill over.”

ப்ளோரிடாவும் மிச்சிகனும் அவசரப்பட்டு தேர்தல் நடத்தியதால் தங்களின் பிரதிநிதிகளையும் வாக்குகளையும் மதிப்பிழந்து நிற்கிறது. இவ்விரு இடங்களிலும் பராக் ஒபாமா கலந்துகொள்ளவில்லை. எனவே, ஹிலாரி எளிதில் வென்றிருந்தார். பராக் போட்டியிடாமல் வென்ற பிரதிநிதிகளையும் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்வோம் என்கிறார் கிளிண்டன். மறுதேர்தல் நடத்துவது நியாயம் என்கிறார் ஒபாமா.

இப்போதைக்கு இழுபறி: Florida, Michigan revotes come down to money – CNN.com: “Florida revote could cost $20 million; Michigan’s could cost $10 million”

ஜனநாயகக் கட்சி எப்படியும் ஜெயிக்க முடியாத இடங்களை, பராக் ஒபாமா தொடர்ந்து வென்று வருகிறார். அதே போல் வையோமிங் மாகாணத்திலும் ஜெயித்துள்ளார். ஒஹாயோவிலும் டெக்சஸிலும் தோற்ற புண்பட்ட நெஞ்சுக்கு இது பர்னாலாக அமைந்திருக்கிறது.

மேலும் விவரங்களுக்கு: Obama trounces Clinton in Wyoming – Los Angeles Times: “His win after her victories in Ohio and Texas is another promise of a continued pitched battle for delegates.”

இவ்வளவு தூரம் ஜனநாயகக் கட்சியின் குடுமிப்பிடி குழாயடி சண்டைகளை சொல்லிவிட்டு, குடியரசு வேட்பாளர் மெக்கெயின் குறித்து எதுவும் சொல்லாமல் முடிக்கக் கூடாது என்பதற்காக…

ஜான் மெகெயினின் கோபம் பிரசித்தமானது. இந்த தடவை ஊடகங்களும் அவருடன் ‘மோகம் முப்பது நாளாக’ கொஞ்சிக் கொண்டிருக்க, அவரும் தன்னுடைய அறச்சீற்றங்கள கட்டுக்குள் வைத்தே வந்திருக்கிறார்.

ஆனால், அந்த புகழ்பெற்ற முன்கோபம் எட்டிப் பார்த்திருக்கிறது. ‘சென்ற 2004 தேர்தலில் தங்களை ஜான் கெர்ரி தூணை ஜனாதிபதியாக நிற்கக் கோரினாரா’ என்று முன்பு கேட்டிருந்தபோது ‘அப்படியெல்லாம் பேச்சே எழவில்லை’ என்று புறங்கையால் ஒதுக்கியிருந்தார். தற்போது முன்னுக்குப் பின் முரணாக அவ்வாறு பேசியதை ஒப்புக் கொண்டதை சுட்டிக் காட்டியதும் சினம் தலை தூக்கியிருக்கிறது.

மேலும் விவரங்களுக்கு: McCain Asked About Kerrys V.P. Offer – The Caucus – Politics – New York Times Blog: “when Mr. McCain was asked about the conversation – and why he said in an interview with The New York Times in May 2004 that he had not even had a casual conversation with Mr. Kerry on the topic – Mr. McCain displayed some of the temper that he has largely kept under control in this campaign.”

கட்டாங்கடைசியாக, செல்வராஜ் (R.Selvaraj)

ஹில்லரி வெற்றியோ தோல்வியோ சிறிய அளவில் இருக்கும்; ஒபாமா பெரிய இடைவெளியில் வெல்வார், அல்லது பெரிய இடைவெளியில் தோற்பார் என்று எனக்குத் தோன்றுகிறது.

ரால்ஃப் நாடர் – சில குறிப்புகள்

அமெரிக்காவில் இரண்டே கட்சிகள்தான்; ஒன்று ஆளுங்கட்சி; மற்றொன்று எதிர் கட்சி. ஒரு வளர்ந்த மேற்கத்திய நாட்டுக்கு அடையாளமாக இரண்டு கட்சிகள்தான் வேண்டுமென்பது ப.சிதம்பரம் போன்ற படித்த ஜனநாயகவாதிகளின் கருத்து. குடியரசு (Republican party) மற்றும் ஜனநாயகக் கட்சி (Democratic party) இரண்டுக்கும் மாற்றாக பசுமை கட்சி (Green Party), மறுமலர்ச்சி கட்சி (Reform Party) போன்ற அமெரிக்க துக்கடாக்கள் முயன்று வருகிறார்கள். எட்டு வருடம் முன்பு நடந்த அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஆல் கோரும் ஜார்ஜ் புஷ்ஷும், கலைஞர் டிவியின் ‘நம்ம குடும்பமும்’ சன் டிவியின் ‘அரசி’யும் போல மோதிக் கொள்ள, நடுவில் ‘தமிழன் டிவி’யாக நுழைகிறார் ரால்ப் நாடெர்.

தமிழ்நாட்டில் பெயர் குழப்பம் செய்வார்கள். திமுக சார்பாக மைலாப்பூரில் ‘ராமஜெயம்’ என்பவர் தேர்தலில் நின்றால், அதே பெயர் கொண்டுள்ள இருவர், இராமஜயம், ராம ஜெயம் என்பது போல் சுயேச்சையாக போட்டியிடுவார்கள். திமுக-வை சேர்ந்த இன்னும் சிலர் போட்டி வேட்பாளராக எதிர்கட்சியின் சார்பில் களமிறக்கப் படுவார்கள். அவரின் சாதி, இனம், மொழி இன்ன பிற பாகுபாடை சேர்ந்தவர்களும் சுயேச்சையாக நிற்கவைக்கப் படுவார்கள். திமுகவும் இதே மாதிரி வேலையை, தன்னுடைய எதிர்கட்சி வேட்பாளருக்கு பதில் மரியாதை செய்யும்.

அமெரிக்காவின் ரால்·ப் நாடரும் கிட்டத்தட்ட இதே போன்ற உதவியை புஷ்ஷுக்கு செய்தார். 2000- ஆம் ஆண்டு தேர்தலில் ப்ளோரிடா மற்றும் நியு ஹாம்ப்ஷரில் மல்லிகா ஷெராவத்தின் மெல்லிய ஆடை நெய்த இழை போன்ற ஓட்டு வித்தியாசத்தில், ஆல் கோர் தோற்கக் காரணமானவர் நாடெர். ஆனால், புளித்துப் போன இரு கட்சிகளுக்கு நல்ல மாற்றாகவும் விளங்குபவர். சிகரெட் விற்பவர்களும், காப்பீடு நிறுவனங்களும், மருந்து தயாரிப்பவர்களும், கார் கம்பெனிகளும் பணத்தைக் கொட்டி வளர்க்கும் இரு கட்சிகளுக்கு நடுவே, தேர்தல் நிதி கையூட்டு வாங்காமல் போட்டியிட முயற்சிப்பவர்.

“‘The Buying of the President 2004′” என்னும் புத்தகத்தை முன்வைத்து, திண்ணையில் நரேந்திரன் எழுதும் அறிமுகத்தில் கூறுவது போல், குடியரசு வேட்பாளராக முயற்சித்த ரான் பால் உட்பட, சராசரி மனிதனின் தேர்தல் நிதியைக் கொண்டு போட்டியிட நிற்கும் எவருக்குமே தேர்தலில் ஜெயிப்பதற்கு வாய்ப்பேயில்லை.

அமெரிக்காவின் முக்கிய நிறுவனங்கள் அனைத்துமே இரு கட்சி வேட்பாளர்களுக்கும் பணத்தை வாரி வழங்குகிறது. தங்களுக்குத் தேவையான சட்டதிட்டங்களை நிறைவேற்ற இது வழிவகுக்கும். கொடுக்கும் விகிதாசாரங்களில்தான் வேறுபாடு. இந்த டிவி சீரியல் மந்தை கூட்டத்தில் தனித்து நிற்பவர் நாடர். நாடெருக்கு வோட்டுப் போடக் கூடாது என்று ஜனநாயகக் கட்சியில் ஒவ்வொருவரும் அறைகூவுகிறார்கள். அவருக்கு ஈகோ, தான் என்னும் அகங்காரம், புகழ் போதை என்று விதவிதமாக வசவுகள் வருகிறது.

ஆனால், 2000-த்தில் கோர் தோற்பதற்கு நாடெர் மட்டும்தான் காரணம் என்பது மிகத் தவறான வாதம். அமெரிக்காவின் நாற்பத்தி மூன்று மாகாணங்களில் போட்டியிட்ட நாடெருக்குக் கிடைத்த மொத்த வோட்டு என்னவோ மூன்று மில்லியன்தான். ·ப்ளோரிடாவில் புஷ் 537 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நாடெருக்கு 97.488 வாக்குகள் கிடைத்திருந்தது. நியு ஹாம்ப்ஷைரில் 7,211 வாக்கு அதிகமாகப் பெற்று புஷ் ஜெயித்தார். நாடெருக்கு 22,198 வோட்டு கிடைத்தது. இவை ஆல் கோர் எதிர்ப்பு வாக்குகள்; சுற்றுபுறச் சூழலை வாகன தயாரிப்பளர்களுக்காக விட்டு கொடுத்தது, இணையம் கண்டுபிடித்தது என்று கோரின் அருமை பெருமைகளை அறிந்தவர்கள் அளித்த ஓட்டு. கிறித்துவத்தின் பிரதிநிதியாக இங்கு பாட் புக்காநன் (Pat Buchanan) பெற்ற ஓட்டுகள் அனைத்தும் புஷ்ஷையே சேர்ந்திருக்க வேண்டும். அப்படி சேர்த்துக் கொண்டால் ஐந்து மாநிலங்களில் புக்கானன்+புஷ் ஜோடி, கோர்+நாடெர் பெற்ற வோட்டுக்களை விட அதிகமாகவேப் பெற்றிருக்கும்.

ஃப்ளோரிடாவின் நாடெர் போல சென்ற 2004- ஆம் தேர்தலில் மூன்றாவது அணியின் மைக் பெட்நாரிக் புஷ்ஷுக்கு தலைவலியாக விளங்கியதை பாஸ்டன் க்ளோப் அலசியது.

ஒரு சராசரி உழைப்பாளியை விட அந்த நிறுவனங்களின் தலைவர் ஐந்நூறு மடங்கு அதிகமாக சம்பளம் கிடைக்க வைத்துக் கொள்கிறார். இவரை தட்டிக் கேட்க ஒருவர் தேவை. ஈராக் போரை ஆதரித்தாரா இல்லையா என்று புரியாமல் ஜனநாயகக் கட்சியின் ஹில்லரி முழம் நீளத்துக்கு பதில் கொடுக்கிறார். இ(ரு)வரையும் எதிர்கொள்ள திராணியுள்ள ஒருவர் தேவை. ‘ஸ்பெஷல்’ ஆர்வ குழுக்களைத் துரத்துவதாக வாய்கிழித்துக் கொண்டே அவர்களில் சிலரிடம் இருந்து தேர்தல் நிதி பெறும் ஜான் மெகெயின் போன்றவரகளை சுட்டி காட்ட ஒருவர் தேவை. அவர் ஜெயிப்பது வேறு விஷயம். ஆனால், அந்த சக்தி அவசியம் மக்களிடம் மாறுதலை உந்தவேண்டும்.

சிறந்த வேட்பாளர் ஜனாதிபதியாக வேண்டும். நமக்கு கோக் பிடித்திருக்கிறதா? சாப்பிடுவோம். மாருதியை விட ஹூண்டாய் கொடுக்கிற காசுக்கு பயனுள்ளதாகத் தோன்றுகிறதா? வாங்கிக் கொள்வோம். வீட்டு ஊறுகாயை விட ‘ருச்சி’யும், அம்மாவால் மசாலா செய்ய முடியாததால் ‘ஆச்சி’ மசாலாவுக்கும் தாவுகிறோம். எது சரியெனப் படுகிறதோ, எது சௌகரியமோ, எவை முக்கியமோ, எது நன்றாக உழைக்கிறதோ, அதைத் தேர்வு செய்கிறோம். சிறந்த வேட்பாளர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப் படுவார்.

நாடெரின் தேர்தல் அறிக்கைகள் ஆசைகள் நிறையக் கொண்டது. ஒரு மணி நேரத்துக்கு எட்டு டாலர் மட்டுமே கிடைக்கும் தொழிலாளர்களின் கூலியை பத்து டாலராக்குவது; (இதை ஹில்லரி மட்டும் இப்போது முன்வைத்திருக்கிறார்); அலாஸ்காவில் ஆயில் எடுத்து சுற்றுப்புற சூழலைக் கெடுத்த நிறுவனங்களிடம் நஷ்ட ஈடு கறப்பது; குழந்தைகளுக்கு சென்சார் செய்யப்படாத ‘நமீதாவின் மச்சான்‘ வட்டுகளும் விருமாண்டி போன்ற வன்முறைப் படங்களும் எட்டமல் தடுப்பது; என்று நடுத்தர வர்க்கத்தின் வயிற்றில் பாயசம் இடும் எண்ணங்கள்.

ஐரோப்பாவில் இத்தாலி போன்ற பல நாடுகளில் இரண்டுக்கு மேற்பட்ட கட்சிகள், இந்தியாவில் உள்ளது போல் தேர்தல் களத்தில் மக்களை ஈர்க்கிறது. அமெரிக்காவில் மட்டும் இரண்டு கட்சிகளே ஆதிக்கம் செய்யவேண்டும் என்று ஊடகங்கள் வலியுறுத்துகின்றன. சில நாடுகளில் உள்ளது போல் ‘ரெண்டாவது சாய்ஸ்’ வேட்பாளர் யார் என்று டிக் போடுவது, பல பேரை போட்டியிட செய்து அதிக வாக்கு பெறும் இருவருக்கு மட்டும் ‘·பைனல்ஸ்’ நடத்துவது என்று புதிய தேர்தல்முறைகளை அறிமுகபடுத்தாமல், ஜனநாயகத்தில் பங்குபெற விரும்பும் ஒருவரை தடுப்பது நியாயம் அல்ல.

நாடெரின் நிலையை நினைத்தால் என்.டி.ஆரும் பானுப்ரியாவும் நடித்த தூர்தர்ஷன் தொடர் நினைவுக்கு வருகிறது. கடுமையான தவத்தில் இருக்கிறார் விஸ்வாமித்திரர். நாரதரின் மூலம் தன்னுடைய தலைமைக்கு ஆபத்து வருவதை இந்திரன் அறிகிறான். ஊர்வசி, ரம்பா, திலோத்தமை எல்லோரும் கவர்ச்சி நடனம் ஆடியும் அசைய மாட்டேன் என்கிறார் என்.டி.ஆர். மன்மதனின் துணையோடு மேனகை தவத்தை கலைத்து, விஸ்வாமித்திரரோடு வாழ ஆரம்பிக்கிறாள். ஆனந்தமாக சிற்றின்பத்தில் ஆண்டுகள் செல்கிறது. சகுந்தலையும் பிறக்கிறாள். தன் வலிமையை மீண்டும் பெருக்கிக்கொள்ள முனிவர் தவத்துக்கு செல்ல நினைக்கிறார். வானுலகுக்கு மானிடரை கூட்டிச் செல்ல முடியாததால் மேனகை, குழந்தையை மண்ணுலகத்திலேயே தவிக்கவிட்டு சென்று விடுகிறாள்.

புஷ் என்னும் இந்திரன் மேனகை என்னும் நாடெர் மூலம் 2000- ஆம் ஆண்டின் ஜனாதிபதி தேர்தலை வென்றார். சகுந்தலை போல் இராக்/பொருளாதார, இத்யாதி பிரச்சினைகள் அனாதையாய் இருக்கிறது. கன்வ முனிவராக எவர் அமெரிக்க குழந்தையை தத்தெடுக்கப் போகிறார்களோ?!

அசல்: ஈ – தமிழ்: பாலுக்கும் காவல்; பூனைக்கும் தோழன்?

வந்து விட்டார்…அமெரிக்காவின் அங்கண்ண (செட்டியார்).ரால்ப் நாடர்

வந்து விட்டார்…அமெரிக்காவின் அங்கண்ண (செட்டியார்)….. ரால்ப் நாடர்!!!

தேர்தலில் நிற்கப்போவதாக அதிகாரபூர்வாமன செய்தியை இன்று வெளியிட்டார்.

இவரால் ஒரு நல்ல பயனும் கிடையாது. இவரது கொள்கைகள் பெரும்பாலும் டெமாக்ரட் கட்சியை ஒத்ததே. தனக்கு இரண்டு கண்ணும் போனலும் பராவில்லை;டெமாக்ரட் கட்சிக்கு ஒரு கண் போவது முக்கியம் என நினைக்கும் நல்லவர்!! குடியரசு கட்சிக்கு இது ஒரு ஆனந்தமான செய்தி!!

டெமாக்ரட் கட்சிக்கு நல்ல செய்தி அல்ல.

மேலதிக்க தகவல்களுக்கு கிளிக்குங்கள்

http://www.cnn.com/2008/POLITICS/02/24/nader.politics/index.html

ஹில்லரி விடைபெற்றுக் கொண்டாரா – டெக்சாஸ் தர்க்கம்: சரசர குறிப்புகள்

இன்று தொலைக்காட்சியில் பார்த்த ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களின் விவாதத்தில் கவனத்தை ஈர்த்தவை:

