அமெரிக்க அரசுத்துறைச் செயலர் கொண்டலிஸா ரைஸ் அம்மையார் அவர்கள், ஜனநாயக் கட்சி வேட்பாளராகத் தேர்வு பெற வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படும் பராக் ஒபாமாவிடம் மன்னிப்புக் கோரியிருக்கிறார்.
ஒபாமாவின் பாஸ்போர்ட் தகவல்களைப் பெறுவதற்காக, அரசுத்துறையின் ஊழியர்கள், கணினி பாதுகாப்பு விதிகளை மீறியதாக வெளியான தகவலை அடுத்து அவர் மன்னிப்புக் கோரியிருக்கிறார்.
ஒபாமாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும், யாராவது தனது பாஸ்போர்ட் தகவல் கோப்புக்களைப் பார்த்திருந்தால் தான் மிகவும் கவலையடைந்திருப்பேன் என்று கூறியதாகவும் கொண்டலிஸா ரைஸ் தெரிவித்தார்.
ஒபாமா நேற்று மிகச் சிறப்பான உரை ஒன்றை வழங்கியுள்ளார். ‘இன்னும் முழுமையான ஒன்றியம்/ஐக்கியம்'(A more perfect union) என தலைப்பிடப்பட்டுள்ள இந்த உரையில் அவர் பேச எடுத்துக்கொண்ட விதயம் அமெரிக்காவின் ‘இனப்பிரிவினை’.
ஒபாமா சார்ந்துள்ள திருச்சபையின்(Church) மதபோதகர் அமெரிக்காவை கண்டித்துப் பேசிய பேச்சுக்கள் இனப் பின்னணியில் ஒபாமாவுக்கு எதிராக சர்ச்சையை கிளப்பிவிட்டபின் இந்த சமன் செய்யும் முயற்சி ஓரளவுக்கு எதிர்பார்க்கப்பட்டதே என்றாலும், இந்த பேச்சின் வீச்சு வெறும் தன்னிலை விளக்கத்தையும் தாண்டிச் சென்றுள்ளதை உணர முடிகிறது.
பொதுவாக கறுப்பினத்தவர்களைத் தவிர்த்த அமெரிக்க அரசியல்வாதிகள் எளிதில் தாண்டிச்செல்லும் ஒரு விதயமாக இனப்பிரச்சனை இருந்துவருகிறது. ஒபாமா அதன் கொம்புகளைப் பிடித்துக் கொண்டு எதிர்கொண்டிருக்கிறார் என்பதே இந்தப் பேச்சின் முக்கியத்துவம். அவர் இந்த உரையினை வழங்கவும், இனப்பிரச்சனை குறித்து பேசவும் சூழ்நிலையால் கட்டாயப்படுத்தப்பட்டார் என்றாலும் இதன் முக்கியத்துவம் கொஞ்சமும் குறைந்துவிடவில்லை.
‘மக்களாகிய நாம், மேலும் முழுமையான ஒரு ஒன்றியத்தை உருவாக்கும் பொருட்டு…’ (“We the people, in order to form a more perfect union.” ) எனும் அமெரிக்க விடுதலைப் பிரகடனத்தின் முதல் வார்த்தைகளில் துவங்கிய உரை மன எழுச்சியைத்(Insipiration) தூண்டும் விதத்தில் அமைந்திருந்தது.
முதலில் இனப்பிரச்சனை உண்மையானதும், கவனிக்கப்படவேண்டியதுமான ஒன்று என்பதை ஒபாமாவின் உரை உணர்த்தியது. அதை கடந்து செல்ல அவர் முன்வைக்கும் ஒரே வழி சேர்ந்து செயல்படுவது என்பதையே. அத்தகைய ஒருங்கிணைப்பு சாத்தியம் என கடவுளின் பேரிலும், அமெரிக்க மக்க்லின் பேரிலும் தனக்கிருக்கும் நம்பிக்கையாலேயே தான் அதிபர் பதவிக்கு போட்டியில் குதித்தேன் என்றார்.(I chose to run for the presidency at this moment in history because I believe deeply that we cannot solve the challenges of our time unless we solve them together – unless we perfect our union by understanding that we may have different stories, but we hold common hopes; that we may not look the same and we may not have come from the same place, but we all want to move in the same direction – towards a better future for of children and our grandchildren. )
ஒபாமாவின் பேச்சு அவர் முஸ்லிம் மதத்தவர் என்பவர்களின் பிரச்சாரங்களுக்கு எதிர்ப்பாகவும் அமைந்தது. நேரடியாக அவர் இதுகுறித்து பேசவில்லையென்றாலும் உரையில் அழுத்தமாக அவரது கிறீத்துவப் பின்னணி முன்வைக்கப்பட்டது.
