பாஸ்டனில் தசாவதாரம்


ஜூன் ரெண்டாந்தேதி வருதாம்.

அதுவரை, வாலியின் இந்தப் பாடலை உல்டா செஞ்சுண்டிருங்க… நமச்சிவாய வாழ்க!

ஓம் நமோ நாராயணாய

கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது
கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது

எட்டில் ஐந்து எண் கழியும் என்றும்
ஐந்தில் எட்டு எண் அறியாது

அஷ்ட அட்சரம் ஏற்கும் நெஞ்சு
பஞ்ச அட்சரம் பார்க்காது

ஊனக் கண்ணில் பார்த்தால் யாவும் குற்றம்தான்
ஞானக் கண்ணில் பார்த்தால் யாரும் சுற்றம்தான்

(கல்லை மட்டும் கண்டால்)

இல்லை என்று சொன்ன பின்பும் இன்றியமையாது
தொல்லை தந்தபோதும் எங்கள் தில்லை மாறாது

வீரசைவர்கள் முன்னால் எங்கள் வீர வைணவம் தோற்காது
மன்னன் சொல்லுக்கு அஞ்சி என்றும் மேற்கே சூரியன் உதிக்காது

இராஜலஷ்மி ராஜ நாயகன் ஸ்ரீனிவாசன்தான்
ஸ்ரீனிவாசன் சேர் சேய் இந்த விஷ்ணுதாசன்தான்
நாட்டில் உண்டு ஆயிரம் ராஜராஜன்தான்
ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன்தான்

(கல்லை மட்டும் கண்டால்)

நீருக்குள்ளே மூழ்கினாலும் நீதி சாகாது
நெஞ்சுக்குள்ளே வாழும் எங்கள் ஜோதி சாகாது

வீசும் காற்று வந்து விளக்கை அணைக்கும்
வெண்ணிலாவை அது அணைத்திடுமா?

கொட்டும் வான்மழை நிலம் நனைக்கும்
அந்த வானம் தன்னை அது நனைத்திடுமா?

சைவம் என்று பார்த்தால தெய்வம் தெரியாது
தெய்வம் என்று பார்த்தால் சமயம் கிடையாது

8 responses to “பாஸ்டனில் தசாவதாரம்

  1. balaji – do u have the theatre names in boston? thx, Murali

  2. Probably it shd be Regent cinema in Arlington. Indiaglitz & Sulekha might be partners/advertising.

  3. ஹையா, செம நியூஸ்…

    ps: ரெண்டு சின்ன மாற்றங்கள்,
    // இராஜலஷ்மி ராஜ ஸ்ரீனிவாசன்தான்//
    இராஜலஷ்மி நாயகன் ஸ்ரீனிவாசன்தான்

    //ஸ்ரீனிவாசன் சேர் இந்த விஷ்ணுதாசன்தான் //
    ஸ்ரீனிவாசன் சேய் இந்த விஷ்ணுதாசன்தான் 🙂

  4. ஸ்ரீராம் முரளி… நன்றிகள் பல 🙂

  5. வாலி இல்லைண்ணு நினைக்குறேன்..

  6. கூகிள் வாலின்னு சொல்லுது. வாலியின் சாமுத்ரிகா லட்சணங்களும் பொருந்துதே!

  7. பரவாயில்லையே…..பேஷா பாடல் அமைஞ்சிருக்கு..

    நன்றிகள் முரளி.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.