  • ‘இளைய தளபதி’ விஜய் பொது நிகழ்ச்சிகளில் அல்லது தான் நடித்த சினிமா படத்திற்கான சன் டிவி பேட்டியில் வரும்போது, பரபிரும்மம் போன்ற நிர்ச்சலனமான முகபாவத்துடன் கலந்து கொள்வார். பராக் ஒபாமாவும் அப்படியொரு அகத்தின் பிரதிபலிப்புகளை வெளிக்கொணராத தோரணையைக் கட்டிக் காத்தார்.
  • இதற்கு நேர் எதிராக இருந்தார் ஹில்லரி கிளிண்டன். இராக் போருக்கு ஆதரவாக வாக்களித்தவர் எவ்வாறு மெகெயினுடன் தர்க்கிக்க முடியும்?‘ என்று ஒபாமா குற்றஞ்சாட்டியவுடன், இருக்கையில் நெளிந்து, ஓரத்திற்கு சென்று பதுங்கிக் கொள்வது போன்ற உடல் மொழி வெளியானது.
  • ஆனால், ஒபாமாவோ, ‘வெறும் வார்த்தைக் கோட்டை எழுப்புகிறார்; அது கூட சொந்த சரக்கல்ல; கட்சித் தலைவர்கள் சொன்னதை ஜெராக்ஸ் போடுகிறார்என்ற ஹில்லரியை, மிகக் கடுமையான குரலில் நடுவில் புகுந்து உலப்பி, கடுமையான தொனியில் கண்டித்தார்.
  • தன்னுடைய நேரம் வந்தபோது, இதற்கு பதிலாக, ‘எனக்கு வாக்களித்த இருபது மில்லியன் மக்கள் மருண்டுதான் போய் இருக்கிறார்களா? அவர்களை அவ்வாறு நம்பிக்கையுடன் செலுத்தவைத்து, என்னைப் பரிந்துரைத்த நாளிதழ்களும் கற்பனையில்தான் மிதக்கின்றனவா? கனவு காண்பது தவறா’ என்று ஒரு போடு போட்டார்.
  • இருவருமே தங்கள் கொள்கைகயும் கோட்பாடும் திட்டங்களும் ஒத்துப் போகின்றன என்றனர்; பெருமளவு வித்தியாசங்களை முன்னிறுத்தவில்லை.
  • ஹில்லரி பேசும்போது, சின்சியராக ஒபாமா எதையோ எழுதிக் கொண்டிருந்தார். கையெழுத்து போட்டு பழகிக் கொண்டாரா அல்லது ஸ்ரீராமஜெயம் எழுதினாரா என்பதை ஹில்லரியிடம் யாரும் வினவவில்லை.
  • ஹில்லரியைப் போலவே, அவர் குறிப்பெடுக்க வைத்திருந்த பேப்பர்களும் படபடவென்று அடித்துக் கொண்டு கவனத்தை சிதற வைத்தன.
  • ஜான் எட்வர்ட்சுக்கு வாக்களித்தவர்களை — இருவர்களுமே குறிவைத்து பேசினாலும், எட்வர்ட்ஸின் பெயரைக் குறிப்பிட்டே வாக்குகளைக் கோரினார் ஹில்லரி. ஒபாமா ஜான் எட்வர்ட்ஸின் பெயரை முன்வைக்கவில்லை. (அவசியமும் இல்லை!)
  • மொத்தத்தில் நிறைய நேரம் ஒபாமா பேசிய மாதிரி காட்சியளித்தது. ஹில்லரியை விட தெளிவாக, கோர்வையாக, சுவையாக, அதிபருக்குரிய மிடுக்குடன் கலக்கினார்.
  • இறுதியாக ஹில்லாரி, ‘என்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட சிக்கல்களை உலகமே அறியும். எனினும், என்னைவிட அதிகமாக பாதிக்கப்பட்டவர்களான — போர்முனையில் அடிபட்டு, கை காலிழந்து வருபவர்கள், வீடுகளுக்கு மாதாந்திர தவணை செலுத்த முடியாமல் பற்றாக்குறையில் தவிப்போர் உட்பட பலரின் பிரச்சினைகளை பார்த்து வருகிறேன்’ என்று தொடங்கி, நடுவில் ஒபாமாவுடன் மேடையைப் பகிர்வதன் பெருமையை உணர்த்தி, பராக்கையும் மனமாரப் பாராட்டிவிட்டு, ஜனநாயகக் கட்சியின் ஒற்றுமையை வலியுறுத்தி, முத்தாய்ப்புடன் முடித்துக் கொண்டார். இதெல்லாம், ஹில்லரிக்கு வாக்குகளாக மாறி, டெக்சஸில் பெருவெற்றியாகி — பிரதிநிதிகளைக் குவிக்கும் வாய்ப்புகள் குறைவு.
  • மேடைக்கு வருவதற்கு முன்பே ஹில்லரி க்ளின்டன் – வெகு சகஜமாக, ஒபாமாவை நெருங்கி, பரஸ்பரம் கைகுலுக்கி, தங்கள் பாதுகாவலர்களின் உயரங்களை ஒப்பிட்டு, ஜாலியாக அரட்டையடித்துக் கொண்டிருந்ததாக, சி.என்.என் தொகுப்பாளர் ஜான் கிங் பகிர்ந்து கொன்டார்.