தான் வெள்ளையினப் பாட்டியினால் வளர்க்கப்பட்டவன் என்றும் கறுப்பர்கள் குறித்து அவரின் இயல்பான பயத்தையும் அவ்வப்போது அவர் சொன்ன வெறுப்புச் சொற்களையும் முன்வைத்து தன் பாட்டியை எப்படி தன்னால் ஒதுக்க இயலாதோ அதே போலவே மதபோதகர் ஜெரமையா ரைட்டையும், அவர் பிரதிபலிக்கும் கறுப்பினத்தையும் தன்னால் நிராகரிக்க இயலாது என தெரிவித்தார் ஒபாமா. இதன்மூலம் தன் வெள்ளையினப் பின்னணியைச் சொல்கிறார்.
தன் மனைவியின்வழியே தன் குடும்பத்திலும், அவர் பிள்ளைகளிடமும் அடிமைகளினதும், அடிமைகளின் எஜமானர்களினதுமான இரத்தம் ஓடுகிறது எனச் சொல்லி தன் கறுப்பினப் பின்னணியை முன்வைத்தார். (I am married to a black American who carries within her the blood of slaves and slaveowners – an inheritance we pass on to our two precious daughters.)
இந்த அதிபர் தேர்தலின் மூலம் அமெரிக்காவின் இனப்பிரச்சனை முடிவுக்கு வந்துவிடும் என நம்புமளவுக்குத் தான் இளகியமனம் படைத்தவனல்ல என்று உண்மையை உணர்த்துகிறார். (Contrary to the claims of some of my critics, black and white, I have never been so naïve as to believe that we can get beyond our racial divisions in a single election cycle, or with a single candidacy – particularly a candidacy as imperfect as my own.)
ஜெரமையா ரைட் தன்னை கிறீத்துவத்திற்கு அறிமுகப்படுத்தியவர், தன் திருமணத்தை நடத்தியவர், தன் மகள்களுக்கு ஞானஸ்னானம் வழங்கியவர் எனத் தன் கிறீத்துவப் பின்னணியை அழுந்தச் சொல்கிறார் ஒபாமா. மதபோதகர் ஜெரமையாவின் பிரிவினை கருத்துக்களோடு தனக்கு உடன்பாடில்லையென்றும் ஏற்கனவே அதற்கான கண்டனத்தை தெரிவித்துவிட்டதாயும் சொன்ன ஒபாமா ஜெரமையாவை அத்தகைய சர்ச்சைக்குரிய கருத்துக்களை உடையவர் மட்டுமே எனத் தான் நினைத்திருந்தால் தான் வேறு திருச்சபைக்கு மாறியிருப்பேன் எனக் கூறினார். கறுப்பின அடிமைத்தளத்தின், அதன்பின் வந்த சமூக, அரசியல் இரட்டைநிலைகளின் விளைவுகளை அனுபவித்துணர்ந்த கறுப்பின மூத்தமக்கள் ஒரு தலைமுறையினரிடம் இன்னும் அமெரிக்கா குறித்த சோர்வுணர்வு மிஞ்சி நிற்பதாயும், அதன் வெளிப்பாடுகள் தவிர்க்க இயலாததாயும் உள்ளதை சுட்டிக்காட்டினார். கறுப்பினத்தவர்கள் பொருளாதார, சமூக ரீதிகளில் தனிப்படுத்தப்பட்டிருப்பதை உணர்த்துவதாயமைந்தது அவர் பேச்சின் முக்கிய பகுதிகள் சில.
இதைப்போலவே அமெரிக்க வெள்ளையினத்தவர் மத்தியில் கறுப்பினத்தவர் மேம்பட்டிற்கான அஃபர்மேட்டிவ் ஆக்ஷன் போன்ற ஒதுக்கீட்டுக் கொள்கையினாலும், கறுப்பினத்தவரின் வன்முறைக் கலாச்சாரத்தினாலும் ஏற்பட்டிருக்கும் அதிருப்தியும் உண்மையானதும் கவனிக்கத்தக்கதும் என ஏற்றுக்கொண்டார்.
ஆயினும் இந்த அதிருப்திகளையும், சோர்வுனர்வுகளையும் மிஞ்சி ஒருங்கிணைவதுவே ஒரு மேலும் முழுமையான ஒன்றியத்திற்கான பாதை என்பதை வலியுறுத்தினார். (But I have asserted a firm conviction – a conviction rooted in my faith in God and my faith in the American people – that working together we can move beyond some of our old racial wounds, and that in fact we have no choice is we are to continue on the path of a more perfect union. )
அரசியல்வாதிகள் எளிதில் எடுத்துப் பேசாத இனப்பிரச்சனையை முன்நிறுத்தி பேசியதே பராக் ஒபாமாவின் உரையை வரலாற்று சிறப்புமிக்கதாக்கிவிடுகிறது. கடந்த சில வருடங்களில் அமெரிக்கர்களுக்கு கிடைக்கப் பெறாத ஒரு போதனையாகவே(Sermon) இது அமைந்தது. பராக்கின் அழகியலும் ஆழமும் கலந்த உரைகள் இக்குணங்கள் அறவே அற்ற அதிபர் புஷ்ஷுக்கு ஏற்ற மாற்றாய் இவரை முன்நிறுத்துகிறது.
