‘தசாவதாரம் தமிழ்ப் பெயர் அல்ல – வரிவிலக்கு கிடையாது’


முந்தைய சர்ச்சை சமாச்சாரப் பதிவு: கமலின் தசாவதாரம்: பிரச்சினை வளர்க்க யோசனைகள்: “கேள்வி நேரம்”

அதன் பிறகு வந்த செய்திகள் & கிசுகிசு புனைவுகளின் தொகுப்பு:

1. தசாவதாரம் விழாவில் நடிகர் விஜய் கார் மறிப்பு: “மும்பையிலிருந்து கமல்ஹாசனால் அழைக்கப்பட்டிருந்த பத்திரிகையாளர்கள், விழா முடிந்ததும் கமலிடம் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினார்களாம். அவர்களை வேறொரு இடத்தில் சந்தித்த அவர், தனது வருத்தத்தை தெரிவித்துக் கொண்டாராம். அதோடு அவர்கள் அனைவரும் திருப்பதி கோவிலுக்கு சென்றுவர ஏற்பாடு செய்தார்”

2. ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் :: Kumudam Welcomes U

`வேட்டையாடு விளையாடு’ படத்தில் ஒரு ஃப்ரேமை அழகுபடுத்த ஐந்து நிமிடம்தான் தேவைப்பட்டது. பிறகு அடுத்த ஃப்ரேமிற்குப் போய் விட்டேன். ஆனால் தசாவதாரத்தில் ஒரு ஃப்ரேமில் ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரம் இருக்கும். அதே ஃப்ரேமில் இரண்டு வாரங்கள் கழித்து வேறு கெட்டப்பில் கமல் இருப்பார்.

மீண்டும் அதே ஃப்ரேமில் ஒரு மாதம் கழித்து வேறொரு கெட்டப்பில் கமல் இருப்பார். இந்த எல்லா கெட்டப்பில் உள்ள கதாபாத்திரங்களுக்கும் ஏற்றமாதிரி ஒரே லைட்டிங்கை வைக்க வேண்டும். இது ரொம்ப சிக்கலான விஷயம்.

அதேபோல் மேக்கப் போட்டு ஒரு மணி நேரம் மட்டும்தான் மேக்கப் ஃப்ரெஷ்ஷாக இருக்கும். நேரம் ஆக ஆக மேக்கப் இளக ஆரம்பிக்கும். அதனால் முதலில் உள்ள ஸ்கின் டோன், கலர், எல்லாம் மாறிவிடும். அதற்கேற்றபடி ஒளிப்பதிவு செய்யவேண்டும். இதுபோன்று நிறைய சவால்கள்.

இது ஒரு ஜேம்ஸ்பாண்ட் ஸ்டைலிலான படம். அதற்கான தகுதி இப்படத்தில் எல்லாவிதத்திலும் இருக்கிறது. ஒரு இன்ச் கேமரா ஆங்கிள் மாறினாலும் கூட ஒட்டு மொத்த காட்சியுமே சொதப்பலாகிவிடும். இதனால் பக்காவாக ஸ்டாரி போர்ட் தயார் செய்து ஷூட் செய்தோம். இதைக் கவனிக்கவே எட்டு உதவியாளர்கள் உழைத்தார்கள்.”

3. இது வரை 48 கோடிக்கு விற்பனை ஆகியுள்ள ஏரியா வியாபாரம்: Dasavatharam – Sales gossips: Market rates for various sectors, districts – அமெரிக்கா, ஐரோப்பா, இங்கிலாந்து, கனடா எவ்வளவு? கலைஞர் தொலைக்காட்சி எத்தனை கோடி தரும்??

தொடர்புள்ள விற்பனைப் பதிவுகள்:

அ) உலகமெங்கும் வசூல் மழையில் சிவாஜி: ரூ.100 கோடியை நெருங்குகிறது

ஆ) AVM, Rajni & Shankar: ‘Sivaji – The Boss’ – Profit & Loss, Distribution woes, Balance Sheet, Income: “சிவாஜி’ த லாஸ்!: சர்ச்சைகளுக்கிடையே ஒரு சாதனை விழா – தினமணி”

இ) Ilaiya Thalabathy Vijai’s Kuruvi beats AVM, Shankar & Rajni’s Sivaji – The Boss: “ரஜினியின் சாதனையை முறியடித்த விஜய்”

ஈ) Why ‘Sivaji’ is delayed?: “65 கோடிக்குதான் படத்தை விற்பனை செய்வோம் என்று கூறி வந்த ஏ.வி.எம் நிறுவனம் 55 கோடிக்கு ஜெமினி லேப் நிறுவனத்திடம் விற்றுள்ளது”

உ) ‘தயாரிப்பாளர்களை வாழ விடுங்கள்; நடிகர்கள் சம்பளத்தை உயர்த்தக் கூடாது’

ஊ) அதிகாரபூர்வ வருமானமும் ஏய்ப்பு வரி விவரங்களும் :: கொடுப்பது ஒன்று எக்செல் கோப்பில் கோர்ப்பது இன்னொன்று

எ) Kuruvi makes box-office History – Super hit Tamil Cinema of the century: Ilaiya Thalapathi Vijai & Director Tharani: “பாக்ஸ் ஆஃபிஸில் பறக்கும் ‘குருவி’!”

