Monthly Archives: ஜனவரி 2008

ஆயுதம் – மனோஜ்: சிறுகதை குறித்த எண்ணங்கள்

டைம்ஸ் ஆப் இந்தியாவின் இலக்கியச் சிறப்பிதழான “இன்று” தொகுப்பில் இடம்பெற்ற சிறுகதையைப் படிக்க மணிகண்டன் பதிவுக்கு செல்லவும்.

படித்தவுடன் எனக்குத் தோன்றிய எண்ணங்கள்:

1. கதை நன்றாக இருக்கிறது. நெடுநாள் தாக்கம் எல்லாம் எதுவும் கிடைக்கிற மாதிரி இம்பாக்ட் இல்லாத ஆக்கம்.

2. ட்ராஃபிக் திரைப்படம் போன்ற சிதறலான சம்பவங்களைக் கோர்க்கும் கதை என்று படிக்க ஆரம்பித்தவுடன் தோன்றியது. ஆனால், நிகழ்வுகளில் இருக்கும் ஒற்றுமைகளை, போதனையாக சொல்லிச் செல்கிறது.

3. செர்பியா, ஆப்பிரிக்கா செய்திகளைக் கட்டுரை வடிவில் தரும்போது கூட வாசகனுக்கு உந்துதல் தந்து மேற்சென்று ஏதாவது செய்யத் துடிக்க வைக்க முடியும். இந்தக் கதையில் அதெல்லாம் மிஸ்ஸிங். (படிக்க: Before the War: “Remembering an everyday life in Bosnia: November / December 2007 by Courtney Angela Brkic, from Dissent”).

4.

இரைந்தே கேட்டான். ‘ஹேவ் யு எவர் ஃபக்ட்..’. பிறகு இன்னும் குனிந்து, கை குவித்து சைகையோடு கேட்டான். “இதுவரைக்கும் யாரையாச்சும் பண்ணியிருக்கியா….”.

ஆங்கிலத்தில் எழுதும்போது தெள்ளத்தெளிவாக விழுகிற வார்த்தைகள், தமிழில் வரும்போது சைவமாக மாறுகிறது. இந்த இடம் தவிர பிற இடங்களில் மொழிபெயர்த்தே தரும் மனோஜ், இங்கு மட்டும் ஆங்கிலத்திற்கு தாவுகிறார். செர்பியாவில் ஆங்கிலம் பேசமாட்டார்கள் போன்ற இடறல்களை விக்கிப்பிடியாவில் தேடினாலே தவிர்த்திருக்கலாம்.

5. கற்பனைக்கதை எழுதும் கலையின் நோக்கம் பொழுதுபோக்கி மகிழ்ச்சியளிப்பது, செய்தியை மனதில் நிறுத்துவது, மாற்று கண்ணோட்டங்களை ஊடாட விடுவது, உணர்ச்சிகளைப் பகிர்வது என்றால் படித்தால் போரடிக்காத வகையில் செய்தி ஆசிரியரின் குற்றவுணர்வை முன்வைக்கும் சிம்பிளான மதிப்பீடுகள் ஜட்ஜ்மென்ட்டாக முடிவது வாசகனுக்கு சோகமான அனுபவம்.

Jacques Barzun

“For politicians not only represent us…They are the hardest working professionals; they must continuously learn new masses of facts, make judgments, give help, and continue to please. It is this obligation, of course, that makes them look unprincipled. To please and do another’s will is prostitution, but it remains the nub of the representative system.”

— Jacques Barzun

Is Democratic Theory for Export?: “Cultural historian Jacques Barzun argues that democracy is not an ideology that can be exported but a historical development and mode of life peculiar to the political context in which it developed. Extrapolating from this, we can say that attempts to base a foreign policy on the idea of exporting democracy—as sought by both the Reagan and Clinton administrations—will forever be doomed to failure.

A prominent feature of American political consciousness is a desire to propagate democracy throughout the world. In our enthusiasm to share what we enjoy, Jacques Barzun sees that little attention is paid to exactly what we are trying to distribute. Through a brief historical survey of democracy, he shows that our popular conception of the term does not correspond with any particular definition. U.S. democracy has no central text and is distinctly different, in theory and in practice, from the democracy of other states, both historical and contemporary. Democracy is an abstract ideal that is a function of time. Its present incarnation in the United States emphasizes freedom and equality through the means and language of specific personal rights. Barzun sees an internal tension in this formulation, one that ultimately threatens both freedom and equality if exported to the rest of the world.”