தொடர்புள்ள தமிழ் சசியின் பதிவு: ஒபாமா – ஹில்லரி டெக்சாஸ் விவாதம்

முழு விவாதத்தையும் சி.என்.என்.னில் வாசிக்கலாம்.

புதிய தந்திரத்துடன் திருமதி.கிளின்டன்

ஒபாமாவின் தொடர்ந்த வெற்றிகளால் குளம்பிப்போயுள்ள திருமதி.கிளின்டன் புதிய திட்டங்களுடன் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. Wisconsin வெற்றியானது, ஒபாமாவின் அதிரடி வெற்றியாகக் கணிக்கப்படுகின்றது. வரும் வியாழக் கிழமை இருவரும் டெக்ஸாசில் ஒரு நேரடி விவாதத்தில் கலந்துகொள்ள உள்ளனர். இதில் தூள் பறக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Ohio, Texas ஆகிய இரு மானிலங்களிலும் வெற்றி பெற்றால், மொத்தத்தில் வெற்றி பெறும் வாய்ப்புள்ளதாக திரு.கிளின்டன் கூடச் சொல்லியுள்ளார்.

தாழ் மட்ட வேலை புரிவாரின் வாக்குகள் டெக்சாசில் செல்வாக்கு செலுத்தும் என்று எதிர்பார்ப்பதால் ஒபாமா, கிளின்டன் இருவரும் Blue color தொழில் புரிபவர்களை இலக்கு வைத்து தமது பிரச்சாரங்களை தொடங்கியுள்ளனர்.

இதேவேளை குடியரசுக்கட்சியின் வேட்பாளராக கிட்டத்தட்ட முடிவாகிவிட்ட மக் கெயின் கூட ஒபாமாவை இப்பவே தன் பேச்சுக்களில் குறி வைக்கத் தொடங்கிவிட்டார். அவர் ஒரு பேச்சில்

“I will fight every moment of every day in this campaign to make sure that Americans are not deceived by an eloquent but empty call for change,”

இளைஞர்களை அதிகமாக ஒபாமா கவர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதாவது 10 இளைஞர்களில் 6 பேர் ஒபாமாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஒபினியன் போல் / Bradley’s Effect/ Devil's alternative

ஒபினியன் போல் / Bradley’s Effect

 

நம் ஊரில் தேர்தல்கள் படு சுவாரசியமானவை. பல கூத்துக்கள் அரங்கேறும். கருணாநிதியின் வசனங்கள், ஜயலலிதாவின் ஆவேசப் பேச்சு, கட்சிக்கு உள்ளேயே ஒருவரை ஒருவர் அடித்து கொள்ளும் காங்கிரஸ், விஜயகாந்தின் புள்ளி விவரப் பேச்சு, கம்யூனிஸ்ட்டின் ஒப்பாரி, வைகோவின் அழுகை, ரத யாத்திரை, எந்த கூட்டணி வைத்தால் வெற்றி பெறுவோம் என்பதை “ஆறாவது ஆறிவோடு” அறிந்து செயல்படும் ராமதாஸ், சுப்பிரமணிய சுவாமி இப்படி பல முகங்கள், பல காட்சிகள்……

பிராப்தம் இருந்தால் நம்க்கு வெற்றிகொண்டான், SS சந்திரன் போன்றோர் பேச்சும், மகளிர் அணி danceசும் தரிசனம் கிட்டும். இது தவிர கட்சிக் கொடி, தோரண்ங்கள், மேடை, பந்தல், கள்ளச் சாராயம், பிரியாணி, பகோடா, டீ, கள்ள வோட்டு, காப்பி குடித்து தினத்தந்தி படித்து விவாதம் செய்யும் மக்கள், இலவச டெலிவிஷன், இலவச உணவு, இலவச பசு, இலவசம் இலவசம்….. இத்யாதி இத்யாதி ,… படு சுவாரசியம்.!! இந்த குப்பையெல்லாம் தேவையா? ஆனால் யோசிக்கும்பொது ஜனநாயகம் தழைக்க ஒரு costly entertainment தேவைப்படுகிறது. இந்த குப்பைகளயே எருவாக்கி நமது ஜனநாயகம் நன்றாகவே வளர்கிறது!!

