இந்து முன்னணியின் புத்தம்புதிய கட்டளைகள்


Toilet - Tamil Movies

வணக்கம்மா என்ற பெயரில் உருவாகவுள்ள பட பூஜை தொடர்பான போஸ்டர்களில் ராமன், அனுமன் ஆகியோரின் படங்களை சர்ச்சைக்குரிய வகையில் வெளியிட்டதற்கு இந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பட பூஜையும், ஷூட்டிங்கும் ரத்து செய்யப்பட்டு விட்டது.

செய்தி: Hindu Munnani opposes Vanakkamma pooja posters: வம்பில் சிக்கிய ‘வணக்கம்மா’! | இந்து முன்னணி எதிர்ப்பு: ‘வணக்கம்மா’ பூஜை ரத்து

இதன் தொடர்ச்சியாக ‘ஹிந்து முன்னணி’யினரின் அடுத்த கட்ட நடவடிக்கைகள்…

1. நவராத்திரி கொலுவில் இனி குழந்தைகள் ‘கிருஷ்ணன்’ வேஷம் கட்டக்கூடாது.

2. அமெரிக்க ‘ஹாலோவீன்’ சமயத்திலும் இது போன்றவை அரங்கேறக் கூடாது. மீறி எவராவது போட்டதாக தெரிந்தால், விமானப் பயணத்திற்கான கட்டணத்தை சம்பந்தப்பட்டவரிடம் இருந்து கோரி, அமெரிக்கா வந்து போராடுவோம்

3. மாறுவேடப் போட்டி, ஃபேன்சி டிரெஸ் ஆகியவற்றிலும் இனி யாரும் பிள்ளையாரகவோ, சிவனாகவோ மேடையேறக் கூடாது.

Symbols, Rituals, PRactices, Beliefs4. நடனமணிகளும் தங்கள் பாடல்களில் ராமர்/சீதை இன்ன பிற இந்துத்வா தெய்வங்களை அபிநயிக்கக் கூடாது.

5. ரஜினி நடித்த உழைப்பாளி படத்தில் தோன்றும் சிவபெருமான் திருக்கோல காட்சிகளை நீக்கி மீண்டும் தணிக்கை செய்யவேண்டும்.

6. தாரா சிங், அருண் கோவில், தீபிகாவிற்கு உடனடியாக அறுவை சிகிச்சை நடத்த வேண்டும்.

7. சன் டிவியின் ‘திருவிளையாட’லில் நடிப்பவர்கள் இனிமேல் எந்த சினிமாவிலோ, தொலைக்காட்சித் தொடரிலோ நடிக்க கூடாது. நிஜ வாழ்க்கையிலும் காணாமல் போய்விட வேண்டும்.

கொசுறு: ராமயாணம் அடிப்படையே தெரியாம படம் போடுறாளே. ராமன் பாதகைய கழட்டி பரதனுக்கு தானம் கொடுத்தப்றம்னா குரங்க சந்திச்சான்
தறுதலை

தொடர்புள்ள பதிவுகள்: கடவுளுக்கு மடல்கள்

5 responses to “இந்து முன்னணியின் புத்தம்புதிய கட்டளைகள்

  1. உணர்வு சரியே தவிர பல சமயங்களில் இந்து முன்னணியின் செயல்பாடுகள் ‘எடுத்தேன் கவிழ்த்தேன்’ என்பது போல்தான் உள்ளது.

  2. ம். இந்து முன்ன்னி எப்பொழுதுமே இப்ப்டிதான். கண்டுகொள்ளபட வேண்டாத விசயம்.

  3. modern days jokers, nobody cares about them except jayalalitha, only when she rules they used to get importance.

  4. ஸ்ரீராம் முரளி, peevee, அசீம் பாஷா __/\__

  5. // modern days jokers //
    yea, they are jokers.. not pea-brained jihadis…

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.