Print Interview The Austin Chronicle: Books: The Man Who Knew Too Much: Jacques Barzun, Idea Man

Recorded InterviewJacques Barzun. American scholar, cultural historian, teacher and educator and prolific author.

Online Library of Liberty – The Intellectual Portrait Series: Conversations with Leading Classical Liberal Figures of Our Time

Jacques Barzun on Cornell Woolrich – Christian Bauer

TIME Magazine Cover: Jacques Barzun – June 11, 1956 – Writers – Books | TIME: Parnassus, Coast to Coast

Flak Magazine: Melatonin Up, Civilization Down, 12.28.07

ரேஷன் சிமெண்ட், இலவச வண்ணத் தொலைக்காட்சி: கள்ளச்சந்தை வணிகம்

Host unlimited photos at slide.com for FREE!

மயிலை கபாலி கோவில் தெப்பம் – தினமணி

Kapali Kovil Theppam - Float Festival in Mylapore, Chennai, Madras Kapaleeswarar Temple

தைப்பூசத்தை முன்னிட்டு சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தெப்பத் திருவிழாவில் அருள்பாலிக்கும் () கற்பகாம்பிகை உடனுறை கபாலீஸ்வரர்.

I met a seducer – Grace Paley

One day a seducer met a seducer
now said one                           what do we do
fly into each other's arms said
the other                           ugh said one                           they turned
stood back to back                           one
looked over one's shoulder                           smiled
shyly                           other turned seconds
too late                           made a lovelier
shy smile                           oh my dear said other
my own dear                           said one

Prejudiced generalizations: Gangs, drugs, violence & suicides

(வாய்ப்புக்கும் இடமளித்தமைக்கும்) நன்றி: தமிழ் உலா – என்றென்றும் அன்புடன்், பாலா

தமிழ் வலைப்பதிவுகள் பற்றிய பாஸ்டன் பாலாவின் பார்வை

கேள்வி: தமிழ்மணம் சேவை தொடங்கி கிட்டத்தட்ட நான்காண்டுகள் ஆகி விட்ட நிலையில், தமிழ் வலைப்பதிவுலகில் ஏற்பட்ட ஒரு முக்கியமான அல்லது குறிப்பிடத்தக்க விஷயமாக அல்லது வளர்ச்சியாக நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்?

பதில்: முதலில் தனிமனிதனாக எனக்கு ஏற்பட்ட வளர்ச்சியை சொல்லி விடுகிறேன். பதிவுலகம் இல்லாவிட்டால் நான் இந்த பரிபக்குவத்தை அடைய இன்னும் பல நாள் ஆகியிருக்கும்.

1995- இல் ‘ஆசை’ படம் பார்த்தபோது இப்படியெல்லாம் வக்கிரம் பிடித்தவர்கள் இருக்க மாட்டார்கள். இயக்குநர் வசந்த்துக்கு அதீத கற்பனை என்று புறந்தள்ளியிருந்தேன். ஆனால், ஒரு மாமாங்கம் கழித்து ‘சத்தம் போடாதே’வில் மீண்டும் ஒரு சைக்கோவை பார்த்தபோது நம்ப முடிந்தது.

அடுத்து கொஞ்சம் பெரிய அளவில் யோசித்தால்…

தமிழில் வலைப்பதிவுகள் மட்டும் இல்லாவிட்டால், மனநிலை பிறழ்ந்தவர்களின் எண்ணிக்கை எகிறியிருக்கும்.

அலுவலில் 14/15 மணி நேர கசங்கல். கணினி முன் இருக்கும்வரை காபி. கணினி விட்டு எழுந்தவுடன் பொய் கும்மாளங்களுடன் கோப்பை நிறைய குடித்தல். உடலை மாசு படுத்தும் இந்த பானங்களை உட்கொள்ளுவதால் முப்பதிலேயே அறுபதைப் போன்ற கிழடு தட்டிய தோற்றம் மட்டுமல்ல. அகமும் வயதாகிப்போகிறது.