ஒபாமாவின் உரை இனப்பிரச்சனைகளுக்கு தீர்க்கமான தீர்வுகளை முன்வைக்கவில்லை என்பதே உண்மை. அவர் இனப்பிரச்சனைகளை முறியடிக்கும் செயல்திட்டங்களை முன்வைக்கவில்லை. அது அமெரிக்காவின் முழுமை நோக்கிய பயணத்தில் எளிதில் கைகூடுவதல்ல என்பதை உணர்ந்துள்ளவராகவே அவர் பேசினார். எனினும் அவர் உரை இன்றைய நிலையில் இனப்பிரச்சினையை கடந்து செல்வதன் அவசியத்தையும், ஒருங்கிணைந்த செயல்பாட்டிற்கான தேவையையும் முன்வைத்தது.
உலக அரசியலில் அண்மையில் இதுபோல ஒரு எழுச்சியூட்டும் உரையை கேட்டிருப்பது அரிது.
‘நீங்கள் கேட்க விரும்புவதை மட்டுமல்ல நீங்கள் கேட்கவேண்டியவற்றையும் பேசுவேன்’ எனும் ஒபாமாவின் பிரசார வரிகள் நேற்றைய உரையில் உயிர்பெற்றன என்பதில் சந்தேகமில்லை.
The document (Declaration of independance) they produced was eventually signed but ultimately unfinished. It was stained by this nation’s original sin of slavery, a question that divided the colonies and brought the convention to a stalemate until the founders chose to allow the slave trade to continue for at least twenty more years, and to leave any final resolution to future generations.
And yet words on a parchment (referring to the constitution) would not be enough to deliver slaves from bondage, or provide men and women of every color and creed their full rights and obligations as citizens of the United States.
I have brothers, sisters, nieces, nephews, uncles and cousins, of every race and every hue, scattered across three continents, and for as long as I live, I will never forget that in no other country on Earth is my story even possible.
it is a story that has seared into my genetic makeup the idea that this nation is more than the sum of its parts – that out of many, we are truly one.
Like other predominantly black churches across the country, Trinity embodies the black community in its entirety – the doctor and the welfare mom, the model student and the former gang-banger. Like other black churches, Trinity’s services are full of raucous laughter and sometimes bawdy humor. They are full of dancing, clapping, screaming and shouting that may seem jarring to the untrained ear. The church contains in full the kindness and cruelty, the fierce intelligence and the shocking ignorance, the struggles and successes, the love and yes, the bitterness and bias that make up the black experience in America.
Ironically, this quintessentially American – and yes, conservative – notion of self-help found frequent expression in Reverend Wright’s sermons. But what my former pastor too often failed to understand is that embarking on a program of self-help also requires a belief that society can change.
பேஸ்டோர் என்பவர்: A pastor is an official position within a Protestant congregation, and related to the positions of priest or bishop within the Anglican, Roman Catholic and Orthodox Churches.. என்கிறது (உ)விக்கிபீடியா. இப்படியாக பேஸ்டோர் என்பவரை ஒரு மதகுரு, குறிப்பிட்டவொரு கிருத்துவ ஆலயத்தில் பொறுப்புள்ள பதவி வகிப்பவர் என பொருள் கொள்ளலாம். கிருத்துவ குடும்பங்களில் நல்ல நிகழ்வுகளோ, குழப்பங்களோ அல்லது துயரங்களோ ஏற்படும் போது தகுந்த அறிவுரைகள், ஆலோசனைகள் மற்றும் ஆறுதல்களை கொடுத்து அரவணைப்பவர் பேஸ்டோர் என்றும் செவி வழியால் கேட்டதுண்டு; கண்ணுற்று பார்த்ததுமுண்டு நன்றி: எல்லோருக்கும் பிடிக்கும் ரேமண்ட்(டு)! – Marie’s Moments – 1st clip.
பராக் ஹூ. ஒபாமாவும் அவருடைய மனைவி மிஷேலும் 20 வருடங்களாக ஷிகாகோ நகரின் ‘Trinity United Church of Christ’ – ல் உறுப்பினர்களாக இருந்து வருகிறார்கள். ஒன்றல்ல, இரண்டல்ல 20 வருடங்கள். இங்கு 40 வருடங்களாக பேஸ்டோராக இருந்து வருபவர் ஜெரமையா (உ)ரைட். பெயரில் மட்டும்தான் பாதி ரைட், பேசுவதெல்லாம் எரிகிற தீயில் எண்ணையை ஊற்றுகிற ரகம்தான். சொல்லப்படும் போதனை மொழியில் ஓரிரு கூரிய உண்மைகள் இருந்தும், ஜெரமையாவின் தயக்கமில்லாத குறுகிய இனவாதத்தால், வெறுப்புகளால் அவை அடிப்பட்டு போகின்றன.
