சாரு நிவேதிதா மடலில் தந்த கவிதை


படம்: நான் எழுத்தாளன்
பாடல் / பாடியவர்: சாரு நிவேதிதா

வலைப்பதிவு எழுத வந்தேன்
வலைப்பதிவு எழுத வந்தேன்
வாசகனே என் வாசகனே

யாம் ஒரு வலைப்பதிவு எழுத வந்தேன்
வாசகனே என் வாசகனே

கப்ஸா என்னும் நமீதாவின் சதை கிசுகிசு
செக்சும் அடங்கிய சினிமா சான்ஸ் எனும்
வலைப்பதிவு எழுத வந்தேன் வாசகனே என் வாசகனே

ஜெமோவும் எஸ்ராவும் எழுதாததா
இல்லை கமலினை இராமு சூழ்ந்ததா
புதுமைப்பித்தனை நான் அறியாததா
சின்னத்திரை சீரியலின் வாய்ப்பை தேடிட
வலைப்பதிவு எழுத வந்தேன்
வாசகனே என் வாசகனே

அத்தனை படமும் பர்மாபஜாரில்
நான் பதிவுக்கு பார்ப்பது எவ்விடத்தில்
வெறும் IMDB உள்ளது என்னிடத்தில்
அதன் Torrent அது உன்னிடத்தில்

ஒருமுறையா இருமுறையா
பலமுறை பல இட்டுக்கட்ட வைத்தாய்
இராப்பிச்சையா பகல்பிச்சையா
கணம்கணம் தினம் எனை கேட்க வைத்தாய்

திரைக்கு அலைந்திடும்
திரைபோட்ட வாழ்க்கையும் துரத்துதே
உன் பொருள் பொருள் பொருள் என்று
பொருமுகின்ற மனம் இன்று பிதற்றுதே

ஐசிஐசிஐ வங்கியால் நோக்குவாய்
தவணை அட்டையால் தாங்குவாய்
இயக்குநர் திரைக்கரம் எனை அரவணைத்து உன் பொருள் பெற

(வலைப்பதிவு எழுத வந்தேன்)

9 responses to “சாரு நிவேதிதா மடலில் தந்த கவிதை

  1. // அத்தனை படமும் பர்மாபஜாரில்
    நான் பதிவுக்கு பார்ப்பது எவ்விடத்தில்
    வெறும் IMDB உள்ளது என்னிடத்தில்

    ROTFL

    Kalakkal thala

  2. சென்னைக்கு போகிறீர்கள், ஜாக்கிரதை :).

  3. பிங்குபாக்: சாரு நிவேதிதா சந்திப்பு | Snap Judgment

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.