இதை மறைக்க இணையம் உதவுகிறது. ‘அந்த நாள் ஞாபகம்’ என்று ஆட்டோகிரா·ப் போட்டு பழைய நினைப்புகளை பகிர்ந்து அலைபாயும் சீற்றத்தை தணிக்க வைக்கிறது.

அயல்நாடுகளில் வேலைக்கோ படிப்பதற்கோ சென்றவர்களின் நிலை மேலும் பரிதாபம். மனைவியை விட்டு பிரிந்து இருக்கும் நிலை சிலருக்கு. சன் செய்திகள் தொட்டு காதலுக்கு மரியாதை போன்ற திரைப்படங்கள் வரை நிஜம் முதல் நிழல் வரை வெளிநாட்டு மாப்பிள்ளை என்றால் பொறுக்கி என்னும் சித்தரிப்பால், மணமுடிக்காத நிலை சிலருக்கு. உரையாட தோழமை இல்லை. பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார்கள் என்று தெரியாத மேற்கத்திய நாகரிக தனிமைச் சிறை. அமெரிக்காவில் வேலை பார்ப்பவர்கள் விளையாட்டைத் தவிர எதை வேறு குறித்தும் பேச்சை வளர்க்க மாட்டார்கள். சினிமாவா… நோ; செய்திகள் – நோ…நோ; அரசியல் – மூச்!

இவர்களுக்கெல்லாம் வலைத்தமிழ்ப்பூக்கள் வடிகாலாக, அகழ்வாரைத் தாங்கும் நிலமாக, பொறுமைக்கு பேர் போன பூமாதேவியாக ரட்சித்து, மன அழுத்தத்தை நீர்க்க வைக்கிறது.

பெங்களூரு முதல் பாஸ்டன் வரை முந்தைய தலைமுறை போல் குடும்பத்தோடு ஒன்றி வாழாத நிலையில் சுருங்கி பதுங்குகுழி ஜீவனம். பேரக் குழந்தைகளுக்கு போர் அடித்தால் டிவியோ வெப்கின்ஸோ ஓடும். அடுக்களை வேலை முடிந்து களைத்த மனைவியோடு பேசுவதற்கு அந்தக்காலத்திலாவது நாலு நிமிஷம் கிடைத்தது. இன்றைய தொல்லைபேசி, செல்பேசி முதல் நள்ளிரவு அவுட்சோர்சிங் மின் அரட்டை காலத்தில், இல்லத்தரசியுடன் அப்பாயிண்ட்மெண்ட் கிடைத்தால்தான் உரையாடல் உண்டு.

மனதுக்குள் புதைந்து அழுத்தும் சமாச்சாரங்களைக் கொட்டி, அதற்கு கனிவாக நாலு பதில் வார்த்தை பெற இணையத்தை விட்டால் இவர்களுக்கு புகலிடம் இல்லை. விவாகரத்து, மக்கட்செல்வம் திசைமாறுதல் போன்ற பனிகளில் சறுக்காமல், காரோட்ட, வாழ்க்கைச்சங்கிலியாக வலைப்பதிவை பாவித்து போலி வாழ்க்கை வாழ வழிவகுத்திருக்கிறது.

இந்தப் பார்வை சுயமறுப்பை (denial) உருவாக்கினாலும், கொஞ்சம் வெகுசன பத்திரிகைகளின் சிந்தனையை பிரதிபலித்தாலும், தமிழ்ப்பதிவுகள் மீது நான்கு வருடம் முன்பிருந்த நம்பிக்கை உடைந்ததன் நிதர்சனமாக வைத்துக் கொள்ளவேண்டும்.

எப்படி உடைகிறது?

சமீபத்தில் படித்த Influencer: The Power to Change Anything (பார்க்க: Book Selections by Boston Globe – 2007 « Snap Judgment) புத்தகத்தின் உதவியோடு சில குறிப்புகள்.