ஜெரமையா #1
ஜெரமையா # 2
கடந்த சில நாட்களில் திறனலை(??) (am radio: AM works by varying the strength of the transmitted signal in relation to the information being sent) வலதுசாரி வானொலிகளில் ஜெரமையா பற்றியும், இத்தனை வருடங்களாக அவருடைய ஆலய குழுவிலிருக்கும் ஒபாமா பற்றியும் ஓயாமல் லட்சார்ச்சனைகள், 2ம் ஜாம பூஜை இன்னபிற என விடாமல் நடந்து கொண்டுள்ளன. உள்ளூர் வானொலியிலிருந்து, பெரியண்ணன் மகா ரஷ் வரை எல்லோருக்கும் வெறும் வாய்க்கு கிடைத்த பிரிட்டானியா பிசுகோத்து போட்ட மிக்சர் மாதிரி ஆகிவிட்டது திறனலை வானொலி. main stream media என்றழைக்கப்படும் இடதுசாரி நாலாம் எஸ்டேட்டிலோ இது குறித்து பேச்சே இல்லை- drive by media எனும் இடதுகோடி இடதுசாரிகளிடமும் இது குறித்து ஏதும் எதிர்பார்க்ககூட கூடாது.
ஆரம்பத்திலிருந்தே ஓபாமாவின் பேச்சுத்திறமையை தவிர்த்து, ஒரு வாக்காளன் என்ற முறையில் இதுவரை ஆழமாக அவரிடம் எதையும் என்னால் பார்க்க முடிந்ததில்லை. மஹூமூட் அகமடிநிஜாடுடனும், கிம்-ஜோங்-யில் லுடனும் நேரடி பேச்சுகளில் ஈடுபடுவேன் என அவர் உரைத்தது, பெரும் களேபரத்தை என்ன்னிடம் உண்டு பண்ணியிருந்தது. கேனடாவுடன் நேஃப்டா குறித்து அடித்த பல்டி வேறு அவநம்பிக்கையை அதிகரித்திருந்தது. இன்றைக்கு ஹஃப்ஃபிங்க்டன் போஸ்ட்டில் அவருடைய நேர்காணலை எடுத்து போட்டிருக்கிறார்கள். இனிமேல்தான் படித்து பார்க்க வேண்டும். ஜெரமையாவுக்கும் அவருக்கும் ஒரு தெளிவான வேறுபாடை ஓபாமாவால் காண்பிக்க முடியாமல் போனால், இனிமேல் அவருக்கு கீழிறங்கும் நிலைதான் எனத் தோன்றுகிறது.
2000 ல் டூப்யா க்கு வாக்களித்துவிட்டு ஏமாந்து போனதும், விருப்பமில்லாமல் 2004 ல் கெர்ரிக்கு வாக்களித்துவிட்டு மூளையில் மலச்சிக்கல் இருந்தது போல் உணர்ந்ததும் மறந்து போகவில்லை. என்னுடைய வாக்கு, வருங்காலத்தில் என் மகனின் எதிர்காலத்தையும் அவருடைய குழந்தைகள் என வரக்கூடிய சந்ததிகளை பாதிக்கும் நிகழ்வுக்கு கூட அடிகோலாகலாம் என என்னும் போது மனது அரண்டு போகிறது. இன்றைய தேதிக்கு அதிபராக கூடிய மூவரில், ஜான் மெக்கெய்ன் அவருடைய ஈராக் போர் குறித்த முடிவை மாற்றிக் கொண்டால், ஒரு வேளை நான் அவருக்கு வாக்களித்து அருள் பாலிக்கலாம்.. யார் கண்டார்.
என்னை பெரும் குழப்பத்தில் விட்டதற்கு நெப்ரேஸ்கா மாநில செனடர் Chuck Hagel – ஐ தான் குறைகூற வேண்டும். அவர் தேர்தலுக்கு நின்றிருந்து குடியரசு கட்சியின் வேட்பாளராக வர முடிந்திருந்தால் முடிவு செய்வது இலகுவாயிருக்கும்.
மிசிசிப்பியில் ஒபாமா கிளின்டனை வெற்றிகொண்டுள்ளார். இதன் படி தொர்ந்து ஒபாமா முன்னிலையில் உள்ளார். இங்கு அதிகமாக கறுப்பினத்தவர் இருந்ததால் இந்த வெற்றி முன்பே எதிர்வு கூறப்பட்டதுதான்!
என்ன அப்துல் கலாம் மாதிரி ஒபாமா இறங்கிவிட்டார் என்று நினைக்வேண்டாம். அவர் சொன்னது ஹில்லாரியை நம்மை அல்ல. இவர்களின் சண்டை குழையடியை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது. சீக்கிரம் ஒரு முடிவுக்கு வந்தால் அடுத்த கட்ட சண்டைக்கு தயாராகலாம். அடுத்த கட்டத்தில் மெக்கெயினை சந்திக்க வேண்டும் அதில் கட்டாயம் தாவு தீருவது நிச்சயம். அனுபவமிக்க மெக்கெயினை கொஞ்சமாவது ஹில்லாரி சமாளிப்பார்.ஒபாமா தேறமாட்டார். அனுபவமில்லை அனுபவமில்லைன்னே ஒரங்கட்டிவிடுவார் மெக்கெயின். ஹில்லாரி முன்னுக்கு பின் முரணாக பேசிவருகிறார் அவரும் தனியாக நின்றால் உதை வாங்குவது நிச்சயம். இவர்கள் இருவரும் கடைசியில் ஒன்றாக ஜனாதிபதி உப- ஜனாதிபதி என்று (dream ticket) போட்டி போடலாம் என்றும் பேசி வருகிறார்கள். இதற்கு போனவாரம் ஹில்லாரி கொஞ்சம் நூல் விட்டு பார்த்தார். அதாவது ஹில்லாரி தலையாம் ஒபாமா வாலாம் நல்லாயிருக்கும் அப்படின்னு.’நீ கொஞ்சம் அவல் எடுத்துட்டு வா நான் கொஞ்சம் உமி எடுத்துட்டு வரேன் ரெண்டு பேரும் ஊதி ஊதி சாப்பிடலாம்’ அப்படிங்கற மாதிரி இல்லை. உதை வாங்குவது இந்தம்மா ஒபாமா வாலா இருக்கணுமாம். அதுக்கு தான் ஒபாமா இப்படி சொல்லி இருக்கார். யாரு பாத்து என்ன கேள்வி கேட்டே அப்படின்னு வாங்கு வாங்குன்னு வாங்கி இருக்கார். இங்கன போய் படிங்க.
