1. பிச்சைப்பாத்திரம்: சத்தம் போடாதே – இசை வெளியீட்டு விழா
2. Senthamizh Thaenmozhiyaan!: சத்தம் போடாதே (யுவன் ஷங்கர் ராஜா): சத்தம் போடாதேவின் பாடல்கள் சுமார்தான்.
3, செல்வேந்திரன்: சத்தம் போடாமல் கேளுங்கள்
“அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளித் தூக்கும்போது
பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்”
சங்கர் மகாதேவன் பாடும் சத்தம் போடாதே படப்பாடலை கேட்க நேர்ந்தது.
எந்த நேரம் ஓயாத அழுகை
ஏனிந்த முட்டிக்கால் தொழுகை
எப்போதும் இவன் மீது பால் வாசனை
எந்த மொழியில் சிந்திக்கும் இவன் யோசனை
எந்த நாட்டை பிடித்துவிட்டான்
இப்படியோர் அட்டினக்கால் தோரணை
நீ தின்ற மண் சேர்த்தால்
வீடொன்று கட்டிடலாம்
தண்டவாளம் இல்லாத இரயிலை
தவழ்ந்தபடி நீ ஓட்டிப் போவாய்
——————————————————–
பாடல்கள்: நா முத்துக்குமார்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
௧) அழகு குட்டிச் செல்லம் – ஷங்கர் மஹாதேவன் :: ♥♥♥ /4
ஷங்கருக்காக ஒரு ♥;
நா முத்துக்குமாருக்காக ஒன்று;
கொஞ்சம் தாலாட்டு கேட்டு நாளாச்சு – ஒன்று.
இதே மாதிரி குழந்தை அடம்பிடிப்பதை, பொம்மை வாங்கப் படுத்துவதை, பாத்ரூம் போகும்போது பாதியில் அழுகையை முடிக்கிவிடுவதை, இராட்சஸியாக மாறுவதையும் மணமகன் கூடிய சீக்கிரம் எழுத பதினாறும் பெறுவாராக.
௨) எந்தக் குதிரையில் – ராஹுல் நம்பியார் & ஷ்ரேயா கோஷல் :: ♥♥♥♥ /4
என்னுடைய இசை குறுநிலத்தில், சுஜாதா, சித்ரா, ஹரிணி, மாலதி வரிசையில் ஷ்ரேயாவுக்கும் அரியணை உண்டு.
நெஞ்சில் நிற்கும் மெட்டு. Flawless Execution.
௩) காதல் பெரியதா – சுதா ரகுநாதன் :: ♥♥ /4
சுதா என்பதே தெரியாத மாதிரி பாட சுதா ரகுநாதன் எதற்கு? இருந்தாலும், சுதாத்தனம் தெரியாமல் பாடியது ஆச்சரியம்.
௪) ஓ இந்தக் காதல் – அட்னான் சாமி & யுவன் ஷங்கர் ராஜா :: ♥♥½ /4
‘மௌனம் பேசியதே’யில் ‘காதல் செய்தால் பாவம்’ நினைவுக்கு வருவது பள்ளிக்கூட காதலியை குழந்தையுடன் பீச்சில் சந்தித்தவுடன் ஏற்படும் தொண்டைக்குழி அவஸ்தை தருகிறது.
௫) பேசுகிறேன் பேசுகிறேன் – விவா கேர்ள்ஸ் :: ♥♥♥ /4
கடல் தாண்டும் பறவைக்கெல்லாம்
இளைப்பாற மரங்கள் இல்லை
கலங்காமலே
கண்டம் தாண்டுமே
சிக்கன் சூப் பாடல். (ஒரு நட்சத்திரம்)
ராஜா போலவே எங்கிருந்தோ வந்த, ரசனையாக சுட்ட இடைச்செருகல். (ஒன்று)
குரல்களுக்காக… *
‘ரிதம்‘ மாதிரி இதமா அல்லது ‘பூவெல்லாம் கேட்டுப்பார்‘ மாதிரி காதுக்கு மட்டும் வைத்துப் பாரா என்பதை பார்த்த பிறகுதான் பாடல்கள் சத்தம் போடுதா, போடாதே-வா என்று தெரியும்.










