சொல்வனம் இதழின் தீபாவளி இதழ் வெளியாகி இருக்கிறது.
இந்த தீபாவளி சிறப்பிதழை அறிவியலுக்கான இதழ் எனச் சொல்லலாம்.
அறிவியல் பகுதிக்கான ஆலோசகர் அருணாச்சாலம் ரமணன் – புத்தம்புதிய பகுதியை ஆரம்பிக்கிறார்.
முக்கியமான ஆராய்ச்சிகள். நேற்றைய ஆய்வுத்தாள்கள்; சுருக், நறுக் அறிமுகம்.
சொல்வனத்தில் மகரந்தம் என்றும் நிரந்தரம்.
தீபா ராம்பிரசாத் தன்னுடைய சிறப்பான தேர்வை மீண்டும் நிரூபிக்கிறார். அவர் எடுத்த கதை சுவாரசியம் + புதுமை. அவசியம் தவற விடாதீர்கள்.
‘அதிரியன் நினைவுகள்’ மஹா காவ்யம். அதை முழுக்க முழுக்கத் தமிழுக்குக் கொணர்ந்து விட்டார் நாகரத்தினம் கிருஷ்ணா. தமிழில் என்றுமே அசல் இலக்கியவாதிகள் எக்கச்சக்கம் ஆக அமைதியாக செயல்பட்டு செழுமையாக்குகிறார்கள் என்பதற்கு இந்த மொழியாக்கமும் பிரெஞ்சுத் தமிழரும் உதாரணம் + இலட்சியம்.
வெங்கட் ரமணின் பத்திகள் தமிழுக்குக் கிடைத்த கொடை. அவரின் ‘காலம் எரித்ததும், கணினி மீட்டதும்’ நியு யார்க்கர் போன்ற இதழ்களில் வரும் அசல் கருத்து + பிரத்தியேக ஆராய்ச்சி கொண்ட ஆக்கங்களுக்கு சற்றும் சளைத்ததல்ல. அவரைப் பார்த்து எழுத வந்தவன் நான். டொரொண்டோ வெங்கட்டிற்கு நன்றி.
நானும் ‘சகுனங்களும் சம்பவங்களும்’ நான்காம் பகுதி தந்திருக்கிறேன். வாசித்து உங்கள் எண்ணங்களைச் சொல்லுங்கள்.
மற்ற ஆக்கங்களை வாசித்து முடிப்பதற்குள் அடுத்த இதழைக் கொணர்ந்து விடுகிறார்கள்.
எதை எடுப்பது!? எதை வாசிப்பது!? எதைப் பகிர்வது!!!
நீங்களே பதில் போடுங்க… வாசகர் கடிதங்களும் உண்டு : )
- 1. ஆராயும் தேடலில் – அறிவியல் சிந்தனை அருணாச்சலம் ரமணன்
- 2. கிருஷ்ண லீலை – சார்பினோ டாலி
- 3. காலம் எரித்ததும், கணினி மீட்டதும் – வெங்கட்
- 4. 1941 ஆண்டின் குளிர்காலம் – அமர்நாத்
- 5. நிற(ப்)பிரிகை – பானுமதி ந
- 6. விதைகளின் பயணம் – பெத் கோடர் – தீபா ராம்பிரசாத்
- 7. மழைக்காலம் – ஆமிரா
- 8. அதிரியன் நினைவுகள்-46 யூர்செனார்
- 9. நேர்கோணல் – மர்ஸல் துஷா (Marcel Duchamp) – ஆர் சீனிவாசன்
- 10. வாழ்க தலைவரே! – ஜெகதீஷ் குமார்
- 11. ஆக்கன் ஊற்றுப்பட்டை – விவேக் சுப்ரமணியன்
- 12. மிளகு-81 – இரா. முருகன்
- 13. பெருங் கூத்தின் நெடுந்துயர். – ரவி அல்லது.
- 14. ஆரன்யக் நாவலை நாம் 21ம் நூற்றாண்டில் ஏன் வாசிக்க வேண்டும்? – நிர்மல்
- 15. டால்ஸ்டாய் புக் ஷாப் – தமிழ் கணேசன்
- 16. சகுனங்களும் சம்பவங்களும் – 4 பாஸ்டன் பாலா
- 17. ராகவேனியம் 2024 – நூருத்தீன்
- 18. தாமஸ் செக்கின் ‘தி கேடலிஸ்ட்’: ஆர்என்ஏ-வும் அதன் அதிதிறன்களும் – அருணாச்சலம் ரமணன்
- 19. பட்டியலில் 12வது நபர் – தேஜு சிவன்
- 20. ஜப்பானியப் பழங்குறுநூறு 95-96 – கமலக்கண்ணன்
- 21. கருப்பு எஜமானி – இ. ஹரிகுமார் – தி.இரா.மீனா
- 22. கவிதைகள் – அரா
- 23. குமார சம்பவம்-13 – ஜானகி க்ருஷ்ணன்
- 24. சகுனியாட்டம் – ஆர் வத்ஸலா கவிதைகள்
- 25. யாதேவி – பானுமதி ந
- 26. வாசகர் கடிதங்கள்