டெமோக்ராட்ஸ் வேட்பாளர் இன்னும் முடிவானபடியில்லை. ‘பெரிய பிரதிநிதிகள்’ எனப்படும் சூப்பர்டெலகேட்ஸ் கையில்தான் ஒபாமாவா/ஹில்லரியா என்பது இருக்கிறது.
க்ளின்டனுக்கு (‘மக்களைப் பயமுறுத்துகிறார் ஹிலாரி’: ஒபாமா) சற்றும் சளைக்காத ஒபாமா அணியினர், ‘ஹில்லரி என்பவர் அரக்கி‘ என்று பேட்டி கொடுக்க, பேட்டி கொடுத்தவருக்கு கல்தா கொடுத்தார் ஒபாமா.
மேலும் விவரங்களுக்கு: BBC NEWS | Americas | Obama aide quits in ‘monster’ row: “An adviser to Barack Obama has resigned after a Scottish newspaper quoted her calling rival US Democratic candidate Hillary Clinton ‘a monster’.”
ஒபாமாவின் இந்த மாதிரி தூஷணைகளுக்கு ‘முடிவல்ல.. ஆரம்பம்’ என்கிறது நியூஸ்வீக்: Obama’s Next Moves | Newsweek Politics: Campaign 2008 | Newsweek.com: “Obama’s aides are more than ready to turn their half-hearted criticism into a full-blown attack on the Clintons. Among the targets on the Obama campaign’s list: the Clintons’ tax returns, Bill Clinton’s international business relationships and the secret donors to the Clinton foundation.”
ஹிலரி க்ளின்டன் அணியினரும் ‘துரத்தி துரத்தி அடிப்பதில் மோனிகா லூயின்ஸ்கி விவகாரத்தைக் கையிலெடுத்த வழக்கறிஞர் கென்னத் ஸ்டார் போல் ஒபாமா வெறித்தனமாக’ செயல்படுகிறார் என்றனர்.
“ஒபாமாவா, ஜான் மெக்கெயினா என்று பார்த்தால் – பராக்கை விட எதிர்க்கட்சியின் மெகெயினே அடுத்த ஜனாதிபதியாக உகந்தவர்” என்று ஹில்லாரியே நேரடியாகப் பேட்டியளித்தார்.
மேலும் விவரங்களுக்கு: Confronting the Kitchen Sink – New York Times: “if a choice on national security had to be made today between Senators Obama and McCain, voters — according to Mrs. Clinton’s logic — should choose Senator McCain. That is a low thing for a Democratic presidential candidate to do to a rival in a party primary.”
நாப்டா விவகாரத்தில் க்ளின்டனும் ஒபாமாவும் அடிக்கும் பல்டிகளுக்கு குடியரசு நாயகரான ஜார்ஜ் புஷ்ஷும், ஜான் மெகெயினுமே தேவலாம் போல என்று சர்வதேச ஊடகங்கள் அபிப்ராயிப்பதாக பரீத் ஜகாரியா தெரிவித்துள்ளார்: Zakaria: Dems vs. Free Trade | Newsweek Voices – Fareed Zakaria | Newsweek.com: “Listening to the Democrats on trade ‘is enough to send jitters down the spine of most in India,’ says the Times Now TV channel in New Delhi. The Canadian press has shared in the global swoon for Obama, but is now beginning to ask questions. ‘What he is actually saying—and how it might affect Canada—may come as a surprise to otherwise devout Barack boosters,’ writes Greg Weston in the Edmonton Sun.”
என்னவாக இருந்தாலும் ஹில்லரி கிளிண்டன் இடதுசாரி போல் பேசினாலும், ‘பழைய பாட்டில்; பழங்கஞ்சிதானே’ என்று ஒபாமா பேச்சுக்களின் சாத்தியக்கூறுகளை ராபர்ட் ரீச் முன்வைக்கிறார்: Opinions: ‘Idealism, not leftism’ by Robert Reich | Prospect Magazine March 2008 issue 144: “She wants universal healthcare, but won’t support a ‘single-payer’ plan like Britain’s NHS, which is the best way to control medical costs. She won’t commit to raising taxes on the rich to finance social programmes, except for rolling back the Bush tax cuts.”
