நன்றி: Kamal and Oscar Ravi reply to Journalists – Scans | Kollywood Today
கமலின் கடிதம்:
Letter from Oscar Films:
நன்றி: Kamal and Oscar Ravi reply to Journalists – Scans | Kollywood Today
கமலின் கடிதம்:
Letter from Oscar Films:
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




அந்த தமிழன்பன் கடிதத்தையும் கொஞ்சம் தந்தா முழு மேட்டரும் படிச்ச திருப்தி இருக்குமே…..
from செய்திகள் கிடுக்கிப்பிடி கேள்விகள், கெடுபிடிகளுடன் தசாவதார விழா : எந்த விழாவாக இருந்தாலும் பத்திரிகையாளர்களுக்குத்தான் முதல்மரியாதை தருவார்கள் தமிழ்ப்பட தயாரிப்பாளர்கள். ஆனால் தசாவதாரம் விழாவில் நடந்ததெல்லாம் தலைகீழ்.
அழைப்பிதழுடன் நுழைவுவாயிலில் காட்டிக்கூடிய கூப்பனுடன் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு சென்றால் இந்த கேட், அந்த கேட் என நிருபர்களை அலைக்கழித்தனர் போலீஸார். இதுதான் நீங்கள் செல்ல வேண்டிய வழி என கடைசியாக இருந்த ஒரு நுழைவுவாயிலை காட்டினார்கள்.
போலீஸார் சுட்டிக்காட்டிய இடத்தில் கிலோமீட்டர் தூரத்திற்கு கியூ நிற்க, ‘வரிசையில் நின்று வாங்க’ என அலட்சியம் காட்டினார் ஒரு இன்ஸ்பெக்டர். நம்முடன் இன்னும் சில பத்திரிகை நண்பர்கள் இருக்க ‘சார் நாங்க பத்திரிகைகாரங்க சீக்கிரமா போகனும்’ என அடையாள அட்டையை காண்பித்தபோது இருக்கட்டும் அதனாலென்ன? என்றவாறு நெஞ்சில் கைவைத்து தள்ளாத குறையாக விரட்டினர்.
இதனையடுத்து நிருபர்கள் கூட்டம் ஒன்று சேர்ந்து மேலதிகாரிகளிடம் முறையிடவே ஒரு வழியாக உள்ளே அனுமதிக்கப்பட்டனர். ஸ்டேடியத்திற்குள் நுழைந்தால் பத்திரிகையாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம் ஈ கேலரி. விழா செய்தியை மக்களுக்கு கொண்டு செல்லும் பத்திரிகையாளர்கள் ரசிகர்கள் கூட்டத்தோடு உட்காரவைக்கப்பட மேலும் எரிச்சலடைந்தனர் நிருபர்கள்.
ஒரு கட்டத்தில் விழாவை புறக்கணித்துவிட்டு எழுந்து வரலாமா என்று நினைத்தால் வெளியே திரும்பமுடியாத வண்ணம் பாதுகாப்பு வளையம் பலப்படுத்தப்பட்டிருந்தது. பிரமாண்ட விழா, கோடிக்கணக்கில் செலவு என மார்தட்டிக்கொள்ளும் ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனம் பத்திரிகையாளர்களை மனதில் கொள்ளாதது ஏனோ?
பத்திரிகையாளர்களுக்கு நடந்த கதி இப்படியென்றால் நடிகர், நடிகைகளுக்கும் அவமானம் நேர்ந்தது. மாதவன், நரேன், தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி போன்றவர்களுக்கு இருக்கை தராமல் மணிக்கணக்கில் இழுத்தடித்தனர். அவர்கள் கோபித்துக்கொண்டு புறப்பட தயாரானபோது விழாக்குழுவினர் சிலர் ஓடி வந்து சமாதானம் செய்து அமர வைத்தனர். பெரிய விழா என விளம்பரப்படுத்தப்பட்ட போதிலும் சினிமா குடும்பத்தை சேர்ந்தவர்கள் குறைவாகவே தென்பட்டனர்.
இந்தக் காமெடிகளையெல்லாம் தாண்டிய ஹைலைட்… படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் விழா நடந்த நேரத்தில் அசோக் நகரில் உள்ள அலுவலகத்தில் ஹாயாக இருந்ததுதான்.
கொத்ஸ், பத்திரிகையாளர் என்றாலே பந்தா பார்ட்டி என்பது போல், ரசீது கேட்காத கையூட்டு, memorabilia வஸ்துக்கள், ராசமரியாதை தேவைப்பட்டிருக்கும்.
கமல் அதை புறக்கணித்தவுடன், ‘மன்னிப்பு கேள்’ புறப்பட்டிருந்தது
one more (கல்லை மட்டும் கண்டால் கேட்டு கொண்டே வாசிக்கவும்): தசாவதாரம் விழாவில் நடிகர் விஜய் கார் மறிப்பு:
“மும்பையிலிருந்து கமல்ஹாசனால் அழைக்கப்பட்டிருந்த பத்திரிகையாளர்கள், விழா முடிந்ததும் கமலிடம் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினார்களாம். அவர்களை வேறொரு இடத்தில் சந்தித்த அவர், தனது வருத்தத்தை தெரிவித்துக் கொண்டாராம். அதோடு அவர்கள் அனைவரும் திருப்பதி கோவிலுக்கு சென்றுவர ஏற்பாடு செய்தார்”
last piece for their ire… தராதரம் மறந்த தசாவதார விழா? – சில எரிச்சல் துளிகள்:
பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசார், பார்வையாளர்களின் பையில் இருந்த சீப்பு, லிப்ஸ்டிக், கண்ணாடி, போன்ற கொடிய ஆயுதங்களை பறிமுதல் செய்து வைத்துக் கொண்டார்கள். நிருபர்கள், டேப் ரெக்கார்டரை உள்ளே எடுத்து செல்லக்கூடாது என்றும் கண்டிஷன் போட்டார்கள்.
இப்படியெல்லாம் பத்திரிகையாளர்களை அவமானப்படுத்திய விஷயம்”
“தொடை” குறித்து விஜய்கோபல்சாமி பரபரப்பு பதிவு. படித்துவிட்டீர்களா?
படிக்க இத்தனை சொடுக்கவும்: