Monthly Archives: செப்ரெம்பர் 2007

ஏன்?

மகளின் சமீபத்திய கேள்விகள்:

1. இந்திய உணவகத்தில்: ‘ஏன் எப்ப பார்த்தாலும் “என்ன சாப்பிடறீங்க”ன்னு உன்கிட்டத்தான் கேக்கறாங்க? அம்மாவிடம் ஒருவாட்டி கூட கேக்கலியே?’

2. பாஸ்டன் லஷ்மி கோவில் கருட சேவை பிரம்மோற்சவத்தில்: ‘ஏன் ஆம்பளைங்க மட்டும்தான் சாமி தூக்கறாங்க? பெண்கள் பெருமாளத் தூக்கக் கூடாதா?’

3. அதே கோவில். திருக்கல்யாண உத்சவம்: ‘லஷ்மிக்கு ஏன் பட்டர் தாலி கட்டறார்? பெருமாளுக்கு தாலி கிடையாதா?’

குழலினிது… யாழினிது

Life Enjoy Meaning Baby Blues
நன்றி: Baby Blues | Comics | Seattle Times Newspaper

க்விஸ்:

‘வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்’ & ‘வாழ்க்கையென்ன வாழ்ந்து காட்டலாம்’ – இந்த இரண்டு வரிகளும் எண்பதுகளின் வெவ்வேறு ஹிட் பாடல்களில் வரும். என்ன படம்/பாடல்?

முந்தைய Comics – அந்தக் காலத்தில… « Snap Judgment

சிவபாலன்: வாழ்க்கையை யோசிங்கடா:

தினமலரும் கலைஞர் டிவியும்

Dinamalar Serials Programmes Kalainjar TV

KR Vijaya Kushboo Sundar K Vijayan Namma Kudumbam Kalainjar TV

குரூப்-2 மாதிரி வினா விடை

இது பள்ளி புத்தகம் மாதிரி: தேன்: தமிழில் வார்த்தைகள் எத்தனை லட்சம்?

இது மாதிரி கேள்வித்தாள்: தினமலர்

Dinamalar Tamil Question Paper Group Two

இந்த மாதிரி தூய தமிழில் பாடங்களைக் கோரும் மாதிரி தமிழறிஞர் கட்டுரை: தன்னாட்சிக் கல்லூரிகளில் கேள்விக்குறியாகி வரும் தமிழ் மொழிப் பாடம்

அரசைப் போற்றுதுமே → பரிசை பெற்றதுமே

2005 Dinamalar Best Pictures Cinema Tamil Nadu Film Awards

பள்ளிக்கூடம் = பதிவுக்கூடம்

Drabble Comics Blogs School

நன்றி: டிராபிள்

பள்ளிக்கும் பதிவர் களத்திற்கும் சில ஒற்றுமைகள்:

  1. பக்கத்து இருக்கைப் பையன் கிள்ளினால், திரும்ப கொடுக்க முயற்சிப்போம்.
  2. அப்படி பதிலடி தர முடியாவிட்டால், ‘டீச்சர்… கிள்றான்‘னு புகார் கொடுத்து, வகுப்பை விட்டு வெளியேற்ற பிரயத்தனப்படுவோம்.
  3. மிஸ்ஸுக்கு மிஸ்ஸைல் வந்தாலொழிய, கூடத்தை விட்டு வெளியேற்றப்பட மாட்டோம்.
  4. எடுத்துக் கொடுக்க, தோளில் கை போட, கிடைத்ததை பங்கிட நட்பு அமைப்போம்.
  5. அந்தக் காலத்தில‘ என்று பெருசுகள் சொர்க்கபூமியாக பழம்பாட்டை ஆட்டோகிரஃப் பாடுவோம்.
  6. எல்லாரும் ஒரே வண்ணத்தில் பட்டை சீருடை இட்டிருப்போம்.
  7. நாற்பதுக்கு கீழ் எடுத்தால் தனி கவனிப்பு கிடைக்கும்.
  8. நூறு வாங்குபவர்களை பார்த்தால் பொறாமை பீறிடும்.
  9. பள்ளியில் சேர்வதற்கு சிபாரிசோ நுழைவுத்தேர்வோ சான்றிதழ்களோ நன்கொடையோ வேண்டும்.
  10. பல பள்ளிகள் இருந்தாலும், ஒன்றுக்கு மட்டும் அடிதடி நடக்கும்.
  11. கொசுறு: ‘வேதம் புதிது‘ வசனம் ஞாபகமிருக்கா… அது போல் ‘நான் வளர்ந்துட்டேன்; நீங்க வளரவேயில்லையே?’ என்று கேட்கவும் வைக்கவும்.