இந்த வாதத்தை தற்போதைய வோட்டு கணக்கெடுப்புகளை வைத்து, வாக்காளர்களின் பின்னணியைக் கொண்டு அலசி, மறுத்துப் பேசும் ஆராய்ச்சி: RealClearPolitics – HorseRaceBlog – Demography and the Democratic Race: “It is a matter of income. Whites who make more money tend to support Obama. Whites who make less money tend to support Clinton.”
ப்ளோரிடாவும் மிச்சிகனும் அவசரப்பட்டு தேர்தல் நடத்தியதால் தங்களின் பிரதிநிதிகளையும் வாக்குகளையும் மதிப்பிழந்து நிற்கிறது. இவ்விரு இடங்களிலும் பராக் ஒபாமா கலந்துகொள்ளவில்லை. எனவே, ஹிலாரி எளிதில் வென்றிருந்தார். பராக் போட்டியிடாமல் வென்ற பிரதிநிதிகளையும் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்வோம் என்கிறார் கிளிண்டன். மறுதேர்தல் நடத்துவது நியாயம் என்கிறார் ஒபாமா.
ஜனநாயகக் கட்சி எப்படியும் ஜெயிக்க முடியாத இடங்களை, பராக் ஒபாமா தொடர்ந்து வென்று வருகிறார். அதே போல் வையோமிங் மாகாணத்திலும் ஜெயித்துள்ளார். ஒஹாயோவிலும் டெக்சஸிலும் தோற்ற புண்பட்ட நெஞ்சுக்கு இது பர்னாலாக அமைந்திருக்கிறது.
இவ்வளவு தூரம் ஜனநாயகக் கட்சியின் குடுமிப்பிடி குழாயடி சண்டைகளை சொல்லிவிட்டு, குடியரசு வேட்பாளர் மெக்கெயின் குறித்து எதுவும் சொல்லாமல் முடிக்கக் கூடாது என்பதற்காக…
ஜான் மெகெயினின் கோபம் பிரசித்தமானது. இந்த தடவை ஊடகங்களும் அவருடன் ‘மோகம் முப்பது நாளாக’ கொஞ்சிக் கொண்டிருக்க, அவரும் தன்னுடைய அறச்சீற்றங்கள கட்டுக்குள் வைத்தே வந்திருக்கிறார்.
ஆனால், அந்த புகழ்பெற்ற முன்கோபம் எட்டிப் பார்த்திருக்கிறது. ‘சென்ற 2004 தேர்தலில் தங்களை ஜான் கெர்ரி தூணை ஜனாதிபதியாக நிற்கக் கோரினாரா’ என்று முன்பு கேட்டிருந்தபோது ‘அப்படியெல்லாம் பேச்சே எழவில்லை’ என்று புறங்கையால் ஒதுக்கியிருந்தார். தற்போது முன்னுக்குப் பின் முரணாக அவ்வாறு பேசியதை ஒப்புக் கொண்டதை சுட்டிக் காட்டியதும் சினம் தலை தூக்கியிருக்கிறது.
மேலும் விவரங்களுக்கு: McCain Asked About Kerrys V.P. Offer – The Caucus – Politics – New York Times Blog: “when Mr. McCain was asked about the conversation – and why he said in an interview with The New York Times in May 2004 that he had not even had a casual conversation with Mr. Kerry on the topic – Mr. McCain displayed some of the temper that he has largely kept under control in this campaign.”
இன்றைய ஜனநாயக கட்சியின் முன்னோட்ட தேர்தலில் ஹில்லரி மூன்று மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளார். ஒபாமா ஒரு மாநிலத்தில் மட்டும் வெற்றி பெற்றிருக்கிறார். மிக முக்கிய மாநிலங்களான ஓகாயோ, டெக்சாஸ் ஆகிய இரு மாநிலங்களிலும் ஹில்லரி வெற்றி பெற்றுள்ளார். இந்த இரு மாநிலங்களிலும் வெற்றி பெற்றால் தான் இந்த போட்டியில் ஹில்லரி தொடர முடியும் என்ற நிலை இருந்தது.
ஹில்லரியின் வெற்றிக்கு முக்கிய காரணங்கள்
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒபாமா நாப்டா – NAFTA குறித்த சில சர்ச்சைகளில் சிக்கினார். இது ஒபாமாவின் பொருளாதார நிலைப்பாடுகளை கேள்விக்குள்ளாக்கி இருந்தது.
ஓகாயோ போன்ற தொழிற்சாலைகள் அதிகம் இருக்கும் மாநிலங்களில் கிளிண்டனுக்கு செல்வாக்கு அதிகம். இம் மாநிலங்களில் இருக்கும் தொழிற்சாலைகள் சீனா போன்ற நாடுகளுக்கு செல்வது முக்கிய தேர்தல் பிரச்சனையாக இருந்தது. ஹில்லரியின் பொருளாதார அனுபவத்திற்கு கிடைத்த வெற்றியாகவும் இந்த வெற்றியை பார்க்க முடியும்.
