ரப்ரி போட்ட ரப்டி: பிலானி பால்காரர்


பிலானி காலங்களில் ரப்டியிடம் சென்று ரப்ரி சாப்பிடுவது மிகவும் பிடிக்கும்.

ரப்ரிக்கடைகளில் என்ன கிடைக்கும்? சமோசா சாட், ஜூஸ், டீ, காபி, போன்ற சாலையோர உணவக சாமான்கள். உடைத்துப் போட்ட ரசமலாயும் அடர்த்தியான பாசந்தியும் கொண்ட பதார்த்தத்தில் வாழைப்பழத் துண்டுகள். நிறைய வம்பு.

தமிழ்நாட்டு டீக்கடைகளின் நாயர்கள் போல் ராஜஸ்தானில் பிற மாநிலத்தவரான ரப்ரி. விக்கிப்பீடியாவில் நிறைய எழுதியிருக்கிறார்கள். சாதிப் பெயர் என்கிறார்கள். எங்க ஊரு பால்காரன் என்கிறார்கள். நாடோடிகள் என்கிறார்கள். ஆடு, மாடு வளர்ப்பதுடன் ஒட்டகமும் மேய்ப்பர் என்கிறார்கள். அவர்களின் இல்லத்திற்கு சென்றோ, சில தினங்களை உடன் கழித்தோ சமூகவியல், மானுடவியல் ஆராய்ச்சி எதுவும் நான் செய்ததில்லை.

ஆனால், விக்கியில் குறிப்பிடுகிற குடும்ப மரபுப் பெயர்களுடன் கூடிய சில ராப்ரி இனத்தவர் என் கூட படித்திருக்கிறார்கள். யூதர்களை நாஜிக்கள் வெறுத்தது போல், ரோமானிய ஜிப்சிகளை இத்தாலியர்கள் அறுவறுத்தது போல், நீக்ரோக்களை வெள்ளை அமெரிக்கன் ஒடுக்கியது போல் தள்ளிவைக்காவிட்டாலும் ‘லோக்கீ’ என்று செல்லமாக அழைத்து ஊள்ளூரார்களை தூரத்திலே நிறுத்தியிருப்போம்.

இந்த மாதிரி வந்தேறிகளுக்கும் காலங்காலமாக குடியிருப்பவர்களுக்கும் நடக்கும் ஊசலாட்டங்களை ஆராய்வதை இனவரைவியலாளர்களுக்கு விட்டுவிடலாம். ஆனால், அந்த கொழு கொழு ரப்ரியில் கலந்தது ஒட்டகப் பால் என்னும் கிசுகிசுவிற்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.