1. அழகிய தமிழ்மகன்: கடைசி அரை மணி நேரம் பார்க்க முடியாதபடிக்கு சில நிர்ப்பந்தங்கள். மற்றபடி, பார்த்தவரைக்கும், விஜய் ரசிகர்களுக்கு தேவையான அம்சங்கள் என்று கோவி கண்ணன் சொல்வது போல் பலவும் இருப்பதால், ரசிக்கவைத்து ஈர்த்தது.
2. சக் தே இந்தியா: ரொம்ப ரொம்ப நல்ல படம். இந்த மாதிரி ஷாரூக் முயற்சிகள் மிகப் பெரிய வெற்றி அடைய வேண்டும். விறுவிறுப்பான ஹாக்கி ஆட்டங்கள். உணர்ச்சி பொங்கும் திரைக்கதை, வசனம். ஹீரோயிஸம் இல்லாத நாயகன்.
3. ஈ.டி.: எத்தனையோ முறை பார்த்திருந்தாலும், ஸ்டீவன் ஸ்பீல்பெர்குக்காகவும் அந்த அன்னியருக்காகவும் மீண்டும் குடும்பத்துடன் மகிழவைத்த படம்.











நான் பார்த்தது
1) பாட்ஷா
2) பம்மல்.கே.சம்பந்தம்
3) காதலா காதலா
காரணம் எல்லாம் சொல்லணுமா?
சக் தே பிடித்திருந்ததா?!. இதைவிட கோச் கார்ட்டர்நன்றாகவே இருந்தது. ஹாக்கிக்கு ஹாக்கியும் இல்லை, ஷாருக்கின் நடிப்பும் இல்லை நாட்டுப் பற்று டானிக்கும் வேலை செய்யவில்லை என்பது என் கருத்து. அதற்கு இன்னும் ஒருமுறை கல்ஹோனஹோ பார்த்து தெளியலாம். பாட்டுக்களுக்காகவே.
கொத்ஸ், பின்னூட்டத்திற்கு தண்டனையாக tag செஞ்சாச்சு 😉
கோச் கார்ட்டர் இனிமேல்தான் பார்க்கணும்.
—அதற்கு இன்னும் ஒருமுறை கல்ஹோனஹோ பார்த்து தெளியலாம். —
அது என்னவோ சரிதான் 🙂
பனிமலர்: சக்தே – திரைவிமர்சனம்: “Remember the Titans and stick it on”
மணற்கேணி: சக் தே! பில்லா மற்றும் �