லேட்டினோ பிரிவினரின் ஆதரவு
பெரிய மாநிலங்களில் பெரும்பாலும் ஹில்லரியே வெற்றி பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஹில்லரியின் வெற்றி ஜனநாயக கட்சியின் முன்னோட்ட தேர்தல் தொடர்ந்து நீடித்துக் கொண்டே இருக்கும் என்பதை தெளிவாக்குகிறது. போட்டியின் போக்கு ஒபாமா சார்பாக இருந்த நிலையில் இருந்து மாற்றம் அடையுமா என்ற கேள்வியும் எழுகிறது. மெக்கெயினின் போர் அனுபவத்திற்கு எதிராக ஹில்லரியின் பொருளாதார அனுபவம் ஒரு வலுவான வாதமாக இருக்கும் என ஜனநாயக கட்சியினர் நினைக்க கூடும்.
ஒபாமா இந்த தேர்தலில் இது வரை பெரிய அளவிலான “கொள்கை குழப்பங்கள்” குறித்த தாக்குதல்களை எதிர்கொண்டதில்லை. எனவே நாப்டா தொடர்பான ஹில்லரியின் தாக்குதலுக்கு ஒபாமாவால் சரியான பதிலடியை கொடுக்க முடியவில்லை. ஒபாமா தன்னுடைய பிரச்சார உத்திகளை மாற்ற வேண்டிய தேவையும் எழுந்துள்ளது.
குடியரசுக் கட்சியின் மெக்கெயின் வெற்றி பெற்றுள்ளார். தன்னுடைய தேர்தல் உத்திகள் எப்படி இருக்கும் என்பதையும் இன்றைய பேச்சில் தெளிவுபடுத்தியுள்ளார்
– ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறாது
– பொருளாதாரம் உலகமயமாக்கல் பாதையில் தான் நகரும். எந்த மாற்றமும் இருக்காது
என்பன அவரது கொள்கையில் முக்கிய அம்சங்கள். இது புஷ் ஆட்சியின் தொடர்ச்சி என ஜனநாயக கட்சியினர் பிரச்சாரம் செய்ய முடியும். ஆனால் முதலில் ஜனநாயகக் கட்சியினர் தங்கள் வேட்பாளரை முடிவு செய்தாக வேண்டும். ஒபாமா-ஹில்லரி இடையேயான போட்டி தொடர்ந்து நீடித்தால் மெக்கெயினுக்கு சாதகமாக மாறக் கூடிய வாய்ப்பு உள்ளது
அமெரிக்க முன்னோட்ட தேர்தல் (Primary) கிட்டதட்ட இறுதி நிலைக்கு வந்துள்ளது. நாளை 4 முக்கிய மாநிலங்களில் நடக்கும் தேர்தல் குடியரசுக் கட்சியில் மெக்கெயினை குடியரசுக் கட்சியின் வேட்பாளாராக தேர்வு செய்யும். ஹக்கபீ தொடர்ந்து போட்டியில் இருந்தாலும், அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு சிறிதும் இல்லை. எனவே நாளை மெக்கெயின் 1,191 என்ற இலக்கினை பெறக்கூடும் என்றே தெரிகிறது.
நாளை அனைவரின் கவனமும் ஜனநாயக் கட்சியின் மீது தான் இருக்கும். ஒபாமாவா ? ஹில்லரியா என்ற கேள்விக்கு விடை கிடைக்குமா என்பது நிச்சயமற்றதாகவே உள்ளது. ஒபாமா டெக்சாஸ், ஒகாயோ ஆகிய மாநிலங்களில் வெற்றி பெற்றால், ஹில்லரி போட்டியில் இருந்த விலகக் கூடும். ஹில்லரி வெற்றி பெற்றாலோ, அல்லது இருவரும் சரிசமமான வெற்றியை பெற்றாலோ, இந்த போட்டி ஆகஸ்ட் வரை தொடர்ந்து கொண்டே இருக்கும்.
ஜனநாயக கட்சியில் யார் வெற்றி பெற்றால் நல்லது என்ற கேள்விக்கு மிகச் சூடான விவாதம் தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு ஊடகங்களில் நடந்து வருகிறது. ஜனநாயக கட்சியின் வேட்பாளர்களான ஹில்லரி, ஒபாமா ஆகிய இருவருமே மிகச் சிறந்த வேட்பாளர்கள். இந்த இருவரில் யார் சிறந்தவர் என்பதை தேர்ந்தெடுப்பது சற்று கடினமாகவே உள்ளது. இந்த இருவரில் சிறந்தவர் யார் என்ற கேள்வி, எனக்கும் உண்டு. நான் அமெரிக்காவில் வாக்களிக்கும் உரிமை உள்ளவன் அல்ல. என்றாலும் உலகின் மிக முக்கியமான ஒரு நாட்டின் தேர்தல், பல நாடுகளின் மீது கடுமையான தாக்கத்தினை ஏற்படுத்துகின்ற ஒரு நாட்டின் தலைமை எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறது என்பதிலே எனக்கு ஆர்வம் உண்டு. ஒரு பார்வையாளனாக நான் கவனித்தவற்றை பதிவு செய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.
2. For Democrats, a Pivotal Night, but in Which Direction? – New York Times: தற்போதைய நிலையில் ஏப்ரல் 22 வரை ஹில்லரி க்ளின்டன் தாக்குப்பிடிப்பார் என்றே எண்ணுகிறேன். ஓரளவிற்கு இது ஜனநாயகக் கட்சிக்கு நல்ல விஷயம். சென்ற தேர்தலில் வெகு சீக்கிரமே ஜான் கெர்ரி முடிவானது, அவருக்கு சாதகமான ஒன்றாக அமையவில்லை. இன்றைய தேதியில் ‘வெர்மான்ட்’ மாகாணம் தவிர வேறு எதுவுமே ஒபாமாவுக்கு கிடைக்காது போல் படுகிறது.
3. Surveying Ohio’s Democratic landscape – Los Angeles Times: “Geography, a popular governor and big-city mayors hold the keys to winning the primary.” – உள்கட்சி அரசியலைப் பார்த்தால் தமிழகக் கூட்டணியே எவ்வளவோ தேவலாம் போல் தோன்றுகிறது.
மக்களைப் பயமுறுத்தி வாக்குகளைப் பெறும் முயற்சியில் ஹிலாரி இறங்கியிருப்பதாக பராக் ஒபாமா குற்றம்சாட்டியிருக்கிறார்.
ஜனநாயகக் கட்சியின் சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஒபாமாவும், ஹிலாரியும் கடுமையாக மோதிவருகின்றனர். இந்தப் போட்டியில் ஹிலாரியைக் காட்டிலும் சற்று முன்னிலையில் இருக்கிறார் ஒபாமா. வரும் 4-ம் தேதி ஓஹியோ, டெக்ஸாஸ் ஆகிய முக்கிய மாநிலங்களில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் தேர்தல்கள் நடக்க இருக்கின்றன. இந்த இரு மாநிலங்களிலும் ஹிலாரிக்கு தோல்வி ஏற்பட்டால் அதன்பிறகு அவர் போட்டியில் இருப்பதில் அர்த்தமில்லை.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை ஹிலாரி தொலைக்காட்சி விளம்பரம் ஒன்றை வெளியிட்டார். அதில், குழந்தைகள் தூங்கிக் கொண்டிருக்கும் காட்சி முதலில் காட்டப்படுகிறது. தேசிய பாதுகாப்பு அவசர நிலை தொடர்பான தொலைபேசி அழைப்பு வந்தால் அதற்குப் பதிலளிக்கக்கூடிய தகுதியானவர் யார் என்ற கேள்வியுடன் விளம்பரப்படம் முடிவடைகிறது.
பெண்களின் வாக்குகளைக் கவரும் நோக்கில் இந்த விளம்பரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அந்த விளம்பரம்:
அதை கிண்டலடிக்கும் ஒபாமா ஆதரவாளரின் விமர்சனம்:
சமீபத்தில் ஹாலிவுட் நடிகர் ஜாக் நிக்கல்ஸன் க்ளின்டனை ஆதரித்தார்; அந்த விளம்பரம்:
டெக்ஸாஸில் பிரசார கூட்டம் ஒன்றில் பேசிய ஒபாமா, தாம் இது போன்ற விளம்பரங்களை பார்த்திருப்பதாகவும், இது மக்களின் பயமுறுத்தி வாக்குகளைப் பெறும் முயற்சி எனவும் கூறினார்.
இந்தமுறை இதுபோன்ற முயற்சிகள் வெற்றி பெறப்போவதில்லை. யார் தொலைபேசி அழைப்புக்குப் பதிலளிக்கிறார்கள் என்பது முக்கியமல்ல. அந்தப் பிரச்னைக்கு எந்தமாதிரியான தீர்வை நீங்கள் தருவீர்கள் என்பதுதான் கேள்வி என்றார் ஒபாமா.
தொடர்ந்து 11 மாநிலங்களில் நடந்த வேட்பாளர் தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ள ஒபாமா டெக்ஸாஸ் மற்றும் ஓஹியோவில் வெற்றி பெற்றுவிட்டால் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராவது கிட்டத்தட்ட உறுதியாகிவிடும்.
இதற்கிடையே, வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்பு முடிவுகள், டெக்ஸாஸ் மாநிலத்தில் ஒபாமாவுக்கு 48 சதவீத வாக்குகளும், ஹிலாரிக்கு 45 சதவீத வாக்குகளும் கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளன.
எனினும் கணக்கீட்டு தவறுகளால் 4 சதவீத வாக்குகள் மாறக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
* Accept that some days you’re the pigeon, and some days you’re the statue.
* Solitude is independence
* Call no man happy until he is dead - Oedipus
* It is what you read when you don't have to that determines what you will be when you can't help it. - Oscar Wilde
* The difference between literature and journalism is that journalism is unreadable and literature is not read. - Oscar Wilde