மணல், மழை, பச்சை


மற்ற சங்கங்களைப் பார்த்தால் பொறாமையாகவே இருக்கிறது.

இது இன்று, நேற்று அல்ல… பள்ளிக் காலத்தில் துவங்கியது.
கல்ச்சுரல்ஸ் நடக்கும்போது ராய்/சென்-களும், நாயர்களும், ரெட்டிகளும், ராவ்களும் எல்லா க்விஸ் போட்டிகளிலும் கடைசி நான்கில் வந்தார்கள்.
வந்தாரை வாழவைக்கும் தமிழகத்து வந்தேறியாகிய நான் இருக்கும் குழு தேறவில்லை.

கல்லூரியில் எல்லாப் போட்டிகளிலும் முதலிடம் கேரளத்தவர்கள்.
மழையையும் ரசிப்பார்கள்;
டெல்லிக்கே நேநீரையும் கற்றுத் தருவார்கள்.

மீண்டும் அவர்களின் நிகழ்வுக்கு நடுவராகப் போகும் வாய்ப்பு.
எத்தனை சிறப்பாக மாணவர்கள் பேசுகிறார்கள்!

தமிழுக்கென்று நான்கைந்து சங்கங்கள் உண்டு.
டெக்கா (DECA), மாடி (MADI), பீ (bee), என்று கண்டதிற்கும் கேட்டதிற்கும் கற்றும் பெற்றும் செல்வார்கள்.
எனினும், நீமா எனப்படும் NEMA (New England Malayalam Association) விழா பல்வேறு சிறப்புகளைக் கொண்டது.

  1. நீமா அமைப்பின் மிலிட்டரி நிர்ணயம்: ஜெர்மானிய நேரக் கட்டுப்பாடு என்பது ஐம்பதாண்டு முன்பு உன்னதம்: இன்று நீமா-வின் கால துல்லியம் இன்றைய தங்கப் பதக்கம்.
  2. நடுவர் குழுவில் பன்முகமை: பாலினம், வயது, இனக்குழு, மொழி, மதம், உடல் திறன், பிராந்தியம், குடியேற்ற நிலை
  3. சினேகம் – அன்பிற்கு நான் அடிமை; சேச்சிகளின் பண்பிற்கு நான் அடிமை. தொண்டர் கூட்டத்தில் நான் அடிமை.

இன்று அற்புதமான மாலை.
பழகிய முகங்கள்.
பாசமான நட்புகள்.
பாந்தமான உரையாடல்கள்.

நிறைவான நிகழ்வு.

படத்தில் உள்ள நடிகைகள் யார் என்று கண்டுபிடிப்போருக்கு சிறப்பு பரிசு உண்டு!

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.