அமெரிக்காவில் எப்படி? இந்த அளவுக்கு இல்லையா? இங்கு “opinion polls” இந்த ரகத்தை சேர்ந்தது. நாம் காலை எழுந்து காப்பி குடிப்பது போல இங்கு ஜனங்களுக்கு ஏதாவது opinion poll செய்தாக வேண்டும். உதாரணமாக திங்கள் அன்று “இன்னிக்கு என்ன கிழமை” என்று ஒரு opinion poll…. 90% திங்கள், 5% செவ்வாய் , மீதி பேருக்கு ஒரு கருத்தும் இல்லை என்பார்கள். அதிலும் X % வெள்ளைகாரர்கள், Y % கருப்பு இனத்தவர்கள், Z% ஹிஸ்பானிக் என்று ஆராய்ச்சி வேறு. அதைத் தொடர்ந்து விவாதம் என ஈரை பேனாக்கி, பின்னால் பெருமாளாக்குவார்கள். இந்த ப்ரெசிடென்ட் எலக்க்ஷன் ஒரு மல்டி-பில்லியன் தொழில். பத்ரிக்கைகள், டெலிவிஷன் என்று பலருக்கும் அதில் பங்கு உண்டு advertisement வழியாக .

எனக்கு ஒரு கேள்வி மனதில் உண்டாகும்- இந்த சமயத்தில் எல்லாரும் உண்மையைத்தான் சொல்வார்களா என்ன? ஆனால் வாஸ்துவத்தில் பெரும்பாலும் சரியே- சில சம்யத்தைத் தவிர

இப்பொது FOX சானலில் ஒரு வித்யாசமான நிகழ்ச்சி ஆரம்பித்து இருக்கிறது.. MOMENT OF TRUTH” என்று பெயர். ஒரு ஆளைத் தேர்வு செய்து அவரை moderator பல அந்தரங்கமான கேள்விகளை கேட்பார். நாம் நம்முடய நெருங்கிய நண்பர்களிடம் கூட சொல்ல தயங்கும் விஷயங்கள். உதாரணத்திற்கு ஒன்று–

ஒரு Personal Trainer டம் கேட்ட கேள்விகள்- நீங்கள் காமன் showerல் குளிக்கும்போழ்து மற்ற ஆண்களின் ______ பார்த்து ஒப்பிடு செய்வீர்களா??

நீங்கள் தேவைக்கு மேல், உங்களிடம் கற்று கொள்ள வரும் பெண்களை தொடுவீர்களா.. இப்படி பல கேள்விகள். இது எல்லாம் பார்வையாளர்கள் எதிரில், மனைவி or காதலியும் இருப்பார்கள் [நீங்கள் முகம் சுழிப்பது தெரிகிறது.] இவற்றிற்கு நீங்கள் உண்மையான பதில் சொல்ல வேண்டும். ஒரு முக்கியமான விஷயம்.. பதில் சொல்லும் பொது LIE DETECTORல் அவரை லின்க் செய்து இருப்பார்கள்.!!!!

நல்ல வேளை opinion poll’ல் LIE DETECTORல் கட்டி போட்டு கேள்விகள் கேட்பது இல்லை!!

எங்கே விட்டேன்? எந்த சமயத்தில் உண்மை தெரிவது இல்லை என்று??… மற்றவர்க்கு தம்முடைய நிறவெறி தெரியாதவாறு மறைப்பதில்.. இந்த நிறவெறி வெளியே சாதரணமாக தெரிவது இல்லை. கொஞம் இலை-மறைவு காய் மறைவாக….

ஒரு கருப்பு இனத்தவர் தேர்தலில் நிற்கும்பொது இந்த தர்ம சங்கடங்கள் உண்டாகும்.

 

இப்பொது பார்ப்போம்: ஒரு கருப்பு இனத்தவர் VS ஒரு வெள்ளை இனத்தவர் opinion poll’ ல்

Response A: [இவருக்கு கொஞ்சம் நிறவெறி உண்டு]. அதை மறைக்க அவர் தாம் கருப்பு இனத்தவர்க்கே ஓட்டு போடுவதாக கூறுகிறார்.ஆனால் வெள்ளை candidateக்கு ஓட்டு போடுகிறார்.

Response B: [இவருக்கு நிறவெறி கிடையாது]. இவரின் analysis படி வெள்ளை candidate பெட்டெர். ஆனால் மற்றவர்கள் எங்கே நிறவெறி என எண்ணுவார்களோ என்று கருப்பு இனத்தவர்க்கு ஓட்டு என்கிறார். ஆனல் வெள்ளை candidateகு ஓட்டு போடுகிறார்.

இந்த விஷயங்கள் opinion poll’ ல் சரியாகத் தெரிவது இல்லை. இதற்கு “BRADLEY’S EFFECT” என்று பெயர்.

இப்பொது wikipedia லின்க்ல் சென்று படியுங்கள். http://en.wikipedia.org/wiki/Bradley_effect

கலிபோர்னியா Primary தேர்தலில் ஒபாமா முதலில் கிட்ட தட்ட opinion poll’ ல் 10% சத விகிதம் அதிகம். கிட்ட தட்ட அதே சத விகிததில் கிளிண்டனிடம் தோற்றும் போனார்.

 

இப்பொது இது மிக மிக முக்கிய விஷயமாக கருதப்படுகிறது. ஏன் எனில், வரலாற்றில் முதல் முறையாக முக்கிய பதவிக்கு ஒரு ப்ரதான கட்சியின் candidate கறுப்பு இனத்தவர் தேர்வு செய்யப்பட கூடும்.

 

தற்போது டெமாக்ரட் கட்சிக்காரர்கள் செய்யும் யோசனை இதுதான்:

ஹிலாரியா, ஒபாமாவா என்பதை விட நவம்பர் தேர்தலில் மெக்கெய்னை யார் தோற்கடிப்பார்களோ அவர்களே ஜனநாயக கட்சியில் வெற்றி பெற வேண்டும். அந்த வகையில் ஒபாமா தான் மெக்கெய்னை தோற்கடிக்க கூடும்.

 

இதற்கு இவர்கள் opinion poll’ ல் பார்கிறார்கள். இப்பொது McCain vs Clinton hypothetical poll’ ல் McCain 1.7 சதவிகிதம் அதிகம்.

ஆனால் McCain Vs Obama ‘ல் ஒபாமா மெக்கெய்னை விட 4 சதவிகிதம் அதிகம். [[வேறு ஒரு காராணிகள் இல்லாமல் இருந்து இப்பொது தேர்தல் வந்து மெக்கெய்னை 4% சதவிதம் வாங்கினால் Mccain வெற்றி; ஆனால் அமெரிக்கா தோற்றுவிடும். நிறவெறி பூரணமாக போகவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்து விடும்.]]

 

இப்பொது நீங்கள் சொல்லுங்கள்:

 

இந்த opinion poll’ நம்பி ஓபாமா candidate ஆக்கலமா? ஒபாமா பற்றி இனிமேல்தான் எதாவது “பூதம்” கிளம்பும். இந்த 4% நிஜமாகவே அதிகமா அல்லது Bradley’s effect??

OR

கிளிண்டன் வாழ்கை ஒரு ஒபன் புத்தகம். எல்லா பூதங்களும் வந்தாகி விட்டது. 1.7% என்பது கிட்ட தட்ட ஒரு statistical tie . இவரை candidate ஆக்கலமா??

 

சற்றே யோசியுங்கள்.. நான் Irving Wallace எழுதிய Devil’s Alternative புத்தகத்தை படித்துவிட்டு வருகிறேன்!

 

ஒபாமா x ஹில்லரி – விளம்பர மோதல்: டிவி

1. விஸ்கான்சினில் ஹில்லரியின் அம்பு. ‘விவாதம் செய்ய அழைத்தால், ஒபாமா ஓடி ஒளிந்து கொள்கிறார்’ என்கிறார். ‘வெறும் வெட்டிப்பேச்சு உதவுமா’ என்று அஸ்திரம் பலமாகிறது:

அதன் தொடர்ச்சி:

2. சென்ற டிவி விளம்பரத்திற்கான பதிலடி. ‘பழைய குருடி; கதவைத் திறடி’ என்பது போல் அதே அரசியல் என்று சாடுகிறார்.

3. ஹில்லாரி க்ளின்டனின் நேர்மறையான விளம்பரம். எந்த விஷயங்களில் ஒபாமாவின் திட்டங்கள் சறுக்குகின்றன என்பதைத் தெளிவாக்குகின்றன:

4. இது சும்மா ஜாலிக்கு… நக்கல் விட்டுக்கறாங்க:

5. இவர்களின் விளம்பரங்களைக் குறித்த நியு யார்க் டைம்ஸின் ஆய்வு (பெரிய செவ்வ்வாய்க்கு முன்பு தொகுக்கப்பட்டது)