பிரச்சினகள் நம்மை எப்பொழுதும் சூழ்ந்திருக்கிறது. தனிமனித அளவில் குடும்பத்திற்கான வருவாய் ஆகட்டும்; உலக அளவில் இராக், ஈழம், வறுமை ஆகட்டும்; பணக்காரியாக இருந்தால் பூமி வெம்மை அடைவதாகட்டும்; ஏழையாக இருந்தால் எயிட்ஸ் நோய் முதல் பட்டினி வரை பலவும் இருக்கிறது.

இவற்றைப் பார்த்து புலம்பி ‘எங்கே நிம்மதி? ஏது நீதி?’ என்று சொல்லி ஓடி வருபவர்கள் மட்டும்தான் தமிழ்ப்பதிவுகளை நிறைத்திருக்கிறார்கள். பதிவர்களுக்கு பொறுமை இல்லை; தீர்வுகளை திடமாக முன்னெடுத்துச் செல்லும் திறமை இல்லை.

அந்த மாதிரி இல்லாமல் தனிக்கட்டையாக துடிப்புடன் திட்டத்தை வலியுறுத்தி பெருமளவில் நிறைவேற்றிய சிலரை உதாரணமாக்கலாம்:

1. The New Heroes . Meet the New Heroes . Mimi Silbert | PBS: குற்றஞ்சாட்டப்பட்டு தண்டனை அனுபவிக்கும் பதினான்காயிரம் சிறைவாசிகளுக்கு மறுவாழ்வு காட்டும் பாதையை சுட்டி, சாதாரண மனிதர்களாக உலா வர வைத்திருக்கிறார். இதே போன்ற அமைப்பை கலிஃபோர்னியா மாகாணமும் செய்து பார்த்து வருகிறது. தாதாக்கள், கட்டப்பஞ்சாயத்து, கள்ளக்கடத்தல், விபச்சாரம், திருட்டு போன்ற பஞ்சமாபாதகங்களுக்கு திரும்ப சென்று விடுபவர்களின் சதவீதம் – அங்கே 70 %. இவரிடம் மாட்டிக் கொண்டவர்களில் பத்தே சதவிகிதம்தான் மீண்டும் பழைய குருடிக்கு செல்கிறார்கள்.

2. Rx for Survival . Global Health Champions . Donald R. Hopkins, MD, MPH | PBS: வறுமைக்கோட்டுக்கு கீழே பாதாளத்தில் வசிக்கும் ஏழைகளை பாதிக்கும் நோய் அது. தோலில் இருந்து பூச்சிகள் குபுக்கென்று வெளியேறும் கினியாப் புழு வியாதி. பாதிக்கப்பட்டவர்களை 99.7% அதிரடியாக குறைத்துள்ளார்.

3. The Purpose Prize | Meet Donald Berwick: விகடனில் ஜோக் படித்திருப்போம். பம்மல் கே சம்பந்தத்தில் பார்த்திருப்போம். உடலுக்குள் அறுவை சிகிச்சைக் கருவிகளை வைத்துவிடுவது முதல் பல்வேறு கவனச் சிதறல்கள். அமெரிக்காவில் நேற்றுதான் ஒப்புதல் போட்டிருக்கிறார்கள். ‘மருத்துவர்களின் அஜாக்கிரதையால் குழந்தை மாறிக் கொடுத்தனுப்பி விட்டால் மகப்பேறுக்கான செலவு இலவசம். அறுவை சிகிச்சை தவறாக செய்தால் பணம் தர வேண்டாம்.’ இந்த மாதிரி பெரிய மனசு அறிக்கை விடாமல், ஒண்ணேகால் லட்சம் உயிர்களை கடந்த பதினெட்டு மாதங்களில் காப்பாற்றியிருக்கிறார். அடுத்த குறிக்கோள்: ஐம்பது லட்சம் பேர்.

இந்த மாதிரி நாலைந்து பேர் தமிழ்மணத்தில் உலாவினால் போதும். ஒருவரின் தாக்கம் பலரை சென்றடையும்.

மேலும் ஒவ்வொரு சாதனைக்கும் பின்னணியில் அவரவர்கள் உறுதியாக நம்புகின்ற வழிகாட்டல்கள் இருந்திருக்கிறன. அதைப் பலரும் பின்பற்றி கடைபிடிக்கக் கூடியதாக மாற்றக்கூடிய திறன் இருந்திருக்கிறது.