ஏ) சிவாஜி – விற்பனை விவரங்கள்

நேற்றைய விவகாரம்: டாவின்சி கோடும் தசாவதாரமும்: கமல் படத்துக்கு தடை கோரி புதிய வழக்கு

7 responses to “‘தசாவதாரம் தமிழ்ப் பெயர் அல்ல – வரிவிலக்கு கிடையாது’

  1. Dasavatharam is a Tamil Word only.

    Dasam is handled in the Meaning of Ten in Kandha Puranam – Written 750 years ago.

    First Line is Told by Lord Muruga to Kacchiappar.

    Thikada Chakkaram (Thigazh + Dasam + Karam)

    திகட சக்கரச் செம்முக மைந்துளான்
    சகட சக்கரத் தாமரை நாயகன்
    அகட சக்கர வின்மணி யாவுறை
    விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்

  2. மிக மிக அருமையான தெளிவாக்கத்துக்கு நன்றி சௌரி ராஜன் சார்.

    (ஒழுங்கா பழந்தமிழ் இலக்கியம் படிக்காம பதிவெழுதக் கூடாது 🙂 என்பது பாடம்)

  3. 750 ஆண்டுகளுக்கு முன்பும் வட மொழிச் சொற்கள் தமிழில் கலந்து தான் இருந்தன. எனவே, தமிழ் இலக்கியம் ஒன்றில் காணப்படுவதால் மட்டுமே ஒரு சொல் தமிழ்ச்சொல்லாகி விடாது. எனக்குத் தெரிந்து தசம் என்ற சொல் தமிழ் இல்லை.

  4. பிங்குபாக்: ‘Dasavatharam’ - Kamal’s plea & Other trivia « Snap Judgment

  5. திகழ் தசம் கரம் ?
    முருகனுக்கு 6 முகம்ணா 12 கரம்ல இருக்கணும்?
    வேறு எந்தக் கடவுளுக்கு 10 கைகள்?

  6. அப்படிப் பார்த்தால் ரவிசங்கர் என்பதும் தமிழ்ப் பெயர் அல்ல
    என்றாகிறதே , ஆகவே ரவிசங்கர்
    தமிழரல்லயென்றாகிவிடுமா 🙂

  7. சிறில்,
    அது விநாயகருக்கான பிள்ளையார் சுழிப் பாடல்; காப்பு.

    santhavasantham : Message: Re: [santhavasantham] Re: thigada sakkara – zh + tha = da puNarcci – இல் இருந்து:

    திகழ் தசச்கரம் என்று பிரித்தபின், தசக்கரம் என்பது தச (அல்லது தசம்)+கரம் (பத்துக்கை; ஐந்துமுகமுடைய விநாயகனைக் குறிப்பது) என்பதன் சேர்க்கை என்று பார்க்கும்போது ஒரு ஐயம் எழுகிறது.

    வடமொழிச்சொல் பயிலும் இடங்களில், நிலைமொழியும் வருமொழியும் வடசொல்லாக இருக்கும்போது வல்லொற்று மிகாது என்ற புணர்ச்சி இலக்கண விதி இங்கு ஏன் பயன்படுத்தப் படவில்லை? (காட்டு: பாரத தேசம்; தச கமகம்; பாத கமலம்). கரம் என்பது தமிழ்ச்சொல்லெனக் கருதப்பட்டிருக்கலாமோ?
    ————————————————————

    கந்த புராணம் – Kantha Puranam: The legendary aspect of Murugan’s blessings (அருள்) to the author is revealed in the invocation to Vin^Ayakar (விநாயகர் காப்பு) wherein the following sentence is found: (திகட சக்கரச் செம்முக மைந்துளான்). When he was criticized that the syntax when (திகழ் + தசக்கரம்) to give (திகடசக்கரம்) was wrong, Murugan himself came in the form of a poet next day and proved that there was a grammatical precedence in VIra SOzhium (வீரசோழியம்) in support of the questionable syntax.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.