இரண்டாவதாக எடுத்துக்காட்டிய டொனால்ட் ஹாப்கின்ஸை மீண்டும் உதாரண புருஷராக எடுத்துக் கொள்ளலாம்.

உலகத்தின் ஒவ்வொரு கிராமத்தின் நீர் ஆதாரத்திலும் கடைபிடிக்க மூன்று சீவாதாரமான பாவனைகளில் கவனம் செலுத்தினார்:

அ) எல்லோரும் தண்ணீரை வடிகட்ட வேண்டும்.
ஆ) யாருக்கு ஏற்கனவே கினியாப்புழு நோய் தாக்கப்பட்டிருக்கிறதோ, அவர் நீர்நிலைக்கு செல்லக்கூடாது.
இ) முதல் இரண்டை எவர் கடைபிடிக்கவில்லையோ, அவரை தைரியமாக மற்றவர்கள் தட்டிக்கேட்க வேண்டும்.

கடைசியாக் உந்துகை நிறைந்த மாந்தர்களை களப்பணியாளர்கள் ஆக்கி இருக்கிறார்.

தமிழ்மணத்துக்கும் வலைப்பதிவுகளுக்கும் கூட டோனால்ட் ஹாப்கின்ஸின் வழிமுறைகள் பொருந்தும்.

ஆசையுடன் சத்தம் மட்டும் போடும்
சைக்கோ பாலாஜி.
பாஸ்டன்.

சன்ன சவுக்கின பேசுவது

எலுமிச்சம் பழம் புளிக்கும்னு தமிழ் எழுத்தாளனுக்கும் தெரியும். ஆனால், புளிக்குன்னு எழுத்தில் ‘கமிட்’ பண்ண இவன் ஏழு நாட்கள் யோசிக்கிறான். அதனால எதாவது பாதிப்பு, கெடுதல் வருமா? ஒருவேளை எலுமிச்சம் பழம் இனிப்பா இருந்துட்டா; நாம சொல்றது தப்பா போயிடுமோன்னு இவனுக்கே உறுதி இல்லை. எல்லோரையும் மாதிரி பாதுகாப்பா, சௌகரியமா இருந்துட்டுப் போயிருவோம்னு நினைக்கிறான். ஆனால், இப்படி பாதுகாப்பை நினைச்சு கவலைப்படுபவன் எப்படி சுதந்திரமான எழுத்தாளனா இருக்க முடியும்?

– விகடனில் வந்த நாஞ்சில் நாடனின் சிறப்புப் பேட்டி.

கிசுகிசு, வதந்தி, புறம் பேசுவது என்று பல விதங்களில் விளிக்கப்படுவதை, இணையத்தில் கண்ணுறும் இடங்களில் சேமித்து வைக்கும் முயற்சி:

1. அக்டோபர் 2005-ல் தமிழ் வலைப்பதிவர்கள் என்ற பெயரில் இயங்கிய சிலர் (ஏம்ப்பா, ஒரு தொழில்நுட்பப் பிரச்னையால சில பதிவுகளை தற்காலிகமான நீக்குனதுக்கு என்னமோ வலைப்பதிவுலகமே இருண்டு போனாமாரி கூவுனீங்களே, அந்தச் சிலரில் ஒரு டிக்கிட்டுங்கூட இன்னிக்கு பதிவுலகிலேயே காணமே, அட தமிழ்மணத்தை வுடு, தமிழ் வலைப்பதிவு உலகிலேயே காணமே, அதைக் கேக்குறேன். இதில் வேற நடுவுநிலை வியாக்கியானம் பேசிட்டு ரெண்டு நல்லவங்க வேற வீரப்பா இருந்துட்டாங்க, இன்னிக்கும் அவங்க வீம்பே அவங்களை நீரோட்டத்தில் சேரவிடாமத் தடுக்குது, ம், நல்லவங்க, வாழ்க
புனித பிம்ப தமாஷ்: காசி

2. வலைப்பதிவுலக புனிதப்பிம்பங்கள் பற்றி – ஒருவரல்ல (as per your words). இன்னும் நிறைய்ய்ய்ய்ய்ய்யவேஏஏஏஏஏஏஏ இருக்கிறார்கள். சிலரது உடனே கிழிக்கப்படலாம். சிலரது கிழிய சில நாளெடுக்கலாம். சிலரது கிழிபடாமலே போகலாம்!!! இதில் சித்தாந்தங்களின் இரண்டு பக்கங்களிலும் தூண் போல இருப்பவர்கள்தான் முக்கியமான ஆட்கள் என்பது சுவாரசியமானது.
மதி கந்தசாமி

3. பலர் அவர்கள் பதிவை தவிர வேறு பதிவை படிக்கும் குணங்களே இல்லாதவர்கள். ஒரு சிலர் தவிர, பலரிடம் கேட்டால் நான் படிப்பேன் பின்னூட்டம் போட மாட்டேன் என்று மொக்கையா சொல்வார்கள்.

இன்னும் இதில் உள்ள சிலர் அவர்கள் பதிவில் ஒருவர் பின்னூட்டம் போட்டால் அவர்களுக்கு பிடித்தால் மட்டுமே வெளியிடுவர்கள், அப்படியே வெளியிட்டாலும் அதுகுறித்து கண்டுக்கொள்ள கூட மாட்டார்கள். அதாவது ஒரு பதிலும் கூற மாட்டார்கள். குறைந்த பட்சம் நன்றி தெரிவிக்கும் நாகரீகம் கூட இல்லாதவர்கள்.

என்னை ரொம்ப அழுத்தி கேட்டால் பெயர்களை சொல்லவும் தயங்க மாட்டேன்.
வவ்வால்

4. இன்னொரு நடுவர் பற்றிய பிரச்சனையா என்றால் சொல்லத் தெரியலை,
‘நச்’ போட்டி: மோகன்தாஸ்

Happy Birthday MGR – மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரன்

Host unlimited photos at slide.com for FREE!

MG Ramachandran: Politics, Cinema, Personality – MGR Biosketch by Panruti Ramachandhran « Tamil News: “மறைந்தும் மறையாத தலைவர் :: பண்ருட்டி ராமச்சந்திரன்”

Host unlimited photos at slide.com for FREE!

31st Chennai Book Fair 2008 – Small biz vs Big box Retailers

பதிப்பாளர் ஒருவர், அரங்குகள் நான்கா?

இந்த ஆண்டு ஒரு பதிப்பகத்தைச் சேர்ந்தவர்களே ஒன்றுக்கும் மேற்பட்ட அரங்குகளை எடுத்து தங்களுடைய புத்தகங்களை விற்பனைக்கு வைத்துள்ளனர். இதனால் சிறுபதிப்பாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். பதிப்பாளர் சங்கத் தலைமையிடம் செல்வாக்கு உள்ளவர்களுக்கு இவ்வாறு இடம் ஒதுக்கப்படுகிறதோ என்று சந்தேகம் ஏற்படுகிறது.

அடுத்த ஆண்டு சரி செய்யப்பட்டுவிடும்…’

ஒருவர் தனது பெயரில் ஒரு பதிப்பகமும், மனைவி பெயரில் இன்னொரு பதிப்பகமும், உறவினர் பெயரில் மற்றொரு பதிப்பகமும் வைத்திருந்தால் மூவரும் சங்கத்தில் உறுப்பினர் ஆக முடியும். இந்த மூவர் பெயரிலும் அரங்குகள் வேண்டும் என்று கேட்கிறபோது நாங்கள் சங்கத்தின் சட்டதிட்டங்களுக்கும் விதிகளுக்கும் உட்பட்டு அரங்குகள் ஒதுக்க வேண்டியதாக உள்ளது.

சில பதிப்பகங்கள் தங்களுடைய அரங்கில் மட்டும் தங்கள் பதிப்பகத்தின் புத்தகங்களை விற்காமல் பிற அரங்குகளிலும் விற்பனைக்கென கொடுத்து விடுகிறார்கள். இதனால் எங்கு பார்த்தாலும் ஒரு சில பதிப்பகங்களின் புத்தகங்களே இருக்கின்ற சூழ்நிலை உருவாகிவிட்டது…சிறுபதிப்பாளர்களின் புத்தக விற்பனை குறையும் வாய்ப்பும் உள்ளது.

தினமணி: இந்த ஆண்டு மொத்தம் வந்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 49 ஆயிரம்.

நடுவில் என்னுடைய மறுமொழி:

ஒருவரே பல பெயரில் பதிப்பகம் நடத்துவது ரொம்ப காலமாக நடந்து வருகிற விஷயம். கிழக்கு போன்றவர்கள் அதை வெளிப்படையாக செய்கிறார்கள். வானதி பதிப்பகத்தார் போன்ற பழம்பெரியவர்கள் இதையே கமுக்கமாக நீன்ட நெடுங்காலமாக நடத்துகிறார்கள். ‘நாலு ஸ்டால் போட்டு இருக்காங்களே’ என்பது வளர்ந்தவரைப் பார்த்து பொறாமை பாராட்டும் குணம்.

‘சிவாஜி’ படம் ஊரில் அகப்பட்ட அனைத்து திரையரங்குகளிலும் வெளியாவது போல், குறிப்பிட்ட பதிப்பகத்தின் புத்தகங்கள் அனைத்து விற்பனை அரங்குகளிலும் கிடைக்க செய்வது வியாபார சூட்சுமம். ‘கமிஷன் தண்டம் அழ வேண்டுமே’ என்றால் விற்பனையாகும் அளவு குறைந்து போனாலும், நிகர லாபம் கூட்டிக் கழித்துப் பார்த்தால் சரிசமமாகும்.

உள்ளே இருப்பவர்களுக்குத்தான் இது உண்மையா என்று தெரியும்.

பாதி கடந்த நிலையில் பத்ரியின் எண்ணங்கள்:

சிறு பதிப்பாளர்களுக்கு ஏதோ ஒரு வகையில் மான்யம்… அதாவது அவர்களுக்கு மட்டும் குறைந்த விலையில் ஸ்டால் கொடுக்க ஏற்பாடு செய்யலாம். அப்படியானால் யார் சிறு பதிப்பாளர்கள் என்ற வரைமுறையும் (ஆண்டுக்கு என்ன டர்ன் ஓவர் என்பதைக் கொண்டு இருக்கலாம்) அதற்கான ஆடிட் சான்றும் இருந்தால் இதனைச் செய்யலாம்.

பி.கே. சிவகுமார்:

புத்தகக் கண்காட்சி இல்லாதபோது விற்பனைக்குப் புத்தகக் கடைகளைச் சார்ந்து வாழ்கிற பதிப்பகங்கள், ஒன்று புத்தகக் கண்காட்சியிலும் புத்தக விற்பனை நிலையங்களுக்கு இப்போது போலவே Equal இடம் கொடுக்க வேண்டும் அல்லது அவர்களுக்குப் புத்தகக் கண்காட்சியில் இடமே இல்லை என்று சொல்ல வேண்டும். இடமே இல்லை என்று சொல்ல முடியாது. சொல்லிவிட்டால், வருடத்தில் பதினோரு மாதங்கள் இந்த விற்பனையாளர்களின் தயவு இல்லாமல் புத்தகங்கள் விற்காது.

ஆதலால், ஒரு புத்தகம் பல கடைகளில் கிடைப்பது ஜனநாயகம்.

இந்தக் கடையில் மட்டுமே இந்தப் புத்தகம் இருக்க வேண்டும் என்கிற குறுகியகால லாபங்களை மனதில் கொள்ளாது செயற்படுவதே நல்லது. பல கடைகளில் ஒரு புத்தகம் கிடைத்தாலும் பதிப்பாளருக்கு நஷ்டமில்லை. 30%-லிருந்து 40% கமிஷன் கொடுக்க வேண்டியிருந்தாலும் அது லாபமே. அந்த கமிஷன் லாபமும் தனக்கே வரவேண்டும் என்று நினைப்பது என்னைப் பொருத்தவரை நிச்சயம் சரியில்லை.

DMDK Vijayganth vs AIADMK Jeyalalitha – Tamil Nadu Politics: Cartoons by Mathy

Host unlimited photos at slide.com for FREE!